கார்ப்பரேட் ஆதரவு மக்கள் விரோத 2018 - 2019 நிதிநிலை அறிக்கை
2019 தேர்தலில் வாக்குகளை பெற்றுத் தரப் போவதில்லை
2018- 2019 மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி பெரிய எதிர்ப்பார்ப்புகள் வேண்டாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் முன்னதாகவே சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால், 2019 தேர்தலுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கை என்பதால் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. இந்த விசயத்தில் மோடி ஆட்சி, தான் முன்னரே சொன்னதை காப்பாற்றிவிட்டது.
தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை, தென் மாநிலங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆந்திராவின் கூட்டணிக் கட்சி ஆட்சியாளர்கள் கூட கூட்டணியில் இருந்து விலகாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அருண் ஜெட்லியும் மோடியும் நிதி ஒதுக்கீடுகளில், திட்டங்களில் எந்த மாநிலத்துக்கும் தனியாக வஞ்சகம் செய்துள்ளதாக தெரியவில்லை. எந்த மாநில உழைக்கும் மக்களுக்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவும் இல்லை.
கிராமப்புறம், விவசாயம், சுகாதாரம் ஆகிய அடிப்படை பிரச்சனைகளில் அழுத்தம் வைக்கிற, 2019 தேர்தலை கணக்கில் கொண்ட நிதிநிலை அறிக்கை என்று முன்னணி நாளேடுகள் என்று அறியப்படுபவை சொல்கின்றன. பல கோடிக்கணக்கான சாமான்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, அதாவது அவர்களது வருமானத்தை அதிகரிக்க, மக்கள் உடனடி, அத்தியாவசிய நுகர்வுக்கு தேவையானவற்றின் உற்பத்தியை அதிகரிக்க குறிப்பான வழிகள் எவையும் சொல்லப்படவில்லை. அப்படியிருக்க, இந்த நிதிநிலை அறிக்கை 2019 தேர்தலை மனதில் கொண்டுள்ளது என்று சொல்ல அடிப் படை இல்லை.
ஒரு பக்கம் பகோடா பற்றியும் மறுபக்கம் ரபேல் போர் விமானங்கள் பற்றியும் எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், சம்பந்தமே இல்லாமல் ஆக்ரோஷமாக படேல், காஷ்மீர், பிரிவினை, பிளவு, காங்கிரஸ் என்று பேசி முடிக்கப் பார்க்கிறார் மோடி. எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத தடுமாற்றம், மோடி அரசாங்கத்தின் தோல்வியையே, அதன் அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறப்பதையே, சாமான்ய மக்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டிருப்பதையே மெய்ப்பிக்கிறது.
மருத்துவ காப்பீடு: அடுத்த ஜும்லா
10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய செய்தி, இந்த விசயத்தை பிரதான செய்தியாக வெளியிடுங்கள் என மோடியும் அருண் ஜெட்லியும் கட்டளையிட்டு அதன்படி செய்தி வெளியிட்டது போல்தான் இருக்கிறது. மோடியின் கணக்குப்படி நாட்டில் 600 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; ஒரு மாநிலத்தில் மட்டும் 7 லட்சம் கிராமங்கள் உள்ளன. வெறும் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு என்றால் மீதமுள்ள குடும்பங்கள் மருத்துவத்தில் என்ன நடக்கும்?
ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா, 2014ல் ரூ.30,000 காப்பீடு என்றது. 2015ல் இது ரூ.1.5 லட்சம் என்று ஆனது. இப்போது ரூ.5 லட்சம் என்கிறார்கள். மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வேண்டும் என்று சாமான்ய மக்களின் எந்தப் பிரிவினரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கேட்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்ட உறவினர்களை எடுத்துச் செல்ல வாகன வசதியின்றி தூக்கிச் சென்றது, ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுக்கப்பட்டு மருத்துவமனை வாயிலிலேயே பிள்ளையைப் பெற்று எடுத்தது, பிராண வாயு இல்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தது, மலிவு மருத்துவம் பார்க்கிறார் என்று சென்று எய்ட்ஸ் வாங்கி வந்தது, எலி கடித்து குழந்தை இறந்து போனது..... அரசு மருத்துவமனைகளில் உள்ள இது போன்ற சாதாரணமான அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்றுதான் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைகளுக்கு மருத்துவ காப்பீடு எந்த வகையிலும் தீர்வாகாது. இதற்கு, இருக்கிற அரசு மருத்துவமனைகள் நிர்வாகமும் பிற வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். அரசு பொறுப்பேற்ற மருத்துவம்தான் பல ஆண்டுகளாக சாமான்ய மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது நிறைவேற்றி வந்தது. அது நெறிகெட்டு போயிருப்பதுதான் பிரச்சனை.
2017 தேசிய சுகாதார கொள்கையின்படி 1.5 லட்சம் சுகாதார மற்றும் நல்வாழ்வு மய்யங்கள் அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு என்றும் சொல்லப்படுகிறது. சாமான்ய மக்களின் மருத்துவத்துக்கு ஒன்றரை லட்சம் சுகாதார மய்யங்களுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு என்றால் நாடு சிரிக்கும் என்பதால், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு, மனிதாபிமான நிறுவனங்கள் தாமாக முன்வந்து இந்த மய்யங்களை ஏற்க வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. அதாவது அந்த சுகாதார மய்யங்களும் நாளடைவில் தனியார்மயமாகும்.
அருண் ஜெட்லி சொல்கிற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு 60%மும் மாநில அரசு 40% தர வேண்டும். தமிழ்நாடு ஏற்கனவே ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆயிரமாயிரம் கோடி அரசு பணத்தை கொண்டு போனதும் தனியார் மருத்துவமனைகள் கொடுங்கட்டணம் வசூல் செய்ததும்தான் இங்கு அனுபவம். மத்திய அரசு சொல்கிற திட்டத்தில் புதிதாக எதுவும் நடந்துவிடாது. உண்மையில், மக்கள் மருத்துவ காப்பீடு பெறுவார்கள் என்று சொல்லிவிட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் லாபமீட்ட, அரசு முழுவதுமாக மருத்துவம் தொடர்பான பொறுப்பில் இருந்து விலகுவதுதான் இந்தத் திட்டம்.
10 கோடி குடும்பங்கள் மருத்துவம் தொடர்பான இந்தத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த ஓர் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என தேசிய அரசு நிதி மற்றும் கொள்கை கழகம் சொல்கிறது. பொய் தகவல் பரப்புகிறார்கள் என்றும் செஸ் 1% உயர்த்தி இருப்பதே திட்டத்துக்குப் போதும் என்றும், ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி போதும் என்று நிதி ஆயோக் சொல்கிறது. அப்படியானால் ரூ.2,000 கோடி மட்டும் ஏன் ஒதுக்கப்பட்டது? திட்டம் அமலாக வேண்டும் என்றால், பயனர்களை அடையாளம் காண வேண்டும்; அதற்கு சில நிபந்தனைகள் இருக்கும்; அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் அட்டை பெற வேண்டும்; பின் அதை ஆதாருடன் இணைக்க வேண்டும்.... இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்குள் இந்த ஆட்சியின் ஆயுள் முடியும். திட்டம் ஏட்டோடு நிற்கும். கருப்புப் பணத்தை மீட்பது எப்படி தேர்தல் நேர ஜும்லா என்று சொல்லப்பட்டதோ, மருத்துவ காப்பீடும் அதே போல் நாளை ஜும்லா என்று சொல்லப்படும்.
