சிறுகடை நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின்
23ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு
திருவள்ளூர் மாவட்ட சிறுகடை நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் 23ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு பிப்ரவரி 25 அன்று செங்குன்றத்தில் நடத்தப்பட்டது.
தோழர் எஸ்.சின்னகொண்டையா மாநாட்டு கொடியேற்றினார். சங்கத்தின் தலைவர் தோழர் ஆர்.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் க.ராமன் துவக்கஉரையாற்ற, சங்கத்தின் செயலாளர் தோழர் சி.மலைராஜ் அறிக்கை முன்வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், மாநில துணைத் தலைவர் தோழர் எஸ்.ஜானகிராமன், உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட தலைவர் தோழர் ஜி. அன்புராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். குடியுரிமை சட்டத் திருத்தம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், தேசிய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியது. தமிழக தொழிலாளர் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்த வேண்டும் என்று மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை எல்டியுசி நடத்தவுள்ள இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்க மாநாடு உறுதி ஏற்றது.