COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

நோ சிஏஎ - என்ஆர்சி - என்பிஆர் 
பிப்ரவரி 2 - 8 பிரச்சார இயக்கத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி...


தொகுப்பு: சேகர்

சிஎஎ - என்ஆர்சி - என்பிஆர் வேண்டாம் என பிப்ரவரி 2 அன்று அனைத்து எதிர்கட்சிகள் துவங்கிய எதிர்ப்பு இயக்கத்தை வரவேற்றதோடு, கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முழக்கத்தின் மீது மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கியது.

பிப்ரவரி 2 அன்று அம்பத்தூர் கல்யாணபுரத்தில் தோழர் மோகன் தலைமையில் தோழர் வேணுகோபால் மற்றும் முன்னோடிகள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர். பிரச்சாரம் முடிக்கும்போது இப்பகுதியில் டன்லப் ஆலை தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பிரசுரம் விநியோகித்தனர்.
பிப்ரவரி 3, 4, 5, 6, 7, 8 தேதிகளில் அம்பத்தூர் வரதராஜபுரம், மங்களபுரம், காமராஜபுரம், மண்ணூர்பேட்டை, கேகே நகர் பகுதிகளில் தோழர்கள் பழனிவேல், முனுசாமி, பாலகிருஷ்ணன், வேணுகோபால், பசுபதி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தோழர்கள் எ.எஸ்.குமார், பொன்ராஜ், குப்பாபாய், சண்முகவேல் ஆகியோர் அகர்வால் பவன் தோழர்களுடன் அயனாவரம் பகுதியில் பிரச்சாரம் செய்தனர். பகுதியின் திமுக பிரமுகர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களோடு இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
சென்னையில் மயிலை, மந்தவெளி, சிந்தாதிரிபேட்டை, பாரிமுனை பகுதிகளில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள் ஆகிய அமைப்புகள் பிரச்சார இயக்கம் நடத்தினர். தோழர்கள் பாரதி, ஜேம்ஸ், சீதா உள்ளிட்ட ஜிம்கான கிளப், மதராஸ் கிளப், போட் கிளப், அகர்வால் சங்க எல்டியுசி கிளைகளின்  தோழர்கள் பெருதிரளாக பங்கேற்றனர்.
பிப்ரவரி 2 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அழிஞ்சிவாக்கம் பகுதியில் பிரச்சாரம் துவங்கப்பட்டது. பிப்ரவரி 3, செங்குன்றத்திலும், பிப்ரவரி 4, எருமை வெட்டிபாளையம், பிப்ரவரி 5, 6 தேதிகளில் நெற்குன்றம் நல்லூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் ஜானகிராமன், ராமன், அன்புராஜ், சீதா, பாலாஜி, மலைராஜா, ரகமதுல்லா உள்ளிட்ட தோழர்கள் உரிய தயாரிப்புடன் இயக்கம் நடத்தினர்.
செங்குன்றம் பாடியநல்லூர் சுற்றுவட்டாரத்தில், இசுலாமியர் குடியிருப்பு பகுதிகளில் இயக்கம் நடைபெற்றது. பிப்ரவரி 11 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்தும் முற்றுகை பேரணிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ள அழைத்தனர். பிப்ரவரி 11 அன்று 5,000க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய பேரணியில் தோழர்கள் ஜானகிராமன், அன்புராஜ், ரகமதுல்லா, மலைராஜா, வாசு உட்பட 50 பேர் வரை கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 2 அன்று காலை பள்ளிபாளையத்தில் காலை 6.30 மணிக்கு எல்டியுசி பொது செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் விசைத்தறி தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் வீடுவீடாக பிரச்சாரம் செய்தனர். தோழர்கள் மாரியப்பன், புகழேந்தி, ராஜா உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 2 மாலை 4 மணி முதல் குமாரபாளையத்தில்  எல்டியுசி  பொதுச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் விசைத்தறி தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் வீடுவீடாக பிரச்சாரம் செய்தனர். தோழர்கள் தண்டபாணி, சரவணன், கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி, கணேசன் மற்றும் விசைத்தறி தொழிலாள தோழர்கள் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 3, 5, 7, 8 தேதிகளில் ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியிலும், பெருந்துறை பேருந்து நிலையம், குமாரபாளையம் மக்கள் குடியிருப்பு பகுதி களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மக்களுக்கான இளைஞர் அமைப்பின் தோழர் மோகன்ராஜ் தலைமையில் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 8 அன்று கண்டிகை கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 4 அன்று, திருபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் பகுதிகளில் தோழர்கள் ராஜகுரு, ராஜேஷ், தலைமையில் மதர்சன் தோழர்கள், மக்களுக்கான இளைஞர்கள், சான்மினா தோழர்கள் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில், தோழர்கள் ஜெயபிரகாஷ்நாராயணன், சக்திவேல், ராஜா, ராமச்சந்திரன் மற்றும் எல்டியுசி, பிரிக்கால் தோழர்களுடன் தோழர் குருசாமி தலைமையில் பிப்ரவரி 2 அன்று சிஎஎ எதிர்ப்பு இயக்கம் நடைபெற்றது. பிப்ரவரி 4 அன்று  துடியலூரிலும் நடைபெற்றது. பிப்ரவரி 8 அன்று பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் பிரச்சாரம் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

Search