COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 13, 2018

ஜனவரி 31 ஏஅய்சிசிடியு பேரணியை ஒட்டி தொழிலாளர் அமைச்சருடன் சந்திப்பு... அடுத்து என்ன?

பழனிவேல் 
பாரதி 

பேரணியும் தயாரிப்புகளும்

உழைப்பவர் உரிமைப் பேரணி, வண்ணமயமாய், ஜனவரி 31 அன்று சென்னையில் நடந்தது.
பேரணி நெடுக செங்கொடிகள், வாசகங்கள் உள்ள தட்டிகள், மார்க்சிய ஆசான்கள் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் படங்கள் இருந்தன. இறுதி வரை முழக்கங்கள் ஒலித்தன.
பேரணியில் கணிசமான பகுதியினர் இளைஞர்கள். அரசுக்குத் தரவேண்டிய மனு தயாரிப் ல் தோழர்கள் குமாரசாமி, குமார் ஆலோச னகள் தந்தனர். பேரணி, தமிழ்நாடு தொழி ôளர்களின் அடிப்படையான தேவைகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை முன் நிறுத்தி து. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பகுதிக ல் இருந்து 3,000 பேர், தமிழ்நாட்டின் தெற்கு மேற்கு மண்டலங்களில் இருந்து தலா 500 பேர் திரட்டுவது எனத் துவக்கத்தில் திட்டமிடப்பட் டது. 2017 டிசம்பர் 16, 17 நடந்த ஏஅய்சிசிடியு மாநில மாநாடு, பிரிக்கால் தொழிலாளர்கள் இரண்டு பேர் ஆயுள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி உச்ச திமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பும் சில நூறு தோழர்களின் சில ஆயிரம் மணி நேர வேலையைக் கோரிய பிரும்மாண்டமான கையெழுத்து இயக்கம், கட்சியின் மார்ச் 23 -28 பத்தாவது  அகில இந்திய மாநாடு தயாரிப்பு, மாலெ தீப்பொறி சந்தா சேர்ப்பு, கட்சி உறுப்பினர் சேர்ப்பு, அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள், மிகுந்த கவனமும் நேரமும் கோரிய சான்மினா போராட்டம் என்ற பின்னணியில் பேரணி தயாரிப்புகள் நடந்தன.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தலைமை தோழர்கள் மூலம் பேரணி தயாரிப்புகளை உந்தித் தள்ள, தோழர் எஸ்கே வழக்கம் போல் நேரில் சென்று முயற்சி செய்தார். தோழர் எ.எஸ்.குமார் அன்றாடம் தோழர்களிடம் பேசி வந்தார். கடைசி நேரத்தில், காஞ்சி உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்டத் தோழர்கள், ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் மூலம் கட்சி வழிகாட்டுதலுடன், மிகுந்த ஈடுபாட்டுடன்,  பேரணிக்கான 75% அணிதிரட்டலைச் சாதிப் து என முடிவு செய்து, வேலைகளைத் தீவிரப் டுத்தினர். வேலைகளுக்கேற்ப விளைவுகளும் இருந்தன. கையெழுத்து இயக்கமும் சான்மினா தொழிலாளர் போராட்டமும், தலைநகர் மண்டல அணிதிரட்டலுக்குப் பேருதவியாய் அமைந்தன.
பேரணியில் குமரி, ராமநாதபுரம், தூத்து டி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் பங்கேற்றனர். மின்வாரியம், குடிநீர்வாரியம், நுகர் பாருள் வாணிபக் கழகம், கோஆப்டெக்ஸ், கன்டெய்னர் லாரி, ஆட்டோ, பீடி, கட்டுமா ம், விசைத்தறி, கைத்தறி, சுமை தூக்குவோர், கடைப்பணியாளர், சாலையோர சிறு கடைக் ôரர்கள், பெல், ஹ÷ண்டாய், சான்மினா, டிரை ஸ்டார், முருகப்பா குழுமம், பிரிக்கால், எல்ஜிபி, உயிரியல் பூங்கா, ஆன்லோட் கியர்ஸ், சவுந்தர்யா டெக்கரேட்டர்ஸ், ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், அகர்வால் பவன், காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவ னை, இசபெல்லா மருத்துவமனை, சென்னை மாநகராட்சியின் மலேரியா ஒழிப்பு தொழிலா ர்கள், கும்மிடிபூண்டி அம்பத்தூர் தொழிற் பட்டை மற்றும் காஞ்சி, திருவள்ளூரின் வேறு வேறு ஆலைத் தொழிலாளர்கள், குடியிருப்புப் பகுதியினர், பெண்கள், சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாய கிராமப்புறத் தொழி ôளர்கள் என, வானவில்லின் வர்ண ஜாலங்க டன் பேரணி அமைந்தது.
