மகாராஷ்ட்ராவில் தலித்துகள் மீது
தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, தலித்துகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்கிறது பாசிச சங் பரிவார் கும்பல்.
இந்த ஆண்டின் துவக்கமே நாட்டின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் மீது சங் பரிவார் கும்பலின் தாக்குதல்களால்தான் குறிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல்களில் ஒரு தலித் இளைஞர் வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத கும்பல் அது. இது சமீபத்திய எரிச்சல். நீண்டகாலமாக தொடர்கிற, ஆழ்மனதில் ஊறியிருக்கிற வெறுப்பைதான் ஜனவரி 1 அன்று மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் அந்தக் கும்பல் பிரதானமாக வெளிப்படுத்தியது.
பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, ராதிகா வேமுலா, உமர் காலித்.... பேசினார்கள். லட்சக்கணக்கான தலித் மக்கள் கூடி ‘நவபாசிசத்துக்கு’ எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? காவிப் படையின் இந்துத்துவ வெறித் தாக்குதலில் ராகுல் படாங்கலே என்ற 28 வயது தலித் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். தலித்துகள் வந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. அவர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடந்தது.தலித்துகள் பலர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். ஜிக்னேஷ் மேவானி மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதன் பிறகு ஒன்பது நாட்கள் கழித்து 1000 கி.மீக்கு அப்பால் அவர் பேச விருந்த கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அன்று பாதுகாப்பு என்ற பெயரில் வந்த காவல் படையில் 15,000 பேர் இருந்தனர். பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் வரவழைக்கப்பட்டனர். காவிக் கூட்டம் அந்தப் பெயர்களை கேட்டால் அச்சம் கொள்கிறது. மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு, நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு என்ற பாசிசப் போக்கு நடைமுறையானது.
இந்தத் தாக்குதல்களை கட்டியமைத்த சம்பாஜி பிடேயும் மிலிந்த் ஏக்போடேயும் சாதிய மதவெறி மோதல்களை குறிப்பாக தலித்துகளுக்கு எதிராகத் தூண்டுவதில் பெயர் போனவர்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு சொத்தை காரணம். தலித்துகள் அறுதியிடலை நினைவுகூரும் நாள் என்ற சற்று சத்தான காரணம் எதிர்வந்தபோது அவர்கள் வெறியாட்டம் போட்டார்கள்.
மகாராஷ்ட்ராவின் வரலாற்றில் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது என தலித்துகள் ஒவ்வோர் ஆண்டும் பீமா கோரே கானில் நடக்கும் நிகழ்ச்சியில் அறுதியிடுகிறார்கள். இந்த ஆண்டு அந்த நாள் வருவதற்கு முன் டிசம்பர் 30 அன்று பக்கத்தில் உள்ள வாது புத்ருக் என்ற கிராமத்தில் பிரச்சனை துவங்குகிறது. சிவாஜியின் மகன் சம்பாஜி மஹராஜ், அவுரங்கசீப்பால் கொல்லப்பட்ட பிறகு, தலித் பிரிவைச் சேர்ந்த கோவிந்த் கணபத் கேக்வாட் அவரது உடலை எடுத்துவந்து இறுதிச் சடங்கு நடத்தினார். அதனால் கொல்லப்பட்டார். அங்கு அவருக்கும் சம்பாஜிக்கும் கல்லறைகள் உள்ளன. இந்தக் கல்லறைகள் தாக்கப்படுகின்றன. இதையொட்டி பகுதியின் மராத்தாக்கள், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
மறுபுறம், டிசம்பர் 31 அன்று ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கிறது. ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித்துகள் பெரும்எண்ணிக்கையில் திரள அழைப்பு விடுக்கப்படுகிறது.
இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. தலித்துகள் காலடி பட்ட இடத்தில் தூசு தட்ட அவர்கள் எப்போதும் துடைப்பத்தை இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். எச்சில் துப்ப கழுத்தில் ஒரு குவளை கட்டியிருக்க வேண்டும். அன்றைய பெஷாவாக்களின் விதி. 1818ல் கிழக்கிந்திய கம்பெனியின் படையில் வெறும் 500 என்ற எண்ணிக்கையில் இருந்த மகாராஷ்டிராவின் மஹர் பிரிவினர், 20,000 பேர் இருந்த பெஷாவா படையை தோற்கடித்தார்கள்.
