டெலிவரி தொழிலாளர் வாழ்க்கை :
இது வாழ்வா? சாவா?
எஸ்.சேகர்
தென்னிந்தியாவில் அனைத்து முன்னணி தொலைகாட்சி சேனல்களிலும், ‘சொல்லுங்கண்ணே, சொல்லுங்க’
இமான் அண்ணாச்சி, ஒவ்வொரு 10 நிமிட இடைவேளையிலும் திடீரென தோன்றி டேபிள் மேட் என்பார். 16 வித வண்ணங்கள் 32 விதமான ஆங்கிள்கள் சாப்பிட, எழுத, படிக்க கணினி வைத்து வேலை பார்க்க அனைத்து மனிதரும், எல்லா வேலைகளுக்கும் ஏற்றதுபோல், வளைந்து திரும்பி நிமிர்ந்து, வேலை பார்க்க மிகவும் சரியானது டேபிள் மேட் என்பார். எதிர்த்த வீட்ல இருக்கு, பின் வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு, பக்கத்து வீட்ல இருக்கு, இந்த வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா என ஒரு கேள்வியை போடுவார். பிறகு தொலை பேசி எண்ணைச் சொல்லி, மிஸ்டு கால் குடுங்க, உங்க வீடு தேடி வரும் என்பார்.
மிஸ்டு கால் கொடுத்தவர்களுக்கு அடுத்த சில மணி நேரத்துக்குள் விற்பனை பிரதிநிதி பேசி, வண்ணங்களை எண்ணங்களை பேசி விட்டு, முகவரி தொலைபேசி விவரங்களை பெறுவார். கடன் அட்டை உள்ளதா, அல்லது சிஓடி (கேஷ் ஆன் டெலிவரி)யா, சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேர்த்து ரூ.2,000 ஒரு டேபிள் மேட்டுக்கு தயாராக வையுங்கள் என சொல்லி முடித்த சில மணிக்குள்ளாகவே விற்பனை பிரதிநிதி தொலைபேசியில் பேசுவார். பார்சல் கவரோடு காலிங் பெல்லை அழுத்துவார்.
இமான் அண்ணாச்சி விளம்பரத்தில் நடித்து விட்டு போய்விடுவார். டேபிள் மேட் ரூ.2000 என சம்பந்தப்பட்ட நிறுவனம் பில்போட்டு வசூலிக்கும். ட்யூப், பைபர் பிளேட், பிளக்சிபிள் மெட்டல் டியூப்கள், இரண்டு பைபர் ரிவிட்டுகள், இரண்டு புஷ்கள், அதை உற்பத்தி செய்ய, அசெம்பிள் செய்ய என அனைத்தும் தழுவிய அடக்க விலை டேபிள் மேட் 400 ரூபாய் கூட ஆகாது. வீட்டுக்கு வந்து இறங்கும் போது அதன் மதிப்பு ரூ.2,000 என மாறுகிறது. பேக்கிங், மூவிங், பர்ச்சேசிங், திரும்பவும் பேக்கிங், மூவிங், டெலிவரி என பல குடோன்கள், பல வண்டிகள், மாறி மாறி பல சுமைப்பணி தொழிலாளர்கள் மூலம் இறுதியாக ரூ.2,000 என மதிப்பு கூடி டெலிவரி செய்பவர்கள் மூலம் மக்களிடம் வந்து சேர்ந்து விடுகிறது.
3ஜி, 4ஜி தொழில் நுட்ப உதவியுடன், கிராமங்களில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் முதல் மீன் குழம்பு, சாப்பாடு, அய்தராபாத் பிரியாணி, பீசா கார்னர் பீசா, அய்ஸ்கிரீம், மேக் அப் செட் என எல்லாமே வீட்டு வாசலுக்கு வந்துவிடுகின்றன. மொத்த மாயத் திரையிலும் நமக்கு கண்ணில் தெரிபவர் டெலிவரி தொழிலாளி மட்டும்தான்.
