கோவையில் மூலதனத் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது
இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஒய்.வி.சந்திரசூட், இந்த நாடு விழித்தெழ வேண்டும் என தாகூர் விரும்பிய சுதந்திரத்தின் சொர்க்கத்திற்கும், கட்டற்ற அதிகாரத்தின் அதலபாதாளத்திற்கும் இடையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்று சரத்துகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த சரத்துகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சரத்து 14, பேச்சுரிமை, எழுத்து ரிமை, கருத்துரிமை, அமைப்பாகும் உரிமை ஆகிய வற்றை உறுதிப்படுத்தும் சரத்து 19 மற்றும் பொருளுள்ள செறிவுள்ள உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசும் சரத்து 21 ஆகியவையே ஆகும். இந்த மூன்று அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கு இருக்கும்போது அவர்கள் சுதந்திரத்தின் சொர்க்கத்தில் விழித்துக் கொள்ள முடியும் என்றும், இந்த மூன்று உரிமைகளும் இல்லாதபோது அவர்கள் கட்டற்ற சர்வாதிகாரத்தின் அதலபாதாளத்தில் சிக்கிக்கொள்வார்கள் என்றும்தான், தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.
தமிழக அரசு, கோவை காவல்துறை, எல்.ஜி.பாலகிருஷ்ணன் பிரதர்ஸ் நிர்வாகம் ஆகியோர் கோவை வையம்பாளையத்தில் உள்ள எல்ஜிபி ஆலைத் தொழிலாளர்களை கட்டற்ற சர்வாதிகாரத்தின் அதலபாதாளத்தில் தள்ளியுள்ளனர். காவல்துறையும் அரசும் சட்டத்தின் முன் முதலாளியும் தொழிலாளியும் எப்படிச் சமமாக முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள். சொத்துடைய முதலாளியும் சாமானிய தொழிலாளியும் சமமா என கேலி செய்கிறார்கள். எல்ஜிபி நிறுவனத்திற்கு எதிராக அமைப்பாகும் உரிமை, கருத்துரிமை, பொருளுள்ள கவுரவமான உயிர்வாழும் உரிமை என்றெல்லாம் யோசிப்பதே குற்றம் என்கிறார்கள்.
பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். முதலாளித்துவப் பேய்களுக்கு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பலி தருவதில் தமிழக அரசும் கோவை வையம்பாளையம் காவல்நிலையமும் தயாராக உள்ளன.
சில ஆயிரம் கோடிகள் முதலீட்டுடன் பல நாடுகளில், பல மாநிலங்களில் கால் பதித்துள்ள எல்.ஜி.பாலகிருஷ்ணன் பிரதர்ஸ் நிறுவனம், செயின் தயாரிப்பிலிருந்து வேறுவேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் வருவாய் ஈட்டுகிறது. மலிந்த உழைப்பின் மீது இவர்களது மூலதன சாம்ராஜ்யங்கள் எழுந்து நிற்கின்றன. இந்த நிறுவனத்தை நடத்தும் குடும்பம் பிரிக்கால் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்திற்கு உறவுக்காரர்கள். இவர்கள் ஜி.டி.நாயுடு குடும்பத்தின் வாரிசுகள். 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லாபத்தை குவிக்கும் இவர்கள், சிந்தனையால் 18, 19ஆம் நூற்றாண்டு பண்ணையார்களாகவே இருக்கிறார் கள். பிற மாநிலத் தொழிலாளர்கள், நிரந்தரமற்ற தொழிலாளர்கள், சங்க உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்டு இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. லாபம் குவிக்கிறது. இவர்கள்தான் பெருந்தொழில் குழும சமூக பொறுப்பு என வாய் கிழிய பேசுபவர்கள்.
