சான்மினா
தொழிலாளர் போராட்டம்
வென்றது
பார் என்று சங்கே முழங்கு!
காம்ரேட்
சான்மினாவும்
தமிழக அரசும்
சான்மினா
தொழிலாளர்கள், ஒரு நீடித்த போராட்டம்
நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.
சான்மினா,
19 நாடுகளில் 60 பிளாண்ட்கள் உள்ள, 50,000 பேர் பணியாற்றும், 2006ல்
மட்டும் ரூ.44,000 கோடி வருவாய் ஈட்டிய, அய்க்கிய
அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். போராட்டம் நடந்தபோது, ஒரு தோழர், நாம்
கொரிய, ஜப்பானிய நிறுவனங்களோடு மோத வில்லை, அய்க்கிய
அமெரிக்காவின் நிறுவனத் தோடு மோதுகிறோம் எனச்
சரியாகவே அழுத் தம் வைத்தார்.
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், கருணாநிதி ஆண்டபோதும், ஜெயலலிதா ஆண்டபோதும் பாரபட்சமின்றி, கொரிய ஜப்பானிய அய்க்கிய
அமெரிக்க நிறுவனங்க ளுக்கு, நமது இயற்கை
வளங்களைச் சூறையா டவும் கருவூலத்தை
பகல் கொள்ளையடிக்க வும், வாய்ப்பு தந்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, அதன் விவரங்களை
அரசாணைக ளில் தெரிவித்தனர். சான்மினாவிற்கு
வாரி வழங்கப்பட்டது என்ன என்பதை தொழில்
துறையின் 03.07.2007 தேதிய அரசாணை எண்.176
பட்டியலிட்டுக் காண்பித்தது. இங்கேயும் ‘முதலீட்டு முன்னேற்ற மான்யம்’ வழங்கப்பட்டது. மக்களுக்கான மான்யங்கள் மோடிக்கும் பழனிச்சாமிக்கும் கண்களை உறுத்துகின்றன. மோடி,
எவ்வளவு பேர் கேஸ் சிலிண்டர்
மான்யத்தை விட்டுக் கொடுத்து விட்டனர் எனப் பட்டியிலிட்டு, ஒவ்வொரு
பெட்ரோல் பங்கிலும் பெரிய பேனரில் பேசிக்
கொண்டிருக்கிறார். பழனிச்சாமி, போக்கு வரத்து கட்டண
மான்யத்தைத் தானாகவே வெட்டிவிட்டார். ஆனால்
இந்த மூலதன விசுவாசிகள், கொரிய,
ஜப்பானிய, பிரெஞ்சு, தாய்வானிய, அய்க்கிய அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கு, முதலீட்டு முன்னேற்ற மான்யம் தர பிரும்மாண்டமான
நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். மோடி முதல் பழனிச்சாமி
வரை, மாநில முதலமைச்சர்கள் என்ற
வகை யில் முதலீட்டு முன்னேற்ற
மான்யம் தருவதில், போட்டி போட்டவர்கள்தான்.
நிலத்தின்
மதிப்பு தொடர்ந்து உயரும் எனும்போது, சான்மினாவுக்கு
ஒரு ஏக்கர் நிலம் ரூ.19.5
லட்சம் என 100 ஏக்கர், 99 ஆண்டு
களுக்கு குத்தகைக்கு தரப்பட்டது. இந்த வகையில் மட்டும்
ரூ.4 கோடி தரப்பட்டதாக அரசு
சொன்னது. 4,000 பேரை
வேலைக்கு எடுத்து ரூ.315 கோடி
முதலீடு போடுவேன் என சான்மினா சொல்ல,
ரூ.315 கோடியும் உனக்குச் சில வருடங்களில் வரிச்
சலுகையாகத் தருவேன் என தமிழக
அரசு வாக்குறுதி தந்தது.
