பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக் கட்ட
இன்னும் ஒரு முயற்சி
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம் தமிழக சட்டமன்ற சுவற்றில் இடம் பிடித்துவிட்டது.
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று சொல்பவர்களைப் பார்த்து வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிப்பவர்கள், சட்டமன்றம் குற்றவாளிகளின் கூடாரம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வதில் இன்று பெரிதாக சிரமப்பட மாட்டார்கள். (இன்றைய தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை. இதற்கு முன் இருந்தார்களே என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பவர்கள், அவர்கள் இந்த வரையறைக்குள் ஒருநாளும் வர மாட்டார்கள் என்பதை தெளிவாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்).
ஜெயலலிதா இறந்தபோது, இறந்தவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற பண்பின் பின்னால் ஒளிந்துகொண்டு பலரும் அவரது புகழ்பாடியது போல், இப்போதும், அவர் பெண், அரசியல் ஆளுமை என்றெல்லாம் தமிழிசையும் விஜயதாரணியும் போட்டி போட்டுக்கொண்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு அதுபோன்ற மூளைத்தளைகள் இல்லை என்றாலும், இன்றைய தமிழ்நாட்டு நடப்பு நமக்கு ஒரு கேள்வி எழுப்புகிறது. ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் தனிநபர் ரேசன் அட்டைகளுக்கு ரேசன் பொருட்கள் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியிருக்குமா? ஜெயலலிதா ஒரு வேளை ரேசன் அட்டை வைத்திருந்தார் என்றால், தனிநபர் ரேசன் அட்டைதான் வைத்திருந்திருப்பார். ஒரு ரூபாய் வருமானம் வாங்கியது போல், ரேசன் பொருட்கள்தான் வாங் குவேன் என்று ஏதாவது ஒரு ஏமாற்றுக்கு முடிவு எடுத்திருந்தால், அவருக்கும் ரேசன் பொருட்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்களா? மோடியும் தன்னை தனிநபர் என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தன்னை தொழிலாளி என்று சொல்லிக் கொள்ளும் அவர் நாளை தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்துவிட்டால் அவருக்கும் ரேசன் பொருட்கள் கிடையாதா?
பிள்ளைகள் விரட்டிவிட்ட பெரியவர்கள், வீட்டில் இருந்து ஓடிவந்துவிட்ட பிள்ளைகள், தனியாக இருப்பதில் உள்ள வசதிகளை, சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள்... இவர்களில் பெரும்பான்மையோர் ரேசன் பொருட்களை நம்பியே இருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் சாப்பிட மாட்டார்களா? பலர் இருக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு உதவ இன்னொருவர் இருப்பார். தனிநபர் குடும்பத்தில் அவருக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள் எனும்போது அவர்களுக்குத்தானே ரேசன் உணவுப் பொருட்கள் மிகவும் அவசியம்? (என்னங்கடா உங்க லாஜிக்கு? உங்க மூளையில மோட்டார் விட....)
கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ள தமிழ்நாட்டில் இதில் 10% அட்டைகள் தனிநபர் அட்டைகள் என்றால் கூட 20 லட்சம் பேர், இந்த அறிவிப்பால் பொது விநியோகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். 5% என்றாலும் வெளியேற்றப்படுபவர்கள் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வஞ்சகம்.
உண்மையில், மோடியின் மிரட்டலுக்கு அடிபணிந்து உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தத் துவங்கிவிட்ட பழனிச்சாமி அரசாங்கம், தமிழக சாமான்ய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிற பொது விநியோகத்தை ஒழித்துக் கட்டிவிட விடாப்பிடியாக முயற்சிகள் எடுக்கிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இந்த அறிவிப்பும் வந்துள்ளது. மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் ரேசன் பொருட்களின் அளவு வெட்டப்படுவதால், விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவைக் குறைக்க பழனிச்சாமி அரசு விதவிதமாக முயற்சி செய்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலானாலும் பழைய பொது விநியோக முறை தொடரும் என்ற வாக்குறுதியை மீறுகிற பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என்ற குரல் தமிழக மக்கள் மத்தியில் வலுவாக எழுகிறது.