விவசாய நெருக்கடிக்கு தீர்வு இல்லை
விவசாயத்துக்கு இந்த நிதிநிலை அறிக்கை அழுத்தம் தருகிறது என்று சொல்லப்படுகிறது. நாடு என்றால் மலை, ஆறு, கடல் அல்ல, அங்கு வாழும் மக்கள் என்று பகத் சிங் சொன்னார். விவசாயம், நாட்டின் விவசாய சமூகம், கிராமப்புற சமூகம் தொடர்பானது. அந்த சமூகம் பல வகை விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, கிராமப்புறத் தொழிலாளர்களை கொண்டது. அதாவது மக்களால் ஆனது. அவர்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். மற்றவர்கள் நாடு முழுவதும் யாத்திரை நடத்தி தங்கள் கோரிக்கைகள் என்ன எனச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் கடன் தள்ளுபடி கேட்டார்கள். விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலை கேட்டார்கள். மலிவு விலையில் இடுபொருட்கள் வேண்டும் என்றார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது பற்றி மோடி பேசினார். இந்த நிதிநிலை அறிக்கை அதற்கான காலத்தை 2022 வரை நீட்டிக்கிறது.
குறைந்தபட்ச ஆதார விலை கணக்கிட, உற்பத்தி செலவை நிர்ணயிக்க இரண்டு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒன்று விதை, உரம், பூச்சிக் கொல்லி, வேலையாட்கள், எந்திரங்கள், பாசனம், பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. அடுத்தது, இவற்றுடன் சேர்த்து குடும்ப உழைப்பு, நிலையான மூலதனம் மீதான வட்டி, நிலத்தின் வாடகை மதிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது. இரண்டாவது மதிப்புடன் 50% தரப்பட வேண்டும் என்று எம்எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைக்கிறார். இது முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாகச் சொல்லியுள்ளது. இப்போது நிதிநிலை அறிக்கையில் விவசாயி செய்யும் செலவில் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை என்றும் அது பற்றி நிதி ஆயோக் பேசி முடிவெடுக்கும் என்று சொல்கிறது. எது நிஜம்? என்ன ஒதுக்கீடு என்று ஸ்தூலமாகவும் எதுவும் சொல்லப்படவில்லை. 22,000 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அங்கும் கட்டுப்படியாகும் விலை கிடைக்க உத்தரவாதம் எதுவும் தரப்படவில்லை.
கடன் தள்ளுபடி என்ற விவசாயிகளின் முதன்மை கோரிக்கை பற்றி அறிக்கைக்கு சொரணை இருப்பதாகத் தெரியவில்லை. ரூ.11 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் மேல் வருமானம் பார்த்தன. இந்த ஆண்டும் அதே ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வறிய விவசாயிகள் ஆதரவு நிலச்சீர்திருத்தம், விவசாயத்தில் பொது முதலீடு, பாசன வசதி மேம்பாடு, விளைநிலங்கள் விரிவாக்கம், விவசாய உற்பத்தி அதிகரிப்பு, நவீன கிட்டங்கி வசதிகள், அரசு கொள்முதல் அதிகரிப்பு என்ற விவசாயிகள் நலன் காக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கையில் எதுவும் இல்லை. அறிக்கை, நிச்சயம் விவசாயிகள் நலன் காப்பதாக இல்லை.
நாட்டில் உழைக்கும் விவசாயிகளுக்கு அடுத்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பிரிவாக விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் உள்ளனர். இப்படி ஒரு பிரிவு இருப்பது நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தெரியுமா என கேள்வி எழுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு சென்ற ஆண்டு ஒதுக்கியது போல் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டில் 259 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டம் உள்ளது. சென்ற ஆண்டு இது 287 கோடியாக இருந்தது. 28 கோடி வேலை நாட்கள் திட்டமிடல் கட்டத்திலேயே குறைந்துவிட்டது.அதற்கு முந்தைய நிதியாண்டில் 315 கோடி இருந்தது. அதற்கும் முன்பு 319 கோடியாக இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வோர் ஆண்டும் திட்டத்தில் வேலை நாட்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கிராமப்புற தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேலை வாய்ப்பு உத்தரவாதம் குறைந்து கொண்டே வருகிறது.
