செபாஸ்டியன் அன்ட் சன்ஸ்: மிருதங்கம் செய்வோரின்
ஒரு சுருக்கமான வரலாறு - டி.எம்.கிருஷ்ணா
நூல் அறிமுகம்
ஆர்.வித்யாசாகர்
சாதிவெறிக்கு, மதவெறிக்கு எதிராக, சுற்றுப்புற சூழல், சமூக வழமைகளில் மாற்றங்களை கோருதல், சிறுபான்மையினர் ஆதரவு என சமூக, அரசியல் தளத்தில் உரத்த குரல் எழுப்பி வருகிற, இசையில் சாதீய தடைகளை உடைத்ததற்காக 2016ல் ரேமன் மக்சேசே விருது பெற்ற டி.எம்.கிரு~;ணா எழுதியுள்ள ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ மனு தர்மத்தை கேள்விக்குள்ளாக்குகிறது
. மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கும், பார்ப்பனர்களே பெரும்பாலும் பயன்படுத்தும் தோல் இசைக் கருவியான மிருதங்கம் செய்ய பசுவை கொல்லலாமா என்ற சங்கடமான, சமூக முரணான கேள்வியை எழுப்புகிறார் கிரு~;ணா. இருட்டில் இருந்த, மறைக்கப்பட்ட, மிருதங்கம் செய் வோரின், குறிப்பாக தலித் மக்களின், வரலாற்றை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. இழிதொழில் என மேல் சாதியினரால் கருதப்படும், மிருகங்களின் தோலை அகற்றுவது, சுத்தப்படுத்துவது, பதப்படுத்து வது போன்ற வேலைகளில் காலங்காலமாக ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ள தலித் மக்களின் வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.
இந்த நூல் வெளி வரும் முன்பே சர்ச்சைகள் துவங்கிவிட்டன. மத்திய அரசு நடத்தும் சென்னை கலாN~த்ராவில் நடக்க இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒரு நாள் முன் ரத்து செய்யப்பட்டு, பின் ஆசிய பத்திரிகையாளர் பயிற்சி கூடத்தில் பிப்ரவரி 2, 2020 அன்று நடத்தப்பட்டது.
(நவம்பர் 17, 2019 அன்று இந்திய விமான நிலைய அமைப்பும் (யுiசிழசவ யுரவாழசவைல ழக ஐனெயை), ஸ்பிக் மெக்கே என்ற நிறுவனமும், தில்லி சாணக்கியாபுரி பூங்காவில், நடந்த இசை விழாவை ஒட்டி ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சியில் டி.எம்.கிரு~;ணாவின் இசை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. ஏசுவையும் அல்லாவையும் பாடுபவருக்கு பொது மக்கள் பணத்தில் ஏன் மேடை அமைத்து தர வேண்டும் என இந்துத்துவா காவி கும்பல்கள் மிரட்டல்கள் விடுத்தன. டி.எம்.கிரு~;ணா இந்திய விரோதி, நகர்ப்புற நக்சலைட் என சாடின. இதை ஒட்டி அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது).
மிருதங்கம் ஒரு தோல் வாத்தியம் என்பதால், துவக்கம் முதலே இதை தயாரித்தவர்கள் தலித் மக்களே. செபாஸ்டின் அண்ட் சன்ஸ் என்பது ஒரு கம்பெனி அல்ல. மாறாக, இந்த உற்பத்தியில் ஈடுபட்ட தலித் கிறித்துவ குடும்பத்தின் வரலாறு ஆகும். இந்த பரம்பரையில் போன நூற்றாண்டு துவங்கி தற்காலம் வரை உள்ள வாரிசுகளின் மிரு தங்கம் உற்பத்தி செய்யும் வரலாறு ஆகும். இது தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் மிருதங்கம் உற்பத்தி செய்தவர்களின் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.