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். பேரணி முடிவில், தோழர்கள் ஜானகிராமன் (அயர்லா), என்.கே.நடராஜன் (ஏஅய்சிசிடியு), திருமேனிநாதன் (புரட்சிகர இளைஞர் கழகம்), சீதா (அகில இந்திய மாணவர் கழகம்) அதியமான் (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்) போன்ற தலைமைத் தோழர்களோடு கோவை மாநகர இகக (மாலெ) செயலாளர் தோழர் வேல்முருகன், எல்ஜிபியின் தோழர் தினேஷ், கீரப்பாக்கம் குடியிருப்புப் பகுதியின் தோழர் ஜானகி ஆகியோர் பேசினர். தோழர் இரணியப்பன் அரசுக்குத் தர இருந்த மனுவை கூடியிருந்த தோழர்கள் மத்தியில் வாசித்தார். ஒருமைப்பாடு ஆசிரியர் தோழர் ரமேஷ் கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர்கள் குமாரசாமி, புவனேஸ்வரி, குமார், சங்கரபாண்டியன் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர். அமைப்பாளர்கள் என்ற விதத்தில், ஒலிபெருக்கி மற்றும் கூட்ட ஏற்பாடு விசயங்களில் மிகவும் பின்தங்கி இருந்துவிட்டோம். அமைச்சரைச் சந்தித்து திரும்பி, பேசிய விஷயங்களைத் கூடியிருந்த தோழர்களிடம் தெரிவித்த பிறகு பேரணியும் கூட்டமும் முடிவுக்கு வந்தன.
கோரிக்கைகள்
பேரணியின் உயிரார்ந்த அடிப்படையாக, ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பிரிக்கால் தொழிலாளர் போராளிகளுக்கு நியாயம் கேட்கும் கோரிக்கை அமைந்திருந்தது.
தமிழக அரசாங்கத்திடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பல லட்சக்கணக்கான பயிற்சியாளர் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க நீண்ட போராட்டத்திற்கு பின் கொண்டு வரப்பட்ட நிலையாணைகள் திருத்தச் சட்டத்துக்கு, விதிகள் இயற்றி உயிர் தர தமிழ்நாடு அரசு மறுக்கிறது. விதிகள் வந்தால், நிரந்தரமற்றோர் பணி நிரந்தரம், நிரந்தரமற்றோர் எண்ணிக்கை வரம்பு ஆகியவற்றுக்கு வழி பிறக்கும். ஆகவே, இந்தத் திருத்தச் சட்டத்துக்கு உடனடியாக விதிகள் இயற்றப்பட வேண்டும்.
8 மணி நேர வேலை நாள், 5 நாட்கள் 40 மணி நேர வேலை வாரம், பாதுகாப்பான கவுரவமான நிரந்தரமான பல லட்சம் வேலை வாய்ப்புகள், குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.21,000 (மாறும் பஞ்சப்படி தனியாக) தரப்பட வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். அதுவரை தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் விதிகள் 25(2)(ய)(ஹ)படி சம வேலைக்குச் சம ஊதியம் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஆதரவு பெற்ற சங்கம் அங்கீகரிக்கப்பட, சட்டத் திருத்தம் வேண்டும்.