திட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடியே 87 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் அரியானா அதிக பட்சமாக ரூ.277ம், பீகார், ஜார்க்கண்ட் மிகக் குறைவாக ரூ.168ம் குறைந்தபட்ச கூலியாக நிர்ணயித்துள்ளன. இந்த குறைந்தபட்ச கூலி அந்தந்த மாநிலங்களில் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. கணக்கு போட வசதியாக, திட்டத்தின் தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் ரூ.100 கூலி தந்து அனைவருக்கும் வேலை தந்தால், அந்த ஒரு நாளில் கூலிக்கு மட்டும் ரூ.2,587 கோடி செலவாகும். அருண் ஜெட்லி ஒதுக்கியுள்ள ரூ.55,000 கோடி இந்த வகையில் 20 நாட்களுக்கு வரும். ஆண்டில் மீத நாட்கள் இவர்கள் என்ன செய்வார்கள்?25 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் வாழ்வாதாரம் பற்றிய மோடி அரசின் பார்வை இதுதான். வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் குற்றமய அலட்சியம் காட்டும் மோடி அரசு 5 கோடி கிராமப்புற குடிமக்களுக்கு வைஃபை வசதி தருவதாக அறிக்கையில் பேசுகிறது. வைஃபை வசதி மக்களுக்கா, அம்பானியின் ஜியோவுக்கா என்று கேள்வி எழுப்பினால் நம்மை தேச விரோதி என்று வேட்டையாடுவார்கள். (டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.3,073 கோடி என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்கிறது. இதுவும் ஜியோவுக்கே).
நடப்பாண்டில் பிப்ரவரி 11 வரை கூலி பாக்கி ரூ.1244,43,91,000 என்று அரசு விவரம் தருகிறது. 2016 - 2017ல் கூலி பாக்கி ரூ.663 கோடியும் 2015 - 2016ல் கூலி பாக்கி ரூ.290.76 கோடியும் இருந்தன. பழைய பாக்கிகள் தரப்பட்டனவா, நடப்பாண்டு கூலி பாக்கியைத் தர என்ன நடவடிக்கை என்பது பற்றி அறிக்கை எதுவும் சொல்லவில்லை.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டில் 1 கோடியே 16 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 78 லட்சம் பேர் பெண்கள். சராசரியாக ரூ.140 முதல் ரூ.180 வரை கூலி தரப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை ரூ.205 என்ற நிர்ணயிக்கப்பட்ட கூலி எந்த மாதத்திலும் சராசரி கணக்கில் வரவில்லை. பிப்ரவரியில் அரியலூரிலும் விழுப்புரத்திலும் ரூ.204ம் தேனியில் 200ம் தரப்பட்டுள்ளது. 2017 - 2018ல் துவக்கத்தில் ரூ.7519.52 கோடி திட்டத்தில் இருந்தது. இதில் 78% நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிற நிலையில் ரூ.1638.26 கோடி திட்டத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கிறது. இந்த ஆண்டில் கூலி பாக்கி இது வரை ரூ.17 கோடி மட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது ஏட்டுச் சுரை என்பது மக்களிடம் பேசும்போது தெரிகிறது. தீபாவளிக்குப் பிறகு கூலி வரவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். அக்டோபரில் இருந்தே கூலி வரவில்லை என்று இன்னும் பலர் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரி 2017 டிசம்பர் வரை கூலி தந்தாகிவிட்டது என்கிறார். அவரிடம் மேலும் கேள்விகள் எழுப்பப்பட்டபோதுதான், அதிகாரிகள் கணக்கு போட்டு இந்தியன் வங்கிக்கு அனுப்பிவிடுவதாகவும், வங்கியில் இருந்து வேலை செய்தவர்களுக்கு கூலி போய்ச் சேராமல் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார். இது நாடு முழுவதும் நடக்க வாய்ப்புள்ளது. ரூ.17 கோடி மட்டுமே பாக்கி என்று அரசு கணக்கு காட்டுமானால், ஏட்டில் மட்டும் தரப்பட்டுவிட்டதாக சில நூறு கோடிகள் இருக்க வாய்ப்புள்ளது.
