ஒரு கத சொல்ட்டா சார்...?
(விஜய் சேதுபதி குரல் வாகில் (மாடுலேசனில்) படிக்க வேண்டும்)
ஒரு கத சொல்ட்டா சார்...?
நம்ம ஊர்ல ஒரு தனியார் செல் கம்பெனி இருக்கு சார்.ஏர்டெல்லு.அதுதான் சார் இன்னிக்கு நாட்ல நம்பர் ஒன்னு.நிறைய பேரு அததான் சார் வெச்சுருக்குறாங்க.
இந்த கம்பெனி பேமென்ட் பேங்க் ஆரம்பிச்சுது சார். அப்பிடின்னா பணம் குடுக்குறது. இதுல எனக்கு இன்னா பிரச்சனைன்னு கேக்குறீங்களா... கதய பொறுமயா கேளுங்க சார்.
இந்த பேங்குக்கு ஆள் சேர்க்கறதுக்கு என்னா பண்ணுச்சுன்னா, அந்த போன் வெச்சுறாங்க இல்ல, அவங்கள எல்லாம் அவங்களுக்கு தெரியாமயே, அவங்க கிட்ட சொல்லாமயே அந்த பேங்குல கஸ்டமரா ஆக்குச்சு. எப்பிடி ஆக்குச்சு நீங்க கேக்கணும் சார்... இங்கதான் இன்னொரு கேரக்டர் என்ட்ரி.
இப்பதான் எதுக்குன்னாலும் ஆதார் கேக்குறாங்களே... செல் நம்பர் எல்லாம் ஆதார் கூட இணைக்கனும்னு சொன்னாங்கல்ல... அப்ப ஏர்டெல் சிம் வெச்சிருக்கறவங்களும் ஆதாரை இணைச்சாங்க. ஆதார்ல அவங்க விவரம் எல்லாம் இருக்குதான... அத வெச்சு அவங்க பேர்ல அவங்களுக்கு தெரியாம அக்கவுண்ட் ஓபன் பண்ணுச்சு.இப்பதான் சார் பிரச்சனை ஆரம்பிக்குது. இப்ப அந்த பேங்க்ல பணம் இருக்கணும்ல..? அவங்கள்ல்ல கேஸ் மானியம் வர்ர அக்கவுண்ட்ட இந்த அக்கவுண்டுக்கு மாத்திச்சு. 47 லட்சம் அக்கவுண்ட்ட இப்படி மாத்தி, கேஸ் மானியம் மட்டும் ஏர்டெல் பேமன்ட் பேங்க்ல ரெண்டே மாசத்துல ரூ.169 கோடி வரைக்கும் சேர்ந்துடுச்சு.
அதாவது, கவர்மென்ட் மானியத்தை நேரடியா குடுக்குறன்னு சொல்லி அக்கவுண்ட்ல போடறன்னு சொல்லிச்சு இல்ல. அந்தப் பணம் கவர்மென்டுகிட்ட இருந்து ஏர்டெல் அக்கவுண்டுக்கு வந்துச்சு.அங்க வந்து அங்கயே அந்த பேங்க்லயே இருக்கு.
அந்தப் பணத்தை எடுக்கனும்னு நெனைக்கறவன் தலைகாஞ்சவனாத்தான இருப்பான்...? இப்ப இந்த பணம் இங்கதான் வந்துதுன்னு கூட பணம் போய் சேர வேண்டியவனுக்கு தெரியாது.கேஸ் கம்பெனி போய் கேப்பான். அவன் அனுப்பியாச்சுன்னு சொல்லுவான். ஒரு வழியா எப்படியோ தெரிஞ்சுகிட்டு ஏர்டெல் பேங்க்ல இருக்குற இந்தப் பணத்தை எடுக்கனும்னா அது அவ்ளோ ஈசியில்ல... இந்த பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பன்றப்போ காசு எதுவும் போட வேணா.ஆனா அக்கவுண்ட் க்ளோஸ் பன்னனும்னா 50 ரூபா கட்டணும். ஒவ்வொரு வாட்டி பணம் எடுக்கும்போதும் சர்வீஸ் சார்ஜ் கட்டனும்.. எப்படி...? அவன் பணத்தை எடுக்க அவனே காசு கட்டணும்...
என்னா சார் ஷாக்காயிட்டீங்களா.... கருப்பா இருக்கறவன்லாம் ஃப்ராடுன்னு நெனைக்குறாங்க சார்... இங்க இந்த ஃப்ராடு பன்னவன் செவப்புதான் சார். ஆதார்னா யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொன்னாங்க சார். ஆனா இந்த ஃப்ராடு நடக்கறதுக்கே அந்த ஆதார்தான் சார் காரணம். இப்ப வெறும் 300 ரூபா குடுத்தா கூட யார் ஆதார் விவரம் வேனும்னாலும் வாங்கிடலாமாம்.
இப்ப நான் யார சார் தண்டிக்கிறது?
கஸ்டமருக்கே சொல்லாம தெரியாம அக்கவுண்ட் ஓபன் பண்ணி கேஸ் மானியத்தை அந்த அக்கவுண்டுக்கு மாத்தி, அதுல வந்த மானியத்தை அப்படியே வெச்சுகிட்ட ஏர்டெல் கம்பனிய தண்டிக்கிறதா...? இல்ல...
சிம்கார்ட் கம்பெனி பேமன்ட் பேங்க் நடத்த பர்மிசன் குடுத்து, அந்த கம்பெனி சிம்கார்டை ஆதார் கூட இணைக்கனும்னு சொல்லி, இன்னொரு பக்கம் எல்லாரும் ஆதார் வாங்கனும்னு இம்சபடுத்தி, அது இருந்தாதான் கேஸ் மானியம்னு சொல்லி, பேங்க்லதான் அதையும் போடுவேன்னு சொல்லி, அந்த ஆதார கேஸ் நம்பரோட இணைச்ச இந்த கவர்மென்ட தண்டிக்கறதா...?
(கதை கேட்டவர்கள் அனைவரும் விக்ரம். யாராவது பதில் சொல்லுங்கள்)