ஆக்ஸ்ஃபாம்
அறிக்கையும்
மோடியின்
டாவோஸ் உரைவீச்சும்
நாடோடி
ஆக்ஸ்ஃபாம்
அறிக்கை
‘செல்வத்துக்கு
அல்ல, உழைப்புக்கே வெகு மதி தர
வேண்டும்’,
‘ரிவார்ட் ஒர்க் நாட் வெல்த்’ என்ற தலைப்பில் 2018 துவக்கத்திற் கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை,
உலகளாவிய செல்வ வருமான ஏற்றத்தாழ்வுகள்
பற்றிப் பேசுகிறது.
உலகமயத்தின் சாதனைகளை (!) அந்த அறிக்கை, அம்பலப்படுத்தி
உள்ளது.
டாவோஸ்
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட
8 தொழிலதிபர்க ளிடம், உலகின் 360 கோடி
மக்களிடம் உள்ள தற்கு ஈடான
செல்வம் உள்ளது. 1998 முதல் 2011 வரை, 13 ஆண்டுகளில் உலக
மக்கள் தொகையின் கடைசி வருமானம் பெறும்
10% பேர், ஆளுக்கு ரூ.4,285 மட்டுமே
கூடுதல் வருவாய் ஈட்டினர். ஆனால்
உலக மக்கள் தொகையின் முதல்
1% பேர், அதே 13 ஆண்டு களில்
ஆளுக்கு ரூ.7,67,000 வருவாய் கூடுதலாய் ஈட்டினர்.
183 மடங்கு ஏற்றத்தாழ்வு!
2017ல்
இந்தியாவின் மக்கள் தொகையின் 1% பேரிடம்
நாட்டின் 58% செல்வம் இருந்தது. 2018ல்
அவர்களிடம் இருந்த செல்வம் 73% என
உயர்ந்தது. 37 பில்லியனர்களிடம் (ரூ.6,500 கோடிக்கு மேல் செல்வம் உடையவர்கள்),
இந்திய செல்வத்தில் 51% இருக்கிறது. 12 மாதங்களில் 1% உயர் பிரிவினர் ஈட்டிய
ரூ.20,91,300 கோடி, நாட்டின் 2017 - 2018 வரவு செலவு
கணக்கிற்கு ஈடான தொகையாகும்.
மோடி போற்றிப் பாடிப் புகழும் உலக மயத்தைப் புரிந்துகொள்ள
ஓர் உதாரணம் காண்போம். உலகின்
மிகப் பெரிய 5 ஃபேஷன் பிராண்ட்களின்
ஒரு தலைமை அலுவலரின் 4 நாட்கள்
வருமானம் ஒரு வங்க தேச
பெண் தையல் தொழிலாளியின் 40 ஆண்டுகள்
(18 முதல் 58 வயது வரையான), வாழ்நாள்
கால வருமானத்துக்கு ஈடானதாகும். உலகெங்கும் இந்தியாவிலும், செல்வ வருமான ஏற்றத்தாழ்வு
கள் படுமோசமாகத் தீவிரமடைந்துள்ளதை
இந்த ஆண்டு துவக்கத்திலும் ஆக்ஸ்ஃபாம்
அறிக்கை மறுஉறுதி செய்கிறது.
டாவோஸ்
- உலக பொருளாதார மன்றம்
டாவோஸ்,
ஸ்விட்சர்லாந்தில் உள்ள இயற்கை எழில்
நிறைந்த, செல்வச் சீமான்கள், சீமாட்டிகளின்
வசிப்பிடம். கிளாஸ்சுவாப் ஹில்டே தம்பதியினர் அய்ரோப்பிய
நிர்வாக மன்றம் என்ற அரசுசாரா
நிறுவனத்தை முதலில் துவக்கினர். பன்னாட்டு
நிறுவன நலன்களை முன்நகர்த்தும் இந்த
இஎம்சி பின்னர் உலக பொருளாதார
மன்றமாக, டபுள்யுஇசி 1987ல் மாறியது. இந்த
மன்றத்தில் ரூ.32,500 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதல்
(டர்ன் ஓவர்) உள்ள நிறுவனங்களே
உறுப்பினர்கள். நவதாராள வாத நிகழ்ச்சி
நிரல், இங்கே இவர்களால்தான் உருவாக்கப்படுகிறது.
இவர்களில் பலர், சிவில், கிரிமினல்
மனித உரிமை மீறல்களுக்காகத் தண்டனை
பெற்றவர்கள்.