மிருதங்கம் உற்பத்தி செய்வதில் பசு, எருமை, ஆடு ஆகிய மூன்று விலங்குகளின் தோல்களும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளை கொல்வதில் இருந்து, தோலை உரித்து பதப்படுத்தி மிருதங்கம் செய்து முடிக்கும் வரையிலான பல கட்டங்களில், பொதுவாக மிருதங்க இசை கலைஞர்களாக இருந்த, இருக்கும் மேல்சாதியினருக்கும், உற்பத்தி செய்வோருக்கும் இடையே உள்ள உறவு, மிருதங்க உற்பத்தியை அதன் இன்றைய சிறந்த வடிவமாக உருவாக்குவதில் உற்பத்தியாளர்களின் பங்கு போன்ற விவரங்களை மிக விரிவாக விவரித்துள்ள கிரு~;ணா, ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு சத்திய பாகுபாடுகள் வெளிப்படுகிறது என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார். மிருதங்க கலைஞர்கள் மிருதங்க உற்பத்தியாளர்களை பெரிதும் சார்ந்திருந்தாலும், சாதிய அமைப்பு முறை, உற்பத்தியாளர்களை கீழ் மட்டத்திலேயே வைத்திருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பார்ப்பனீய கருத்தாக்கத்தில் பசு மிகவும் புனிதமான விலங்கு. பசுவதைக்கு தடை போட்டு, பசுவதை தடுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் பலரை கும்பல் படுகொலை செய்யும் காவி பாசிச கும்பல்களின் சொல்வதற்கு நேர் மாறாக மேல் சாதி இந்துக்கள் பயன்படுத்தும் மிருதங்கத்திற்காக பசுக்கள் கொல்லப்படுகின்றன. 2003ல் அவுட் லுக் பத்திரிக்கையில் சிவராமன் என்ற ஒரு பிரபல மிருதங்க கலைஞர், மிருதங்கம் செய்வதற்காக பசுக்கள் கொல்லப்படுவதில்லை, எப்படியும் அவற்றை உண்பதற்காக கொல்கிறார்கள். அந்த தோல் மிருதங்கம் செய்ய பயன்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இதற்கு நேர் மாறாக, அதே பேட்டியில், மிருதங்கம் உற்பத்தி செய்யும் ராஜமாணிக்கம் என்பவர் பசுக்கள் கொல்லப்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பது இவர்களுக்கு தெரியாது, மிருதங்கம் செய்ய எல்லா பசுந்தோல்களையும் பயன்படுத்த முடியாது, நல்ல ஆரோக்கியமான, மிருதுவான தோலை உடைய, இளைய, இரண்டு முறைக்கு மேல் கன்று ஈன்றாத பசுவின் தோலே மிருதங்கம் செய்ய சிறந்ததாகும், ஆடாக இருந்தாலும், எருமை மாடாக இருந்தாலும் இதுவேதான் நடைமுறை, மிருதங்கத்திற்கு பெண் விலங்குகளின் தோலே சிறந்தது, எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகளே மிருதங்கம் செய்ய கொல்லப்படுகின்றன என்கிறார் (பக்கம் 159-60). மேல் சாதியினரின் பூசை அறையை அலங்கரிக்கும் இத்தகு மிருதங்கங்கள் கிரு~;ணாவின் கூற்றின் மூலம் சனாதனிகளை தர்மம் சங்கடமான நிலைக்குத் தள்ளுகிறது. இதை மேலும் புரிந்து கொள்ள மற்றொரு சம்பவத்தை விளக்குகிறார் கிரு~;ணா.