தொழிலாளர்கள்
ஏஅய்சிசிடியுவில் இணைந்தனர்
சான்மினா
நிறுவனம் தொழிலாளர்களை ஜனநாயகத்தை இந்திய நாட்டு சட்டங்களை
மதிக்குமா அல்லது காலில் போட்டு
மிதிக்க முயற்சிக்குமா? முதலாளித்துவ ஆணவத்துடன் நடந்த இந்த நிறுவனத்தை
தொழிலாளர்கள் முதல் சுற்றில் சிஅய்டியு
தலைமையில் எதிர்த்து எழுந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் ஒர கடம் பகுதியில்,
அப்போது, சான்மினா தொழி லாளர்கள் போராட்டத்தில்
முன்னணியில் நின் றனர். ஒரு
கட்டத்தில் அந்தப் போராட்டம் முடிவுக்கு
வர, நிர்வாகம் கவனமாக தனக்கு நெருக்கமான
தான் சொல்வதை எதிரொலிக் கும்
அய்என்டியுசி சங்கத்தை தொழிலாளர்கள் மீது திணித்தது. அக்டோபர்
2016 முதல் செப்டம்பர் 2017 வரை ஓராண்டுக்கான ஒப்பந்தத்தை
தொழிலாளர்கள் சம்மதம் பெறாமலே நிர்வாகம்,
திருபெரும்புதூர் தொழிலாளர் துறை முன் கையொப்பமிட்டது.
இந்த துரோக, இரகசிய, மனம்போன
போக் கிலான ஒப்பந்தம் பற்றி
அறிந்து கொண்ட தொழிலாளர்கள், மிகவும்
இயல்பாகவே மனக் குமுறலுக்கு ஆளானார்கள்.
19.02.2017ல் மாலெ கட்சியால் வழிநடத்தப்படும்
ஏஅய்சிசிடியுவில் இணைந்தனர்.
பழிவாங்குதல்
ஆரம்பமானது
அய்என்டியுசியுடன்
போட்ட ஒப்பந் தத்தை தொழிலாளர்கள்
ஏற்க மறுத்து, புதிய ஒப்பந்தம் போடச்
சொன்னதால், நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கத் துவங்கியது. சாரதி என்ற தொழிலாளியை
முறை தவறிப் பேசிய மேற்பார்வையாளர்
மன்னிப்பு கேட்க வேண்டும் எனத்
தொழிலாளர்கள் வற்புறுத்தி யதால், மார்ச் 2017 சம்பளத்தில்
தண்டனை என்ற வகையில் இரண்டு
எட்டு நாட்கள், அதாவது 16 நாட்கள் சம்பளத்தை நிர்வாகம்
பிடித்தம் செய்தது. இந்தப் பிடித்தம், சம்பளப்
பட்டுவாடா சட்டத்திற்குப் புறம்பானது. எந்த தொழிலாளிக்கும் எந்த
அறிவிப்பும் தராமல் மேற் கொள்ளப்பட்ட
இந்த பிடித்தப் பணத்தை, உடனே திரும்பக்
கொடு என்று சொல்லும் துணிச்சல்
கூட தமிழக அரசுக்கு இல்லை. வெட்கக்
கேடு!
இந்தப்
பின்னணியில் நிர்வாகம் சங்க முன்னோடிகளை ஆலைக்குள்
வேலை செய்ய விடவில்லை. சம்பளத்துடன்
கட்டாய ஓய்வு அளித்தது. தொழிலாளர்களை
ஓர் அமைப்பு ஒழுங்கிற்குள், சங்கத்துடன்
பிடிப்பாக இருக்க வைக்க, கடுமையான
முயற்சிகள் தேவைப் பட்டன. அரசின்
தொழிலாளர் துறை, 2016 -2017க்கு ஒப்பந்தம் போட்டது
போட்டதுதான், அதன் இடத்தில் வேறு
ஒப்பந்தம் போட முடியாது எனச்
சங்கத்திற்கு கடிதம் தந்தது. நிர்வாகம்
ஏஅய்சிசிடியுவோடு பேச மறுத்தது.
