சுற்றுச் சூழல் பாதிப்பே இல்லாமல் நாம் பொருளுற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இது சாத்தியமா?
‘கழிவுகளை நீக்கி, தூய்மையாக வைத்திருப்பதா? அப்படி ஒன்றை கேட்டதே இல்லை. சுத்தமில்லாத தண்ணீர், நகரங்களின் தெருக்களில் திறந்தவெளி சாக்கடைகளில் ஓடும் கழிவு நீர்; தங்கள் ஜன்னல்கள் வழியே கழிவுகளை வெளியேற்றுவதும் வீதிகளில் குப்பைகளை அப்படியே விட்டு நாற்றமடையச் செய்வதும் மக்கள் கடைப்பிடித்து வரும் பொதுவான வழக்கங்களாகும். எங்கு பார்த்தாலும் மனிதக் கழிவுகள் குட்டையாக தேங்கி நிற்கும். இறந்த விலங்குகள் (நாய், பூனைகள், எலிகள் மற்றும் குதிரைகள் கூட) வீதிகளில் அப்படியே கிடந்து பட்டு அழுகிக் கொண்டிருக்கும்.’
‘பெரும்பாலான தார்ச்சாலைகள், அந்த வழியே சென்றுவரும் குதிரைச் சாணங்களால் நிரம்பி மிகவும் அசுத்தமாக இருக்கும். இறந்த நாய்கள், பூனைகள் மற்றும் எலிகள் தெருக்களில் குப்பைகளாக இரைந்து கிடக்கும். வீட்டுக் காய்கறிக் கழிவுகள் மழைக்காலங்களில் தெருக்களிலுள்ள வெடிப்புகளில் மூன்று அடி அல்லது அதற்கும் அதிகமான ஆழம் வரை சென்று தேங்கி நிற்கும். குப்பைத் தொட்டிகள் எப்போதாவது மட்டுமே காலி செய்து சுத்தம் செய்யப்படும். அவை இறந்த விலங்கின் உடல் களாலும், வீட்டுக் கழிவுகளாலும் எப்போதும் நிரம்பி வழியும்.’
பிரதமர் தனது சுதந்திர தின உரையில் நம்மைச் சுற்றி இருக்கும் அருவருக்கத்தக்க குப்பைக் கழிவுகள்தான், நாம் ஒரு தேசிய குணாம்சம் பெறுவதை தடுப்பதற்கான மிகப் பெரிய தடைக்கற்கள் என்ற கருத்தை வலிமையாக எடுத்துரைத்தார். தேசத்தின் வரலாற்றின் மிக முக்கிய நாளில் முக்கியத்துவமில்லாத சிறிய விசயத்தின் மீது பிரதமர் அழுத்தம் கொடுத்துப் பேசுவது என்பது இது வரை இல்லாததாக தெரியலாம் என அவரே அங்கீகரித்தார். ‘நாம் கிராமத்தில், நகரத்தில், தெருக்களில், பகுதியில், பள்ளிக்கூடங்களில், ஆலயங்களில், மருத்துவமனைகளில் ஒரு துரும்பு குப்பையைக் கூட விடக் கூடாது என உறுதி எடுக்குமாறு’ 125 கோடி மக்களை கேட்க வேண்டும் என அவர் நினைத்திருக்கிறார்.
பிரதமரின் புத்திமதியில் இரண்டு அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக, அழுக்கும், குப்பையும் வெறும் கலாச்சார பிரச்சனைகள், தேசிய குணாம்சத்தில் உள்ள இந்தக் குறைபாட்டை ஒழுக்க நெறி சீர்திருத்தம் மூலம் மட்டுமே சரி செய்து விட முடியும் என்று சொல்வதாகத் தெரிகிறது. அதனால்தான் அவர் ‘நம் நாட்டு மக்கள் குப்பைக் கூளத்தை பரவ விட மாட்டோம் என்று முடிவு எடுத்தால் உலகத்தின் வேறு எந்த சக்தியால் நம் நாட்டு நகரங்களை, கிராமங்களை குப்பையாக்க முடியும்?’ என்று கேட்கிறார்.
