காவிரியில் மே 18 தீர்ப்பு:
அடுத்தச் சுற்று போராட்டத்தை அவசியமாக்குகிறது
இறுதித் தீர்ப்பு என்று 2018 பிப்ரவரி 16 அன்று சொல்லப்பட்ட தீர்ப்புக்கு இறுதித் தீர்ப்பு 2018 மே 18 அன்று வந்துள்ளது. இதுவும் இறுதியாக இருக்குமா?
எளிதில் பதில் கிடைத்துவிடாத கேள்வியாகவே இருக்குமா? உச்சநீதிமன்றத்தின் திருத்தியமைக்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சொல்கிறது. அந்த வரைவுத் திட்டத்துக்கு தமிழக அரசு வழக்கறிஞர் ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் திட்டம் அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் சொல்கிறது. அதாவது தீர்ப்பாயம் சொன்னபடி வாரியம் என்று ஒன்று இல்லாத, ஆணையமும் குழுவும் அமைக்கப்படும் என்று சொல்கிற ஒரு வரைவுத் திட்டத்தை தமிழக அரசு வழக்கறிஞர் ஒப்புக் கொண்டுவிட்டார். பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது என்று மோடி அரசுக்கு சான்றிதழும் கொடுத்து விட்டார்கள். சுமுகமான தீர்வு தந்துவிட்டதாக தமிழ்நாட்டு மோடி பக்தர்கள் மோடியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி அரசு தமிழக மக்களுக்கு சாதகமான தீர்வு தந்திருக்குமா? நம்ப முடியவில்லை.
காவிரி மேலாளுமை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிப்ரவரி 16 தீர்ப்பு சொல்லவில்லை, திட்டம் உருவாக்க வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளது என்ற ஒரு காரணத்தைச் சொல்லி மூன்று மாதங்களுக்கு வரைவுத் திட்டத்தை முன்வைக்கவே காலம் கடத்தியுள்ள பின்னணியில், மே 18 தீர்ப்பு, சில சொற்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்க ஓட்டைகள் வைத்துள்ளது. தீர்ப்பு தனியாக தானாக எதுவும் சொல்லவில்லை. வரைவுத் திட்டத்தை, கர்நாடகமும் கேரளமும் எழுப்பிய சில ஆட்சேபணைகளை புறந்தள்ளிவிட்டு, ஆணையத்துக்கு முழுமையான அமலாக்க அதிகாரம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு வழக்கறிஞர் சொன்னதை குறிப்பிட்டு, அது பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு, வரைவுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை அரசிதழில் வெளியிட வேண்டும், எதிர்வரும் பருவமழை காலத்துக்குள் அமலாக்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறது.
காவிரி நீர் மேலாளுமை வாரியம் கேட்டு, காவிரி நீர் மேலாளுமை திட்டம் 2018அய் தமிழக மக்கள் பெற்றுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் காவிரி நீர் ஆணையமும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டு, ஆணையம் எடுக்கும் முடிவுகளை, குழு அமலாக்கும் என்று மே 18 தீர்ப்பு சொல்கிறது.
ஆணையத்தின் முடிவு இறுதியானது என தீர்ப்பு சொல்கிறது. ஆணையத்தின் முடிவுக்கு நான்கு மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும். கட்டுப்படவில்லை என்றால்...? அதன் பிறகான தீர்வுக்கு மத்திய அரசை அணுக வேண்டும். மத்திய அரசு என்ன சொல்லும் என்று மாநில அரசு காத்திருக்கும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் வாடும் பயிரைக் கண்டு விவசாயி உயிரை விட்டால் அதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின் பெயரால் நீட் சாவுகள் நடத்தப்படுவதுபோல், உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் பெயரால் காவிரிச் சாவுகளும் நடத்தப்படலாம்.
எப்படியாயினும், இது கடைசி பிரச்சனை. அதற்கு முன் சில பிரச்சனைகள் வர வரைவுத் திட்டத்தில் இடம் இருக்கிறது. 1) காவிரி நீர் இருப்பு, பங்கீடு, முறைப்படுத்துதல் கட்டுப்பாடு 2) அணைகளின் செயல்பாடு, ஒழுங்காற்று குழுவின் உதவியுடன் தண்ணீர் திறந்துவிடப்படுவதை முறைப்படுத்துவது ஆகியவை ஆணை யத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றிய பிரிவில் சொல்லப்படுகின்றன. இதே பிரிவின் அடுத்த அம்சம் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதை முறைப்படுத்துவது என்றும் சொல்கிறது. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடும் என்று இந்தப் பிரிவு சொல்கிறது என்ற வியாக்கியானத்துக்கு இங்கு இடமுள்ளது.