சங்க நடவடிக்கைகளும் வேலை நிறுத்த தயாரிப்புகளும்
சங்கம்,
2016 முதலான காலத்திற்கே தன்னோடு ஒப்பந்தம் போட
வேண்டும் என வலியுறுத்தியது. அனுபவம்
இல்லாத இளைஞர் களை பொதுப்
பேரவைக்கு வர வைத்து, அவர்களது
போராட்ட உணர்வுகளை நெறிப் படுத்தும் தேவை
இருந்தது. 19.02.2017,
12.03.2017, 26.03.2017, 09.04.2017, 02.07.2017 தேதிகளில்
தோழர் பாரதியும் தோழர் இரணி யப்பனும்
பொதுப் பேரவையில் கலந்து கொண் டனர்.
போராட்டத்திற்கு, வேலை நிறுத்தத் திற்கு
தயாரிப்பும், தொழிலாளர்களை ஒன்று படுத்தும் முயற்சியும்,
அவர்களிடம் அங்குமிங் குமாய் நிலவும் பின்தங்கிய
கருத்துக்களைக் களையும் கருத்துப் போராட்டமும்,
சக்திகளை உருட்டித் திரட்டிக் கொள்வதும் முக்கியப் பணிகளாக இருந்தன. வேலை
நிறுத்தம் துவங் கினால் நிறுவனப்
பேருந்து இல்லாமல் ஆலை வாயிலுக்கு வந்துபோகும்
பெரும் செலவு, வருமான இழப்பு,
உணவு, வாடகை, கடன் களைச்
சமாளிப்பது ஆகியவை பற்றி கணக்கில்
கொண்டு, எத்தகைய போராட்டங்களை முன்
எடுக்கலாம் என்ற கலந்தாய்வுக் கூட்டங்கள்
13.08.2017, 02.09.2017 தேதிகளில்,
தோழர் பாரதி பங்கேற்புடன் நடந்தன.
நவம்பர் துவக்கத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஒப்புதல்
பெறப்பட்டது. 16.11.2017 அன்று திருபெரும்பு தூரில்
எழுச்சியுடன் வேலை நிறுத்தப் பிர
கடனக் கூட்டம் நடைபெற்றது. தோழர்களின்
உரைகளில் பொறி பறந்தது. தோழர்
குமார சாமி பேசிய விசயங்கள்
சான்மினா தொழிலா ளர்கள் மத்தியிலும்
வெளியிலும் வாட்ஸ் அப் மூலம்
பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டன.
வேலை நிறுத்தம் துவங்கியது
27 பெண்கள்
உள்ளிட்ட 348 பேர், உறுதி யாக
வேலை நிறுத்தத்திற்கு தயாராக, நிர்வாக இயக்குனர்,
நவம்பர் 20 அன்று முன்னணி
களை ஆலைக்குள் அழைத்து ஓராண்டுக்கு ரூ.2,500
உயர்வு தருவதாகச் சொன்னார். அன்றிரவே, ஒருதலைபட்சமாக ஓராண்டுக்கு ரூ.3,264 உயர்வு அறிவிக்கப்பட்டது. அங்கேயே
அப்போதே, தொழிலாளர்கள் முதல் பெரிய வெற்றியைப்
பெற்றனர். சங்கத்தோடு பேசி சம்பள உயர்வு
வழங்கப்படாததால், தொழிலா ளர்கள் 21.11.2017 இரவு
முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் துவங்கினர்.
உயர்நீதிமன்றத் தில் நிர்வாகம், தொழிலாளர்கள்
உள்ளே இருப் பதற்கு எதிராக
உத்தரவு பெற்ற பிறகு, தொழி
லாளர்கள் ஆலைக்கு வெளியே போராட்டப்
பந்தல் போட்டனர். உருட்டி மிரட்டிய காவல்
துறை, தொழிலாளர்கள் மசியாததால் பின்வாங் கியது. ஷிப்ட் முறையில்
போராட்டப் பந்தலில் இரவு தங்குவது, உணவு
தயாரிப்பது, நிதி வசூல் செய்வது,
சில நாட்கள் அனைவரும் கலந்து
கொள்ளும் பொதுப் பேரவை நடத்துவது,
சங்கம் அழைப்பு தரும் போராட்டங்களில்
திரளாகக் கலந்து கொள்வது என
முடிவானது.