சமூகரீதியான அவசர அவசியம் இல்லாதபோது, லாபம் ஈட்டுவதற்காக நிறுவப்பட்ட தொழில்களை, பொதுப் பயன்பாட்டு சேவை என மனம் போன போக்கில் அறிவித்து வேலை நிறுத்த உரிமையைப் பறிப்பது நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
வேலையில்லாக் காலப்படி மாதம் ரூ.10,000 வேண்டும். ஊழல் மலிந்த தொழிலாளர் விரோத தொழிலாளர் துறை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். தொழிலாளர் போராட்டங்களில் நீதிமன்றங்களின், காவல்துறையின் தலையீடுகளைத் தடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
தொழிலாளர் குடியிருப்புகளும் வீட்டு வசதியும் பிரும்மாண்டமான அளவில் உறுதி செய்யப்பட வேண்டும். சாமான்ய மக்களை வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றும் வளர்ச்சிப் பாதை கைவிடப்பட வேண்டும். சாமான்ய மக்களுக்கு பட்டா உறுதி செய்யப் பட வேண்டும்.
பொது விநியோகம் பலவீனப்படுத்தப்படக் கூடாது. பலப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். போக்குவரத்து கட்டண உயர்வு முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
விவசாய மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு, விவசாய விளைநிலங்களில் நில வர்த்தகமோ, மூலதன ஊடுருவலோ கட்டுப்படுத்தப்பட்டு, விவசாயம் காக்கப்பட வேண்டும்.
பெண்களின் வீட்டுப்பணி சமூகப்பணியாகக் கருதப்பட்டு ஊதியம் வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய்க்கான விடுப்பு வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்க்கான ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆகஸ்ட், 15 2018க்குள் அமல்படுத்தப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள், தமிழ்நாடு உழைக்கும் மக்களின் உயிர்வாழும் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் தொடர்பானவை. மக்கள் அரசியலோடு, மாற்று இடதுசாரி அரசியல் நிகழ்ச்சிநிரலோடு, தொடர்பானவை.
தொழிலாளர் அமைச்சரோடு சந்திப்பு
வழக்கமான அதிகாரத்துவ மனப்பான்மையோடு, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு, செயலருக்கு மனு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்ல முதலில் முயன்றார்கள். சமீபத்திய சான்மினா போராட்டங்களை கண்ட காவல்துறை, சில ஆயிரம் பேர் திரண்டுள்ள பேரணி போராட்ட அணியாக மாறவும் தயார் என்ற தோழர்களின் அறிவிப்புக்குப் பிறகு, பேரணி சார்பாக, 5 பிரதிநிதிகள் தொழிலாளர் அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்தது. பிரதிநிதிகள் குழுவிற்கு ஒரே மூத்த தோழராக, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் இருந்தார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர்கள் தோழர்கள் ஜெயப்பிரகாஷ்நாராயணன், பழனிவேல், பாரதி என்ற இளம் தோழர்களும், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுருவும் பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்றனர்.
கட்சியும் ஏஅய்சிசிடியுவும், இளம் தோழர்களை முன்னிலைப்படுத்த, எல்லாவிதங்களிலும் தயங்காமல் தலைமைப் பொறுப்பேற்க வைக்க தயாராகி இருப்பதையே, இந்தப் பிரதிநிதிக் குழுவின் சேர்க்கை, உணர்த்தியது. நம் பிரதிநிதிக்குழு சார்பாக தோழர் பாரதி கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைச்சரிடம் விளக்கிச் சொன்னார். கோரிக்கைகளின் சமகாலப் பொருத்தப்பாட்டை, விசைத்தறி அநீதிகளை, கோவை எல்ஜிபி ஒடுக்குமுறையை, நமது சில குறிப்பான போராட்டங்களைப் பற்றி, தோழர் பழனிவேல், தோழர் கோவிந்தராஜ், தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் தயங்காமல் முன்வைத்தனர். சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.
