தலையங்கம்
ஊழல் அடிமை பழனிச்சாமி அரசின்
2021 கனவு நிறைவேறாது
2021ல் ஆட்சியைப் பிடித்துவிட அஇஅதிமுக பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
காவிரிப் படுகையில், தமிழ்நாட்டின் பிற விவசாயப் பகுதிகளில் விவசாயத்தை நாசம் செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படக் கூடாது என்று வலியுறுத்திப் போராடியவர்கள் மீது பொய் வழக்குகள், கைது, சிறை என கடுமையான ஒடுக்குமுறையை ஏவிய பழனிச்சாமி அரசு, அது போன மாசம் என்பதுபோல், திடீரென்று காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் என்று சட்டம் போடுகிறது.
பாசிச சக்திகளின் அடிமை ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தலைகீழ் அணுகுமுறையை எடுக்க வேண்டிய கட்டாயத்தை போராடுகிற மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள். நாடெங்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப காஷ்மீர், சிஎஎ இன்ன பிற என்றால், தமிழ்நாட்டில், சிஎஎவுக்கு எதிராக வெடித்திருக்கும் போராட்டத்தை திசை திருப்ப காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் என்றும் இசுலாமிய சமூகத்தினருக்கு வேறு சில அற்ப சலுகைகள் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்க நேர்ந்துள்ளது.
ஆயினும் இசுலாமியர்கள், இசுலாமிய பெண்கள், அவர்களுடன் சேர்ந்து கொண்டுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு மக்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், தேசிய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம், சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும் என்ற முழக்கங்களுடன் நடத்துகிற போராட்டங்கள் தீயாய்ப் பரவுகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் துவங்கியது மதுரை, திருப்பூர், சேலம் என விரிவடைகிறது. ஆதரவு பெருகுகிறது. சென்னையில் பிப்ரவரி 14 அன்று நடத்தப்பட்ட காவல்துறை தடியடி இன்னும் பலரை போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது. என்ன செய்வார் பாவம் பழனிச்சாமி? சட்டமன்றத்தில் கத்துகிறார். யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? ஒருவரைக் காட்டுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரைக் காட்டுங்கள். அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி அவரது தலைவர் எம்ஜிஆர் வாயசைத்த பாடல் அந்த நேரத்தில் அவருக்கு கச்சிதமாகப் பொருந்திப் போனது.
ஒருவரைக் காட்டிவிட்டால் என்ன செய்துவிடுவார்? அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தனது பெயர் விடுபட்டதால் அதற்கான நீதிமன்றத்துக்குச் சென்ற இசுலாமிய பெண் ஒருவர் தனது குடியுரிமையை மெய்ப்பிக்க 15 ஆவணங்களைக் காட்டியும் எதுவும் குடியுரிமைக்குச் சான்று அல்ல என நீதிமன்றம் சொல்லி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது அசாம், தமிழ்நாட்டில் அப்படி நடக்காது என்று வெற்று வார்த்தையில் பழனிச்சாமி சொல்லி விட முடியாது. அதற்காகத்தான் அந்த நாசகரச் சட்டங்களும் பதிவேடுகளும் வேண்டாம் என தீர்மானம் இயற்றச் சொல்லி போராட்டங்கள் வலுத்துள்ளன. நாங்கள் சிறுபான்மையினர் பக்கம்தான் எப்போதும் இருக்கிறோம், இருப்போம் என வாயளவில் சொல்லும் முதலமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதர வாக வாக்களித்து, பிளவுவாதச் சட்டம் நிறைவேறுவதில் அஇஅதிமுக முக்கிய பங்காற்றியது இசுலாமியர் ஆதரவு செயலா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இப்போதாவது, போராடுகிற மக்கள் குரல் கேட்டு சட்டமன்றத்தில் சட்டத்துக்கும் பதிவேடுகளுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதைச் செயலிலும் காட்ட வேண்டும். அதை விடுத்து போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்ற சங்கிகள் பாட்டை தமிழக முதலமைச்சர் பாடக் கூடாது. தஞ்சையில் போராட்டம் நடந்த பகுதியில் மின்இணைப்பை துண்டித்து பகுதியை இருளில் மூழ்கடிப்பது போன்ற மலினமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டமும் பதிவேடுகளும் இசுலாமியருக்கு மட்டும் எதிரானவை அல்ல. அவை இந்திய மக்களுக்கு எதிரானவை. ஆப்ரகாம் லிங்கன் என்று சொல்லத் தெரியாமல் அபிராமி அபிராமி என்று பாடிய முதலமைச்சர் பழனிச்சாமிக்கு இந்தச் சட்டங்களும் பதி வேடுகளும் என்ன சொல்கின்றன, அவற்றின் விளைவுகள் என்ன என்று எடுத்துச் சொல்ல யாரும் அங்கு இல்லை. