டிரம்புக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தகுந்த பதிலடி தரும்
எஸ்.குமாரசாமி
உலகின் ஆகப் பழைய நாகரிகங்களில் ஒன்று பெர்ஷிய நாகரிகம்
. அந்த நிலப்பரப்பில், தங்கி வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் வழிமரபினரே இன்றைய ஈரானில் வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய ஈரானில், ஏராளமான எரிசக்தி வளம் எண்ணெயாகவும் எரிவாயுவாகவும் கொட்டிக் கிடக்கிறது. கொடுங்கோல் மன்னன் ஷா ஆண்டபோது, ஈரானின் எண்ணெய் எரிவாயு வளங்கள், அய்க்கிய அமெரிக்க அய்ரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்தன. ஷா மன்னனை விரட்டியபோது, கூடவே ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் ஈரான் ஏற்க மறுத்தது. பிரும்மாண்டமான பொருளாதார வளர்ச்சி இல்லாவிட்டாலும், இந்த பிராந்தியத்தில் வலுவான பொருளாதாரம், நிலையான தொடர்ச்சியான ஆட்சி, மிகப் பெரிய இராணுவம் கொண்ட ஒரு நாடு ஈரான். உலகில் உள்ள சுமார் 25 கோடி ஷியா மக்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதி ஈரானில் வாழ்கின்றனர். இன்றைய ஈரானில் 8.03 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஏற்கனவே அய்க்கிய அமெரிக்கா, சதாம் ஹ÷சேனின் இராக்கை, ஈரான் மீது போர் தொடுக்க வைத்து தோல்வி அடைந்து மூக்குடைபட்டிருந்தது.
வாடிக்கையாகப் பொய் பேசும் ஏகாதிபத்தியங்கள், ஈரான் அணு ஆயுதம் தயார் செய்கிறது எனப் பழி சுமத்தி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் போட்டன. ஈரான் தகர்ந்து விடும், அடி பணியும், ஈரானின் எரிசக்தி வளங்களை கைப்பற்றலாம் என, நாவில் எச்சில் ஊற காத்திருந்தனர். ஈரான் அடிபணியவில்லை. வேறு வழியின்றி ஒபாமாவும் அய்ரோப்பாவும், ரஷ்ய சீன மத்தியஸ்தத்துடன், ஈரானோடு ஓர் அணு சக்தி ஒப்பந்தம் போட்டனர். ஈரான் ஒருபுறமும், அய்க்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கி லாந்து, பிரான்ஸ் + ஜெர்மனி மறுபுறமும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஈரான் தனது அணு ஆராய்ச்சியை, அணு ஆற்றலை, அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு உயர்த்தாது. இந்த வாக்குறுதியைக் கணக்கில் கொண்டு, ஈரான் மீதான பொருளாதார தடைகளைக் கட்டம்கட்டமாக விலக்கிக் கொள்ள ஏகாதிபத்திய நாடுகள் ஒப்புக்கொண்டன. (இந்த பிராந்திய அமைதிக்கே இஸ்ரேல்தான் பேராபத்து, அதனிடம் ஏகாதிபத்திய உதவியுடன் அணு குண்டு உள்ளது என்ற விஷயம் பற்றி ஏகாதிபத்திய நாடுகள் கண்டுகொள்ளவே இல்லை). ஜ÷லை 2015ல் அனைத்தும் தழுவிய கூட்டு செயல் திட்டம் (ஒர்ண்ய்ற் இர்ம்ல்ழ்ங்ட்ங்ய்ள்ண்ஸ்ங் டப்ஹய் ர்ச் அஸ்ரீற்ண்ர்ய்) கையொப்பமானது.
டிரம்ப் தமது தேர்தல் பிரச்சார காலத்தில் இருந்தே இஸ்ரேலின் ஊதுகுழலாக, ஈரானுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று சொல்லி வந்தார். இப்போது ஈரான் மீது பழி சுமத்தி, மே 8 அன்று அய்க்கிய அமெரிக்கா ஈரானுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ஒருதலைப்பட்சமாக டிரம்ப் அறிவித்துவிட்டார். கூடுதல் பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துவிட்டார்.
அய்க்கிய அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு, ஈரானின் எரிசக்தியும், ஈரானில் உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. ஜ÷லை 2015ல் ஒப்பந்தம் ஏற்படும் முன்பு ஈரானில் ஒரு நாளைக்கு 27 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியானது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஒரு நாளைக்கு 38 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியாகிறது. இதனால், ஒரு பீப்பாய் விலை 100 டாலர் என்ற நிலையில் இருந்து ஒரு பீப்பாய் விலை 50 டாலருக்கு கீழே கூட சென்றது. ஒரு வருடத்தில் 140 கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, எண்ணெய் விலை குறைந்ததால், 2015 - 2017ல் மட்டும் 70 பில்லியன் டாலர் (ரூ.45,500கோடி) மிச்சப்படுத்த முடிந்தது என டெக்கான் கிரானிக்கிளில் அமித் பந்தாரி குணால் குல்கர்னி எழுதிய கட்டுரை சொல்கிறது.
சீனா, ரஷ்யாவோடு சேர்ந்து அய்நா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள், அய்க்கிய அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைபட்சமாக விலகியது தவறு என்கிறார்கள். இஸ்ரேல், சவுதி அரேபியா, அய்க்கிய அரபு எமீரகம், பஹ்ரைன் நாடுகள் மட்டுமே, அய்க் கிய அமெரிக்காவின் இந்த அநீதியான ஒரு தலைபட்சமான நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள். அய்க்கிய அமெரிக்காவின் இந்த முடிவால், ஒரு பீப்பாய் 100 டாலர் விலை என்றாவதை, உலக நாடுகள் விரும்புவதில்லை.