நூற்றுப்பத்து
நாடுகளில் இருந்து மூவா யிரம்
தொழில்துறை தலைவர்கள், தலைமை செயல் அலுவலர்கள்,
அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில்,
மோடி கலந்து கொண்டார். பேசினார்.
பேசினார். இந்தியில் பேசினார். காந்தியை, தாகூரை மேற்கோள் காட்டி
பேசினார். வேத உபநிடதங்களை சமஸ்
கிருத மொழியிலேயே மேற்கோள் காட்டி பேசினார். உலகின்
17% மக்கள் தொகை உள்ள இந்தியாவில்
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு, சிவப்பு நாடா அல்ல,
சிவப்பு கம்பள வர வேற்பு
காத்திருக்கிறது என்று பேசினார்.
மோடியின்
உரையை விற்பனைத் திறன் என்று காணாமல்,
ராஜ தந்திரம் எனக் காண வேண்டும்,
அவர் இந்தியில் பேசி இந்தியா எழுந்து
நிற்கிறது என, அனைவரையும் அசத்தி
விட்டார் என, மோடி பக்தர்கள்
மகிழ்ந்து போயுள்ளனர். எதையெல்லாம் முதலீட்டாளர் கள் கேட்க விரும்பினார்களோ,
அதையெல் லாம் மோடி பேசினார்;
எதையெல்லாம் அவர் கள் இந்தியாவிடம்
பெற விரும்பினார்களோ அதை எல்லாம் தருகிறோம்
என்றார். முதலீட் டாளர்கள் எதற்காகவும்
அரசாங்கத்தை அணுகத் தேவை இல்லாத
நிலை வரும் என் றார்.
நம் பார்வையில், நம் தேச வளங்களை
முன் நிறுத்திச் சொல்வதை விட, அவர்கள்
தேவையில் இருந்து நம் நாடு
வழங்கும் வாய்ப் புக்களை எடுத்துச்
சொன்னது எப்பேர்ப்பட்ட ராஜதந்திரம் என வியக்கிறார்கள்.
மோடியின்
உரையிலிருந்து
2014ல்
மொத்த வாக்காளர்கள் 81.45 கோடி பேர்தான் என்றபோதும்,
600 கோடி மக்கள் தமக்கு வாக்களித்ததாகப்
பேசி, மோடி தடுமாறியதை, நாம்
தாண்டிச் சென்று விட லாம்.
அவரது அச்சு அசல் கருத்துகளை
மட்டும் காணலாம்.
1. ‘நாம் பல நேரம்
பேசுகிறோம். கேட்பதே இல்லை’.
2. ‘ஒரே வருடத்தில் பண
மதிப்பகற்றுதல், ஜிஎஸ்டி மூலம், டிஜிட்டல்
இந்தியா, குறை வான பணப்பரிமாற்றம்
நடக்கும் இந்தியா, ஒரு நாடு ஒரு
வரி ஒரு இந்தியா என்ற
எங்கள் கனவும், உங்கள் விருப்பமும்
நிறைவேறிவிட்டது’.
3. ‘வேற்றுமையில் ஒற்றுமை என்பது பழைய
அமைப்பு முறை. தற்போதைய நடை
முறை அனைவருக்கும் வளர்ச்சியே ஆகும்’.
4. ‘கார்ப்பரேட் சமூக பொறுப்பு என்பது
பழைய சொல்; அதற்கு புதிய
பொருள் தர முயற்சிப்போம்; அதன்
மூலம் புதிய செய்தி சொல்வோம்.
நான் பல காலம் சொன்னதைத்
திரும்பவும் சொல்கிறேன். சாமான்ய மக்களின் வாங்கும்
சக்தியை உயர்த்தாமல், நீங்கள் தொடர்ந்து விற்றுக்
கொண்டே இருக்க முடியாது. நாம்
நல்ல வருமானத்தை உருவாக் காமல், பொருட்களை
மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்க முடியாது’.
5. ‘உலகளாவிய அளவில் இந்தியாவை அறிந்துகொள்ள போதுமான காரணங்கள் உண்டு.
மிகவும் முக்கியமான காரணம், அது முதலீட்டை
ஈர்க்கும் கவர்ச்சி கொண்டது. அதன் பரந்து விரிந்த
சந்தையும் ஸ்திரமான அடிப்படைகளும் கூடுதல் காரணங்களாகும்’.