26.11.2017 வாயில்
கூட்டமும் நிர்வாகத்தின்
நாடகமும்
தோழர்கள்
சீதா, ராஜகுரு, இரணியப்பன், பாரதி மற்றும் குமாரசாமி
ஆகியோர் 26.11.2017 அன்று கொட்டும் மழையில்
ஆலை வாயிலில், அய்க்கிய அமெரிக்க நிறுவனத்தின் சவாலைச் சந்தித்து முறியடிக்கத்
தயாராக அழைப்பு விடுத்தனர். 28.11.2017 அன்று நிர்வா
கம் சமரச அதிகாரியிடம் புகார்
கடிதம் தந்தது.
போராடத்
தயாரா, ரத்தம் சிந்தத் தயாரா,
சிறை செல்லத் தயாரா?, சும்மா
வெற்றியை உங்க பாக்கெட்டில் யாரும்
போட்டு வைக்க மாட்டார்கள், வெற்றியைப்
பறித்து எடுக்க னும், அடி
உதவுற மாறி அண்ணன் தம்பி
உதவ மாட்டான் என, வன்முறையைத் தூண்
டும் விதத்தில் தலைவர்கள் பேசி உள்ளதால், பேச்சுவார்த்தைகளில்,
பாதுகாப்பு வழங்கினால் தான் கலந்துகொள்ள முடியும்
என நிர்வாகம் நாடகமாடியது. தோழர்களின் இயல்பான போராட்ட நேர
போர்க்குணமிக்க உரைகளை நிர்வாகம் திரித்துச்
சொல்கிறது என சங்கம் பதில்
எழுதி, நகலை, அரசுத் தரப்பில்
அனை வருக்கும் அனுப்பியது. நிர்வாகமும் காவல் துறையும் 26.11.2017 கூட்டத்திற்குப்
பிறகு அடக்கி வாசித்தார்கள்.
2017ல்
துவங்கிய போராட்டம் 2018லும்
நீண்டது
சான்மினாவில்
புதிய போராட்ட வடிவங் களை
தொழிலாளர் பங்கேற்புடன் திட்டமிட வும் செயல்படுத்தவும் முடிந்தது.
சான்மி னாவைப் போலவே, ஏசியன்
பெயின்ட்ஸ் ஜிம் கானா கிளப்
என்ற இரண்டு போராட்டங்கள் ஒரு
வருட இறுதியில் துவங்கி மறு வருடம்
வரை நடந்ததை கூட்டாக வழிநடத்திய
அனுபவமும், இளைஞர்கழக வழக்கறிஞர் சங்க போராட்ட அனுபவங்களும்,
நம்பிக்கை யோடும் துணிச்சலோடும் போராட்டத்தை
வழிநடத்த தோழர் பாரதிக்கும் மற்ற
தோழர்களுக்கும் உதவின. போராட்டத்தை ஏஅய்சிசிடியுவும்
காஞ்சி மாவட்ட புரட்சிகர இளைஞர்
கழகமும் இணைந்தே நடத்தின.
வேறு வேறு போராட்டங்கள்
வேலை நிறுத்தம் எப்போது முடியும் என்று
பார்க்காமல் எப்படி முடிகிறது என்று
பார்ப்பதுதான் முக்கியம் என சங்கம் வலியுறுத்
தியது. ஆனபோதும், அமைதியாக தினமும் ஆலை வாயிலுக்கு
வந்து போகச் சொல்லி வேலை
நிறுத்தத்தை துடிப்போடும் ஈடுபாட் டோடும் நடத்த
முடியாது. 21.11.2017 முதல் 25.01.2018 வரை 66 நாட்கள் நீண்ட
வேலை நிறுத்தத்தில், 26.11.2017,
12.12.2017, 28.12.2017, 07.01.2018, 24.01.2018, 25.01.2018 தேதிகளில் பொதுப் பேரவைக் கூட்டங்கள்
நடத்தப்பட் டன. அனைத்து கூட்டங்களிலும்
தோழர் பாரதி கலந்து கொண்டார்.