டிரம்ப்பும் அய்க்கிய அமெரிக்காவும் உலக நாடுகளின், மக்களின் முதன்மையான பகைவர்கள் என்பதால், அவர்கள் உலக மக்களின் விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் எதிராகவே செயல்படுவார்கள். டிரம்ப்பின் பைத்தியக்காரத்தனத்தில் ஒரு கேடுகெட்ட முறை/ஒழுங்கு உண்டு. டிரம்ப் ஒரு முட்டாள், முரடர், மூடர். வரலாற்று புவியியல் அறிவு இல்லாதவர். உலகின் முக்கிய நாடுகளின், நகரங்களின், தலைவர்களின் பெயர்களைக் கூட சரியாக சொல்ல, எழுதத் தெரியாதவர். ஆனால் பணமும் அதிகாரமும் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மூட நம்பிக்கை உள்ளவர். ஒழுங்கீனங்கள் நிறைந்த, வரி செலுத்தாத, அரசு கருவூலத்தையும் சூறையாடும் பணக்காரர் கூட்டத்தைச் சேர்ந்த டிரம்ப், இந்த உலகே தமக்கானது என்ற இறுமாப்பும், இனவெறி, நிறவெறி, ஆணாதிக்கம், போர்வெறி, பேரினவா தம் என்ற எல்லா தீய குணங்களின் உறைவிடமாகவும் உள்ளவர். அவரும் ஏகாதிபத்தியமும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள்.
தேர்தல் காலத்தில் போருக்கு எதிராகச் சவடால் பேசிய டிரம்ப்பை, ரஷ்ய உதவியுடன் தேர்தலில் வென்றார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான டிரம்ப்பை, அய்க்கிய அமெரிக்காவின் ஆழமான அரசு (டீப் ஸ்டேட்) ராணுவ தொழில் அதிகாரவர்க்க அச்சு தன்வசப்படுத்தி வெற்றி கொண்டுவிட்டது. இன்று டிரம்ப் ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகள் போட்டுள்ளார். இஸ்ரேலோடு சேர்ந்து ஈரானுக்கு எதிரான போர் பதட்டத்தை உருவாக்குகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மேக்மாஸ்டர் இடத்தில் ஜான் போல்டனும், அயல் விவகாரத்துறை அமைச்சர் பதவியில் ரெக்ஸ் டில்லர்சன் இடத்தில் சிஅய்ஏ இயக்குனர் பாம்பே நியமிக்கப்பட்டதும், ஈரானுக்கு எதிராக அய்க்கிய அமெரிக்கா தயாரானதற்கான அசைவுகளே ஆகும். இந்த இருவரும், ஜியானிசத்தின், இஸ்ரேலின் உற்ற நண்பர்கள். போர் வெறியர்கள். டிரம்ப்பின் அயல்விவகாரக் கொள்கையை முன்தள்ளுவதில் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்பது உலகிற்கு நேர்ந்த கேடாகும்.
ஈரான் மக்கள், மேலான நல்வாழ்க்கையையும் ஜனநாயகத்தையும் வேண்டி தமது நாட்டில் போராடுபவர்களாக இருந்தாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாட்டுப்பற்று நிறைந்தவர்கள். ஆப்கனிஸ்தானை, இராக்கை, லிபியாவை வென்றது போல் ஈரானை வென்றுவிட முடியாது. (ஆப்கனிஸ்தானில், இராக்கில் அய்க்கிய அமெரிக்கா சிக்கித் தவிப்பது வேறு விசயம்). ஆட்சி மாற்ற நாடகம் ஈரானில் சுலபமாக அரங்கேறாது. இன்றைய உலகம், பல்துருவ உலகம். அய்க்கிய அமெரிக்கா, என் பாட்டுக்கு தாளம் போடு ஆடு என சீனாவை, ரஷ்யாவை, அய்ரோப்பாவை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது.
மேற்கு ஆசியாவில், இஸ்ரேலால் பாலஸ்தீன மக்களின் விடுதலை வேட்கையை அடக்க முடியவில்லை. சிரியாவில், ஏகாதிபத்திய தலையீடு வெற்றி பெறவில்லை. லெபனானில், இஸ்ரேல் எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு ஹிஸ்புல்லா வெற்றி பெற்றுள்ளது. ஏகாதிபத்திய பயங்கரவாதம், அல்கொய்தா -அய்எஸ்அய்எஸ் பயங்கரவாதம் என்ற ஆபத்தான தீய சுழலேணியில் சிக்கி உள்ள இராக்கில், அய்க்கிய அமெரிக்க எதிர்ப்பாளர் போராளி ஷியா மத குரு முக்தாடா அல் சதர் தலைமையிலான கூட்டணி வென்றுள்ளது. இவரது ஷியா போராளிகள், ஃபாலுஜாவில் ரமாதியில் சன்னி கலக்காரர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தனர். இந்தக் கூட்டணியில் இருந்து, இராக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ரெய்த்ஜானித் ஃபாமியும் பெண் தலைவர் ஹைஃபா அல் அமீனும் வென்றுள்ளனர். அரபு உலகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட் என்ற சொல் ஊடக வெளிச்சம் கண்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலோ அய்க்கிய அமெரிக்காவோ கை வைத்தால், அது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.
ஈரானில் இன்று ஒரு கருத்து வலுவடைந்துள்ளது. வட கொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பதால்தான், அதனைக் கண்டு ஏகாதிபத்தியம் அஞ்சுகிறது, நமக்கும் அணு ஆயுதம் வேண்டும். போருக்கும் அணுஆயுதப் பரவலுக்கும் ஏகாதிபத்தியமே காரணம். ஈரான் மீது கை வைக்காதே என உலகம் நிச்சயம் எழும்.