COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 1, 2021

 திரைப்பட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா, 2021
அரசியல்சாசனம் மற்றும் கருத்துரிமைக்கெதிராக விடப்பட்ட சவால்


உமாமகேஸ்வரன்


திரைப்பட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா 2021, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

மோடியின் ஒன்றிய அரசு இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை முன்மொழிகிறது. திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952ல் இந்த திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:
தணிக்கைச் சான்றிதழ் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று உள்ளதை நிரந்தரமாக செல்லத்தக்கதாக மாற்ற முனைகிறது,
இப்போது உள்ள ம/அ பிரிவில் புதிதாக மேலும் 3 புதிய வயது அடிப்படையிலான பிரிவுகளை கொண்டு வருகின்றது. அதாவது ம/அ 7+,  ம/அ 13+,  மற்றும் ம/அ 16+.
திரைப்படம் திருட்டைத் தடுக்க இந்த சட்டத்திற்குள்ளேயே ஒரு அதிகாரம் அளிக்கும் ஷரத்தை ஏற்படுத்துகின்றது,
மேலே கூறப்பட்டுள்ள இந்த மூன்று திருத்தங்களினால் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் திரைப்படத் துறையினர் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 4ஆவது திருத்தம்தான் பிரச்சனைக்குரியதாகும். திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 பிரிவு 6 துணைப் பிரிவு 1 ஷரத்து கூடுதலாக சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய அரசு தணிக்கை வாரியத் தலைவரிடம் பொதுமக்கள் காண்பதற்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள திரைப்படத்தை கூட மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு கூற முடியும். திரைப்பட ஒளிப்பதிவுச் சட்டம் 1952ல்  இருந்த பிரிவு 6 ஏன் நீக்கப்பட்டது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் திரு கே.எம்.சங்கரப்பா (சங்கரப்பா எதிர் ஒன்றிய இந்திய அரசு) திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் பிரிவு 6 அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பான அதிகாரப் பிரிவு (நங்ல்ங்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் டர்ஜ்ங்ழ்ள்) கொள்கைக்கு முரணானது என்றும், எனவே அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என் றும் வழக்கு தொடுத்தார். கர்நாடக உயர் நீதி மன்றம் அந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று கூறி அதை நீக்கியது. பின்னர் 28.11.2000ல் உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்தப் பிரிவைத் தான் மீண்டும் கொண்டு வர மோடி அரசு சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. கூடவே ஒன்றிய அரசு ஓடிடி என அழைக்கப்படுகிற அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற இணைய வழி தளங்களையும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. அத்துடன் தீர்ப்பாய சீர்திருத்த அவசரச் சட்டம் 2021 மூலமாக மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் ஒழித்துக்கட்டபட்டுவிட்டன. எனவே எஃப்.சி.ஏ.டி (ஊஇஅப) என்றழைக்கப்படுகின்ற திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு பதிலாக இனி உயர் நீதிமன்றமே இந்த வழக்குகளை விசாரிக்கும். இதனால் மீண்டும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் (ஒன்றிய அரசு) தன்னுடைய பிடியை இறுக்கி விட்டது. இந்த வருடம் ஜனவரி மாதம் அமேசான் வலை தள தொடரான 'தாண்டவ்' மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.