டெலிபை, அமேசான், பே டிஎம், ஸ்னாப் டீல் என ஏதாவது ஒரு எம்என்சி சேல்ஸ் கம்பெனி பெயரில், எப்போதும் யாராவது ஒரு விற்பனை பிரதிநிதி, டெலிவரி செய்பவர் (நாற்பது வயதானவராக இருந்தாலும் அவர் பாய்) எல்லா அடுக்கு மாடி குடியிருப்புகளிலும், வசதி படைத்தோர் வாழும் தெருக்களிலும், ஓடிக்கொண்டே இருப்பார்.
இந்த ஓட்டத்தின் கடைசியில் தரப்படும் அற்ப சொற்ப ஊதியம், நாள் முழுக்க உழைத்தாலும், பீஸ் ரேட் சம்பளம், அந்த உழைப்புக்கான தேவை எத்தனை நாட்கள் இருக்கும், யாருக்கு இருக்கும் என்ற பதட்டத்திலேயே எப்போதும் இருக்கும் ஆயிரக்கணக்கான விற்பனை பிரதிநிதிகள் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். மோடி அரசு சொல்கிற பிக்சட் டர்ம் எம்ப்ளாய்மென்ட் திருத்தத்துக்கு, சில ஆண்டுகளாகவே அவர்கள் பழக்கப்பட்டவர்கள்.
திரைப்பட ‘வேலைக்காரன்’ செய்யும் புரட்சியை இன்றைய நிஜவாழ்க்கையில் இந்த விற்பனை பிரதிநிதிகள் சேல்ஸ்மேன்கள்/டெலிவரி பாய்கள் செய்ய முடியுமா என கனவு கூட காண முடியாத நிலையில் இந்த விற்பனை பிரதிநிதிகள் வாழ்நிலைமைகள் உள்ளன.
இந்திய சந்தைக்குள் வால்மார்ட் வருவதால் 1 கோடி வேலைவாய்ப்பு வரும் என்று மோடி பக்தர்கள் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு என்றால், நிரந்தர வேலை வாய்ப்பு என்ற பொருளை அகராதியில் இருந்து அகற்றி விட்டார்கள். இந்த 1 கோடி வேலை வாய்ப்பும் அப்படித்தான் இருக்கும். அதிலும் பேக்கிங் மற்றும் டெலிவரி, பொட்டலம் கட்டுவது மற்றும் விநியோகிப்பது என்று கூடுதலான வேலை வாய்ப்புகள் இருக்கலாம். இதுபோல் வேலை பார்ப்பவர்கள் இன்றும் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தபால், பொருட்கள், உணவு விநியோகம் என பல வேலைகள் செய்கிறார்கள். டெலிவரி பிரதிநிதிகள்/பாய்கள் /சேல்ஸ் மேன்கள் என சிலரை நேரில் சந்தித்து அவர்கள் வேலை நிலைமைகள், பிரச்சனைகள் பற்றி தீப்பொறி ஆசிரியர் தோழர் சேகர் நடத்திய உரையாடல்களின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
கண்ணன், கொரியர் டெலிவரி பாய்
நான் எக்ஸ்பிரஸ் டெலிவரி கொரியர் கம்பெனியில் லெட்டர் டெலிவரி செய்கிறேன் சார். 2 வருடத்துக்கு முன்ன ஒரு நாளைக்கு 500 முதல் 600 கவர்கள் வரை டெலிவரி செய்வேன். ஒரு பின்கோடு ஏரியா, அதாவது 600053, அம்பத்தூர் மட்டுமே நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கவர் வரும். 20, 30 பேர் டெலிவரி செய்வோம். நான் 500, 600 கவர் இரவு 8 மணி வரை போடுவேன்.