பெரும்பாலான கூட்டங்களில் தோழர் இரணியப்பன் கலந்து
கொண்டார். ஒரு நாள், ரெகுலர்
உற்பத்தியில் சட்ட விரோதமாக ஒப்பந்த
தொழிலாளர் களை ஈடுபடுத்துவதற்கு எதிராக
தொழிற் சாலை ஆய்வாளர் அலுவலகத்தில்
தொழிலா ளர்கள் திரண்டு நியாயம்
கேட்டனர். ஒரு நாள், டிஎம்எஸ்
வளாகத்தில் தொழிலாளர் துறை, முதலாளிகள் துறையே
எனக் கண்ட னம் முழங்கி,
தொழிலாளர் துறை என்பதன் மேல்
முதலாளிகள் துறை என்ற வாசகத்தை
ஒட்டினார்கள். ஒரு நாள் எவரும்
எதிர்பாராத நேரத்தில், ‘சர்வ வல்லமை படைத்த’ அய்க்
கிய அமெரிக்காவின் தூதரகத்தை முற்றுகை யிட்டனர். தொழிலாளர் தலைவர்கள் இரண்டு பேரின் பேட்டி
பரவலாகச் செய்தி ஆனது. தலைமைச்
செயலகத்தை சட்டமன்றத்தை முற்றுகையிட இரண்டு முறை முயன்று
கைதாயினர். 02.01.2018 அன்று திருபெரும்புதூ ரில்
புரட்சிகர இளைஞர் கழகம் ஒருமைப்பாடு
ஆர்ப்பாட்டம் நடத்தியது. இகக(மாலெ)யில்
தோழர்கள் உறுப்பினர் ஆவதும், அன்றே நடந்
தது. தொழிற்சாலை பிரச்சனை முடிந்த பிறகு, மற்ற
ஜனநாயகப் போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் என்று
சொல்வது, அலைகள் ஓய்ந்த பின்
கடலில் குதிக்கிறேன் என்று சொல்வது போல்
இயலாத ஒரு செயல் எனத்
திட்டவட்டமாகத் தொழிலாளர்களிடம் பேசப்பட்டது.
சங்கம்
தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த பலவீனமான கருத்துக்களோடு
சமரசம் செய்து கொள்ளவில்லை. அவர்களது
வர்க்கப் போராட்ட, வர்க்க உணர்வு பலங்களைக்
கண்டறிந்து உறவாடி வளர்க்கும் இடையறாத
முயற்சிகளில் ஈடுபட்டது. சான்மினா தொழி லாளர்கள் போக்குவரத்து
தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டினார்கள். தொழிலாளர் துறையினர், தொழிலாளர்களைப் பலவீனப்படுத்துவது, சோர்வுற வைப்பது, சமரச
முறிவறிக்கை போட்டு விடுவோம், பேச்சுவார்த்தைகளே
நடக்காது என மறைமுகமாக அச்சுறுத்துவது
என்ற வேலைகளை வழக்கம் போல
செய்த னர். தொடர் போராட்டங்கள்,
ஆர்கே நகர் தேர்தல் நேர
போராட்டங்கள் என்ற பின்ன ணியில்,
சங்கம், காவல்துறை மூலம் தொழிலா ளர்
ஆணையரை, செயலரை, துணை முதல
மைச்சரைச் சந்தித்தது. அந்த மூன்று மட்டங்
களிலும், முதலீடு வெளியேறக் கூடாது,
ஒழுங்காய் இருந்து ஒழுங்கு நடவடிக்கைகள்
தவிர்க்க வேண்டும் என்ற உபதேசங்கள் சீராகத்
தரப்பட்டன. ஆன போதும் பேச்சுவார்த்தை
கள் காத்திரமாகவும் பொருளுள்ள விதத்திலும் முன்நகரத் துவங்கின. 07.01.2018 பேச்சுவார்த் தைகளுக்குப் பிறகு பொங்கல் விடுமுறை
தாண்டி பேச்சு வார்த்தைகள் ஒரு
நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் நடந்தன. வேலை நிறுத்தக்காரர்களில்
எவரும் வேலைக்குத் திரும்புவது நடக்கவில்லை. மாறாக, வேலைக்குச் சென்றவர்களில்
சிலர் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இந்த நிலையில், சண்டையின் ஒரு பகுதி யாக
நிர்வாகம், ஒரு சமாதானத் தாக்குதல்
தொடுத்தது. ஒவ்வொரு தொழிலாளிக்கும், அன்பான
வேண்டுகோள் என ஒரு கடிதம்
அனுப்பியது. அந்தக் கடிதத்தில், சீண்டுவது,
குற்றம் சுமத்துவது என்பதற்கு மாறாக, தான் ரூ.3,264
சம்பள உயர்வு ஓராண்டுக்கு தந்துள்
ளதாகவும், ஆலையில் தரப்படும் சலுகைகள்
பற்றியும் தெரிவித்து, வேலைக்குத் திரும்புமாறு அன்பான வேண்டுகோள் விடுத்தது.