அந்தப் போரில் கொல்லப்பட்ட தலித்துகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் புனேயில் பீமா கோரேகானில் பீமா ஆற்றங்கரையோரம் நினைவுச்சின்னம் கட்டியது. நூறாண்டுகள் கழித்து ஜனவரி 1, 1927 அன்று அம்பேத்கர் அங்கு சென்றார். அது தலித்துகளின் வீரத்தை, அவர்களது அறுதியிடலை, சாதியாதிக்க எதிர்ப்பில் அவர்கள் பெற்ற வெற்றியை குறிக்கும் இடமாக அப்போது முதல் கருதப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் அங்கு சென்றார்.மகாராஷ்டிராவின் தலித்துகள் ஒவ்வோர் ஆண்டும் பெரும்எண்ணிக்கையில் அங்கு கூடிதங்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
2018 ஜனவரி 1 அன்றும் அதுபோன்ற ஒரு கூட்டம் அங்கு நடந்தது. மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இருந்தும் தலித்துகள் வந்த வண்ணம் இருந்தனர். பீமா கோரேகானுக்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்து அங்கு வந்து கொண்டிருந்த தலித்துகள் மீது கல்லெறி நடந்தது. அகில பாரதிய பிராமிண் மகாசபா, இந்து ஏக்தா அகாதி, சிவ் பிரதிஸ்தன், ராஷ்ட்ரிய ஏகத்மாதா ராஷ்ட்ர அபியான் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவிக் கொடிகளுடன் அங்கு வந்து அங்கு திரண்டிருந்த தலித்துகள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கினார்கள். வாகனங்களை, அதாவது, தலித்துகளின் சொத்துகளை, எரித்தார்கள்.
காவிக் கொடிகளுடன் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் வெளியாயின.மகாராஷ்டிரா பற்றியெரிந்தது. அலைபேசி நிறுவனங்கள் ஜனவரி 2 வரை சேவையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயினும் பீமா கோரேகானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தலித் மக்கள் வீதிகளில் இறங்கினர். நாடெங்கும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் ஜனவரி 3 அன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
தலித்துகளை அச்சுறுத்த காவிக் கூட்டம் எடுக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஜனவரி 1 கூட்ட அமைப்பாளர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் போராட்டங்களில் இறங்கிய தலித்துகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மகாராஷ்டிரா முழுவதும் 502 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் மட்டும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,000 பேர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 6 அன்று 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். சட்டவிரோதமாகக் கூடினான், கலகம் செய்தான், அரசு ஊழியரை பணி பார்க்க விடாமல் தடுத்தான், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தான் என்றெல்லாம் அவன் மீது குற்றச்சாட்டுகள் போடப்பட்டன. அவன் ஒரு தலித். ஜனவரி 3 அன்று செம்பூரில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று காரணம் சொல்லி 16 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அனைவரும் 16 வயதுக்குக் குறைவானவர்கள். அந்தச் சிறுவர்களை பிணையில் விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் கூட அவர்களிடம் இல்லை. வங்கிக் கணக்கு, அதில் வைப்பு என்று எதுவும் இல்லை.அந்த 16 சிறுவர்களில் ஒரு சிறுவனுக்கு கண்ணாடி கிழித்து கொடூரமாக காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை விடுவித்துவிட்டார்கள். இன்னும் 13 சிறுவர்களை அவர்களது வங்கிக் கணக்கு வைப்பு வைத்திருந்த உறவினர் மூலம் பெற்றோர் எப்படியோ பிணையில் விடுவித்துக் கொண்டனர். இன்னும் இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களால் உடனடியாக அதுபோன்ற ஏற்பாடுகள் செய்ய முடியாததால் அந்தச் சிறுவர்கள் விடுவிக்கப்படவில்லை. இது ஜனவரி 8 அன்று நிலைமை.
தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று நாடெங்கும் குரல் வலுத்து வரும்போது, பாதிக்கப்பட்ட, தாக்குதல்களுக்கு உள்ளான தலித்துகள் மீது பொய் புகார்கள், வழக்குகள் போட்டு அவர்களை கைது செய்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மகாராஷ்ட்ராவின் பாஜக அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்து ராஜ்ஜியம் என்ற இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்த கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் பயன்படுத்துகின்றன. இந்த முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும். மக்கள் இந்தியா படைக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.