COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, February 2, 2018

யெச்சூரி - கராத் விவாதம்
ஒரு பொய்யான இருமத்துக்குள்
இடதுசாரி அரசியலை வரையறுக்கிறது

திபங்கர்

(23.01.2018 அன்று தி வயர் இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை)

ஜனவரி 19 - 21, 2018 தேதிகளில் கொல்கத்தாவில் நடந்த இககமா மத்திய கமிட்டி கூட்டம் பற்றி வெளியாகியுள்ள ஊடக செய்திகள், தற்போதைய அரசியல் மதிப்பீடு மற்றும் செயல்தந்திர நிலைப்பாடு பிரச்சனையில் கட்சி பெரிய அளவில் பிளவுண்டுள்ளதாகச் சொல்கின்றன.
இந்தச் செய்திகள், கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச் சூரி முன்வைத்த நகல் அரசியல் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (ஆதரவாக 31 வாக்கு கள், எதிராக 55 வாக்குகள்) என்றும் அய்தரா பாதில் நடக்கவுள்ள இககமா காங்கிரஸ், முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் கராத் முன்வைத்த நகலை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்றும் என்றும் சொல்கின் றன. இககமாவுக்குள், ‘வங்க வழிக்கும்’‘கேரள வழிக்கும்இடையிலான மோதல் என்று இந்தப் பிளவு பார்க்கப்படுகிறது. இககமாவுக்கு அப்பால், பரந்த முற்போக்கு தாராளவாத பிரிவினர் மத்தியில், காரியசாத்திய வாத வெகுமக்கள் வழிக்கும் தூய்மைவாத தனிமைப்படுதல் நிலைப்பாட்டுக்கும் இடையி லான மோதல், வெகுமக்கள் தேர்தல் அரசிய லின் நுட்பங்களை அறிந்தவர்களுக்கும் மார்க்சிய புத்தக விதிகளால் செலுத்தப்படு பவர்களுக்கும் இடையிலான மோதல் என்று பார்க்கப்படுகிறது.
இந்த வேறுபடுத்துதல்கள் மிகவும் மேலோட்டமானவை. தவறானவை. மேற்கு வங்க இககமா ஒரு காலத்தில் தேர்தல் அரசியலை நடைமுறைப்படுத்துவதில் எந்த அளவுக்கு செயல்திறன்மிக்கதாக இருந்ததோ, கேரள இககமாவும் தேர்தல் அரசியலை நடைமுறைப்படுத்துவதில் அதே அளவுக்கு செயல்திறன்மிக்கது. கேரளாவில்தான் 1957ல் கம்யூனிஸ்டுகள் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தனர். இடையிடையே தோல்விகளை எதிர்கொண்டபோதும் 60 ஆண்டுகள் கழித்து இப்போதும் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார் கள். மேற்குவங்க இககமா 34 ஆண்டுகாலம் நடத்திய ஆட்சி போல், இது பிரம்மிக்கத் தக்கதாக இல்லாமல் போகலாம்; ஆனால் மேற்குவங்கத்தில் இககமாவின் வீழ்ச்சியும் பிரமிக்கத்தக்கதாகத்தான் இருந்தது. மாறாக, ஸ்திரமான, நீடித்த கேரள வரலாறு, மேற்கு வங்க இககமா வரலாற்றை விட சற்றும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. எனவே இந்த மேலோட்டமான வார்ப்புகளுக்கு அப்பால், உண்மையான, ஆழமான அரசியல் கேள்விகள் என்ன என்று பார்க்க வேண்டும்.
விவாதம் எதைப் பற்றியது?
இரண்டு முக்கிய பிரச்சனைகளைச் சுற்றி விவாதம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் சங் - பாஜக தாக்குதலின் தற்போதைய கட்டம் ஆகியவற்றை இககமா எப்படி மதிப் பீடு செய்கிறது? இந்த கட்டத்தில் இககமாவின் தேர்தல்/அரசியல் செயல்தந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? பாசிசம் நம் கண்முன்னே நேராக எழுந்துள்ளது, பாசிசத்தை எதிர் கொள்ள இடதுசாரிகள் பரந்த மதச்சார்பற்ற கூட்டணியை கட்டியமைக்க வேண்டும் என்று யெச்சூரி வாதிடுவதாகச் சொல்லப்படுகிறது. மறுபுறம், கராத், நாம் எதிர்கொள்வது பாசிசம் அல்ல, அது மதவாத எதேச்சதிகாரம், இந்தச் சவாலை எதிர்கொள்ள காங்கிரசுடன் கூட் டணி என்பது பதிலல்ல என்று வாதிடுகிறார்.
