COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 29, 2018

கர்நாடக தேர்தல்களும் அதற்குப் பிறகும்:

பாஜகவுக்கு தீர்மானகரமான அடி தர 
இந்தியா தயாராக வேண்டும்!

திபங்கர்

சென்ற ஆண்டு குஜராத்தில் மயிரிழையில் பிழைத்த பாஜக, இந்த ஆண்டு துவக்கத்தில் திரிபுராவில் திகைப்பூட்டும் விதத்தில் வெற்றி பெற்றது. பெரிதும் சிலாகிக்கப்படுகிற அதன் அதிகார நிர்வாக திறமைகளைப் பயன்படுத்
தி நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயாவில் ஆட்சி அமைத்த பாஜக, வடகிழக்கில் கிட்டத்தட்ட ஓர் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை இப்போது  கொண்டுள்ளது. கர்நாடக தேர்தல்கள் தென் இந்தியாவில் அது நுழைவதற்கான துவக்கம் என்று காட்டப்பட்டது. ஆனால், கர்நாடகம், விந்திய மலைகளின் தெற்கில் பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, அதை முழுவதுமாக அம்பலப்படுத்திவிட்ட அதே நேரத்தில், அடுத்தச் சுற்று சட்டமன்றத் தேர்தல்களும் அனைத்துவிதங்களிலும் முக்கியமான அடுத்த மக்களவை தேர்தல்களும் வரவுள்ள நிலையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி முகாமையும் புதிய அவசிய அவசர உணர்வுடன், நம்பிக்கையுடன் செயலூக்கப்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டது. நம்பகத்தன்மையிழந்த ஆனால், சக்திவாய்ந்த எடியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது; சுரங்கக் கொள்ளைக்குப் பெயர்போன ரெட்டி குடியரசான பெல்லாரி சுரங்க மாஃபியாவை பல தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தியது. இந்த இரண்டு பிரிவுகளுமே 2013ல் பாஜகவில் இருந்து விலகிப் போயின; ஆனால், 2014ல் மோடியின் பிரச்சாரத்தின்போது மீண்டும் இணைந்தன. மும்முனை போட்டியில் நிச்சயம் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில், மதவெறி துருவச் சேர்க்கை, சாதிய சேர்க்கைகள் பிளவுகள் என எல்லாவிதமான பரிசோதிக்கப்பட்ட நம்பகமான வழிமுறைகளையும் பயன்படுத்தியது; இறுதியில் மோடியின் உயரழுத்த பிரச்சாரத்தையும் மிகப்பெருமளவிலான விளம்பர படாடோ பத்தையும் கட்டவிழ்த்துவிட்டது. சித்தராமையாவின் அஹிண்டா (தலித், இசுலாமியர், பிற்படுத்தப்பட்டோர் கூட்டணி) அரசியலும், சக்தி வாய்ந்த லிங்காயத் சமூகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற கடைசி நேர அறிவிப்பும் திருப்பித் தாக்கி, பாஜக முன்னேறிச் செல்லவே உதவின.
இதனுடன் , நகர்ப்புற மற்றும் கடலோர கர்நாடகத்தில் பாஜகவின் வலிமையான இருத்தலும் ஆளும்கட்சி மீதான எதிர்ப்புணர்வும் சேர்ந்துகொள்ள, உண்மையில் கர்நாடக தேர்தல்கள் பாஜகவுக்கு மிகவும் எளிதான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 104 இடங்களுக்கு மேல் பாஜகவால் பெற முடியவில்லை. மோடிக்கு முந்தைய காலமான 2008 தேர்தல்களில் பெற்றதை விட இது 6 இடங்கள் குறைவு. பாஜகவின் வாக்குகளும் காங்கிரஸ் பெற்ற 38% என்பதை விட 2% குறைவாகவே இருந்தன. 2014ல் பாஜக பெற்ற அதிகபட்ச இடங்களுடன் ஒப்பிட்டால், 7% வாக்குகளும் 30 இடங்களும் குறைந்துள்ளன.