‘சில தொழி லாளர்கள் நல்லுறவைக்
கெடுக்கிறார்கள்’ என்று
சொன்ன நிர்வாகம், சங்கம், தீவிரவாதம், வன்முறை
என்று வசனம் எழுதவில்லை. திரும்பாவிட்டால்
வேலை போய் விடும் என
மிரட்டவில்லை. போராடும் சங்கத்தில், பெரும் பான்மைத் தொழிலாளர்கள்
இருக்கும் விஷ யத்தை ஒப்புக்கொள்ளவும்
செய்தது. மேற் பார்வையாளர்கள், மேலாளர்கள்
மூலம் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொழிலா ளர்களின்,
குடும்பத்தாரின், நாடி பிடித்துப் பார்த்தது.
ஒரு தொழிலாளி பொங்கல் போய் விட்டது,
இனி தீபாவளி போனாலும் பரவா
யில்லை, கவுரவமான தீர்வு இன்றி வேலைக்கு
வர முடியாது என்றார். ஒரு தொழிலாளியின் தாய்
நலம் விசாரித்துவிட்டு, தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுக்
கோரிக்கையைப் பரிசீ லிக்கச் சொன்னார்.
ஒரு மேலாளர், சம்பள உயர்வு ஏதும்
இனி இருக்காது என்றும், இப்போது வரை வேலைக்குத்
திரும்பாததற்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்றும்,
இனி எப்படி இருக்கும் எனச்
சொல்ல முடியாது என்றும் அச்சுறுத்தும் தொனியில்
பேசினார்.
21 நாட்கள்
சம்பளப் பிடித்தம், வேலை நிறுத்தம் துவங்கிய
பின் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம்,
4 தொழிலாளர்கள் 1 மாதம் தற்காலிக நீக்க
தண்டனை, 90 தொழிலாளர் கள் விசாரணக்கு உட்படுத்தப்பட்டு
தற்காலிக நீக்கம் மற்றும் சம்பள
உயர்வு என்ற பிரச்சனை களில்,
சம்பள உயர்வு நீங்கலாக மற்ற
பிரச்ச னைகள் தீர வாய்ப்பு
தெரிந்தது. இந்தப் பின்ன ணியில்தான்,
காலவரையற்ற பட்டினிப் போராட்டம், முதலமைச்சர் வீட்டை முற்று கையிடுவது
என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
காலவரையற்ற
பட்டினிப் போராட்டமும் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகளும்
ஆலைவாயிலில்
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த காவல்துறை இடையூறு
கள் இருக்கும் என்பதாலும், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெறத்
தாமதமாகும் என்ப தாலும், திருபெரும்புதூரில்
தனியார் இடத்தில் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவானது. 22.01.2018 அன்று காலை
பட்டினிப் போராட் டம் நடக்கக்
கூடாது என்பதற்காக, காவல் துறை இட
உரிமையாளரை மிரட்டுவது, சங்கத் தோழர்களை மிரட்டுவது
எனப் பல முயற்சி கள்
எடுத்தது. காவல்துறை தலைவருக்கு சங்கம் எழுதிய கடிதத்தைப்
பார்த்த பிறகு, இட உரிமையாளர்,
உறுதியாக நின்றுவிட்டார். சங்கம் பட்டினிப் போராட்டம்
துவங்கிய பிறகு, 23.01.2018 அன்று கூடுதல், இணை,
துணை தொழிலாளர் ஆணையர்கள் எல்லாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள
துவங் கிய பிறகு, காவல்துறை
ஏதாவது வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள்
என்றது.