6. ‘2013 -
2014ல் 36 பில்லியன் டாலராக இருந்த அந்நிய
நேரடி முதலீடு 2016 - 2017ல் 60 பில்லியன் டாலராக
உயர்ந்து விட்டது’.
7. ‘துரிதமான பயணப்பாதை வளர்ச்சிப் போக்கு (ஃபாஸ்ட் ட்ராக்
டெவலப்மென்ட் ப்ராசஸ்), முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாழ்நாள் வாய்ப்புகளாகும்’.
8. ‘சராசரியாக ஒரு நபருக்கான எஃகு
நுகர்வு இந்தியாவில் 60 கிலோதான் உள்ளது. உலக அளவில்
அது 218 கிலோ ஆகும். உலகளாவிய
மின்நுகர்வில் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி நுகர்வு
மட்டுமே உள்ளது. மின்நுகர்வில், பிரிக்ஸ்
நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில்
உள்ளது. அய்ரோப்பாவில் 1,000 பேருக்கு 500 கார்கள் இருக்கும்போது இந்தியாவில்
1,000 பேருக்கு 25 கார்தான் உள்ளது. இந்த விஷயங்களில்
உலகளாவிய சரா சரி அளவை
இந்தியா எட்டினாலோ, நெருங் கினாலோ, அது
தொழில்துறையின் மீது எவ்வ ளவு
பிரும்மாண்டமான தாக்கம் செலுத்தும்?’
9. ‘இந்தியாவில் முதலீடு, எதிர்காலத்தில் முதலீடு’
10. ‘2025ல்
இந்தியா 5 லட்சம் கோடி டாலர்
பொருளாதாரமாகிவிடும். 2025ல் இந்தியா உலக
அளவில் 3ஆவது பெரிய நுகர்வோர்
சந்தை ஆகிவிடும்’.
மோடி முன்வைத்த இந்தக் கருத்துக்களை எப்படி
புரிந்து கொள்ளலாம்?
‘நாம்
பல நேரம் பேசுகிறோம். கேட்பதே
இல்லை’.
இந்தக் கருத்து, மோடி, கண்ணாடி முன்
நின்று பேசிய கருத்து போல்
உள்ளது.
2, 5, 6, 7, 9, 10 எண்ணிட்ட
கருத்துகள் அனைத்துமே, இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்யுங்கள்,
உங்கள் விருப்பமே எங்கள் கனவு கள்
என்று நாட்டையும் நாட்டு மக்களையும் சர்வதேச
மூலதனத்திடம் விற்கும் கருத்துகள் என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல
முடியும்?
4ஆம் எண்ணிட்ட கருத்து சொல்லும் செய்தி
என்ன?
மக்களது
வாங்கும் சக்தி உயராமல், பொருளாதாரம்
வளராது. தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க ஆள் வேண்டாமா?
முதலாளித்துவம் உள்ள வரை, மக்கள்
தேவைக்காக அல்லாமல் லாபத்திற்கான உற்பத்தி உள்ள வரை, கூலி
குறைந்தால்தான் லாபம் அதிகம் ஆகும்.
குறைந்த கூலி தந்து அதிக
லாபம் சம்பாதிப்பது முதலாளித்துவத் தின் மரபணுவில் உள்ள
இயல்பான விஷயம். அதன் இயற்கைக்கு
மாறாக, கூடுதல் வருமா னம்,
வாங்கும் சக்தி என்றெல்லாம் மோடி
பேசுவது, ‘நல்ல காலம் வரும்’ போன்ற
வாய்ச் சவடால் மோசடியே. ஆனால்
மக்கள், கூடுதல் வருமானம் வேண்டும்,
வாங்கும் சக்தி உயர வேண்டும்
என்று கோருவது காலத்தின் கட்டா
யம் என மோடியின் உரை
ஒப்புக்கொள்கிறது.
8ஆம் எண்ணிட்ட கருத்து சொல்லும் செய்தி
என்ன?
மோடி வெற்று வாய்ப் பேச்சு
மனிதர். விவசாய வருமானத்தைப் பெருக்க,
பெப்சி போன்ற குளிர்பானத்தில் பழச்சாறை
சேர்க்கு மாறு பெப்சியின் தலைவர்
இந்திரா நூயியிடம் அற்புதமான ஆலோசனை சொன்ன பொரு
ளாதார அறிஞர் மோடி!