இந்தியாவில் இன்று நாம் எதிர்கொள்வது பாசிசத்துக்கு சற்றும் குறைந்ததல்ல என்று இடதுசாரி தாராளவாத வட்டங்கள் மத்தியில் உண்மையில் பரந்த ஒத்தக் கருத்து உள்ளது. இந்தியாவை பாசிசம் பிடித்தாட்டுகிறது என்று சொல்ல, முதலாளித்துவ ஜனநாயகத்தை முற்றிலுமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு, வதை முகாம்கள், விசவாயு அறைகள், மானுடப் படுகொலையின் பயங்கரங்கள் என்ற கொடூர மான யதார்த்தங்கள் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. கும்பல் படுகொலை செய்யும் மதவெறியர்கள், எண்ணற்ற கண்காணிப்பு குழுக்கள், தீவிரமடையும் பார்ப்பனீய - ஆணாதிக்க தாக்குதல்கள், எதிர்ப்புக் குரல் களும், சாமான்ய குடிமக்களும் குறிவைத்து படுகொலை செய்யப்படுவது, மர்மமான விதத் தில்இறந்துவிடுவது, ‘காணாமல் போவதுஆகியவை போதுமான அளவுக்கான எச்ச ரிக்கை மணிகள். அவற்றை புறக்கணிக்கிறோம் என்றால் நாம் அழிந்துபடுவோம். இந்தியா ஒரு முன்னாள் காலனிய நாடு, தற்போது ஏகாதி பத்திய அறிவுறுத்தலின் பேரில் ஒரு சர்வதேச சக்தியாக மாறும் கனவு கொண்டிருக்கிறது, ஆனால் ஹிட்லரின் தலைமையிலான ஜெர் மனி, ஒரு சுற்றிவளைக்கப்பட்ட வீழ்ச்சிய டைந்து கொண்டிருந்த ஒரு காலனியாதிக்க சக்தி, சிந்திச் சிதறி ஓர் உலகப் போருக்கே இட்டுச் சென்ற, உள்வயப்பட்ட பாசிசத்தின் மூலம் சர்வதேச மேன்மையை, இனத்தூய் மையை, இனப்பெருமிதத்தைஎட்ட முயற்சி செய்து கொண்டிருந்த சக்தி என்பது உண்மைதான். ஆனால், இந்த வேறுபாடுகள், மதச்சார்பற்ற இந்தியாவை ஓர் இந்து ராஜ்ஜியமாக மாற்றும் சங் - பாஜக இந்து மேன்மைவாத திட்டத்தின் பாசிச சாரத்தை மறுதலித்துவிட முடியாது.
அதானி, அம்பானி வகை கூடாநட்பு முதலாளித்துவம், பணமதிப்பகற்றம், ஜிஎஸ்டி, ஆதார் போன்ற தன்னிச்சையான நடவடிக்கை களுடன், தனியார்மய, உலகமய கொள்கை களை மூர்க்கமாக பின்பற்றுவது என்று மட் டுமே மோடி அரசாங்கம் இருக்குமானால், அதை மற்றுமொரு எதேச்சதிகார, நவதாராளவாத ஆட்சி என்று நாம் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் ஆதிக்கம் எல்லா அம்சங்களிலும் அதிகரித்துக் கொண்டேயிருப் பது, தற்போதைய ஆட்சியை மறுக்க முடியாத பாசிசத் தன்மையுடையதாகவே ஆக்குகிறது. ஆர்எஸ்எஸ் எப்போதுமே, பாசிச நிகழ்ச்சிநிரல் கொண்ட ஒரு பாசிச அமைப்பாகவே இருந் துள்ளது. இப்போது அது அரசு அதிகாரத்தின் மீது, அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பிடி பெற்றுவிட்டது; கண்மூடித்தனமான வேகத் தில் தனது மொத்த நிகழ்ச்சிநிரலையும் கட்டவிழ்த்துவிடும் நிலையில் அது இன்று உள்ளது. எனவே, சங் - பாஜக ஆட்சியை அதிகாரத்தில் இருந்து விரட்டுவது மிகவும் அவசியமானது; தேர்தல்களில் என்ன நடக் கிறது என்பது நிச்சயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால், பாஜக ஓரிரவில் எழுந்துவிட வில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் அது சீரான, பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள் ளது. அடுத்தடுத்த அரசாங்கங்கள் நம்பகத் தன்மை இழந்ததால் உருவான