மாநில உரிமைகளை, கிராமப்புற மாணவர்களின்
மருத்துவர்
கனவை ஒழித்துக் கட்டும்
மோடி அரசின் தேசிய மருத்துவ
ஆணைய மசோதா
ஜி.ரமேஷ்
இந்திய
மருத்துவக் கவுன்சிலை மாற்றி விட்டு, தேசிய
மருத்துவ ஆணையத்தை உருவாக்க, மோடி அரசு தேசிய
மருத்துவ ஆணைய மசோதா 2017அய்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
நாடு
முழுவ தும் எதிர்ப்பு எழுந்த
பிறகு, மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போது மான, திறமையான
மருத்துவர்களை உருவாக்குவது, சமீபத்திய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை மருத்துவத் தில் பயன்படுத்துவது, புதிய
ஆராய்ச்சிகள் மேற்கொள் வது, அறநெறி சார்ந்த
மருத்துவத்தை அமல்படுத்து வது, தேவைக்கு ஏற்ப
மாற்றம் செய்து கொள்ளும் தன்மையுடையதாய்
இருப்பது ஆகியவை நோக்கம் என்கிறது
புதிய மசோதா.
மருத்துவக்
கல்லூரிகளுக்கும் மருத்துவப் படிப்புக்கும் அங்கீகாரம் வழங்கும் இந்திய மருத்துவக் கவுன்சில்
ஊழல்மயமாகிவிட்டது, மருத்துவக் கல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை
இந்திய மருத்துவக் கவுன்சில் தடுக்கத் தவறி விட்டது, ஆகவேதான்
இந்த புதிய மசோதா உருவாக்கப்படுகிறது
என்கிறது மோடி அரசு. நாட்டின்
மருத்துவத்தை முறைப்படுத்தப் போவ தாகவும் மருத்துவக்
கல்வி வியாபாரம் ஆக்கப் படுவதைத் தடுக்கப்
போவதாகவும் சொல்லி தாக்கல் செய்யப்படும்
இந்த தேசிய மருத்துவ ஆணைய
மசோதா 2017, உண்மையில், பாஜக மோடி அரசின்
ஏக இந்தியா திட்டத்தின் அடுத்த
கட்டம்.
தற்போது
உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில்,
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1933ன்படி உருவாக்கப்பட்டது. இந்திய
மருத்துவக் கவுன்சில் சட்டரீதியாக ஒரு தன்னாட்சி அதிகாரம்
கொண்ட அமைப்பு. இதில் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர் கள் அனைவருமே
மருத்துவர்கள். தேர்ந்தெ டுக்கப்படுபவர்கள். இதில் மாநிலவாரியான பிரதிநிதித்
துவம் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 6 மருத்துவர்கள் இந்திய
மருத்துவக் கவுன்சிலில் தற்போது உறுப்பினர் களாக
உள்ளனர். ஆனால், புதிய மசோதா
சொல்கிற தேசிய மருத்துவ ஆணையத்தில்,
ஒரு தலைவர், 12 பதவி சார்பான உறுப்பினர்கள்,
11 பகுதி நேர உறுப்பினர்கள், ஒரு
பதவி சார்ந்த செயல் உறுப்பினர்
இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் மத்திய
அரசே நியமனம் செய்யும்.
12 பதவி
சார்ந்த உறுப்பினர்களில் இளநிலை மருத்துவக் கல்விக்
கழகத் தலைவர், முதுநிலை மருத்துவக்
கல்விக் கழகத் தலைவர், மருத்துவ
நெறி முறைகள் மற்றும் பதிவுக்
கழகத் தலைவர், மருத்துவ மதிப்பீடு
மற்றும் தரம் பிரித்தல் கழகத்தின்
தலைவர், இந்திய
மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர், டெல்லி
அகில இந்திய மருத்துவ விஞ்
ஞானக் கழகத்தின் இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்,
மும்பை டாடா நினைவு மருத்துவ
மனையின் இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்
பட்டவர் போன்றவர்களும் மத்திய அரசின் கூடுதல்
செயலாளர் பதவியில் உள்ள ஒருவர் மத்திய
அமைச் சரவையால் நியமிக்கப்பட்டும் இருப்பார்கள். இவர் களில் யாரும்
மருத்துவர்களாக இருக்க வேண்டிய தில்லை.
