COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, June 16, 2015

டெல்லியில் அகில இந்திய மக்கள் மேடை கருத்தரங்கம்

ஓராண்டு கால மோடி ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள், உரிமைகள், வாழ்வாதாரங்கள் மீது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சவால்களைப் பற்றி மதிப்பிடுவதற்காக மே 27 அன்று டெல்லியில் அகில இந்திய மக்கள் மேடையின் கருத்தரங்கம் நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர் என்.டி.பஞ்சோலி, பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமான கௌதம் நவ்லாகா, என்டியுஅய் தலைவரும் அகில இந்திய மக்கள் மேடையின் பிரச்சாரக் குழு உறுப்பினருமான கௌதம் மோடி, பத்திரிகையாளர், செயற்பாட்டாளர் மற்றும் அகில இந்திய மக்கள் மேடையின் பிரச்சாரக் குழு உறுப்பினரான கிரண் சாஹீன், இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான அடுல் சூட், முற்போக்கு பெண்கள் கழக தேசியச் செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றினர்.
ஜனநாயக இயக்கங்களோடு ஒருமைப்பாடு, பல்வேறு போக்குகளுக்கிடையே விவாதத்தை துவக்கி கருத்துக்களை விரிவடையச் செய்வது ஆகியவற்றை கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர். நிலம், மற்றும் வேலைவாய்ப்பில் மட்டும் சட்ட மற்றும் கொள்கை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, மாறாக, நிதி மற்றும் கல்வியிலும் செய்யப்படுகிறது, இதன் மூலம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதற்கான கார்ப்பரேட்டுகளின் சுற்று நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட தோழர் திபங்கர், எழுந்து வரும் கம்பெனி ராஜ்ஜியத்திற்கு எதிராக, நிலம், உழைப்பு, வாழ்வாதாரம் ஆகிய பிரச்சனைகள் மீது அகில இந்திய மக்கள் மேடையில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் ஜூன் 30 அன்று எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டமைக்கும் என்றார்.

கூட்டத்தில் டெல்லி முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள், தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Search