அரசியல் வெற்றிடத்தால், பாஜகவுடன் உறவாடுவதில், ஓர் ஒட்டுமொத்த வரிசை ஆளும் வர்க்கக் கட்சிகளும், அதற்கு உடந்தையாக இருந்த தால், அடிபணிந்ததால் அது சாத்தியமானது. பாஜகவை எதிர்த்துப் போராட தயாராக இருப்பதை விட, பாஜகவுடன் உறவாட, அதனுடன் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள இன்று கூடுதல் கட்சிகள் இருக்கின்றன என்பது இன்று யதார்த்தமாக உள்ளது. சங் - பாஜக ஆட்சியை திறன்மிக்க விதத்தில் முறியடித்து, அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த, ஒரு வலுவான ஜனநாயக உள்ளடக்கம் மற்றும் அடிப்படை கொண்ட ஒரு நம்பகத்தன்மையு டைய மாற்று நிச்சயம் அவசியம். அதுபோன்ற ஒரு மாற்றை கட்டியெழுப்புவதில், வலுப்படுத் துவதில், செயலூக்கமிக்க, துடிப்பான இடது சாரி சக்தி நிச்சயம் ஒரு மிகப்பெரிய பாத்திரமாற்ற முடியும்.
சரியான மாற்றை கண்டறிவது
மதவாதமுகாமில் இருந்துமதச்சார் பற்றமுகாமுக்கு சர்வசாதாரணமாக செல் வதும் வருவதுமாக இருக்கும் கட்சிகளுடன் ஒரு பரந்த மதச்சார்பற்ற அணி என்ற எளிமை யான சூத்திரம் (பீகாரில் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் மிகவும் பளிச்சென தெரிகிற உதாரணம்; ஆனால் அது ஒன்று மட்டுமே அப்படிப்பட்டது அல்ல), மதச்சார் பின்மையின் நம்பகத்தன்மையை அற்றுப் போகச் செய்துவிட்டது. இது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பாஜகவுக்கு எந்த ஸ்திர மான மாற்றாகவும் இருக்கவில்லை. சாத்தியப் பட்ட அளவுக்கு மிகப்பெரிய பாஜக தோல் வியை உறுதி செய்ய ஒரு தேர்தல் போர்த் தந்திரத்தை வடிவமைப்பது அல்லது பாஜக ஆட்சியமைப்பதைத் தடுக்க, சாத்தியமான தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாட்டை உருவாக் குவது என்பது ஒரு விசயம்; ஆனால் ஒரு பெரிய மதச்சார்பற்ற கூட்டணி என்ற மாயையான கருத்தாக இடதுசாரி செயல்தந்திரத்தை சுருக்குவது வேறு விசயம்; அது பயனற்ற ஒரு நடவடிக்கை. கடந்த முப்பதாண்டுகால அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.
இககமாவுக்குள் காங்கிரஸ் பற்றி நடக்கும் விவாதம் உண்மையில் தப்பிச்செல்லும் தன்மை கொண்ட ஒரு விவாதம். அய்முகூ 1 காலத்தில் மறைமுகமாக ஆட்சியில் பங்கேற்றது முதல், மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுடன் தொகுதி உடன் பாடு கண்டது வரை, வெளிப்படையாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவது என்றில்லாவிட்டாலும், பல்வேறு வடிவங்களில், அளவுகளில், இககமா, காங்கிரசு டன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவின் வளர்ச்சியை - தேசிய அளவில் மட்டுமின்றி, குறிப்பாக மேற்குவங்கத்திலும் அது தடுத்து நிறுத்திவிடவில்லை. மேற்குவங்கத்தில் இககமா தனது அடித்தளத்தை இழப்பதையும் அது தடுத்து நிறுத்தவில்லை. (இககமாவின் ஒட்டு மொத்த பலத்திலும் ஆகிருதியிலும் மிகப் பெரிய அரிப்புதான் விளைவாக இருந்தது). காங்கிரசுடனான தனது உறவு பற்றி இககமா விவாதித்துக் கொண்டிருக்கும் போது, காங் கிரஸ், தனது உள்ளாற்றல்மிக்க கூட்டாளியாக திரிணாமூல் காங்கிரசுடன் உறவாடிக் கொண் டிருப்பது சுவாரசியமானது.
