COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' 

தொகுப்பு: ராஜேஷ்


மகத்தான ரஷ்யப் புரட்சி உருப்பெற்றது பற்றிய, 70 ஆண்டு கால மக்களுக்கான சோவியத் ரஷ்யாவின் ஆட்சி பற்றிய செய்திகளை, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் நோக்கி பயணிக்கவுள்ள புதிய தலைமுறையினரிடம் சேர்க்க,

'ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' என்ற தலைப்பில் ரஷ்யப் புரட்சி நாளான நவம்பர் 7 ஒட்டி வகுப்புகள் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.
ஜிம்கானா கிளப் தொழிலாளர் மத்தியில் நவம்பர் 4 அன்று 'ரஷ்யப் புரட்சியின் வெளிச் சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' தலைப்பில் நடந்த விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ரஷ்யப் புரட்சி பற்றியும் இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் பற்றியும் உரையாற்றினார்.
ரஷ்ய புரட்சியின் வெளிச்சத்தில் முதலாளித்துவத்தை வீழ்த்துவோம், சோசலிசம் படைப்போம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் நவம்பர் 7 அன்று காலை, மாலை என மூன்று மய்யங்களில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் ரஷ்யப் புரட்சி பற்றிய செய்திகளையும் சமகாலத்தில் அதிலிருந்து பெற வேண்டிய பாடங்கள் பற்றியும் கருத்துகள் முன்வைத்தார்.
இதே தலைப்பில் கோவையில் எல்டியுசி மாநில பொதுச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் கலந்துகொண்ட வகுப்பு நடத்தப்பட் டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்புக் குழு தோழர்கள் ஜெயபிரகாஷ், குருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை அயனாவரத்தில் ரஷ்யப் புரட்சி நாள் மார்க்சிய அரசியல் வகுப்பு நடைபெற்றது. இதில் தோழர் சண்முகவேல் வகுப்பெடுத்தார்.
அம்பத்தூரில் நவம்பர் 7 அன்று நடந்த வகுப்பில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் வகுப்பு எடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் 'ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' தலைப்பில் நவம்பர் 8 அன்று வகுப்பு நடத்தப்பட்டது. ரஷ்ய புரட்சி உருப்பெற்றது பற்றியும் அது வென்று காட்டியது பற்றியும் விரிவாகப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, இந்திய புரட்சிக்கு தயாராக, சாத்தியமானதைச் செய்வதுடன் மட்டும் நின்று விடாமல் அவசியமானவற்றை செய்ய வேண்டும் என்றும் சனாதனத்தை வீழ்த்த, ஜனநாயகத்தை நிலைநாட்ட, சோசலிசம் படைக்க தயாராக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் மதர்சன் மற்றும் சான்மினா தொழிலாளர் தோழர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு, விவசாய விரோத சட்டங்களுக்கு, தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், பொதுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிராகவும் நடைபெறும் நவம்பர் 26 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்க மதர்சன் மற்றும் சான்மினாவில் பொது வேலை நிறுத்தம் செய்ய பொதுப் பேரவை ஒப்புதல் அளித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 7 'ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' தலைப்பில் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் வகுப்பு எடுத்தார்.
நவம்பர் 22 அன்று ஜம்போ பேக் தொழிலாளர் மத்தியிலும் இதே தலைப்பில் வகுப்பு நடத்தப்பட்டது. தோழர் எ.எஸ்.குமார் வகுப்பு எடுத்தார்.

Search