அரசு ஒதுக்கியிருக்கும் ரூ.55,000 கோடியில் கொஞ்சம் தூய்மை இந்தியா திட்டத்துக்கும் போகும். ஏனென்றால், தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்படும் கழிப்பறைகள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கட்டப்படும் என்று அறிக்கை சொல்கிறது. இது ஏற்கனவே நடக்கவும் துவங்கிவிட்டது.
இதுபோன்ற ஒரு நிதிநிலை அறிக்கை தேர்தலை நோக்கமாகக் கொண்டது, விவசாயம் மீது அக்கறை கொண்டது என்று எப்படித்தான் சொல்ல முடியும்?
வேலைவாய்ப்பு
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு பற்றி சொல்லும் அறிக்கை 321 கோடி வேலை நாட்களை சாலை திட்டங்கள், வீடு கட்டும் திட்டங்கள், கழிப்பறை கட்டும் திட்டங்கள், மின்இணைப்பு தரும் திட்டங்கள் ஆகியவற்றில் உருவாக்கப் போவதாகச் சொல்கிறது. இது நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு உட்பட்டதா, அதற்கு அப்பாற்பட்டதா என்று தெளிவு தரவில்லை.
இந்த ஆண்டு 70 லட்சம் முறைசார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஓர் ஆய்வு (எந்த ஆய்வு) சொல்கிறது என்று சொல்கிற அறிக்கை, சிறுகுறு நடுத்தர தொழிலில் பிரதமர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் 2,94,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொல்கிறது. ஆண்டில் 2 கோடி பேருக்கு வேலை வாக்குறுதி என்னாயிற்று என்று கேட்டால், காந்தி இருந்திருந்தால் நாடு வல்லர சாகியிருக்கும் என மோடி அலறுவாரோ என்று அச்சமாக உள்ளது. இந்த வேலை வாய்ப்புகளில் பாதுகாப்பு, கவுரவம், ஊதியம் எல்லாம் என்ன என நாம் கேட்டால் ராமனை காட்டுக்கு அனுப்பியதால்தான் எல்லா பிரச்சனைகளும் என்று மோடி சொன்னாலும் சொல்வார். குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.5 லட்சம், துணை குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.4 லட்சம், ஆளுநர்களுக்கு மாதம் ரூ.3.5 லட்சம் என ஊதியத்தை உயர்த்தி அறிவித்தவர்கள், 2018 ஏப்ரல் 1 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியம் மற்றும் பிற படிகள் மாற்றிய மைக்கப்படும் என்றும் சொல்பவர்கள், இந்த 2,94,000 வேலை வாய்ப்புகள் பெறுவோருக்கு என்ன ஊதியம் என்று ஏன் சொல்லக் கூடாது?
வேலை வாய்ப்பு உருவாக்க இந்த நிதி நிலை அறிக்கையில், மோடி அரசு சொல்கிற வழி, ஆடை மற்றும் காலணி உற்பத்தி துறையில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவு வேலை வாய்ப்பு (பிக்ஸ்ட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட்). இது எல்லா துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வேலை வாய்ப்பு. ஒப்பந்த முறை, பயிற்சியாளர் முறை, தற்காலிக தொழிலாளர்களை பணிக்கமர்த்துவது என்று ஏற்கனவே பல பெயர்களில் நாட்டின் இளைய தலைமுறையை ஒட்டச் சுரண்டும் வழிகளுக்கு புதிய பெயர் சொல்லப்பட்டுள்ளது.