இரும்பு,
மின்சார நுகர்வு, கார் பயன்பாடு மட்டங்கள்
பிரும்மாண்டமாக வளர்வது ஒரு கால
அடிப்படையில் மட்டுமே நிகழக் கூடிய
தாகும். இன்றளவில் இந்திய பொருளாதாரத் தின்
அளவு 2.4 டிரில்லியன் டாலர், சீன பொருளாதாரத்தின்
அளவு 12 டிரில்லியன் டாலர், அய்க்கிய அமெரிக்க
பொருளாதாரத் தின் அளவு 20 டிரில்லியன்
டாலராகும், 2025ல் இந்தியப் பொருளாதாரத்தின்
அளவு 5 டிரில் லியன் டாலர்
ஆகும் என்ற விருப்பத்தை, அதா
வது 2மடங்கு பெருகும் என்ற
விருப்பத்தைத் தெரிவிக்கும் மோடி, உலக சராசரி
உயர்ந்து கொண்டே இருக்கும்போது, இந்திய
பொருளா தாரம் 6 மடங்கு, 7 மடங்கு
உயரும் என்பது போல் பேசுவது,
முற்றிலும் மோசடியே. கார், மின்சாரம், இரும்பு
பற்றிய மோடியின் பேச்சு, புவிவெப்பமயமாதல் ஆபத்து
நோக்கியே பொரு ளாதாரத்தைச் செலுத்துவதாக
அமையும்.
3ஆம் எண்ணிட்ட கருத்து, உள்நாட்டுக் கொள்கையை வெளிநாட்டிலும் பிரகடனப் படுத்தியது ஆகும்.
இனி வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்மைத்துவம்
இந்தியாவில் இருக்காது. வளர்ச்சி என்ற சாகச முழக்கத்தோடு,
ஒரே மதம், ஒரே மொழி,
ஒரே கலாச்சாரம் என்ற பாசிசப் போக்குகள்
வளரும் என்கிறார் மோடி.
நாடெங்கும்
இசுலாமியர் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் குடியரசு தின கொடி ஏற்றி
நின்ற இசுலாமிய இளைஞர்களை, 100 மோட்டார் சைக்கிள்களில் அனுமதி இல்லாமல் ஊர்வலம்
போன காவிப்படையினர், பாகிஸ்தானுக்குப் போகுமாறு மிரட்டுகின்றனர். மாற்றுக் கருத் துகளுக்கு இடமில்லை,
வெறுப்பரசியல்தான் நிலவும் என டாவோசிலும்
சொல்கிறார் மோடி. இந்துத்துவாவும் அதன்
பின்னால் உள்ள மனுஸ்மிருதியும் நாடெங்கும்
கேள்விக்குள் ளாக்கப்படும்போது, மோடி கும்பல், அம்பேத்
கர்ஸ்மிருதியான அரசியல் சாசனத்தை மாற்ற
வேண்டும் என கற்காலம் நோக்கி
நாட்டைச் செலுத்த முயற்சிக்கிறது. விஞ்ஞானம்,
வரலாறு ஆகியவற்றின் இடத்தில் பகுத்தறிவுக்குப் புறம் பான புராணங்களை,
கட்டுக்கதைகளை நிறுத் துகிறது. மனிதன்
குரங்கிலிருந்து பிறக்கவில்லை, விநாயகர் நம் இந்து முன்னோர்களின்
பிளாஸ் டிக் சர்ஜரி அறிவுக்கு
ஆதாரம் என அபத்தங் களை
ஆபத்தான முறையில் பரப்புகிறது.
டிரம்ப்பும்
மோடியும் எர்டோகனும் உலக மயத்தின் சமகால
செல்லப் பிள்ளைகள். இவர் கள் மூலதன
சேவையை, ஜனரஞ்சகவாதத்தில் மறைக்கப் பார்ப்பவர்கள். மூலதனத்தை, மூல தன விசுவாசிகளை
எதிரிகளாக மக்கள் காணக் கூடாது
என்பதற்காக, மக்கள் மத்தியிலிருந்து எதிரிகளைக்
காட்டுவார்கள்.
மூலதனமும்
மோடியும் மக்களைப் பிரிப்பார்கள்.
நாம் மக்களை ஒன்றுபடுத்துவோம்.
வேற்றுமையில்
ஒற்றுமையை பன்மைத்துவத்தை
போராட்டக்
களங்களில் உயர்த்திப் பிடிப்போம்.
பாசிசத்தை
எதிர்த்திடுவோம்.
மக்கள்
இந்தியாவுக்காகப் போராடுவோம்.