சில பத்தாண்டுகள் வேலை செய்தாலும் ரூ.20,000அய் சுற்றிமுற்றியே ஊதியம் நிற்கிறது. 2017 இறுதியில் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவில் சேர்ந்தார்கள். நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள். கோரிக்கைகளை நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள். உடனே சங்க முன்னணிகளை நிர்வாகம் உத்தராகண்ட் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. நிர்வாகம் சங்கத்தோடு பேச முடியாது என்று சொன்ன பின்னணியில், 24.01.2018 முதல் தொழிலாளர்கள் சட்டபூர்வமாக அமைதியாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
ஆலைக்கு எதிரில் எவருக்கும் இடையூறு செய்யாமல் சாமியானா போட்டு அமர்ந்திருந்தார்கள். பிரிக்கால் போராட்ட காலம் துவங்கி, கோவை முதலாளிகளும் அவர்களுக்கு விசுவாசமான காவல்துறையும் ஏஅய்சிசிடியுவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ)யை கோவையில் இருந்து விரட்ட ஏதேதோ செய்தார்கள். கொலைச்சதி வழக்குகளை ஜோடித்தார்கள், கொலைச் சதி ஏதும் நடக்கவில்லை என்ற கீழமை நீதிமன்றத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. தீர்ப்பின் இந்த பகுதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவில்லை. தோழர் குமாரசாமி, நான்கு பெண்கள் மற்றும் பலருக்கு எப்படியாவது ஆயுள் தண்டனை பெற்றுத் தந்து வெளியே நடமாட முடியாமல் காலமெல்லாம் சிறையில் அடைக்க வேண்டும் என கோவை முதலாளிகளும் காவல்துறையும் போட்ட சதித் திட்டம் நீதிமன்றத்திலேயே எடுபடவில்லை.
2018 பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் எல்ஜிபி நிறுவன தொழிலாளர் போராட்டத்தை ஒட்டி கோவில்பாளையம் காவல் நிலையம் ஏஅய்சிசிடியுவுக்கு எதிராக மீண்டும் ஒரு சதித்திட்டத்தை தீட்டியது. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் உதவிக் காவல் ஆய்வாளர் பார்த்துக் கொண்டிருந்தபோது கேட்டுக் கொண்டிருந்தபோது, பொது இடத்தில், ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் தாமோதரன், என்.கே.நடராஜன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் தாமஸ்.கே.லூயிஸ் மற்றும் 16 தொழிலாளர்கள், இனியும் அமைதியாக இருக்கக் கூடாது, வேலைக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி அடித்துத் துரத்தி அவர்களின் உடைமைகளை நடுத்தெருவில் நாசமாக்க வேண்டும், ஆலையில் உள்ள மெஷின்களை அடித்து நொறுக்கி தீ வைக்க வேண்டும், அரசு போக்குவரத்து வாகனங்களை சேதப்படுத்த வேண்டும், பொது மக்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு உண்டாக்க வேண்டும் என சதி செய்து கொண்டிருந்தனர் எனவும் சுற்றி வளைத்த போது 6 பேர் மட்டும் சிக்கிக்கொண்டனர், 14 பேர் தப்பி ஓடிவிட்டனர் எனவும், குற்றம் சுமத்தியது.
கோவையின் முதன்மை மற்றும் அமர்வ பொறுப்பு நீதிபதி, பொது இடத்தில் காவல் துறை அதிகாரி முன்பு சதி நடந்தது என்பதை கேள்விக்கு உள்ளாக்கி, எந்த சட்டபூர்வமான குற்றமும் இல்லாமல் வழக்கு, கைது, கைது முயற்சி நடப்பதாகச் சொல்லி, தோழர்களுக்கு ஜாமீன் தந்துள்ளார்.
இத்தகைய முதலாளிகளும் காவல்துறையும், தாம் உத்தமர்கள் போலவும், சட்டம் காப்பவர்களாகவும் வேஷம் போடுகிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். 7 தொழிலாளர்கள் சிறைக்குச் சென்று திரும்பிய பிறகும் தொழிலாளர்கள் உறுதியோடு இருக்கிறார்கள். ஆலையில் பணிபுரிபவர்களில் 95% தொழிலாளர்கள் அடுத்தடுத்த போராட்டங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவை நகருக்குள் பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆட்சித் தலைவருக்கு மொத்தமாகப் போய் மனு கொடுப்பது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து பொதுப் பேரவை என அடுத்தடுத்து முன்னேறுகிறார்கள். சிறைசென்று திரும்பிய பிறகும் குடும் பத்தவர்கள் பங்கேற்புடன் நடந்த பொதுப் பேரவையில் போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவை திரட்ட இருப்பதாகவும் போராட்டத்தை தலைநகருக்கு எடுத்துச் செல்ல உள்ளதாகவும் குடும்பங்களோடு சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் தோழர் குமாரசாமி கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். கோவை முதலாளிகள் எல்ஜிபி தொழிலாளர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு ஒழித்துக் கட்டப் பார்க்கும்போது, அடங்க மறுக்கும் தொழிலாளர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தை தொடர்கிறார்கள்.