2016 - 2017ல் ரூ.250 கோடி விற்றுமுதல் உள்ளவர்களுக்கு கார்ப்பரேட் வரி 30%ல் இருந்து 25% என குறைக்கப்படுகிறது. இதனால் ரூ.7,000 கோடி இழப்பு ஏற்படும். விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய் என்ற வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த ரூ.7,000 கோடி மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் வேலை வாய்ப்பு உருவாக்கவே என்று சொல்லப்படுகிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வசூலிக்காமல் விட்ட வரியை அவர்கள் முதலீடு செய்வார்கள் அதனால் வேலை வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
இது தவிர இலகுவாக தொழில் நடத்த 372 குறிப்பான தொழில் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நூறு பேருக்கும் மேல் உயிரிழக்கக் காரணமான பணமதிப்பகற்றத்தை நேர்மையானவர்களின் திருவிழா என்பவர்கள், சாமான்ய மக்கள் உயிரிழப்பை திருவிழா என்று பார்க்கும் கொடூரமான ஆட்சியாளர்கள், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் இந்திய மக்களுக்கு என்ன ஆபத்து கொண்டு வரப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பது போல் ஆண்டில் 10 நாட்கள் வேலை என்றிருக்குமா, வேலையைச் செய் சம்பளத்தை எதிர்பார்க்காதே என்று சொல்லி விடுவார்களா, நிரந்தரமற்ற வேலைவாய்ப்பே நிரந்தரம் என்று சொல்வார்களா....?
புதிய தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் 12% முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதி அரசு செலுத்தும், இதுவும் வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்காக என்கிறார்கள். அதாவது முதலாளி செலுத்த வேண்டியதை அரசு செலுத்தப் போகிறது.
முடிந்தது வேலைவாய்ப்பு உருவாக்கம்!
சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைக்கும் மற்றுமொரு நிதிநிலை அறிக்கை
ரூ.24 லட்சம் கோடிக்கும் மேலான வரவு செலவு அறிக்கையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு கூட குறைந்தபட்ச தீர்வு காணப்படவில்லை. சில அறிவிப்புகள் அமலாக 2022 வரை காலம் எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. 2022ல் விவசாயி வருமானம் இரட்டிப்பாக்கப்படுவது, 2022ல் அனைவருக்கும் வீடு, 2022ல் 50% மேல் பழங்குடியினர் உள்ள ஒன்றியங்களில் ஏகலைவா பள்ளிகள், 2024 - 25ல் மொத்த கடன்களை 40%ஆக குறைப்பது, 2019, 2 அக்டோபரில் இருந்து 2020, 2 அக்டோபர் வரை, அதாவது ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாட ரூ.150 கோடி என்ற அறிவிப்புகள், மோடி ஆட்சியில் இருக்கும் வரை நாட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை காட்டுகின்றன.
மக்கள் மீது சுமையேற்றும் அறிவிப்புகள் தொடர்கின்றன. 1.89 கோடி மாதச் சம்பளக்காரர்கள் ரூ.1.44 லட்சம் கோடி வரி கட்டியுள்ள போது, 1.88 கோடி தொழிலதிபர்கள் ரூ.48,000 கோடி வரி மட்டும் கட்டியுள்ளார்கள். அப்படியானால் மாதச் சம்பளக்காரர்களை விடக் குறைவாகவா தொழிலதிபர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்? உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட அம்பானி, அதானி, மிட்டல், ஜின்டல், கலாநிதி ஆகியோரை உள்ளடக்கிய 1.88 கோடி பேர் மாதச் சம்பளக்காரர்களை விட குறைவாக வரி கட்டுறார்கள் என்றால் வரிவிதிப்பில் என்ன முறைகேடு? அல்லது விதிக்கப்பட்ட வரியை வாங்குவதில் என்ன முறைகேடு? அல்லது என்ன வரி விட்டுத் தரப்பட்டுள்ளது? மறுபக்கம் 2017 - 2018ல் பங்குகளில் வரும் வருமானத்துக்கு விலக்கு ரூ.3.67 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகள். ஜனவரி 2018க்குப் பிறகு இதற்கு 10% வரி விதிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு மறுமுதலீடு தருவதால் இந்த ஆண்டில் ரூ.5 லட்சம் கோடி கடன் தர முடியும் என்கிறது அறிக்கை. இந்தக் கடன் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுக்க உதவும். வாராக் கடன்கள் அதிகரிக்கும்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு அகற்றுவதற்கு 2017 - 2018க்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.75,000 கோடி இலக்கை எட்டி, ரூ.1 லட்சம் கோடியை அடைந்துவிட முடியும் என்று சொல்லும் அறிக்கை வரும் ஆண்டு ஏர் இந்தியா உள்ளிட்ட 24 பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடு அகற்றுதலுக்கு ரூ.80,000 கோடி இலக்கு நிர்ணயிக்கிறது. கார்ப்பரேட் சூறையாடலுக்கு வழிவகுக்கிறது.