அலி அப்பாஸ் ஜாபருக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகம் தீங்கு விளைவிக்கின்ற மற்றும் கவலையளிக்கின்ற பல்வேறு வலைத் தொடர்கள் தொடர்பான புகார்கள் அவர்களுக்கு வந்திருப்பதாக ஜாபருக்கு தெரிவித்தனர். உடனே அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாகவும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இப்போது ஒன்றிய அரசு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952ஐ - இதுபோன்று மன்னிப்பு கோரல்களுக்கும் நன்றி தெரிவிப்புகளுக்கும் எந்த அவசியமுமின்றி - திருத்த முற்பட்டுள்ளது.  கடந்த சில மாதங்கள் குறிப்பாக இந்திய திரைப்படத் துறையினருக்கு கடினமான காலம் தான். இணையதள புனைவு நாடகங்கள் இன்றும் தணிக்கை வாரியத்திலிருந்து விலக்கு பெற்றிருக்கும் போதிலும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த புகார்கள் இன்னும் எத்தனை பேர்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனவோ (திரு.ஜாபர் ஒரு உதாரணம்). இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது, அதுவும் 'சர்ச்சைக்குரியது' எனக் காரணம் காட்டி தற்போதுள்ள அரசு முனைந்துள்ளது, தலை மேல் தொங்கும் வாள் போன்றதுதான். இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்கிறார் பிரபல திரைப்பட இயக்குனர் திரு.ஹன்சல் மேத்தா, அவர் பட்ட பாடு அப்படி. இதுபோன்ற புகார் கள் காரணமாக அவர் பல கொடுமைகளை அனுபவித்தார். தில் பே மத் லே யார் பட வெளியீட்டிற்குப் பிறகு ராஜ் தாக்கரேயின் குண்டர்கள் அவருடைய அலுவலகத்தை சூறையாடினர். அவரை உதைத்து அவருடைய முகத்தில் கரியைப் பூசினர். அவர் ஒரு கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டு பல பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஏராளமான மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். அவரது நண்பரும் நடிகருமான கிஷோர் கடம் வீட்டை தீயிட்டு கொளுத்திவிடுவோம் என்று எச்சரிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் 12 ஆண்டுகள் திரைப்படத் துறையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.
பிரபல இயக்குனரும் சமூக செயற்பாட்டா ளருமான திரு.ஆனந்த் பட்டவர்தன் இந்த உத்தேச சட்டத்திருத்தங்கள் மிகவும் அபாயகரமா னவை மற்றும் பிற்போக்கானவை என்கிறார். குறிப்பாக இப்போது அதிகாரத்தில் இருக்கின்ற இந்துத்துவா அரசு ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் நேரடியாக உறவாடு வதால் புகார்களை பெறுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. 1992ல் எடுக்கப்பட்ட அவரு டைய சொந்த ஆவணப்படமான 'ராம் கே நாம் (ராமனின் பெயரால்)' இந்துத்துவா வலதுசாரிகளின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, பெரும் போராட்டத்திற்குப் பிறகே அவரால் பொது வெளியீட்டிற்கான சான்றிதழ் பெற முடிந்தது. இன்று நிலைமை இன்னும் மோசம். தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் கூட அஆயட (மாணவர் அமைப்பு) போன்ற தீவிர வாதிகள் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால் தணிக்கை சான்றிதழ் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காவல் துறை அந்த குண்டர்களை பார்த்துக்கொண்டது.
சுதிர் மிஸ்ரா, 'நிலைமை இன்னும் குழப்பமாக இருக்கிறது' என்கிறார். திரும்ப அழைப்பது என்றால் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார். சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை யார் திரும்ப அழைப்பார்கள்?  இந்த புதிய ஏற்பாடு நமது நாட்டில் திரைப்படங்களை சுற்றி ஒரு வரலாற்றுரீதியான மனநோயை ஊட்டி வளர்க்கின்றது. சமூக இணைப்பிற்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று நான் கருதவில்லை என்கிறார்.
