உச்சநீதிமன்றமும் மோடி அரசும்
நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்
எஸ்.குமாரசாமி
நவம்பர் 9 - 10 தேதிய உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை ஒட்டியே, நீதிபதிகள் நீதி வழங்குவதில்லை நீதிபதிகள் தீர்ப்புக்காரர்களே, என்று டிசம்பர் 1 - 15 மாலெ தீப்பொறி இதழில் எழுதி இருந்தோம்.
அப்போது, நீதிமன்ற அறைகளில் அடைபட்டிருந்த பிரச்சனை, 12.01.2018 அன்று வெளிப்படையாக, நாட்டின் கவனத்திற்கு வந்தது.
நவம்பர் 9 - 10 நடவடிக்கைகளை அடுத்து, தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற முதுநிலைப் பட்டியலில் 2 முதல் 5 வரையிலான நிலைகளில் உள்ள, உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்கிற, இடம் மாற்றம் செய்கிற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை நியமனம் செய்கிற கொலிஜியத்தில் உள்ள, ‘சமமானவர்களில் முதலாமவரான’ தலைமை நீதிபதிக்கு, இரண்டாம் இடத்தில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் மூன்றாம் இடத்தில் உள்ள அடுத்து தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ள ரஞ்சன் கோகாய், நான்காம் இடத்தில் உள்ள மதன் லோகுர் அய்ந்தாம் இடத்தில் உள்ள குரியன் ஜோசப் ஆகிய நீதிபதிகள் சேர்ந்து ஒரு கடிதம் எழுதி உள்ளனர். நேரிலும் பேசினார்களாம். நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி செவிமடுக்காததால், பகிரங்கமாக, ஊடகங்கள் மூலம் 12.01.2018 அன்று நாட்டு மக்களிடம் நியாயம் கோரினார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டி தரலாமா? இது தவறான முன்உதாரணமாகாதா? நாட்டு மக்கள் நீதித்துறை மேல் வைத்திருக்கும் மரியாதை நம்பிக்கை என்ன ஆகும்? நான்கு நீதிபதிகளும் பிரச்சனையை அரசியல்படுத்தினார்கள் என்று எல்லாம் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.
நான்கு நீதிபதிகள் என்ன புகாரை யாருக்கு எதிராகச் சொல்லி நியாயம் கேட்கிறார்கள்?
நான்கு நீதிபதிகளும், வெவ்வேறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்ற விசாரணை அமர்வங்கள் (பெஞ்ச்) அமைப்பது, அமர்வங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது, அடிப்படையில் தலைமை நீதிபதியின் பொறுப்புதான் என ஒப்புக்கொள்கிறார்கள். தலைமை நீதிபதி, சமமானவர்களில் முதலாமவர் என்றாலும் தங்களுக்குச் சமமானவரே என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். மரபுகளையும், எழுதப்படாத, அதே நேரம், நெடுங்காலமாக நடைமுறையில் பின்பற்றப்படும் விதிகளுக்குப் புறம்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கிடையிலான பணி மூப்பைச் சற்றும் கண்டுகொள்ளாமல், தலைமை நீதிபதி அமர்வங்களை அமைக்கிறார், பணி மூப்பில் பின்னே உள்ள நீதிபதிகளுக்கு மனம் போன போக்கில் வழக்குகளை ஒதுக்குகிறார், எழுதியும் பேசியும் பார்த்து, பிரச்சனை தீராததால், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதால், மக்கள் மத்தியில் பிரச்சனைகளைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள்.
சோரபுதீன் போலி மோதல் படுகொலை தொடர்பான அமித் ஷா மீதான வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவுக்கு குற்றம் சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு தர கோடி கோடியாய்த் தர முன்வந்தனர், லோயா ஒப்புக்கொள்ளாததால் உயிரிழக்க நேர்ந்தது, நீதிபதி லோயாவின் மர்ம மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என அவரது சகோதரரும் தந்தையும் புகார் தந்துள்ளனர். இது தொடர்பான வழக்கை முதுநிலையில் 10ஆம் நிலையில் உள்ள நீதிபதி அருண்மிஷ்ரா அமர்வத்துக்கு தலைமை நீதிபதி மாற்றியதை, நான்கு நீதிபதிகளும் கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.
வழக்குகளை, ‘அவர்கள் விருப்பத்திற்கேற்ப (பிரெஃபரன்ஸ்)’‘தேர்ந்தெடுத்து’ தலைமை நீதிபதி ஒதுக்குவார் என 4 நீதிபதி களும் புகார் சொல்லி உள்ளனர். ‘அவர்கள் விருப்பத்திற்கேற்ப’ என்பது மத்திய அரசைக் குறிப்பதாக மட்டும்தான் கொள்ள முடியும். ‘தேர்ந்தெடுத்து’ ஒப்படைக்கிறார் என்பதற்கு, அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதிகளுக்குத் தேர்ந்தெடுத்து ஒப்படைக்கிறார் என்றுதான் பொருள். ‘தேசத்திற்கான எங்கள் கடனை அடைத்துவிட்டோம்’ என பெருமூச்சு விட்டார் ரஞ்சன் கோகாய். உங்கள் ஆன்மாவை விற்றுவிட்டு முறைகேடுகளைக் கேள்வி கேட்காமல் கவனப்படுத்தாமல் விட்டுவிட்டீர்களா என்ற வருங்காலத்தின் கேள்விகளுக்கு நிகழ்காலத்தில் பதில் சொல்லிவிட்டதாக செல்லமேஸ்வர் சொல்லி உள்ளார். ஊடகவியலாளர்கள், நீங்கள் தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) கோருகிறீர்களா எனக் கேட்டதற்கு, செல்லமேஸ்வர், அது பற்றி நாடு முடிவு செய்யட்டும் என்கிறார்.