நாய் படாத பாடு தலைவா. ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு 100 கவரும் நம்ம பையை விட்டு போகும்போது, குறையற சுமைதான் ஒரே ஒரு நிம்மதி. நாய் இருக்கிற வீட்டில் கேட்டை நெருங்கி போஸ்ட் பாக்சில் லெட் டரை லோடு பண்ணிட்டாலே பெரிசா ரிலாக்ஸ் ஆயிடும். யாராவது ஒரு டம்ளர் தண்ணி குடுத்தாங்கன்னா அவங்க எனக்கு தெய்வமா தெரிவாங்க. சில வீட்டுக்குள்ள நுழையும் போதே ரெஸ்ட்ரிக்டெட் அன்னோன் பெர்சன் அப்படின்னு போர்ட் இருக்கும். இங்க லெட்டர் வந்தாலே பிரச்சனைதான் தலைவா. அந்த வீட்ல பார்சலை குடுத்துட்டு ஒரு கையெழுத்து வாங்கறத்துக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். இன்னும் எவ்வளவு நாள் இந்த பொழப் புன்னு ஆயிடும். ஆட்களை பார்க்க வேண்டிய தேவையில்லாத நோன் பெர்சன் அல்லது பிளேஸ்ன்னு இருக்கிற கவர்னா ஒரு கவருக்கு 50 பைசா முதல் ரூ.1 வரை கிடைக்கும்.
எங்க எக்ஸ்பிரஸ் டெலிவரி கூரியர்ஸ் குடோன் நெற்குன்றத்துல இருக்கு. அங்க போய் பின்கோடு செக் பண்ணி மூட்ட கட்டி 11 மணிக்குள்ள வீட்ல, இல்லன்னா வேற எங்கயாவது உட்கார்ந்து பிரிக்க 2 மணி நேரம் ஆகும். தெரு, நகர், வீட்டு ஏரியா ரூட் போட்டு பிரித்து அடுக்கிடுவோம். வேலைக்கு வந்த புதுசுல இந்த அடுக்கிற வேலையே பிரிக்கற வேலையே ஒரு நாளாயிடும். இப்ப பழகிடுச்சி. இரண்டு மணி நேரத்தில், ஒரு பின்கோடில் 1,000 கவர் இருந்தா கூட பிரிச் சுடுவேன். சாப்டுட்டு, 1 மணிக்கு புறப்பட்டு டெலிவரி ஆரம்பிக்கும். மரம், நிழல் ஏதாவது கிடைச்சா கொஞ்சம் உக்காருவேன். அப்புறம் சாயங்காலம் கொஞ்சம் வேகமா சுத்தி அலஞ்சு டெலிவரி முடிக்க 8.30, 9 மணி ஆயிடும்.
ஒரு நாளைக்கு ரூ.600 வரை கிடைக்கும். பெட்ரோல், டீ, சில எதிர்பாராத தண்டச் செலவு போக என்னுடைய 10 வருட சர்வீசுக்கு ரூ.300 வரை கிடைக்கும்.
இப்படியே 43 வயசு போயிடுச்சி தலைவா. இப்பல்லாம் ஒருத்தர் 4 பின்கோட் ஏரியா பார்க்கிற மாதிரி இருக்குது. கொடுமை சார். என் கூட கவர் டெலிவரி செஞ்சவங்க நிறைய பேர் இப்ப கார் டிரைவர், டெலிபை, பர்ஸ்ட் பிளைட் கார்கோன்னு போய்ட்டாங்க. நான் மட்டும்தான் இங்க காலம் தள்றேன். டெலி பை பர்ஸ்ட், பிளைட் கார்கோ அங்கெல்லாம் போகனும்னா டெபாசிட் கட்டனும். டயமாச்சு. அப்புறம் பாக்கலாம். போன் பன்றேன்.
அவர் சொன்னதில் இருந்து, மாதம் ரூ.9000 முதல் ரூ.12,000 வரை கிடைக்கும் என்று தெரிகிறது. இதற்கு பத்து ஆண்டுகளாக தினமும் 50 கிமீ பயணம் செய்து கொரியர் டெலிவரி செய்வதாகச் சொல்கிறார்.
நடராஜ்குமார், வயது 31, டெலிபை வண்டி ஓட்டுபவர், டெலிவரி தொழிலாளி
நான் இன்னமோ பெரிய ஆள் மாதிரி நேர்ல வந்து பேட்டி எடுக்கிறீங்க. நான் ஒன்னும் அப்படி இல்லண்ணா.
