மே 5, மார்க்ஸ் 200ஆவது பிறந்த தின நிகழ்ச்சிகள்
மார்க்ஸ் 200அய்க் கொண்டாடுவோம்!
அவரது லட்சியங்களை, வழிமரபை உயர்த்திப் பிடிப்போம்!
மார்க்ஸின் 200ஆவது பிறந்த நாளான மே 5 அன்று ‘மார்க்ஸ் 200அய்க் கொண்டாடுவோம்,
அவரது லட்சியங்களை, வழிமரபை உயர்த்திப் பிடிப்போம்’ என்ற முழக்கத்துடன் நாடெங்கும் இகக மாலெ நடத்திய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் மார்க்ஸ் பற்றிய செய்திகளை எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் அம்பத்தூர் மற்றும் மாநகரப் பகுதிகளில் மார்க்ஸ் முகப்படம் அணிந்தும் மார்க்ஸ் மேற்கோள்களுடனான பதாகைகளை கழுத்தில் அணிந்தும் கையில் பிடித்துக் கொண்டும் ஆலை வாயில்களில், பேருந்து நிலையங்களில், மக்கள் கூடுமிடங்களில் 6 குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டனர். திருபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் மார்க்ஸ் முகப்படங்கள் மற்றும் மார்க்ஸ் மேற்கோள்களுடனான அங்கிகள் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 400 தோழர்கள் வரை கலந்துகொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் நகர் முழுவதும் மார்க்ஸ் 200 பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இங்கும் தோழர்கள் மார்க்ஸ் முகப்படங்கள், மார்க்ஸ் மேற்கோள்களுடனான அங்கிகள் அணிந்து பிரச்சாரம் செய்தனர். கணிசமான எண்ணிக்கையில் வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் மார்க்ஸ் 200 பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான் தலைமையில் நடந்த கூட்டத்தில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, புரட்சிகர இளைஞர் கழக மாநிலச் செயலாளர் தோழர் திருமேனிநாதன் உரையாற்றினர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்ஸ் மேற்கோள்கள் தாங்கிய 200 பதாகைகளுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 15 பெண்கள் உள்பட 225 பேர் கலந்துகொண்டனர். இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் உரையாற்றினர். பெரியநாயக்கன்பாளையத்திலும் கோவை மாநகரப் பகுதியிலும் மார்க்ஸ் 200 என்று பல டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தூய்மைப் பணியாளர்கள் சஙகம் சார்பாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அன்று தோழர்கள் ஒன்று கூடி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுவரொட்டிகள் எங்கும் இருந்தன.
நாமக்கல் மாவட்டம் பவானியில் மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் தோழர்கள் 2 மய்யங்களில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனர்.
திருநெல்வேலியில் மார்க்ஸ் 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குமரியில் ஊழியர் கூட்டம் நடந்தது. விழுப்புரத்தில் கட்சி மாவட்டக் கமிட்டிக் கூட்டம் நடத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. மார்க்ஸ் 200 டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தர்மபுரியில் அரசு மருத்துவமனைத் தொழிலாளர்கள் ஒன்று கூடி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் எழுதிய மார்க்ஸ் 200 பற்றிய கட்டுரை வாசிக்கப்பட்டது. சேலத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மார்க்ஸ் கட்டுரை வாசிக்கப்பட்டது. தஞ்சையில் மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இகக (மாலெ) கொடி ஏற்றப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் மற்றும் தோழர்கள் ஜெகதீஷ்குமார், சின்னக்காளை, மணி, பொன்னுதுரை, ஜெயவீரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.