பேருந்து
கட்டண உயர்வின் வடிவில் தமிழக மக்கள்
மீது
பழனிச்சாமி
அரசு தொடுத்துள்ள இரக்கமற்ற போர்
முறியடிக்கப்பட
வேண்டும்!
பேருந்து
கட்டண உயர்வு திரும்பப் பெறப்
பட வேண்டும் என தமிழ்நாட்டின் அனைத்து
பிரிவு மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள். பேருந்து கட்டண உயர்வை திரும்பப்
பெறும் பேச்சுக்கு இடமில்லை என்று சொன்ன அமைச்சர்கள்,
ஓயாத போராட்டங்களின் விளைவால் பைசா கணக்கில் குறைப்பு
அறிவித்தார்கள். பேருந்து கட்டணம், பால் விலை, மின்கட்டணம்
போன் றவற்றை பெரும் அளவுக்கு
ஏற்றிவிட்டு எதிர்ப் புகள் எழுந்த
பிறகு ஓரளவு குறைப்பது என்ற
நடைமுறையை தமிழக மக்கள் ஏற்கனவே
பல முறை பார்த்தவர்கள். ஆனால்
மோடி முன் மண்டியிட்டுள்ள பழனிச்சாமி
அரசு அறிவித் துள்ள இரக்கமற்ற
உயர்வு போல், அதன் பின்
அறிவித்துள்ள கண்துடைப்பு குறைப்புபோல் இதற்கு முன் தமிழக
மக்கள் கண்டதில்லை.
தமிழக மக்கள் இதுவரையிலும் கண்டிராத பேருந்து
கட்டண உயர்வுக்கு பழனிச்சாமி அரசு சொல்லும் காரணங்களை
மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
போக்குவரத்துத் தொழிலா ளர் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்த மக் களை பழிவாங்கும்
அரசின் நடவடிக்கை என்று தான், போராட்டங்களுக்கு
ஆதரவு தரும் மக்களுக்கு எச்சரிக்கையாக
இருக்க வேண்டும் என்பதும் பழனிச்சாமி அரசின் நோக்கம் என்று
தான் இந்த கொடூரமான கட்டண
உயர்வு புரிந்து கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து
கழகத்தை நட்டத்தில் ஓடும் நிலைக்கு தள்ளிவிட்ட
பிறகு, ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணம்
பல்லாயிரம் கோடிகள் பாக்கி சேர்ந்த
பிறகு, பெரும்பான்மையான பேருந்துகள் காலாவதியான பிறகு, அது மக்கள்
சொத்து என்ற நினைவு பழனிச்சாமி
அரசுக்கு வந்துள்ளது. போக்குவரத்து துறை மட்டுமல்ல, தமிழ்நாட்டின்
ஆறு, ஏரி, குளம், நிலம்,
வனம் என எல்லாம் மக்கள்
சொத்துதான். போக்கு வரத்துத் துறையை
நாசமாக்கியிருப்பதைப் போல்தான் மொத்த மாநிலத்தையும் நாசமாக்கி
கோடிகோடியாய் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருக்கிறார்கள். பழனிச்சாமி சொல்வதைத்
தான் மக்கள் சில மாதங்களாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, மொத்த
தமிழ்நாட்டையும் நாங் கள் பார்த்துக்
கொள்கிறோம், நீங்கள் பதவி விலகுங்கள்
என்றுதான் சொல்கிறார்கள்.