உரம், உணவு, கல்வி, பெட்ரோலியம், சுகாதாரம், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் நலன் என பல்வேறு தலைப்புகளிலும் சென்ற ஆண்டை விட சில நூறு கோடிகள் கூடுதல் ஒதுக்கீடு இருந்தாலும், கல்விக்கு, சுகாதாரத்துக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஒதுக்கீடு என்ற நாட்டு மக்கள் கோரிக்கைக்கு அருகில் கூட எங்கும் வரவில்லை. இந்தத் தலைப்புகளில் ஏற்கனவே மிகக்குறைவாக இருந்த ஒதுக்கீடு சற்று அதிகரித்துள்ளதே தவிர, இந்த கூடுதல் ஒதுக்கீடு பிரம்மாண்டாக வளர்ந்து நிற்கிற கடமைகளை நிறைவேற்ற போதுமானதல்ல.
உதாரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1,547 பாக்கி வைத்துள்ளது என்றும் ஒவ்வோர் ஆண்டும் ரூ.500 கோடி குறைவாக தரப்படுவதாகவும் அதிகாரிகள் சொல்கின்றனர். இந்த உதவித் தொகைக்கான மொத்த ஒதுக்கீடு நடப்பாண்டு வரவு செலவு கணக்கில் ரூ.3,348 என்று இருந்தது. வரும் ஆண்டில் ரூ.3,000 கோடியாக குறைக்கப்படுகிறது. ஏகலைவா பள்ளிகள் மூலம் சமஸ்கிருதத்தை திணிக்கத் தயாராகும் அரசு, உயர்கல்விக்குச் செல்லும் தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வெட்டிச் சுருக்குகிறது.
மக்கள் உடனுக்குடன் தண்டிக்கிறார்கள்
குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் தட்டுத் தடுமாறி வெற்றிபெற்ற பாஜக, அடுத்து ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஆஜ்மீர் மக்களவை தொகுதிகளுக்கும் மண்டல்கர் சட்டமன்ற தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்துள்ளது. மாட்டுக்கறி பிரச்சனையில் கும்பல் படுகொலை நடந்த ஆல்வாரில் 1.96 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஆஜ்மீரில் 84,000 வாக்குகள் வித்தியாசத்தி லும், மண்டல்கரில் 12,976 வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தோல்வியடைந்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்விக்கு முன்னர், தமிழக மக்களும் பாஜகவுக்கு ஆர்கே நகர் தேர்தலில் படிப்பினை தந்தார்கள்.
சாமான்ய மக்கள் பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு, காவி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்களில் எழுவதுடன், தேர்தல்களில் திருப்பியடிக்கத் தயாராக இருப்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டுகின்றன. முதன்முதலில், இந்தியிலும் ஆங்கிலத்திலுமாக வாசிக்கப்பட்ட 2018 - 2019 வரவு செலவு அறிக்கை, பாஜகவின் கார்ப்பரேட், மதவெறி, சாதிவெறி தாக்குதல்கள் தொடரும் என்பதை காட்டுகிறது. 2019 தேர்தல்களுக்கு தயாராவதன் ஒரு பகுதிதான் இந்த நிதிநிலை அறிக்கை என்று முன்னிறுத்தி, பற்றியெரியும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு தராத இந்த அறிக்கையை மக்கள் ஆதரவு அறிக்கை என்று காட்ட பாஜக முயற்சி செய்யுமானால், பாஜகவும் மோடியும் சொல்கிற பொய்கள் இனியும் எந்த மாயையும் உருவாக்க முடியாது என்பதை முன்னிறுத்த, மக்கள் போராட்டங்களும், அந்தப் போராட்டங்களின் விளைவாக அதே 2019 தேர்தலில் அமையும் முடிவுகளும் முயற்சி செய்யும்.