நான் இந்த டெலிவரி வேனில் 3 வருஷமா வேலை செய்றேன். எனக்கு காரைக்குடி. இங்க டிரைவர் வேலைக்கு வந்தேன். மாதம் 15,000 கெடைக்கும். வண்டி ஓட்டுறதல ஒரு நாளைக்கு 500, 600 கெடைக்கும்.
காலைல 6 மணிக்கு வண்டி வாடகைக்கு எடுப்பேன். ஆன் லைன்ல புக் பன்றவங்க, ஏசி, பிரிட்ஜ், வேற வேற சாமான்கள் டெலிவரி செய்றேன். குடோன் செங்குன்றத்தில இருக்கு. 15, 20 கஸ்டமர்கள் லிஸ்ட் தருவாங்க. வர்ற பொருளுக்கு தகுந்த மாதிரி டெலிவரி சார்ஜ் வரும். 407/சின்ன யானை வண்டியில் சரக்கு ஏத்திக்கிட்டு, உதவ ஒருத்தர கூப்பிட்டு போனா 5,000 வரைக்கும் வரனும். அப்பதான் வண்டி வாடகை ரூ.2500+ டீசல், உதவிக்கு வருபவர் மதிய சாப்பாடு, போலீஸ் மாமூல், பில் 300 எல்லாம் போக 500, 600 நிக்கும்.
டூ பே என்றால், கொஞ்சம் கஷ்டம்தான். கம்பெனி அவன் இவன் எல்லாம் சேர்த்து நாமே பொறுப்பு சொல்லி டெபாசிட் கட்டி எடுத்துப் போய் டெலிவரி செய்ய, அங்க பார்ட்டி பணம் சரியாக தர, அதை வாங்கிப் போய் இரவு ஆபீஸ் குடோனில் கட்டன்னு வேலை அதிகம். ரிஸ்க் அதிகம். ஏற்கனவே பணம் ஆன் லைனில் கட்டியிருந்தா பாடு நிம்மதி. அப்படியெல்லாம் நிம்மதியா எப்பவுமே அமையாது. ஒரொரு நாளும் எங்கயாவது ஒரு போலீஸ்காரன் வம்பு பண்ணி, எதுனா திரும்பிப் பேசுனா அன்னிக்கு பொழைப்பு வண்டி வாடகை எல்லாம் போய் தண்டம் வேற அழனும். எல்லாம் போயிடும்.
டேபிள் மேட் வந்த சமயம். திருவள்ளூர் பக்கத்தில ஒருத்தர் புக் பண்ணி அத வாங்கிட்டாரு. அது சரியில்லை. ரெண்டாவது புக் பண்ணி வாங்க மிஸ்ட் கால் கொடுத்தார். அதையும் நாங்களே டெலிவரி பண்ணோம். ஏகாட்டூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கபோய் இறக்கினா, 1 டெலிவரி 100 ரூபாய்னு கொண்டாட்டமாய் போனோம். அங்க போனா டெலிவரி டேபிள் மேட், வண்டி எல்லாத்தையும் பிடுங்கி வெச்சுகிட்டு ஊர் பஞ்சாயத்து கூட்டி கட்டி வைத்து அடிக்க தயாராயிட்டாங்க. அவங்க வாங்கின டேபிள் மேட் டேமேஜ். அட்ஜஸ்ட் செய்ய சரியா வரல. சிசி அதிகாரியும் போன் எடுக்கல. யாரும் கண்டுக்காத நிலையில் நாங்க போய் 2ஆவது ஆடர் டெலிவரி போனப்ப எங்க நிலைமை மோசமாயிடுச்சு. எங்க குடோன் ஆளுகளும் போன் பன்னா வரல. என்ன மாதிரி வேலை செய்யற 4, 5 டெலிவரி பாய்கள் வந்து எங்க நெலைமையை சொன்னப்புறம் சாயங்காலம் வெளிய விட்டாங்க. இந்த மாதிரி பல பிரச்சனைகள் இருக்கு சார்.