நீதிபதிகள் நியமன முறை தொடர்பான ‘செயல்முறைக்கான குறிப்பு’ (மெமோரண்டம் ஆஃப் புரொசிஜர்) முடிந்து போன விவகாரம் என கொலிஜியத்தில் 5ல் 4 நீதிபதிகள் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் திரும்பவும் ஒரு வழக்கை தொடர்ந்து நடத்த தலைமை நீதிபதி அமர்வம் அமைத்தது சரி அல்ல, இனி உச்சநீதிமன்ற முன்வைப்பை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது என முடிவு செய்து மேலே செல்லலாம் என, நான்கு நீதிபதிகளும் சொல்கிறார்கள். மத்திய அரசு, இதுபற்றி என்ன பதில் சொல்கிறது என்பதே நாடு அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வளைந்து கொடுத்து அடங்கிப் போனதும் கூட இந்திரா காந்தி கால அவசரநிலை கொடுங்கோன்மைக்கு உதவியது. மோடி அமித் ஷா கூட்டாளிகளுக்கு சங்கடம் தந்த இஷ்ரத் ஜெஹான் வழக்கோடு தொடர்புடைய நீதிபதி ஜெயந்த் படேல், குஜராத் இசுலாமிய படுகொலை காலத்து பெஸ்ட் பேக்கரி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி திப்சே, கிரீன் பீஸ் செயல்பாட்டாளர் ப்ரியா பிள்ளை வெளிநாடு செல்லக் கூடாது என்ற மத்திய அரசு உத்தரவுக்கு தடை தந்த நீதிபதி ராஜீவ் ஷக்தர் ஆகியோர் பழிவாங்கும் வகையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இஷ்ரத் ஜெஹான் வழக்கில் தெளிவான நிலை எடுத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகமுடியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இப்படி ஒரு பின்னணியிலும், நாடெங்கும் பரவிப் படரும் பாசிசம் வசதியான நீதிபதிகளை கட்டுக்குள் இருக்கும் நீதிமன்றத்தை விரும்பும் என்ற பின்னணியிலும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நான்கு பேர் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பற்றி வெளிப்படையாக கவலை தெரிவித்துள்ளது நிச்சயமாக வரவேற்கத் தக்கதாகும்.
அதே நேரம், திரும்பவும், இது எங்கள் உள்விவகாரம், நாங்கள் எங்களுக்குள் எல்லாம் பேசி முடித்துக் கொள்வோம் என்ற மோசமான அணுகுமுறையை மொத்த உச்சநீதிமன்றமும் எடுக்க வேண்டும் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அவப்புகழ்பெற்ற மனன் குமார் மிஸ்ரா பரிந்துரைக்கிறார். அயலாரின் அரசியல் தலையீடு கூடாது என்கிறார். இந்திய நீதித் துறை பற்றி இந்திய மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தம்மை கருதுபவர்களும் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட வேண்டும்?
உண்மையை மறைப்பது, பொய் சொல்வதாகச் பொருளாகும் (சப்ரஷியோ வெரி சஜ்ஜஷியோ ஃபால்சி) என்பது உலகெங்கும் பின்பற்றப்படும் சட்டக் கோட்பாடாகும். வெளிப்படைத் தன்மை என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். தேசத்திற்கான கடனைச் செலுத்தும் விதம், ஆன்மாவை விற்றுவிட்டீர்களா என்ற கேள்வி எப்போதும் எழாமல் இருக்க, நீதிபதி செல்லமேஸ்வர் தாம் கர்ணன் வழக்கில் பல நீதிபதிகளின் நடவடிக்கை பற்றி நாட்டு மக்களுக்கு தெரியாது என்று சொன்னதை நினைவில் கொண்டு, அவற்றை இப்போது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான்கு நீதிபதிக ளும் நீதித்துறை நலன் கருதி, பல விசயங்களை சொல்லவில்லை என்கிறார்கள். ஊழல் வழக்கில் ஒடிஷா உயர்நீதிமன்ற முன்னாள்நீதிபதி கைதான வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தைச் சரிகட்ட பணம் பெற்றதாக, மத்திய புலனாய்வு துறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகளை, யார் யாருக்கு ஒதுக்கலாம் என்பதில்தானே, நவம்பர் 9, 10, 2017ல் உச்சநீதிமன்றத்தில் மோதல் வெடித்தது. ஊழல் தொடர்பாக முறைகேடுகள் தொடர்பாக, தேசத்திற்கு மக்களுக்குத் தெரிந்து கொள்ளும் உரிமை இல்லையா? இந்திய மக்களாகிய நாங்கள், இந்திய மக்களுக்கு அரசியல்அமைப்புச் சட்டத்தை வழங்கிக் கொண்டதாகவே அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. அரசியல்அமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டிய நீதிபதிகள், அவர்கள் முறைகேடுகள் என்று கருதுகிற விசயங்களை மக்களிடம் தெரிவிப்பது, நீதித்துறையின் கவுரவத்துக்கும் சுதந்திரத்துக்கும் வலு சேர்க்குமே ஒழிய ஒரு போதும் ஊறு விளைவிக்காது.
லோயா வழக்கு, நீதித்துறை ஊழல் வழக்கு ஆகியவை பின்னுக்குப் போகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். சமூக அக்கறை உள்ள நீதிபதிகள் வெளிப்படைத்தன்மையுடன் சமூக நீதிக்கேற்றவாறு நியமனம் செய்யப்படுவது உள்ளிட்ட நீதித் துறையை ஜனநாயகப்படுத்தும் சீர்திருத்தங்கள் மிகமிக அவசியமானவையாகும்.