கவனமாக
இருப்போம்
கழகங்களை
விமர்சிக்கும்போது, கல் எறிவோம், சோடா
பாட்டில் வீசுவோம் என்று ஜீயர்கள் மிரட்டும்
காலம் இது என்பதை, இது
1968 இல்லை, 2018 என மிரட்டும் ஆன்மீக
‘அடியார்’
கூட்டம், திராவிட இயக்கத்தின் அனைத்து
முற்போக்கு விழுமியங்களையும் வலதுசாரி நிலையில் இருந்து மறுக்கின்றன என்பதை நினைவில்
கொள்வோம்.
வர்க்கப்
போராட்டத்தின் அடிப்படையை இறுகப் பற்றிக்கொண்டு, சாதி
ஒழிப்பு, பகுத்தறிவு, மொழி உரிமை, பண்பாட்டு
உரிமை, மாநில உரிமை ஆகியவற்றை
காக்கும் தேவையை வலியுறுத்துவோம்.
இடது திசையில் இருந்து கழகங்களை விமர்சிக்கும்போது,
பகத்சிங்கோடு, அம்பேத்கரும் பெரியாரும் பக்கத்தில் நிற்பார்கள். சிவப்பு இயல்பாக நீலத்துடனும்
கருப்புடனும் கரம் கோர்க்கட்டும். பலவீனமான
பழனிச்சாமி அரசாங்கம், மக்கள் விரோத பழனிச்சாமி
அரசாங்கம், வலது திசையில் பாஜக,
சாதியாதிக்க சக்திகளும் சனாதனவாதிகளும் பலம் பெற உதவுகிறது.
சாதியாதிக்கம் எதிர்க்கும், சாதியை அழித்தொழிக்கும், மதவெறியை
மாய்க்கும், அனைத்தும் தழுவிய விடாப்பிடியான ஜனநாயகத்திற்கான
இடதுசாரி அரசியலை வலுப்படுத்துவோம்.