இது சாமான்ய மனிதர்கள் கவனக்குறைவால் அழுக்கையும், குப்பைகளையும் பரப்புவதாகவும், மற்றவற்றோடு இதுவும் சேர்ந்து சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாகவும், மோடி வலியுறுத்துவது, கழிவுகள் பற்றிய குறுகிய புரிதலுக்கு இட்டுச் செல்லக் கூடியது. நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்ற மோடியின் நல்லெண்ணம், அவரது பேச்சில் அழுத்தம் கொடுத்த இந்தியாவை உற்பத்தி துறையிலும், கணினித் துறையிலும் மய்யமாகவும், சுற்றுலாதளத்துக்கான இலக்காகவும் மாற்றி உலக சக்தியாக மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.
மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை மோடி பார்ப்பாரேயானால், சுத்தமும் குப்பைக் கழிவுகள் பற்றிய அணுகுமுறையும் பரந்த சமூக இயக்கப் போக்கிலிருந்து சுலபமாக பிரிக்கப்பட முடியாததென்றும், பொருளாதார, அரசியல், மருத்துவ மற்றும் விஞ்ஞான பின்புலத்திலிருந்து அதை பிரித்துத் தனியாக பார்க்க முடியாது என்றும் அவர் அறியக் கூடும். இல்லாவிட்டால் நாம் ஆரம்பத்தில் இரண்டு பத்திகளில் குறிப் பிட்டுள்ள விசயங்களை தவறாக எடுத்துக் கொண்டு அழுக்குப் படிந்த மூன்றாம் உலக நகரங்கள் என நினைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அவை அப்படியல்ல.
மாறாக, அவை 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் முறையே மிகப் பெரிய நவீன நகரங்களான லண்டனும், நியுயார்க்கும்தான். சமூகம் இந்நிலைக்கு எப்படி வந்தது, இன்று எப்படி உள்ளன என்ற பெரிய, நீண்டகால சித்திரம் பற்றிய புரிதல் முக்கிய மானது. அவ்வப்போது எடுக்கப்படும் மேலான தூய்மை மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு முழுக்க தேவையான நடவடிக் கைகள். மிகப் பரந்த சமூக - பொருளாதார மாற்றமில்லாமல் எளிதாக பாதுகாக்கக் கூடிய உயிரிழப்பை தடுக்க முடியாது என்று தவறாக கருதிவிடக் கூடாது. உலகம் முழுவதும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இறப்பிற்கு வயிற்றுப்போக்கு நோய் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2195 குழந்தைகள் இறக்கின்றன. எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோய் என எல்லாவற்றையும் சேர்த்தாலும் அதை விட இது அதிகமாகும்.
சுத்தமாக இருப்பது என்பது மேலான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது என்பது மாத்திரமல்ல. கூடவே தற்போது மிகப் பெரும் கொடுங்கனவாக நடைமுறையிலுள்ள உற்பத்தி மற்றும் நுகர்வு முறையால் உற்பத் தியாகும் குப்பைகளையும், கழிவுகளையும் மற்றும் எல்லா வகையான சுற்று சூழல் கேடு களையும் எதிர் கொள்வதுமாகும். குப்பைகளை உற்பத்தி செய்யும் இந்தப் பிரச்சனையை ஒதுக்கித் தள்ளுவதன் மூலம், மோடி முழு சித்திரத்தை இழக்கிறார். குப்பை, தவறுதலாக ஏழ்மை மற்றும் பின்தங்கிய தன்மையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே, நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் விவாதித்தது போல் ‘நவீன மனிதகுல நிலையின் குறியீடாக உள்ள, ஆனால் அப்படி அங்கீகாரம் பெறாத ஒரு பொருள் இருக்கிறது. அது ‘குப்பை’ கழிவு. அது, முதலாளித்துவத்தால் உந்தித்தள்ளப்படுகிற நகர்மயமாக்கத்தின் தொழில்மயமாக்கத்தின் பிரிக்கப்பட முடியாத உடன்விளைவாகிவிட்டது. கிராமப்புறங்களில் இருப்பவர்களை விட நான்கு மடங்கு கூடுத லாக நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கழிவு களை உருவாக்குகிறார்கள். வளரும் நாடுகளை விட பல மடங்கு கூடுதலாக வளர்ச்சி பெற்ற நாடுகள் கழிவுகளை உருவாக்குகின்றன.