கர்நாடக தேர்தல்கள் இரண்டு வெவ்வேறு ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலையால் முன்செலுத்தப்பட்டது. 2013அய் விட காங்கிரசின் வாக்குகள் 2% அதிகரித்தபோதும், சித்தராமையாவும் அவரது பல்வேறு அமைச்சர்களும் ஒரு விலை தர நேர்ந்தது என்றால், மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கத்தின் செயலின்மை, துரோகம் மற்றும் பாஜக சங் பரிவார் கும்பலின் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான சீற்றத்தின் தெளிவான கீற்றும் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் வேறு சில கட்சிகளுடனான கூட்டணியாலும் ஆளும் கட்சிகளுக்கெதிராக இருந்த இந்த இரட்டை எதிர்ப்பு மனநிலையாலும் அய்க்கிய ஜனதா தளம் ஆதாயம் பெற்று 38 இடங்களை, 18% வாக்குகளை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தல்கள் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மையை வழங்கவில்லை என்றால், எப்படியாவது பெரும்பான்மையை உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக எடுத்த மூர்க்கத்தனமான முயற்சிகள் உண்மையில் பாஜகவுக்கு இன்னும் பலத்த அடி தந்துள்ளன. ஒருதலைபட்ச அணுகுமுறை கொண்ட ஆளுநரின் உதவியுடன், ஏற்கனவே அவப்பெயர் பெற்ற இடைக்கால சபாநாயகரின் உதவியுடன் தனது எண்ணிக்கை குறைபாட்டை சரி செய்துவிட முடியும் என்று பாஜக எதிர்ப்பார்த்தது. ஆனால் உச்சநீதிமன்றம், உறுதியாக நின்றுவிட்டது. எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க, இதற்கு முன் இல்லாதவிதத்தில் ஆளுநர் கொடுத்திருந்த 15 நாட்கள் அவகாசத்தை பெருமளவுக்கு குறைத்தும் வாக்கெடுப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சொல்லியும் உச்சநீதிமன்றம் பாஜகவின் வாய்ப்புகளை தடுத்துவிட்டது. பணம், பதவி, தண்டனை பெறுவதில் இருந்து விலக்கு ஆகியவை கிடைக்கும் என்று சொல்லி பறந்த தொலைபேசி அழைப்புகள், தேவையான எண்ணிக்கையை கொண்டு வருவதில் தோல்வியுற்ற போது, விரக்தியுற்ற எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவியை ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு பத்தாண்டு களாக போட்டியாளர்களாக இருந்த சமாஜ்வாதி கட்சியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் ஓர் அசாதாரணமான கூட்டணி அமைக்க யோகி அரசாங்கம் நிர்ப்பந்தித்ததுபோல், கர்நாடகத்தில் காங்கிரசுக்கும் அய்க்கிய ஜனதா தளத்துக்கும் இடையில் ஒரு மிகவும் கடினமான, உருவாக முடியாத ஒரு கூட்டணியை பாஜக உருவாக்கிவிட்டது.
அடுத்தச் சுற்று தேர்தல்கள் வரவுள்ள நிலையில், கர்நாடக நிகழ்வுகள் அரசியல் மறுகூட்டணி இயக்கப்போக்கை துரிதப்படுத்தியுள்ளன. மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக என்னவெல்லாம் செய்யும், எப்படி ஜனநாயத்தையும் புறந்தள்ளும் என்று நாடு இப்போது தெளிவாகத் தெரிந்து கொண்டது. பாசிசத்தின் காலடிச் சத்தத்தை இன்னும் கூட கேட்க முடியாதவர்களுக்கு, கும்பல் படுகொலை செய்பவர்களும் காலி கும்பல்களும் கடந்து சென்று விடுகிற தவறுகளே என்று இன்னும் கூட நம்பிக் கொண்டிருப்வர்களுக்கு, இந்தியா இப்போது