ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் தஞ்சை - நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 60 பேர் பங்கேற்ற மார்க்சிய கல்வி முகாம் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் ஆசிரியராக மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஜவஹரும் கலந்து கொண்டனர். கல்வி முகாமைத் துவக்கி வைத்து தோழர் பாலசுந்தரம் உரையாற்றினார். நாட்டில் வளர்ந்து வரும் கார்ப்பரேட் கொள்ளை மற்றும் வகுப்புவாத சூழலில் கம்யூனிஸ்ட் ஊழியர்களுக்கு மார்க்சிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
முதல் அமர்வாக ‘மார்க்சியம் கற்போம், எங்கிருந்து துவங்குவது’ என்ற தலைப்பில் தோழர் ஜவஹர் விளக்கிப் பேசினார். அவ்வப்போது தோழர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். தோழர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கு கொண்டனர். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், அரசு, ஏகாதிபத்தியம், சமூக ஜனநாயகம் என பல்வேறு மார்க்சிய அடிப்படைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதம் விளக்கினார்.
முதல் நாள் இரவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய இரண்டாவது அமர்வு துவங்கியது. அதற்கு முன்னதாக அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய பதாகைகளை பங்கு கொண்டவர்கள் ஒரு முறை படித்தும் பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரா.கிருஷ்ணய்யாவின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்க புத்தகமும் தோழர் அரிந்தம் சென்னின் முன்னுரையும் வழங்கப்பட்டிருந்தது.
மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிநாதமாக விளங்குவது ‘சொத்துடமை’ பற்றியதுதான் என குறிப்பிட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தேர்ந்தெடுத்த பக்கங்களை வாசித்து விளக்கினார். தோழர்களின் வினாக்களுக்கும் பதில் அளித்தார். இரண்டாம் நாள் மதியம் வரை இந்த அமர்வு தொடர்ந்தது.
வகுப்பின் இறுதி நிகழ்வாக, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி தொகுப்பாக கிட்டத்தட்ட 3 மணி நேரம் உரையாற்றினார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சமகாலத்திற்கு பொருத்தப்பாடுடைய விசயங்களையும், அறிக்கைக்கு பிறகு மாற்றம் அடைந்துள்ள விசயங்களையும், இந்த வகுப்புகள் கட்சி கட்டுவதற்கு எவ்விதம் பொருத்தப்பாடுடையவை என்பதையும் பல பரிமாணங்களில் விளக்கிப் பேசினார்.
வகுப்பு பற்றிய தங்களது உணர்தல்களையும் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். வகுப்புகள் வாசிப்பைத் தூண்டியதாக, புதிய படிப்பினை பெற்றதாக, தீப்பொறி தொடர்ந்து வாசிக்க வேண்டும் என, கருத்துமுதல்வாத சக்திகள் ஆட்சியிலிருக்கும் போது வகுப்புகள் மிக அவசியம் என கருத்துத் தெரிவித்தனர். கிராமப்புற வறியவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.