நாங்க யார்கிட்ட வேலை செய்யுறோம்னு தெரியாது. என்ன எடுத்துப் போறோம்னு தெரியாது. ஆனா எங்கள ரூட் மேப், சிப்ஸ் வைச்சு அவங்க பார்த்துகிட்டே இருக்கானுங்க. கண்காணிக்கிறானுங்க. முதலில் சின்ன சின்ன பண்டல்கள் பைக்குகளுடன் கொண்டு போய் டெலிவரி செஞ்சேன். இப்ப 16 மணி நேரம் சுத்தினாலும் 500, 600 சம்பாதிக்க முடியாது. 1 பீஸ் டெலிவரிக்கு முன்ன 100, 150, 200ன்னு இருந்தது. இப்ப அப்பிடி இல்ல. இதுக்கு நாங்க 10 கிலோ மீட்டர் அலைஞ்சு 10 மாடி ஏறி இறங்கனும். பல பிரச்சனைகள் இருக்கு சார்.
பெரிய வண்டி வாடகைக்கு எடுத்துகிட்டு போனா 500, 600 ரூபாய் நிற்கும். ஆனால் அவுட் ஆப் சிட்டி போனா டீசல் செலவு வந்துடும். சென்னைக்குள்ளயே போனா கொஞ்சம் நிக்கும். ஏதாவது மீட்டிங், பிரச்சனைன்னா டைவர் சன்/நோ பார்க்கிங்/ஆர்டிஓ ரெய்டுன்னு மாட்னா அவ்வளவுதான். எங்க வாழ்க்கையே வீணாப் போயிடும். ஆக்சிடன்ட் ஆபத்து வேற இருக்கு. சிக்கினால் செத்துப் போறதுதான் உத்தமம். எங்க கதி யாருக்கு புரியும்? ஓடிகிட்டே இருக்கணும். நின்னா சோறு கெடைக்காது.
தரணி, டோமினோஸ் டெலிவரி தொழிலாளி
நானும் டெலிபை, பர்ஸ்ட் பிளைட், புரபொஷனல் கூரியர் எல்லாம் பார்த்துட்டு டோமினோஸ் போனேன். அங்க நிலைமை மோசம். ஆன் லைனில் சாப்பாடு புக் பண்ணுவாங்க. நாங்க டெலிவரி குடுக்கனும். சிலர் டு பே, காசு கேட்டு வாங்கிகிட்டு வந்து தர னும். திரும்ப திரும்ப அனுப்பிட்டே இருப்பான். டூ வீலரில் சாப்பாட்டை ஏத்திட்டு சுத்திக்கிட்டே இருக்கனும். ஒரு நாளைக்கு 10 டெலிவரி, 15 டெலிவரி முடிக்க கூட விட மாட்டாங்க. எவன்னா வசதியான குடிகாரங்க வீட்டுல ஆபீஸ்ல, டெலிவரின்னா போச்சி.
ஒரு எடத்தில சாப்பாடு கேட்டு ஆடர் வரும். அதை போய் குடுத்துட்டு காச வாங்கிகிட்டு வரும்போதே, என்னையே இன்னொரு டோமினோஸ்லயோ இல்லன்னா வேற கடையில கூட வாங்கிக் கொண்டு போய் குடுன்னு சொல்வான். மெயின் கடையில ஆன்லைன்ல பேமென்ட் வாங்குவான். போன இடத்தில வாங்கிப்போன பொருள் நல்லா இல்லன்னா எங்கள திட்டுவாங்க. மானம் போகும். இங்க இது சனங்க வயித்துல அடிக்கிற பிசுனெஸ். நம்ப வயித்துலயும் சேர்த்து அடிக்கிற பிசுனஸ் தலைவா.
இப்ப சிம் கார்டு விக்க வந்துட்டேன். ஏர் செல் போயிடுச்சி. ஒரு நாளைக்கு 10 ஏர்செல் கஸ்டமர் அட்ரஸ்ல போய் ஏர்டெல் செல் இல்லன்னா வோடபோன்க்கு மாத்தனும். போஸ்ட் பெய்டு கனக்சன் தரனும். ஒரு நாளைக்கு 10ன்னு, மாசம் 300 பேரை லைன் மாத்தனும். 300க்கு மேலே போனால் 1 சிம் கார்டுக்கு ரூ.50 கிடைக்கும். அது என் நண்பன் செய்றான். சதீசை போய் பாருங்கள் என்றார் தரணி.