முன்முடிவாகிவிட்ட காங்கிரஸ் - இககமா நெருக்கம்தான் மேற்குவங்கத்தில் திரிணாமூல் வளர்வதற்கு இட்டுச் சென்றது; முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தின்போது, தேஜமுவில் திரிணாமூல் காங்கிரசும் இருந்தபோது, அதை பாஜக முழுமையாக, நேரடியாக ஆதரித்தது; தேஜமுவில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகும், இககமாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பாஜக திரிணாமூல் காங்கிரசை மறைமுகமாக ஆதரித்தது. 2006ல் இககமா 80% பெரும்பான்மை பெற்ற போதும், அது மிகப்பெரிய உயரத்தில் இருந்து விழுந்த தற்கும், காங்கிரசுடனான அதன் சமன்பாட்டுக் கும் எந்த தொடர்பும் இல்லை. சிங்கூர் - நந்திகிராம் - லால்கர் நிகழ்வுகளில் மிகவும் தெளிவாக முன்வந்ததுபோல், இடது முன் னணி ஆட்சி உள்ளூர தடம் புரண்டதும், இகக மா முழுமையாக அரசாங்கத்துடன் அடை யாளப்படுத்தப்பட்டது, அரசாங்கத்தைச் சார்ந்திருந்தது, அதிகாரத்துவ அகந்தை, மக்களிடம் இருந்து கட்சியின், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் இககமா தலைமை தனிமைப்பட்டது ஆகிய அனைத்தும் சேர்ந்து தான், வீழ்ச்சியை துவக்கி வைத்தது. இந்த அடிப்படை பிரச்சனையை அங்கீகரிக்க, சரி செய்ய, இககமா மறுக்கிறது; மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை  கொண்டு வந்ததாக மக்கள் மீது பழி சுமத்துகிறது
இககமா, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக் கும் இன்று கேரளா மிகவும் முக்கியமான ஒரு மாநிலம். கேரளாவில் பாஜகவின் தேர்தல்ரீதி யான வெற்றி ஓரளவானதே என்றாலும், ஆர்எஸ்எஸ்சுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வலு வான, விரிவான வலைப்பின்னல் இருப்பது நன்கறியப்பட்ட விசயமே. கேரளாவில் காங் கிரஸ் - இககமா கூட்டணி, கேரளாவில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக வளர்வதற்கே உதவும். திரிபுராவில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், பாஜகவுக்கு அந்த இடத்தை திறன்மிக்கவிதத்தில் விட்டுத்தந்து விட்டது. மேற்குவங்கத்தில் இககமாவைப் பொறுத்தவரை, திரிணாமூல் காங்கிரஸ்தான் இலக்கு என்றாலும், அதை பாஜகவுக்கு சமமா னதாகத்தான் பார்க்கிறது. இந்த தருணத்தில், திரிணாமூல் காங்கிரசும் பாஜகவும் எதிரெதி ராக இருப்பதாக தோற்றமளித்தாலும், பொது மக்கள் பார்வையில், மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ்தான் ஆகப்பெரிய பாஜக எதிர்ப்பு கட்சியாக இருக்கிறது. உண்மையில், பாஜகவை எதிர்கொள்ள ஒரு பரந்த மதச்சார் பற்ற கூட்டணி வேண்டுமென இககமா கருதுமானால், அது திரிணாமூல் காங்கிரசின் ஓர் இளைய கூட்டாளியாக தன்னை மறு கண்டுபிடிப்பு செய்து கொள்ள, மறுவாழ்வ ளித்துக் கொள்ள வேண்டும். நிச்சயம், மீண்டும், இதுவும் பாஜகவுக்கு மிகப் பெரிய அளவில் உதவுவதாக இருக்கும்.