மிகத் தெளிவாக இரண்டாவது நெருக்கடி நிலையின் நுழைவாயிலில் இருப்பது தெரிகிறது. கர்நாடகத்துக்குப் பிறகு, 1975 நெருக்கடி நிலை கால கட்டத்தில் இருந்ததை விட கூடுதலாக, அனைத்தும் தழுவிய எதிர்ப்புக்கான, ஓர் உறுதியான தீர்மானகரமான எதிர்ப்பின் அவசியம் பரவலாகவும் தீவிரமாகவும் உணரப்படுகிறது. இந்திராவின் நெருக்கடி நிலை பற்றிய ஜனரஞ்சகமான பார்வையில் வடக்கு, தெற்கு என்ற பிளவு இருந்தது; ஆனால், மோடி - ஷா கொடுங்கோலாட்சிக்கு எதிரான இந்தியாவின் போரில், அது போன்ற வடக்கு தெற்கு பிளவு இருக்காது என்று கர்நாடகம் தெளிவுபடுத்தி உள்ளது.
மோடி அரசாங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவுறும்போது, சாதனை என்று சொல்லிக் கொள்ள அதனிடம் ஏதும் இல்லை. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் சொல்வதுபோல், மோடி பதில் எழுத வேண்டிய தாள்கள் முழுவதும் வெற்றுத்தாள்களாக உள்ளன. இது அரை உண்மைதான். அரசாங்கம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதபோது, சங் பரிவாரின் மதவெறி, பிளவுவாத நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதில், முன்னகர்த்துவதில் மிகை நேரப் பணி பார்த்திருக்கிறது. ஊழல், விவசாய நெருக்கடி, அதிகரிக்கும் பெட்ரோல் விலை மற்றும் இந்த எம்எம்எஸ் அரசாங்கத்துக்கு எதிராக மண்டிக்கிடக்கிற சீற்றத்தை உருவாக்கிய அனைத்தும் பழிவாங்கும் வெறியோடு திரும்பியுள்ளபோது, வங்கித் துறை சரிவால், ரயில்வே முதல் ரேஷன் வரையிலான சேவைகள் சீர்குலைக்கப்படுவதால், வேலை வாய்ப் பின்மை பெருமளவில் அதிகரிப்பதால், பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் இந்தப் பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்துவது, மக்களை மேலும் பிளவுபடுத்துவது, எதிர்ப்பாளர்கள் அனைவரையும் பரிகாசம் செய்வது, தாக்குதல்களுக்கு உள்ளாக்குவது ஆகிய நடவடிக்கைகளைத்தான் பாஜக நம்பியிருக்க முடியும்.
நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை பாதுகாக்க வந்த ரட்சகன் என்று 2014ல் பாஜக மோடியை சந்தைப்படுத்தியது. இன்று வேறு மாற்று இல்லை என்று பாஜகவின் பிரச்சாரம் ராகம் பாடுகிறது. ஆனால், வேறு மாற்று இல்லை என்பது, எப்போதும் ஒரு மூர்க்கமான, நம்பகத்தன்மையிழந்த தற்போதைய நிலையின் கடைசி புகலிடமாகத்தான், மாற்றத்துக்கான தேவை உணரப்படுவதை நசுக்கும் மிகவும் சோம்பேறித்தனமான, முட்டாள்தனமான வாதமாகத்தான் இருக்கும். ஆனால் வரலாற்றில் மாற்றத்துக்கான சக்திகள் எப்போதும் வேறு மாற்று இல்லை என்பதை தூக்கியெறிந்து, எப்போதும் புதியபுதிய மாற்றுகளை முன்னிறுத்துகின்றன. அடுத்தடுத்த அரசாங்கங்களின் பேரழிவுக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வரும் இந்திய மக்கள், ஒரு மேலான எதிர்காலம் நோக்கிய போராட்டத்தை வலுப்படுத்தி, முன்னெடுத்துச் செல்ல இன்று அவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானகரமான நடவடிக்கை, மோடி அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டுவதே என்று நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

Search