சதீஷ், சிம் கார்டு விற்பனை பிரதிநிதி
இப்ப பரவாயில்லை சார். ஜியோ வந்து பாடாய் படுத்துச்சி. இப்பதான் ஏர்செல் லைன ஏர்டெல்லுக்கு மாத்த லைனுக்கு ரூ.50 ஏர் டெல் தருவான். 1 கேஒய்சி முடிஞ்சா ஒரு தொகை வர்ற வரை எடுத்துகிட்டு 30, 40 அட்ரஸ் தேடினா, 5, 6 பேர் கிடைப்பாங்க. இப்படி ஒரு டவர் ஏரியாலன்னு குடுத்தா ஒரு காசு வரும். இதுவும் கொஞ்ச நாள்தானே. நாளைக்கு என்னன்னு தெரியாது. எதுவும் கெடைக்கலன்னா வண்டி மேல கொடை போட்டு சேல்ஸ் பண்ணனும். ஊர்ல அய்டி பீல்டுல வேலன்னு சொல்லிக்குவோம். எங்க நிலைமை எப்பவும் தற்காலிகம்தான்.
பெயர், வேலை செய்யும் நிறுவன விவரம் தர தயங்கும் ஒரு டெலிவரி தொழிலாளி
டெலிவரி செய்யும் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் டெலிவரி செய்தால் ஒரு பொருளுக்கு ரூ.100 வரை கிடைக்கும். அவர் ஒரு நாளைக்கு ஒரு பின்கோடு ஏரியாவில் 10 எலக்ட்ரானிக்/பைபர்/அல்லது ஒரு உயர்மதிப்பு குப்பை என ஏதோ 10 பொருளை விநியோகம் செய்தால் அவரது வண்டி வாடகை, உணவு, பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு 12, 14 மணி நேரம் சுற்றி அலைந்தால் ரூ.300, ரூ.500 வரை சம்பாதிக்கலாம். விபத்திலோ, எதிர்பாராத நிகழ்வுகளிலோ மாட்டிக் கொண்டால் செத்திருக்கலாமே, ஏன் பிழைத்தேன் என தொழிலாளி புலம்பவே வாய்ப்புகள் அதிகம். ஏனிப்படி எண்ண வேண்டும், மருத்துவமனைகள், இலவச சிகிச்சை என வசதிகள் இருக்கிறதே எனக் கேட்டால், ‘வேலைக்கு அடுத்த நாள் போய் குடோனில் நிற்கவில்லை என்றால், நான் ரூ.100 வாங்கும் அந்த வேலையை ரூ.50க்குச் செய்ய புதிய பாய் வந்துவிடுவானே’ என்றார் ஒரு டெலிவரி தொழிலாளி.
கவுரவமான வேலை வாய்ப்பு உருவாக்கும் எந்தத் திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை. இந்த நிரந்தர தற்காலிகத் தொழிலாளர்களுக்கு யார் முதலாளி என்றும் தெரியாது. மேலான வேலை நிலைமைகளை யாரிடம் கேட்பது?
உழுது பிழைக்க, விவசாயம் தழைக்க, கிராமம் நிலைக்க நீர்பாசன வசதி உள்ளிட்ட வசதிகளுடன் நிலம் வேண்டும்.
பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்றத் தொழிலாளர்க்கு நிரந்தர வேலை வேண்டும். அதற்கு நிலையாணைகள் சட்ட விதிகள் உடனே உருவாக்க வேண்டும். பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட் பிரிவு நீக்கப்பட வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளிக்கு சம வேலைக்குச் சம ஊதியம் தந்தாக வேண்டும்.
மாதம் ரூ.26,000 குறைந்தபட்சச் சம்பளம் வந்தாக வேண்டும்
எட்டு மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம் வந்தாக வேண்டும்.
பெரும்பான்மை சங்கம் அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும்.
மே நாளில் தொழிலாளர்கள் எழுப்பிய இந்த முழக்கங்கள் வெற்றி பெற்றால் டெலிவரி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு பிறக்கும்.