பேருந்து
கட்டணத்தை கனத்த இதயத்து டன்
உயர்த்தியதாக முதலமைச்சர் சொன்னார். இது மக்கள் மீது
தொடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்பதைத் தெரிந்து திட்டமிட்டுச் செய்திருக்கிறது பழனிச்சாமி அரசாங்கம். இந்த அறிவிப்பு, பேருந்து
கட்டணத்துக்கு மட்டும் குறைந்தபட்சம் ரூ.100
இல்லாமல் ஒரு நாளில் ஒருவர்
எங்கும் சென்று வர முடியாது
என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு
குடும்பத்தில் உள்ள நான்கு பேர்
பேருந்து பயணத்தை நம்பி இருப்பார்கள்
என்றால் அவர்கள் குடும்பம் அழிந்தே
போய்விடும். ரூ.47 வரை பேருந்து
கட்டணம் என்பதை ரூ.5,000 ஊதியம்
பெறும் ஒருவர் நினைத்துப் பார்ப்பது
கடினம். சந்தை போய் பொருட்கள்
வாங்கி பேருந்தில் ஏற்றி வரும் நிலையில்
இருக்கும் சாலையோர சிறு வியாபாரிகள்
பிழைப்பில் மண் போட்டுள்ளது இந்த
கட்டண உயர்வு. எப்படிப் பார்த்தாலும்
இந்த கட்டண உயர்வு மிகக்கொடூரமானது.
சென்னையில் நகரின் மய்யத்தில் இருந்து
அகற் றப்பட்டு தொலைதூரத்தில் குடியேற்றப்பட்ட மக்கள் உண்மையில் அதிர்ந்து
போயுள்ளனர்.
நட்டத்தைச்
சமாளிக்கத்தான், மற்ற செல வுகளுக்காகத்தான்,
ஊழியர்களின் ஊதியத்துக் குத்தான் கட்டண உயர்வு என்று
ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்துல்
கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வெ.பொன்ராஜ்,
பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக் குவரத்துத் தொழிலாளர்களின்
கோரிக்கை களை நிறைவேற்றி, ஆண்டுதோறும்
ரூ.1000 கோடி லாபம் ஈட்டும்படி
போக்குவரத்து துறையை நடத்த முடியும்
என்கிறார். அவர் சொல்லும் விவரங்கள்படி,
1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக் கும் ஊதியச் செலவு
ரூ.420 கோடி. 8905 அதிகாரிகளுக்கு ஊதியச் செலவு ரூ.4,000
கோடி. ஆக, ஊழியர்கள் ஊதிய
உயர்வை சமாளிக்க கட்டண உயர்வு என
அரசு சொல்வது பொய்.
பழைய கட்டணப்படி நாளொன்றுக்கு ரூ.25 கோடி வருமானம்
வருவதாக போக்கு வரத்து துறை
கொள்கை குறிப்பு சொல்கிறது. மாதத்தில் ரூ.750 கோடி. ஆண்டில்
ரூ.9,000 கோடி. 6 ஆண்டுகளில் ரூ.54,000
கோடி வருமா னம் இருக்கும்
போது ரூ.5,000 கோடிக்கு ஓய்வூதியப் பயன்களை ஏன் நிறுத்தி
வைக்க வேண்டும்? காலாவதியாகிவிட்ட 73% பேருந்து களை உயிரைத் தேய்த்து
இயக்கியவர்களுக்கு ஓய்வூதியப் பயன்களாக தரப்பட்டுள்ள தொகை யும் மிகக்
குறைவுதான். கடந்த 6 ஆண்டுகளில் 16,816 பேருக்கு
விடுப்பு ஒப்படைப்பு மற்றும் பணிக்கொடை ரூ.824.30
கோடியும் 21,829 பேருக்கு வருங்கால வைப்பு நிதி ரூ.711.67
கோடியும் தரப்பட்டுள்ளது. பிறகு ஏன் நட்டம்
வந்தது? அரசின், அதிகாரிகளின் ஊதாரித்தனத்
துக்கு, நிர்வாக சீர்கேடுகளுக்கு, திறனின்மைக்கு
மக்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?
அரசின்
வாதப்படி ஊதியத்துக்கும் ஓய்வூ தியம் தரவும்
பெரும் செலவு ஆகிறது என்றா
லும், அது அரசின் கடமைதானே.
இது அரசு தானே, தனிப்பட்ட
முதலாளி இல்லையே. நாளொன்றுக்கு 1.79 கோடி பயணிகள் பயன்
படுத்தும் பேருந்து சேவை மாநிலத்தின் பொரு
ளாதார நடவடிக்கைகளுக்கு மய்யமானது. இந்தப் பயணிகள்தான், தமிழ்நாட்டின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அரசு எதையாவது
கணக்கு காட்டும் என்றால், அதைச் சாத்திய மாக்குபவர்கள்.