11 பகுதி நேர உறுப்பினர்களில் 3 பேர்
பொரு ளாதாரம், சட்டம் போன்றவற்றில் அனுபவம்
உள்ளவர் கள்; 3 பேர் சுழற்சி
அடிப்படையில் மாநிலங்கள், யூனி யன் பிரதேசங்களில்
உள்ள மருத்துவ ஆலோசனைக் குழுவால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு
முறை நியமிக் கப்படுபவர்கள்; மண்டலவாரியாக
தேர்வு செய்யப்படும் 5 பதிவு பெற்ற மருத்துவர்கள்
இருப்பார்கள்.
தேசிய மருத்துவ ஆணையத்தில் 5 பேர் மட்டுமே பதிவு
பெற்ற மருத்துவர்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு
சுழற்சி அடிப்படையில் மூன்றே மூன்று பிரதிநிதிகள்.
அவர்களின் பதவிக் காலம் இரண்டு
ஆண்டுகள் மட்டுமே. அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள்
வந்துவிடும். முடிவு எடுக்கும் அதிகாரம்
மத்திய அரசுக்கு மட்டுமே. முடிவு எடுக்கும் அதிகாரம்
உள்ள குழுவில் மாநிலங்களின் பிரதிநிதிகளே கிடையாது. ஆலோசனைக் குழுவில் மட்டுமே மாநிலப் பிரதிநிதிகள்
இருக்கமுடியும். மருத்துவ நெறி முறைகளை வகுப்பதில்
இருந்து, மருத் துவக் கல்லூரிகளுக்கு
அனுமதி மற்றும் அங்கீகாரம் அளிப்பது,
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, மருத்துவர்களை
நியமிப்பது என அனைத்தும் மத்திய
அரசின் கட்டுபாட்டில். மாநிலப் பிரதிநிதிகள் ஒப்புக்கா
னவர்கள். இந்த தேசிய ஆணையத்தின்
முடிவுகளை மாநில அரசு அமல்படுத்த
வேண்டும். மருத்துவத்தில், மருத்துவப் படிப்பில், மருத்துவர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கான அதிகாரம்,
பங்களிப்பு என்று எதுவும் இருக்காது.
தேசிய அளவிலான ஒரே தகுதித்
தேர்வு நீட் தேர்வு நடத்தப்படும்.
ஏற்கனவே
நீட் தேர்வைக் கொண்டுவந்து தமிழ் நாட்டு கிராமப்புற
ஏழை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மாணவர்களின் மருத்துவர்
கனவை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். அனிதா கொல்லப்பட்டுவிட்டார். தற்போது நான்கரை
ஆண்டு காலம் இளநிலை மருத்
துவப் படிப்பு முடித்துவிட்டு ஓராண்டு
காலம் உள்ளுறை பயிற்சியை முடித்தவர்கள்
நேரடியாக மருத்துவர்களாக பணியாற்றலாம். ஆனால், இனி இவர்கள்
மருத்துவர் களாகப் பணியாற்ற வேண்டும்
என்றால் உள்ளுறை பயிற்சி முடித்த
பின்பு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு,
அதாவது தேசிய உரிமத் தேர்வு
எழுதி தேர்ச்சி பெற் றால்தான் அவர்கள்
மருத்துவர்களாகவே பணி யாற்ற முடியும்.
இந்த தேசிய உரிமத் தேர்வில்
தேர்ச்சியின் மூலம்தான் அந்த மாணவர்கள் முதுநிலை
மருத்துவப் படிப்பிலும் சேரமுடியும். மருத்துவப் படிப்பு படிக்க தகுதி
தேர்வு, நீட். மருத்துவப்படிப்பு படித்து
முடித்த பின் உரிமத் தேர்வு
. இதுபோன்ற தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படும்;
மாநிலப் பள்ளிகளில் படித்தவர்கள் தேர்ச்சி பெறுவது சிரமம்.
உச்சநீதிமன்றம்
ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையி
லான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியது. அதன்படி இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டம் 1956ல் திருத்தங்கள் செய்ய
கோரியது. அதைத்தான் தாங்கள் செய்வதாக மோடி
அரசு சொல்கிறது. ஆனால், மோடி அரசு
கொண்டு வருவது இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டம் 1956ல் கொண்டு வரப்படும்
திருத்தங்கள் அல்ல. தேசிய மருத்துவ
ஆணையச் சட்டம் 2017 முற்றிலும் புதிய சட்டம். இது
மருத்துவத்தை, மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கும். வரைமுறையின்றி
புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு
பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் அளிக்க
வழி செய்யும். அவற்றை ஒழுங்கு படுத்துவது
பற்றி மசோதா பேசவில்லை. தவறிழைக்கும்
கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று
சொல்லப்பட்டுள்ளது. எவ்வளவு, எப்படி என்று கூட
மசோதா சொல்லவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின்
கட்டணங்களை ஆணையம் நிர்ணயம் செய்யும்
என்று சொல்லப்பட்டாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
பல்கலைக் கழகங்களில் 40%த்திற்குக் குறைவான இடங்களுக்கு மட்டுமே
தேசிய ஆணையம் கட்டணம் நிர்ணயம்
செய்யும். மீதம் உள்ள 60%த்திற்கு
மேற்பட்ட இடங்களுக்கான கட்ட ணங்களை தனியார்
மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்ணயம்
செய்து கொள்ளலாம் என்கிறது மசோதா. இது மருத்துவக்
கல்வியை வியாபாரமாக்குவதன்றி வேறென்ன?