தோழர்கள்
நித்தியானந்தம், சுரேஷ், சாரதி, குணசேகரன்,
தியாகராஜன் ஆகியோர் ஜனவரி 22 முதல்
ஜனவரி 25 வரை கால வரையற்ற
பட்டினிப் போராட்டம் நடத்தினர். போராட்டங்களில், ஹ÷ண்டாய் தோழர்கள் திரளாகவும்
சங்க வேறுபாடின்றியும் ஆதரவு தந்தனர். ஏசியன்
பெயின்ட்ஸ் மற்றும் புரட்சி கர
இளைஞர் கழக தோழர்கள், போராட்
டத்தை அவர்கள் போராட்டமாகக் கருதி
உதவினர். டென்னகோ, சிஎம்ஆர், இந்துஜா ஃபவுண்டரி, நிசான்,
ஓசூர் நெரோலாக் பெயின்ட்ஸ், பின்ஸ்டார், எம்ஆர்எஃப், பிரிக் கால், ஏஅய்சிசிடியு
இகக(மாலெ) தோழர்கள், சண்முகம்,
கிறிஸ்டோபர், கேப்ரியல் போன்ற உள்ளூர் தோழர்கள்
பங்கேற்று உதவினர்.
24.01.2018 மதியம்
பொதுப் பேரவையில், பிரச்சனையை முடிக்க அல்லது போராட்
டத்தைத் தீவிரப்படுத்த, பட்டினிப் போராட்டப் பந்தலில் நடந்த பொதுப் பேரவை
பேச்சு வார்த்தை நடத்துபவர்களுக்கு, அனுமதி தந்தி ருந்தது.
நிர்வாகம், சங்கம் என இரு
தரப்பின ரும், ஏற்புடைய ஆலோசனைகளுடன்
போராட்டத்தை முடிக்கத் தயாராயினர்.
1) 21 நாட்கள்
சம்பளப் பிடித்தப் பிரச்ச னையில், சம்பளப்
பட்டுவாடா வழக்கு முடிவுப் படி
நிர்வாகம் நடக்கும்.
2) 8 நாட்கள்
சம்பளத்தைத் திரும்பத் தரும்.
3) முன்னணிகளுக்கு
சம்பளத்துடன் ஓய்வு தருவதை முடிவுக்குக்
கொண்டு வரும்.
4) 4 பேருக்கு
1 மாத தற்காலிக நீக்க தண்டனை ரத்து
செய்யப்படும், ஆனால் முன்பு நடத்தாத
விசாரணையை இப்போது நடத்தும்.
5) 85 தொழிலாளர்களின்
தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்படும்.
விசாரணை நடக்கும். இறுதி முடிவு இணை
ஆணையர் (2) ஒப்புதல் படி எடுக்கப்படும்.
6) கயல்விழி,
நளினி, எழிலரசி, நித்தியானந் தம், சாரதி என்ற
5 பேர் விசாரணை ஒரு வாரத்தில்
முடிக்கப்படும். அந்த காலத்திற்கு அவர்களுக்கு
சம்பளம் தரப்படும். விசாரணை ஒரு மாதத்தில்
முடியாவிட்டால், அவர்களைப் பணிக்கு அனுமதித்து விசாரணை
தொடரும்.
7) நிர்வாகம்
ஏற்கனவே தர முன்வந்த சம்பள
உயர்வான ரூ.3,264 என்பதோடு கூடுத லாக, வருங்கால
வைப்பு நிதி வகையில் ரூ.306
சேர்த்து ரூ.3570, 01.10.2017 முதல் வழங்கும்.