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சட்டமன்றத்தில் கத்திக் கதறும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுகளில் சில விவரங்கள் சேகரிப்பதை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இரைஞ்சும் நேரத்தில், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், தமிழகமெங்கும் வீதிகளில் இறங்கியுள்ள மக்கள் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
செய்தித் தாள்களில் மூன்றாண்டு கால ஆட்சி பற்றி முழுப்பக்க விளம்பரங்கள் வருகின்றன. மாண்புமிகு அம்மா ஆட்சி என்று சொல்கிற பழனிச்சாமியும் அவ்வப்போது எனது ஆட்சியில் என்று ஜெயலலிதா பாணியில் சொல்லிப் பார்க்கிறார். எதுவும் வேகவில்லை. பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் என்ற அறிவிப்பு கூட கைகொடுக்க மறுக்கிறது. பாது காக்கப்பட்ட விவசாய மண்டலம் என்ற அறிவிப்பு வந்த அடுத்த நாளே, கடலூரில் ரூ.50,000 கோடியில் ஹல்டியா நிறுவனம் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தியில் முதலீடு, 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்று வணிகத்துறை அமைச்சர் கே.சி.சம்பத் அறிவிக்கிறார்.
முதலமைச்சர் சொல்கிற பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலத்தில் கடலூர் இல்லை. காவிரிப் படுகை மாவட்டங்கள் என்று நீங்கள் அறிவித்துள்ள மாவட்டங்களுக்கு மிக அருகில்தான் கடலூர் இருக்கிறது முதலமைச்சர் அவர்களே. அங்கு பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் அமையாது என்றும் சொல்லிவிட்டீர்கள். 2017ல் இதற்காகப் போடப்பட்ட அறிவிப்பாணையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ஹல்டியா நிறுவனம் என்ன அங்கு விவசாயப் பூங்கா அமைக்கப் போகிறதா? ஹல்டியா நிறுவனம் பெட்ரோலிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்தால், கடலூரிலும் அருகில் உள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளம் பெருகி மண்வளம் செழித்து விவசாயம் தழைக்கும் என அமெரிக்க பயணத்தில் எதுவும் கண்டுபிடித்தார்களா? அல்லது செல்லூர்காரருடன் ஆலோசனை எதுவும் நடந்ததா?
கேள்விகள் எழுந்தவுடன் விவசாயத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது என்று வழக்கமாகச் சொல்லி வருவதை முதலமைச்சர் சொல்கிறார். காவிரிப் படுகை விவசாயம் காக்கப் போராடிய மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவிக்கொண்டிருந்த போதுகூட முதலமைச்சரும் பிற அமைச்சர்களும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போதும் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சில பகுதிகள், லிக்னைட் தாது நிறைந்த பகுதிகள் என மத்திய அரசின் சுரங்கங்கள் தொடர்பான அமைப்பு சொல்கிறது. இந்தப் பகுதிகளில் இன்று ஹைட்ரோகார்பன் எடுக்க வந்தவர்கள் மக்கள் போராட்டங்களால் விரட்டப்பட்டிருக்கிறார்கள். நாளை லிக்னைட் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வரும் போது, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலத்துக்கான சட்டம் செயல்படுமா என்று பார்க்க வேண்டும்.
விவசாயம் காப்பது முதல் மாநில உரிமை களை, மக்கள் உரிமைகளை காப்பது ஊடாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது வரை, சாமான்ய மக்கள் பக்கம் அஇஅதிமுக அரசு நிற்கவில்லை. பாசிச நடவடிக்கைகளின், கார்ப்பரேட் திட்டங்களின் பரிசோதனைக் கூடமாக தமிழ்நாட்டை மாற்றி விட்டு, 2021க்கு கனவு காண்பது நிறைவேற முடியாத பேராசைதான். 23.02.2020