COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

காவி தர்பார் வேண்டாம்!
சிஎஎ வேண்டாம்! என்ஆர்சி வேண்டாம்! என்பிஆர் வேண்டாம்!
ஜனநாயகம் வேண்டும்! சமூக நீதி வேண்டும்!


மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் கருத்தரங்கம்
காவி தர்பார் வேண்டாம், சிஎஎ வேண்டாம், என்ஆர்சி வேண்டாம், என்பிஆர் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும், சமூக நீதி வேண்டும் என்ற முழக்கங்களுடன் மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் கருத்தரங்கம் பிப்ரவரி 9 அன்று செங்குன்றத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கம் தோழர் சீதா தலைமையில் நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்புக் குழுவின் தோழர்கள் பாரதி, ராஜகுரு, மக்களுக்கான மாணவர்கள் அமைப்பின் தோழர் சுகுமார், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் தோழர்கள் ராஜேஷ், ஹேமாத்ரி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் எஎஸ்குமார், ஜானகிராமன், ராமன், மலைராஜ், சின்னகொண்டய்யா, அன்புராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று ஒருங்கிணைத்தனர்.

Search