மருத்துவ
மதிப்பீடு மற்றும் தரம் பிரித்தல்
கழகம் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகா
ரம் வழங்கும். இதில் ஒரு தலைவரும்
இரண்டு உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். இவர்கள்
அனுமதி மறுத்துவிட்டால், அரசாங்கத்திடம் மேல் முறையீடு செய்யலாம்.
இந்த நடைமுறை, நிச்சயம் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின்
தொடர்ச்சியாக, வெளிநாட்டு தனியார் மருத்துவப் பல்கலைக்
கழகங்கள், மருத்துவர்கள் தங்குதடையின்றி இந்தியாவுக்குள் வரும்.
தற்போது
உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலில்
குறைபாடுகள், ஊழல்கள் உள்ளன என்றால்,
அதற்கு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் காரணம். பணம் வாங்கிக்
கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு
அனுமதி அளிப்பதும் அரசு மருத்துவ மனைகளைக்
கூட தனியார்வசம் ஒப்படைப்பதும் அதி காரத்தில் இருப்பவர்களால்தான்
நடைமுறைப்படுத்தப் படுகிறது. குறைபாடுகளைச் சரி செய்வதற்குப் பதிலாக,
குறைபாடுகளையே முழுமையானதாக்கிவிட்டால், குறைபாடுகள் தெரியாதல்லவா! தேசிய மருத்துவ ஆணையம்
முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாலும் அதிகார
வர்க்கத்தினராலும் ஆக்கிரமிக்கப்படும்.
ஹோமியோபதி,
சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற
மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்களும் இனி அலோபதி மருத்துவத்தில்
சிகிச்சை அளிக்கலாம் என மசோதா கூறுகிறது.
அதற்கு அவர்கள் இணைப்புப் படிப்பு
மூலம் நவீன மருத்துவத்தைப் படிக்கலாம்
என்கிறது. சித்தா, ஹோமி யோபதி,
யுனானி போன்ற மருத்துவங்களை ஆயுஷ்
என்று ஒரே துறையின் கீழ்
கொண்டு வந்து அவற்றின் தனித்தன்மையை
ஒழிக்கும் வேலையில் ஏற்கனவே இறங்கிவிட்டது மோடி
அரசு. இப்போது மாற்றுமுறை மருத்துவர்களும்
அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அவர்கள் அலோபதியில் முதுநிலை
படிப்பு படிக்கலாம் என்று புதிய மசோதா
சொல்வதில், அந்த மருத்துவ முறைகளின்
தனித்துவத்தை அழித்து பிறகு அவற்றை
ஒழித்துவிடுவதே நோக்கம். அலோபதியின் மறுபக்கம் மாற்று முறை மருத்துவத்தில்
ஆயுர்வேதத்தையே பாஜக அரசு முன்நிறுத்துகிறது.
இந்து இந்தியா, இந்தி மொழி, சமஸ்கிருத
ஆயுர்வேதம். இதுதான் மோடி அரசின்
நோக்கம்.
நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் வர
அனுமதித்து, மாநில உரிமையை விட்டுக்
கொடுத்து, தமிழ்நாட்டு கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
மக்களின் மருத்துவர் கனவைப் பறித்த, அனிதாவின்
மரணத்திற்கு காரணமான பழனிச்சாமி அரசு,
இப்போது சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
மூலம், தேசிய மருத்துவ ஆணைச்
சட்டத்தை எதிர்த்து நாடா ளுமன்ற நிலைக்குழுவிற்கு
கடிதம் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் இருந்தும்,
உரிமத் தேர்வில் இருந்தும் விலக்கு கேட்டுள்ளது. இந்தப்
பின்னணியில் தமிழகத் தின் நலனை,
உரிமைகளை மீட்க, தமிழக உழைக்
கும் மக்கள் ஓரணியில் திரள்வது
உடனடித் தேவை.