சமூக ஊடகங்கள் காலகட்டமான இன்று ஒவ்வொருவரும் ஒரு தணிக்கையாளர் ஆக இருக்க முடியும். நாம் சீற்றம் மிகுந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஒவ்வொருவரும் வருத்தத்துடன் இருக்கிறோம், அந்த வகையில் பார்த்தால் ஒரு திரைப்படமும் எடுக்க முடியாது. திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மதவாத குழுக்கள்,  அரசியல் தலைவர்கள், சாதி அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் ஆகியவற்றிற்கு மேலும் தைரியத்தை அளிப்பதோடு தொடர்ந்து அற்ப காரணங்களைக் காட்டி தங்களின் உணர்வுகள் புண்பட்டுவிட்டதாக கூறி (தாண்டவ் ஒரு நல்ல உதாரணம்) அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திர உரிமையை முற்றிலுமாக பறிப்பதற்கான சதிதான் இந்த திருத்தத்திற்கான அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது. திரு.பட்டவர்தன் கூறுவது போல், பத்மாவத் திரைப்படத்திற்கு அவர்கள் தடை விதிக்க முயற்சித்ததை போல, அதுவும் முரண் என்னவென்றால் அந்தத் திரைப்படம் அவர்களுடைய சொந்த மதிப்பீடுகளைதான் வெளிப்படுத்துகிறது என்பதை கூட உணராமல் நடந்துகொண்டார்கள். இது வெறும் இந்துத்வா அரசு மட்டுமல்ல ஒட்டுன்னி  முதலாளித்துவ அரசும் ஆகும். எனவே சிறுபான்மை எதிர்ப்பு மற்றும் ஏழை எதிர்ப்பு மதிப்பீடுகளை பார்ப்பனிய அறங்களுடன் மணமுடித்து சேர்த்து வைப்பார்கள். ஓடிடி வழிகாட்டுதல்கள் மிக விரைவில் சட்டமாக்கப்பட போவதால் இந்திய திரைப்படத் துறையினர் மிக முக்கியமான இன்னொரு தளத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அவர்கள் மிகவும் நம்பி இருக்கின்ற ஓடிடி தளம் அவர்களுக்கு சாதியம், மத அடிப்படைவாதம், நிறுவனங்களின் பாராமுகம் போன்ற கடினமான உள்ளடக்கங்களை கையாள (பிரதான திரைப்பட நீரோட்டம் எப்போதுமே இந்த உள்ளடக்கங்களை எடுத்துக் கொள்வதில்லை) பயப்படுவார்கள். அவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா பன்னாட்டு நிறுவனங்களையும் பயமுறுத்திவருக்கிறார்கள்'   (ஓடிடி  தளத்தையும் சமூக ஊடக இணைய தளங்களையும்) என்கிறார் திரு.பட்டவர்தன். உதாரணமாக நெட்பிளிக்ஸ் என்னுடைய படங்களை இனி தொட கூட மாட்டார்கள் அவர்கள் தங்களை நாட்டிலிருந்து தூக்கி எறிந்து விடுவார்கள் என அஞ்சுகிறார்கள்.
இறுதியாக திரைப்படத் தணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் எப்படி நடக்கிறது என்பதை உயர்ந்துகொண்டே போகும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் முந்தையதை காட்டிலும் மிகவும் அப்பட்டமான மற்றும் குரல் வளையை நெரிப்பதாகவும் உள்ளது.
முதலாவது திரு. பெஹல்லாஜ் நிஹலானியால் தலைமை தாங்கப்படும் தணிக்கை வாரியம் பல இந்திய மற்றும் சர்வதேச படங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ஆட்சேபணைகளை அடிக்கடி தெரிவித்தது.
இரண்டாவது கட்டம் திரைப்பட விழாக்களை சுற்றி நிகழ்கிறது,  'சதிவேலை' திரைப் படங்களுக்கு தணிக்கை விலக்கு சான்றிதழ்கள் மறுக்கப்பட்டு அவைகளை திரையிட அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டது.
மூன்றாவது கட்டம் நடப்பில் உள்ளது (மிகவும் அபாயகரமானது). அதாவது திரைப்பட சான்றிதழ் மேல்முறையீடு தீர்ப்பாயத்தை ஒழித்தது. ஓடிடி வெளியீடுகளுக்கு புதிய கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள தணிக்கை வாரிய தலைவருக்கு மத்திய அரசு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள திரைப்படத்தை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கீது அனுப்பும் அதிகாரம் ஆகியவை ஆகும். ஆனந்த் பட்வர்தன் மிக அழகாக கூறுகிறார், 'தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எப்போதுமே திரைப்பட கருத்துச் சுதந்திரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள போதிலும் ஒரு சில பெரிய வித்தியாசங்கள் தற்போதைய அரசை தனித்துவமாக காட்டுகிறது. பல தணிக்கை முடிவுகளை வெற்றிகரமாக ஏழு முறை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் போராடி இருக்கின்றேன். நீதிமன்றங்கள் நிர்வாகத்தின் மீது ஒரு கட்டுப்பாட்டை நிறுவியது. நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் உங்களின் கருத்து சுதந்திரத்திற்கு உங்களால் போராட முடிந்தது, ஆனால் இன்று அது சட்ட ரீதியாக முடியாது'.

Search