8) சங்கம்
25.01.2018 முதல் வேலை நிறுத் தத்தைத்
திரும்பப் பெறும்.
என
24.11.2018 அன்று இரு தரப்பினரும் ஏற்கும்
ஆலோசனை வழங்கப்பட்டது.
கடைசி நேரத்தில் வேலை நிறுத்த காலத்
திற்கு வேலை இல்லை சம்பளம்
இல்லை எனச் சேர்க்க வேண்டும்
என நிர்வாகமும் தொழி லாளர் துறையும்
பிடிவாதம் பிடித்தனர். ஏசி யன் பெயின்ட்சில்,
ஜிம்கானா கிளப்பில் சங்கம் தான் அவ்வாறு
செய்யவில்லை எனவும், சான் மினாவில்
அவ்வாறு செய்ய முடியாது எனவும்,
பேச்சுவார்த்தை தோல்வி, போராட்டத்தை தீவிரப்படுத்தத்
தயார் என அறிவித்ததும், வேலை
நிறுத்தக் காலம் பற்றி எதுவும்
எழுதப் படாமல், வேலை நிறுத்தக்
காலத்திற்கு சம்ப ளம் கோரும்
பிரச்சனையில் தொழிலாளர் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டு, வேலை நிறுத்தமும்
பட்டினிப் போராட்டமும் 25.01.2018 அன்று மாலை எழுச்சியுடன்
முடிவுக்கு வந்தன.
2018க்கு
தமிழ்நாட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் சரியான போராட்டப் பாதை
வகுத்தனர். ஒரகடம் சான்மினா தொழிலாளர்
கள், அரை கிலோ இனிப்பு
தருவதற்கு அய்க் கிய அமெரிக்காவில்
கேட்டுச் சொல்ல வேண் டும்
என்று சொன்ன நிர்வாகத்தை, ஒரு
ரூபாய் சம்பள உயர்வு கூடுதலாகத்
தர மறுத்த நிர்வா கத்தை,
சம்பள உயர்வு தர வைத்து,
ஓராண் டுக்கு மாதம் ரூ.3,570
சம்பள உயர்வுடன் போராட்டத்தை முடித்துள்ளனர். வேலை நீக்கம் இல்லை.
பிடித்த சம்பளத்தில் ஒரு பகுதி வருகிறது.
மறு பகுதியும் வர வாய்ப்புள்ளது. சங்கம்
பலப்பட்டு போராட்டம் முடிந்துள்ளது. 01.10.2018 முதல் புதிய ஒப்பந்தம்
பேச வாய்ப்பு உருவாகி உள்ளது.
எழுச்சியோடும்
துடிப்போடும் தொழிலா ளர் ஈடுபாட்டோடும்
அடுத்தடுத்து போராட் டங்கள் நடத்தப்பட்டன.
மோதியவர்கள் உரிய நேரத்தில் முடித்துக்
கொள்ளவும் செய்த னர். துவக்க
கால போராட்ட முன்னணிகள் அனைவரும்
வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கட்டாய
விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டனர். அதனால்
இப்போது போராட்டம் நடத்திய அனைவரும் புதியவர்கள்.
போராட்ட காலம் நெடுக, போராட்டத்தில்
ஈடுபட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக புதிய தொழிலாளர்
களை வேலைக்கு அமர்த்தி உற்பத்தியில் ஈடு படுத்தினர். தொழிலாளர்கள்
கடன் வாங்கியும் கொஞ்ச நஞ்ச நகைகளை
அடகு வைத்தும் மிகுந்த சிரமப்பட்ட நிலையிலும்
உறுதியோடு போராட்டத்தில் நின்றனர்.
போராடத்
தயார் சிறை செல்லத் தயார்
என மீண்டும் நிரூபித்துள்ள சான்மினா தொழி லாளர்களை, போராட்டத்தின்
முன்னாலே யாராட்டமும் செல்லாது என உணர்த்திய சான்
மினா தொழிலாளர்களை, அவர்கள் போராட் டத்தை
எல்லோரும் கொண்டாடுவோம். கொண்டாட்டமான போராட்டங்களுக்கு தயாராவோம்.