மக்கள் விரோத பழனிச்சாமி அரசே!
பொது விநியோகத்தை சீரழிக்காதே!
2011 வரையிலான திமுக ஆட்சி பற்றி குறிப்பிடும்போது, சிறுபான்மை திமுக ஆட்சி என்றுதான் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இன்று இருக்கிற அஇஅதிமுக ஆட்சி மோடியின் தயவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை ஆட்சிதான். ஒரு வகையில், பூரண ஆயுசுதான். ஆனால் நித்திய கண்டம்.
மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதில் பெரும்பான்மை ஆட்சி நடத்திய ஜெயலலிதாவை விட எந்த விதத்திலும் இந்த சிறுபான்மை ஆட்சி பின்தங்கிவிடவில்லை. இரண்டு மாதங்கள் முன் ரேசன் சர்க்கரை விலை உயர்வு சுமத்தப்பட்டது. கடந்த மாதம் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது என்று சொல்லி, ரேசன் மண்ணெண்ணெய் அளவைக் குறைத்தார்கள். இந்த மாதம் உளுத்தம்பருப்பு விலை அதிகம், அதனால் ரேசன் கடையில் இனி உளுந்து இல்லை என்கிறார்கள். அடுத்த மாதம் என்ன தாக்குதல் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு இன்னும் தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்தியதால், 2017, டிசம்பர் 1 அன்று ரூ.67.71 என இருந்த பெட்ரோல் விலை 2018 ஜனவரி 8 அன்று ரூ.73.01 என உயர்ந்துள்ளது. ரூ.5க்கும் மேல் உயர்வு. இந்த உயர்வை ஒரே நாளில் அறிவித்திருந்தால் நாடெங்கும் போராட்டங்கள் நடந்திருக்கும். அன்றாடம் உயர்த்தியதால் கண்ணுக்குத் தெரியாமல் போனது. இந்த உத்தியை மோடி அரசாங்கத்திடம் இருந்து பழனிச்சாமி அரசாங்கம் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் மிகவும் ஆதாரமான நடவடிக்கையான பொது விநியோகத்தில் அமல்படுத்துகிறது.
2016 நவம்பர் மாதம் உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழ் நாட்டில் அமலானபோது, நிலவுகிற பொதுவிநியோகத்தில் எந்த மாற்றமும் இருக்காது, கூடுதல் செலவை அரசு ஏற்கும் என்று அஇஅதிமுக ஆட்சியாளர்கள் உறுதியளித்தார்கள். அதற்கு முன் அங்கும் இங்கும் இருந்த முறைகேடுகளுக்கு அப்பால், திட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்த முறைகேடுகளை முறைப்படுத்துவது, ஒவ்வொன்றாக உணவுப் பொருட்களை வெட்டுவது என்று 2016லேயே பாஜகவின் அறிவுரை இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. டிசம்பரில் மோடி பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவிய காட்சி அதை உறுதி செய்கிறது.
இந்த அரசு இப்போதுதான் ஆர்.கே.நகரில் அடி வாங்கியது.அந்த அடி பாஜகவுக்கும் சேர்த்துத்தான். பழனிச்சாமி அரசும் பாஜகவும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் போனால் தமிழக மக்களிடம் இன்னும் பலமான அடிவாங்க நேரும்.