மறுபக்கம் அது மக்களின் வாழ்வாதாரம்
தொடர்பானது. பேருந்து, அத்தி யாவசிய அடிப்படை
சேவை. வணிகம் அல்ல.
பிரச்சனை
தற்போதைய பேருந்து கட்டண உயர்வுடன் முடிந்துவிடாது
என்று போக்கு வரத்துத் துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் தவீதர்
பேசுவதில் இருந்து தெரிகிறது. ஆந்திரா
விலும் கர்நாடகாவிலும் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படுவதுபோல், பெட்ரோல், எண்ணெய்,
பராமரிப்பு போன்ற செலவுகளை ஈடுகட்ட
பேருந்து கட்டணம் மாற்றியமைக் கப்படும்,
நடத்துநர் இல்லா சிறிய பேருந்துகள்
போன்ற மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்,
4,500 பேருந்துகள் கூடுதல் ட்ரிப்புகள் இயக்க
முயற்சி செய்கிறோம், 2,000 புதிய பேருந்துகள் வாங்கும்
திட்டம் உள்ளது, பேருந்து தடங்
களை முறைப்படுத்தும் முயற்சி செய்து கொண்
டிருக்கிறோம், தகவல் தொழில்நுட்பம் தொடர்
பான பணிகள் திட்டமிட்டுள்ளோம் என்றெல்
லாம் அவர் சொல்கிறார்.
அவர் சொல்வதில் இருந்து, இப்போது அமலாகிவிட்ட கட்டண
உயர்வை அனுமதித் தால், பெட்ரோல், டீசல்
விலை நாளும் மாற்றி யமைக்கப்படுவதுபோல்,
பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படும் ஆபத்து
வரும் எனத் தெரிகிறது. நடத்துநர்
இல்லா சிறிய பேருந்து கள்
என்றால், தனியார் பேருந்துகளில் நடப்பது
போல், ஓட்டுநரே நடத்துநர் வேலையையும் சேர்த்துச் செய்வார். நடத்துநர் வேலைக்கு ஆளெடுப்பது நிறுத்தப்பட்டு, காலாவதியாகி விட்ட பேருந்துகளை சிரமப்பட்டு
இயக்கும் ஓட்டுநருக்கு மேலும் பணிச்சுமை கூடும்.
அவர் தனது விரக்தியை பேருந்தை
நம்பி இருக்கும் சாமான்ய மக்கள் மீதா
காட்டுவார்? மக்கள் கடுமையான துன்பத்துக்கு
ஆளாவார்கள். ஒரு சங்கிலித் தொடர்
பிரச்சனைகளை மக்களுக்கு உருவாக்கும் ஆபத்தான முன்வைப்பு இது.
கூடுதல் ட்ரிப்புகள் இயக்குவது, ஓட்டுநர், நடத் துநர் இருவருக்கும்
கூடுதல் பணிச்சுமை, பயணி கள் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் இல்லாமல் போவது என மேலும்
துன்பங்களை சேர்க்கும். வழித்தடங்களை முறைப்படுத்துவது, குறைப் பதில் சென்று
முடியுமா அல்லது வழித்தடங் களை
விரிவுபடுத்துவது, அதிகரிப்பது என்பதாக இருக்குமா என்று
சொல்லப்படவில்லை. முறைப் படுத்துவது என்ற
பதம், இது வரை சாமான்ய
மக்களுக்கான நடவடிக்கைகளை வெட்டிச் சுருக்குவதாகவே அமைந்துள்ளது.
தாங்க முடியாத பேருந்து கட்டண
உயர்வு என்ற தற்போதைய தாக்குதலை
முறியடிக்கா விட்டால், அடுத்தடுத்து பெரிய தாக்குதல்கள் தொடுக்க
பழனிச்சாமி அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பேருந்து கட்டண உயர் வின்
வடிவில் தமிழக மக்கள் மீது
பழனிச்சாமி அரசு தொடுத்துள்ள இரக்கமற்ற
போர் முறியடிக்கப்பட வேண்டும்!