COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 13, 2018

தோழர் சுந்தரத்துக்கு அஞ்சலி

தோழர் சுந்தரம் என்கிற கே.கே.சாமிநாதன் இககமாலெ மாநிலச் செயலாளராக இருந்தவர். மத்திய குழுவிலும் இருந்துள்ளார்.
ரகசிய கட்சியாக செயல்பட்ட காலத்தில் கட்சி அணிகள் மத்தியில், வானா என்கிற வடிவேலு என அழைக்கப்பட்டார். தொழிலாளியாக இருந்து தொழிற்சங்க தலைவர்களோடு இணைந்து பணியாற்றி மாலெ இயக்கத்தில் முழுநேர ஊழியராக மாறினார். கட்சி மக்கள் திரள் கட்சியாக மாறும் இயக்கப்போக்கு நடந்தபோது கட்சியில் பணியாற்றினார். தமிழ்நாட்டில், தமிழக மக்கள் முன்னணி அதற்கே உரிய இயல்புடன் உருவானதில் தோழர் சுந்தரத் தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தோழர் சுந்தரம் ஒரு கட்டத்தில் மாலெ கட்சியை விட்டு விலகினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட் டார். 08.02.2018 மாலை இகக அலுவலகத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவர் இகக மாநிலக் குழு உறுப்பினராகவும் இகக திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். தோழர் சுந்தரத்துக்கு இககமாலெ திண்டுக்கல் மாவட்ட அமைப்பு சார்பாக தோழர்கள் பொன்னுதுரை, ஜெயவீரன், மணிவேல், முருகேசன் மற்றும் பல தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மாலெ கட்சி சார்பாக தோழர் சுந்தரத்துக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

Search