ஒரு வலுவான செயலூக்கமிக்க இடது சாரியே இப்போதைய தேவை. 2014க்குப் பிந்தைய அரசியல் தந்துள்ள அனுபவம், காங் கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சி கள் செய்வதறியாமலும், சோர்வுற்றும் இருக் கும்போது, எந்த பெரிய எதிர்ப்பு, கிளர்ச்சி முன்முயற்சியையும் அவற்றிடம் காண முடியா தபோது, பாஜகவுக்கு சவால்விடும் வெகு மக்கள் கிளர்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல், அவை அந்த இயக்கப்போக்கில் புதிய முகங்களை, புதிய சக்திகளை முன்கொண்டு வந்துள்ளதையும் காட்டுகிறது. சமீபத்திய குஜராத் தேர்தல்கள் இந்த யதார்த்தத்தை திகைப்பூட்டும் விதத்தில் உறுதி செய்கின்றன. அதேபோல், ராகுல்காந்தியின் தலைமையில் காங்கிரசை மீட்டெடுக்க மிகவும் காலதாமத மாக எடுக்கப்பட்ட முயற்சி என்பதையும் உறுதி செய்கின்றன. சோம்நாத் கோவிலில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை (தேர்தல் முடிவுகள் பரிசீலனையையும்) துவக்கியதன் மூலம், பாஜகவுடன், அதன் களமான இந்துத் துவா என்ற தளத்தில் போட்டியிடும் நாட் டத்தையும் காங்கிரஸ் மீண்டும் வெளிப்படுத்தி யுள்ளது. பாஜக இன்னும் மூர்க்கமாக நிகழ்ச்சி நிரலை நிர்ணயித்துக் கொண்டே செல்ல இந்த தற்கொலை இயல்புதான் உதவியது; இந்த தற்கொலை இயல்பால்தான், செய்வதறியாத காங்கிரசும் தாமதமான, தற்காப்பு பதில்வினை களுடன் சுருங்கி நிற்க வேண்டியதாயிற்று.

மதச்சார்பற்ற மகாகூட்டணி என்ற கானல் பின்னால் செல்வதற்குப் பதிலாக, களத்தில் சக்தி வாய்ந்த போராட்டங்களை நடத்துவதில், துணிச்சலான சமூக - கலாச்சார, கருத்தியல் - அரசியல் இயக்கங்களை, முன்முயற்சிகளை கட்டவிழ்த்துவிடுவதில் இடதுசாரிகள் முன்கை எடுக்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளிலும் சரியான தலையீடு, ஜனநாயகத்தைப் பாதுகாக் கும் போராட்டங்களை கட்டியெழுப்பி முன் செலுத்த ஒன்றுபட்ட முயற்சிகள் ஆகியவையே, ஆகமுக்கியமான 2019 தேர்தல்களிலும் அது வரை வரவுள்ள தேர்தல்களிலும் பாஜகவை தோற்கடிப்பதற்கு திறவுகோலாகும். இடதுசாரி களின் வலிமையை அதிகரிப்பதையே, உந்தித் தள்ளுவதையே, அதன் முன்முயற்சியை, தாக்கத்தை அதிகபட்சமாக்குவதையே, இடது சாரி அணுகுமுறையும் செயல்தந்திரமும் நோக் கமாகக் கொண்டிருக்க வேண்டும். யெச்சூரி - கராத் விவாதம், ஒரு பொய்யான இருமத் துக்குள் இடதுசாரிகளின் கடமைகளை, திசைவழியை வரையறுக்கிறது. வளர்ந்து வருகிற பாசிச ஆபத்தை எதிர்கொள்வதில், ஒரு சக்திவாய்ந்த, சுதந்திரமான இடதுசாரி அறுதியிடல் மேலும் அவசரமானது. இந்த அறுதியிடல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகிற அரசியல் சூழல்களுக்கும் பாஜகவை முறியடிப்பது, இடதுசாரிகளை வலுப்படுத்து வது என்ற மய்யக் கடமைக்கும் ஏற்றாற்போல், பொருத்தமான தேர்தல் செயல்தந்திரத்தை கண்டறியும் தயார்நிலையுடன், கச்சிதமாக பொருந்திப் போகக் கூடியதுதான்; இந்த அறுதியிடல், அந்தத் தயார்நிலையுடன் இணைக்கப் படவும் வேண்டும்.

Search