பெண்கள், தலித்துகள் பாதுகாப்பை
உறுதி செய்யத் தவறிவிட்ட பழனிச்சாமி அரசு
பெண்கள், தலித்துகள் பாதுகாப்பை உறுதி செய்ய பழனிச்சாமி அரசு முழுவதுமாகத் தவறிவிட்டது.
உடைமைகளுக்காக தாக்குதல், காதலை மறுத்ததற்காக தாக்குதல், எதிர் கேள்வி கேட்டதற்காக தாக்குதல் என்று இந்த ஆண்டு துவங்கிய இரண்டு மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மீது மிகவும் கொடூரமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அந்தச் சிறுமியை உயிருடன் எரித்தான் ஒருவன். அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள். மதுரையில் நடந்த இந்த நிகழ்வு போல் ஒரு நிகழ்வு, இந்த நிகழ்வு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அதிலும் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னொரு இளம்பெண் பலரும் கூடியிருக்கும் பூங்காவில் கத்தியால் குத்தப்பட்டு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த ஆண்டு துவக்கமே தலித்துகள் மீது கடுமையான சாதியாதிக்க தாக்குதலுடன்தான் துவங்கியது. தஞ்சையின் குடிகாடு தலித் இளைஞர்கள் தங்கள் ‘பகுதிக்குள்’ தங்கள் சொந்த செலவில் புத்தாண்டு கொண்டாடியதை பொறுத்துக் கொள்ளாத சாதியாதிக்கம் அவர்களது வீடுகளை சூறையாடியது. ஜனவரி 1 அன்று விழுப்புரத்தின் அரகண்டநல்லூரில் மூன்று தலித் இளைஞர்களின் உயிரற்ற உடல்கள் சாலையோரத்தில் இருந்தன. அந்த மூன்று பேரில் ஒருவர் மேல்சாதிப் பெண்ணை காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. உண்மை என்ன, மூன்று பேர் கொல்லப்பட்டது யாரால், என்ன காரணம் என எதுவும் இன்னும் வெளிவரவில்லை. பிப்ரவரி 2 அன்று விழுப்புரத்தின் திருக்கோயிலூர் அருகில் வீரபாண்டி என்ற ஆதிக்க சாதியினர் கிராமத்துக்கு அருகில் உள்ள தலித் குடியிருப்பில் தலித் வீடுகளை ஆதிக்க சாதியினர் சூறையாடினர்.
இந்தக் கொடூரமான தாக்குதல்களில் சில கைதுகள் என்பதற்கு அப்பால் தாக்குதல்களை கட்டுப்படுத்த பொருளுள்ள நடவடிக்கை எதுவும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. அமைச்சர்களிடம் இருந்து குறைந்தபட்ச அறிக்கைகள் கூட இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இல்லை. விளைவு, கயிர்லாஞ்சியில் போட்மாங்கேயின் குடும்பம் அவர்களிடம் இருந்த நிலத்துக்காக கொடூரமாகச் சிதைக்கப்பட்டதுபோல், இன்று விழுப்புரத்தின் வேலம்புதூரில் ஆராயியின் குடும்பம் மிகவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. பிப்ரவரி 22 அன்று ஆராயியின் 10 வயது மகனை, கழுத்தை அறுத்துக் கொலை செய்த சாதிவெறி கும்பல் ஆராயியையும் அவரது 14 வயது மகளையும் கூட்டாக பாலியல் வன்முறை செய்துள்ளது. இந்த கொடூரத்துக்கு, அருகில் உள்ள சாதியாதிக்க சக்திகள் காரணமாக இருக்கக் கூடும் என காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட பிறகும், தலித்துகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆராயி குடும்பத்துக்கு நடந்துள்ள கொடூரம் மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டில் எங்கும் நடந்துவிடக் கூடாது. தேசிய ஆணையங்களின் விசாரணைகள், நிவாரணங்கள் என்பதுடன் முடிந்துவிடாமல் பழனிச்சாமி அரசாங்கம், விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக தீவிரமான பொருளுள்ள விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நிர்ப்பந்திக்கப் பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின் இந்த மூன்று வன்முறை நிகழ்வுகளும் ஒரே காவல்நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டவை எனும்போது, அங்குள்ள காவல்துறையினர் மீது, பணியிட மாறுதல் என்று மட்டுமல்லாமல் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணக்கு உட்படுத்தப்பட்டு சாதியாதிக்க சக்திகளுக்கு உடந்தையாக செயல்பட்டது மெய்பிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சாதியாதிக்க சக்திகளின் வெறியாட்டம் மேலும் தொடர தமிழக மக்கள் இடம் தந்துவிடக் கூடாது.