தண்ணீர் திறந்துவிடுவதில் தாமதமோ, அளவு குறைவோ இருந்தால், அடுத்த முறை தண்ணீர் திறந்துவிடும்போது, எந்த மாநிலம் அந்தத் தாமதத்துக்கும் அளவு குறைவுக்கும் காரணமாக இருந்ததோ, அந்த மாநிலத்தின் பங்கில் அந்தத் தண்ணீரின் அளவு சரிசெய்யப்படும் என்று தீர்ப்பு சொல்கிறது. நல்லது. இந்த அடிப்படையில் யார் பிரச்சனை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் தண்ணீர் திறந்துவிடுவதில் என்ன பிரச்சனை செய்ய முடியும்? தண்ணீர் திறந்துவிடுவது என்பதை ஒரு மாநிலம் செய்ய வேண்டும் என்று வரைவுத் திட்டம் சொல்கிறது என்றால் அது கர்நாடகத்தைத்தான் குறிக்கும். ஆக, தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம் ஆணையத்திடமோ, குழுவிடமோ இல்லை, வரைவுத் திட்டம் அதை கர்நாடகத்தின் கட்டுப்பாட்டில்தான் விட்டுவைத்துள்ளது என்று இந்தப் பிரிவை வியாக்கியானப்படுத்த முடியும்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரள மாநிலங்களில் உள்ள அணைகளை, ஆணையத்தின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல்படி, அந்தந்த மாநிலங்கள் ஒன்றிணைந்து இயக்கி, பாசனம், எரிசக்தி உற்பத்தி, உள்ளூர் மற்றும் தொழில்களுக்கான நீர் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஆக, ஆணையம் வழிகாட்டுதல்தான் தரப்போகிறது. அணைக்கட்டுப்பாடு அந்தந்த மாநிலங்களிடம் இருக்கப் போகிறது. கர்நாடகம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் சொன்னால், கர்நாடகமும் உடனே, சரி என்று திறந்துவிட்டு விட்டால் தமிழக விவசாயிக்கு காவிரியில் தண்ணீர் கிடைத்து விவசாயம் பார்ப்பார். இதற்கா காத்திருந்தோம்? இதற்கா போராடினோம்? இதற்காகவா தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன?
தண்ணீர் திறப்பது யார் என்பதுதான் அடிப்படை பிரச்சனை. தண்ணீர் திறப்பது கர்நாடகம் என்றால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை என்றுதான் பொருள்.
ஆணையத்தின் ஒரு கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்பட முடியாமல் போனால், மீண்டும் அடுத்த மூன்று நாட்களில் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; அப்போது பெரும்பான்மை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியதில்லை. இப்படித்தான் பொதுவாக வரைவுத் திட்டங்கள் இருக்கும் என்றால், காவிரி போன்ற வாழ்வாதாரப் பிரச்சனையில் திட்டம் என்பதே கேலிக்கூத்துதான்.
எப்படிப் பார்த்தாலும், வரைவுத் திட்டத்தின்படி, ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆனால், இல்லை. இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில் உள்ளது. ஆணையம் எடுக்கும் முடிவு அமலாக்கப்பட வேண்டும்; ஆனால் அமலாகாமலும் போகலாம். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில் உள்ளது. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று ஆணையம் சொல்லும்; திறக்கப்படுகிறதா என்று குழு பார்க்கும்; ஆனால் திறக்கப்படாமலும் போகலாம். சங்கிகள் மூளையில் இருந்து பிறந்த பிரமாதமான வரைவுத் திட்டம்!
உச்சநீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுடனான, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வரிக்கு வரி சொல்கிற தீர்ப்பு, பிறகு வரைவுத் திட்டத்துக்காக கால அவகாசம் கொடுத்து காத்திருந்தது இந்த அளவுக்கு பெரிய ஓட்டைகள் போடுவதற்கா? தமிழக விவசாயிகளுக்கு, விவசாயத்துக்கு, மக்களுக்கு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு துரோகம் செய்துவிட்டார்கள்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனேயே, காவிரி விவகாரம் பற்றி பேச தமிழக முதலமைச்சருக்கு எச்.டி.குமாரசாமி அழைப்புவிடுத்துள்ளார். மழை பெய்தால் தண்ணீர் வரும், இப்போது தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்.
பிப்ரவரி 16 தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டும் மே 18 தீர்ப்பு வந்துள்ளது. இதுவும் 15 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பையும் மாற்ற முடியும். மாற்றியாக வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் தானாக அதைச் செய்யாது. அடுத்தச் சுற்று போராட்டம்தான் தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரே வழி.
எல்லாவற்றையும் துவங்கிய இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள இந்த வரைவுத் திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துவந்தபோது தான், இன்னும் பெரிய பிரச்சனையை தமிழக மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு தூத்துக்குடியில் 13 பேரை அநியாயமாக, கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்!