பார்ப்பனிய குடும்பத்தில் பிறந்தவர் பிரபல மிருதங்க கலைஞரான பாலக்காடு மணி ஐயருக்கு, பர்லாந்து என்ற மிருதங்கம் உற்பத்தி செய்பவர்தான் தொடர்ந்து மிருதங்கம் உற்பத்தி செய்வது, பழுது பார்ப்பது போன்ற பணிகளை செய்து வந்தார். அவரது உறவினரான ஆல்காட்டான் என்பவரிடம் மணி ஐயர் ஒரு வேலையை ஒப்படைத்தார். மிருதங்கம் செய்ய ஒரு நல்ல பசுந்தோல் தேவை. அதை தேர்ந்தெடுப்பதில் எந்த சமரசமும் தேவையில்லை, விலையை பற்றி கவலை இல்லை என்று கூறி, ஆல்காட்டான் சொன்ன ரூ.100 முன்பணமாகக் கொடுத்தார். சற்று நேரத்திற்குப்பிறகு திரும்பிவந்த ஆல்காட்டன் கையில் ஒரு பசுவோடு வந்து, இந்த பசுவிற்கு நல்ல தோல் இருக்கிறது, எனவே இதன் விலையாக அப்பசுவின் உரிமையாளர் ரூபாய் 120 கேட்பதாகக் கூறினார். பசுவை பார்த்த ஐயர் பதறி விட்டார். இது போன்ற முடிவெடுக்கும் நிலையில் முதல்முறையாக ஐயர் தள்ளப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிகழ்வே, வேத வாத்தியமாக கருதப் படும் மிருதங்கத்திற்காக பசுவை கொல்வது சரியா என்ற கேள்வியை அவர் மனதில் எழுப்பியிருக்கிறது. இதை பற்றி ‘மகாபெரியவர்’ என்று கருதப்பட்ட சங்கராச்சார்யரிடம் கேட்க நினைத்தார். ஆனால் இதை போய் எப்படி அவரிடம் கேட்பது என்று, ராஜாஜியிடம் கேட்க, ராஜாஜி ரி~p மூலம் நதி மூலம் பார்க்கத் தேவை இல்லை, சங்கடமான கேள்விகளுக்கு பதில் தேட வேண்டாம் என்று கூறிவிட்டார் (பக்கம் 187, 191). இந்த நிகழ்வு தெளிவாக சனாதன தர்மத்தின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பாலக்காடு மணி ஐயர் நாடு முழுவதும் புகழ் பெற்ற மிருதங்க கலைஞராக இருந்தாலும், அவருக்காக தொடர்ந்து மிருதங்கங்களை உற்பத்தி செய்து தந்த பர்லாந்து, அந்தோணி, செல்வராஜ் போன்ற தலித் உற்பத்தியாளர்கள் ஓரம் சாரத்திலேயே, அவர்களுடைய இருத்தல் கூட தெரியாமல் இருப்பதற்கு, சனாதனத்தின் தந்திரமே காரணமாக இருந்திருக்கிறது. சென்னையை நோக்கி இசை கலைஞர்களும், மிருதங்க கலைஞர்களும் புலம் பெயர்ந்து சென்ற போதும் கூட, அவர்களுடனேயே மிருதங்கம் உற்பத்தி செய்வோரும் புலம் பெயர்ந்தாலும், இவர்களிடையே இருந்த சாதிய உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், இவர்களின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்திருக்கிறது.
மிருதங்கத்திலிருந்து வரும் இனிய இசைக்கு காரணம் மிருதங்கத்தை வாசிப்பவரா அல்லது மிருதங்கத்தை உற்பத்தி செய்தவரா என்ற கேள்வியை கிரு~;ணா எழுப்புகிறார். மிருதங்க கலைஞரின் திறமை ஒருபுறம் இருப்பினும், பல ஆக்கபூர்வமான புதுமைகள் மூலம் உற்பத்தியில் பல சிறப்புக்களை உருவாக்கி, பல்வேறு விதமாக தோலை பயன்படுத்தி, உயிரற்ற தோலுக்கும் உயிரோட்டத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் உற்பத்தியாளரின் பங்கும் முக்கியமானது என்ற கருத்தை அவர் ஆழமாக முன்வைக்கிறார். ஆனால் இவர்களுடைய பங்களிப்பு வெளியில் தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் சாதிய பாகுபாடு, ஆதிக்கத் தன்மை கொண்ட மேல் சாதி இசைக்கலைஞர்களின் மேலாதிக்க மனப்போக்கு என்பது தெளிவாகிறது.
இந்த புத்தகம் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், சாதிய எதிர்ப்பு போராளிகளுக்கும் ஒரு நல்ல வரலாற்று ஆவணம். ஒடுக்கப்பட்டோரின் மறைக்கப்பட்ட, இன்னும் ஏராளமான இது போன்ற வரலாற்று ஆவணங்கள், சமூக ஆய்வுகள், சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கும்.