அமைச்சரும், பணியிட மாற்றம் செய்ய நிர்வாகங்களுக்கு உரிமை இல்லையா என்பது போல், உரையாடல் பாணியில் கேள்விகள் எழுப்பினார். தொழிலாளர் துறையில் ஊழல் பற்றிய குறிப்பான புகார்கள், விசைத்தறியில் கொத்தடிமை முறை எங்கே உள்ளது என்ற குறிப்பான தகவல்கள் உண்டா எனக் கேட்டார். சுமங்கலித் திட்டத்தை கொத்தடிமை முறை என தோழர்கள் சொல்கிறார்களா என்பதை, கேட்டுத் தெரிந்து கொண்டார். தோழர் பழனிவேல், ஜனவரி 12 சிறப்பு விடுமுறை அறிவிப்பை எந்த நிர்வாகமும் அமல்படுத்தவில்லை, தொழிலாளர் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தோழர் கோவிந்தராஜ் விசைத்தறி தொழிலில் உள்ள கொத்தடிமை முறை கந்து வட்டிக் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, தறிக்கூடங்களை, நிகர்நிலைத் தொழிற்சாலைகளாக அறிவிக்கக் கோரினார். தோழர் ஜே.பி, சங்கம் அமைத்தால் மாநிலம் விட்டு மாநிலம் மாற்றும் எல்ஜிபி போன்ற நிர்வாகங்களின் பழிவாங்கும் போக்குக்கு முடிவுகட்டச் சொன் னார். தோழர் பாரதி கோரிக்கைகளின் உட்பொருளை, தேவையை குழுவின் சார்பாக, இருந்த நேரத்தில் தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல், பெண்களுக்கு மாதவிடாய்க் கால விடுப்பு கோரிக்கை பரிசீலிக்கத் தகுந்தது என உடனடியாகத் தெரிவித்தார். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து பரிசீலிக்க தமக்கு ஒரு மாத கால அவகாசமாவது வேண்டும் என்று கேட்டார். தோழர்கள் மார்ச் மாதத்தில் மீண்டும் சந்திக்கலாமா எனக் கேட்டபோது, சட்ட மன்றத் தொடர் உள்ளதே எனச் சொன்னார். சட்டமன்றம் கூடாத நாட்களில் சந்திக்கலாம் எனத் தோழர்கள் சொன்னதை பரிசீலிப்பதாக அமைச்சர் சொல்லியுள்ளார்.
அடுத்து என்ன செய்யலாம்?
கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தொழிலாளர்கள் இடைவிடாமல் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மிகப் பெரிய பிரச்சாரமும் இயக்கங்களும் போராட்டங்களும் நடத்த வேண்டும். நூறுகளில் ஆயிரங்களில் லட்சங்களில் திரள வேண்டும். திரட்டப்பட வேண்டும்.
மோடி அரசு நல்ல வேலை தராது. பழனிச் சாமி அடிவருடி அரசு, முதலாளிகளுக்காகவே செயல்படும். பாடுபட்டுக் கொண்டுவந்த நிலையாணைகள் திருத்தச் சட்டத்திற்கு விதிகள் போடவிடாமல் முதலாளிகள் தடுக்கி றார்கள். தொழிலாளர் துறை, ஒப்பந்தத் தொழிலாளர்க்கு சட்டப்படி சம வேலைக்கு சம ஊதியம் தரப்படுவதை உறுதி செய்யாமலே உரிமம் தருகிறது. அடுத்தடுத்து புதுப்பிக்கிறது. நாம் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட, தலைமைச் செயலகம் அல்லது சட்டமன்றத்தை முற்றுகையிட, காலை முதல் மாலை வரை கைது என்பதையும் தாண்டி சிறை செல்ல, போராட்டப் பாதைக்கு, தொழிலாளர்களை குறிப்பாக இளைஞர்களைத் தயார்படுத்துவோம். அத்துடன் சேர்ந்தே முதலாளித்துவத்திற்கு முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, ஜனநாயகத்திற்காக சோசலிசத்திற் காக, பாட்டாளி வர்க்க அரசியலுக்கு அவர்களைப் பெரும் எண்ணிக்கையில் திரட்டி நீடித்து நிலைக்க வைக்க, நம்பிக்கையோடு, துணிச்சலோடு, அர்ப்பணிப்போடு செயல்படுவோம். மக்கள் கோரிக்கைகள் மீதான போராட்டங்களையும், மக்கள் அரசியலையும் பலப்படுத்த, கூடுதல் நேரம் சிந்திக்க, துடிப்புடன் செயல்பட அமைப்புரீதியாகத் தயாராவோம்.

Search