இதே காலகட்டத்தில் பிரிக்கால் நிர்வாகம் சங் பரிவாரின் பாசிச நடவடிக்கைகள் போல் தொழிலாளர்களின் மீது கட்டுகடங்காத தாக்குதல்களை ஏவி உள்ளது. செத்து மடியும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒப்பந்த உரிமைப்படி நியாயத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு 1 நாள் வேலை நிறுத்தம் செய்ததற்கு தண்டனையாக, 8 நாட்கள் சம்பளத்தைப் பிடித்த நிர்வாகம், இப்போது இரண்டாவது தண்டனையாக அந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜனவரி 2018ல் சம்பள உயர்வை பிடித்தம் செய்துள்ளது. நிர்வாகத்திற்கு ஆதரவான சங்கத்தினர் வேலையே செய்யாமல் தொழிற்சாலையை சுற்றி வந்து ஏஅய்சிசிடியு சங்க உறுப்பினர் களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள், அனைத்து நீதிமன்றங்களிலும் வெற்றிபெறும் செல்வாக்கை நிர்வாகம் கொண்டுள்ளது, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நிர்வாகம் சொன்னபடிதான் நடப்பார்கள், காவல் துறை உயர்அதிகாரிகளோடு பேசி வழக்குகளை ஜோடிக்க தயாராகிவிட்டார்கள், எல்ஜிபியில் நடந்தது உங்களுக்கும் நடக்கும், எல்ஜிபி போல் இங்கேயும் பணியிட மாற்றம் நடக்கும் என மிரட்டி வருகிறார்கள்.
பிரிக்கால் நிர்வாகம், சங்கம் ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கைகள் அனுப்பியபோது பணிக் கொடையில் ரூ.1 லட்சம் குறைத்துத் தருவேன், ஈட்டிய விடுப்பை வெட்டி விடுவேன், இனி சர்வீஸ் வெயிட்டேஜ் இருக்காது, பஞ்சப்படி கிடையாது, உணவகப் பொருட்கள் விலை உயரும், சம்பளப் பிடித்தம் செய்வேன், கேட்ட உற்பத்தியை தந்தாக வேண்டும், எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும், 150 பேர் குலுக்கல் முறையில் வெளியேற வேண்டும், 100 பேர் 427 பேர் வேலையைச் செய்ய வேண்டும், ஒப்பந்தம் 6 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும், நினைத்தபடி நிர்வாகம் அவுட்சோர்சிங் செய்தால் பணியிட மாற்றம் செய்தால் தொழிலாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது, தொழிலாளர்கள் எழுத்துரிமை பேச்சுரிமை எதையும் பயன்படுத்தக் கூடாது, பத்திரிகைக்கு பேட்டி தரக்கூடாது, சமூக ஊடகத்தில் பதிவுகள் செய்யக் கூடாது என்ற நீண்ட பட்டியலுடன் ஒரு பதில் கடிதம் தந்துள்ளது. சம்பளமே இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை மட்டும் முன்வைக்கவில்லை. சலுகைகள் பறிப்பு, சம்பளப் பறிப்பு, 18 பிரிவு ஒப்பந்தம் போடப் போவதாக மறைமுகமாகச் சொல்லி நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளர்கள் போராடக்கூடாது என்றும் ஏஅய்சிசிடியு சங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அடிமைச் சங்கிலிகளை அவர்கள் கைகளாலேயே எடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. கோவை முதலாளிகள், பிரிக்காலில் துவங்கிய ஏஅய்சிசிடியுவையும் இகக (மாலெ)யையும் பிரிக்காலிலும் எல்ஜிபி பிரதர்ஸ்சிலும் ஒரே நேரத்தில் அழித்துவிட வேண்டும் என முயற்சிக்கிறார்கள்.
எல்ஜிபி தொழிலாளர்கள் சிறை செல்லும்போதும், அவர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போதும் தோழர்கள் திரண்டு எழுப்பிய உணர்ச்சிமயமான முழக்கங்கள், பெண்கள் கூட்டங்களுக்கு வந்து அடுத்த போராட்டம் எப்போது எனக் கேட்பது போன்றவை நம்பிக்கை தரும் விசயங்கள். பிப்ரவரி 22, 23 தேதிகளில் நடந்த நான்கு கூட்டங்களில் கலந்துகொண்ட பிரிக்கால் தொழிலாளர்கள், முதலாளிகளின் மரபணுவில் ஆதிக்கமும் சுரண்டும் வெறியும் இருக்கும் போது, தொழிலாளர்களின் மரபணுவில் அடங்க மறுப்பதும் எதிர்த்து எழுவதும் இருக்கிறது என்றும், தமது சங்கத்தையும் தம்முடைய வர்க்க உணர்வையும் தம்மிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும், பிரகடனம் செய்தனர்.