COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


கஜேந்திர சவுகானை எப்டிஅய்அய் தலைவராக நியமித்ததற்கு எதிராக டெல்லியில் எதிர்ப்பு 

கஜேந்திர சவுகானை சேர்மனாகவும், அனகா கெய்சஸ் மற்றும் சைலேஷ் குப்தா ஆகியோரை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எப்டிஅய்அய்) நிர்வாக குழு உறுப்பினர்களாவும் மோடி அரசாங்கம் நியமித்ததற்கு எதிராக எப்டிஅய்அய் மாணவர்கள் விடாப்பிடியான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அகில இந்திய மாணவர் கழகமும், ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்கமும் எப்டிஅய்அய் மாணவர்களின் போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவரும் அய்சா தலைவருமான அசுதோஷ் குமார், புனே சென்று மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
எப்டிஅய்அய்யில் மாணவர் நடத்தி வரும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் எப்டிஅய்அய் நிர்வாகக் குழுவின் தலைவராக காவி நியமனமாக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை எதிர்த்தும், ஜூன் 16, 2015 அன்று மாணவர்கள்,            படத் தயாரிப்பாளர்கள், எப்டிஅய்அய்யின் முன்னாள் மாணவர்கள், எப்டிஅய்அய் மாணவர்கள், மாணவர்  அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் டில்லியில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் முன்பு நடைபெற்றது.  படத் தயாரிப்பாளர் நகுல் சானே, முன்னாள் எப்டிஅய்அய் மாணவர் சங்கத்தின் வடக்கு பிராந்திய செயலாளர் சஞ்சீவ் சூத், எப்டிஅய்அய் மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கிஷ்லே, என்எஸ்டிஎஸ்யு தலைவர் நரேஷ், ஜேஎன்யு துணைத் தலைவர் ஆனந்த், பச்சாஸ், நவ் ஜவான் பாரத் சபா ஆகிய மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Search