1900ல் உலக நகரங்களில் வாழ்ந்த 13% மக்கள் 3,00,000 டன் குப்பைகளை உற்பத்தி செய்தார்கள் என்றால் இன்று உலகத்தின் நகரத்தில் வாழும் மக்கள் தொகை 50% ஆகி 3.5 மில்லியன் டன் திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறார்கள். (இது தொழிற்சாலை மற்றும் ஆபத்தான கழிவுகள் நீக்கிய விபரம் ஆகும்). கழிவுகள் பற்றிய உலக வங்கி அறிக்கையினை இணைந்து எழுதியவர்களில் ஒருவரான டேனியல் ஹோர்ன்வெக், 2100ல் இந்த எண்ணிக்கை 11 மில்லியன் டன்களை தொட்டுவிடும் எனக் கணிக்கிறார். 2050ல் நகரங்களில் வாழும் மக்கள் தொகையும் 70% ஆகிவிடும்.
தங்குதடையற்ற உற்பத்தியும், நுகர்வும் அதே போல், மனிதகுலத்தையும், சுற்றுச் சூழலையும் விலையாகக் கொடுத்து கழிவுகள் உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது தான், அசாதாரண சூழலில் மோடி உலகுக்கு அறைகூவல் விடுக்கிறார்: ‘வாருங்கள் இந்தியா வில் உருவாக்குங்கள்’, ‘வாருங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’.
வாகன உற்பத்தி, நெகிழி, நீர்மூழ்கி கப்பல், செயற்கைக் கோள் என எல்லா வகையான தொழில்களுக்கும் அழைப்பு விடுத்தார். அடிப்படையில் மேற்குலக நாடுகள் தடம்பதித்த பாதை இது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளும் சமீபமாக இப்போது சீனாவும் இதில் பயணிக்கின்றன. இதில் மீட்கவே முடியாத அழிவுகளை விட்டுச்செல்கின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் 200 ஆண்டுகால தொழில்துறை முன்னேற்றத்துக்குப் பின், 40% நீர் நிலைகள் நீச்சலுக்கோ, மீன் வளர்ப்புக்கோ உகந்ததாக இல்லாமல் போய்விட்டது. ஈயத்தின் அளவு உயர்ந்த மட்டத்துக்கு போனதன் விளைவாக 20 லட்சம் குழந்தைகள் நரம்பியல் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் உள்ளனர். உணவில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளால் மட்டும் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் வரக்கூடும்.
பிரதமர் சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல்தான் பொருட்களை உற்பத்தி செய்யச் சொல்கிறார். வரலாற்றில் எங்காவது வளர்ச்சிமய கற்பனாவாதத்தில் இருபுறமும் வெற்றி என்ற உதாரணம் உண்டா? அல்லது இந்தியாவில் எங்காவது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, உற்பத்தியோ அல்லது கழிவை அகற்றுவதோ அவசியம் என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறதா? மத்திய சுற்றுச் சூழல் அமைச் சகம் சமீபத்தில் சுரங்கம், சாலைக் கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் பாசனத் திட்டங்களுக்கும், வனப்பகுதியில் சுரங்கப் பணிகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனை உட்பட நடப்பிலுள்ள மெலிதான கட்டுப்பாடுகளைக் கூட நீர்த்துப் போகச் செய்யும்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத உற்பத்தி என்பது நகைமுரணானது என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிரதமரின் கனவுகளிலேயே ஆகப் பெரியது கிராமப்புற மக்களுக்கும் கணினி நிர்வாகத்தைக் கொடுக்கும் ‘டிஜிட்டல் இந்தியாவை’ உருவாக்குவதுதான். ஆனால் இந்த ‘டிஜிட்டல் இந்தியா’ இந்தக் கோளில் மிருதுவாக பய ணித்து நம்மைச் சுற்றியிருக்கும் குப்பைகளை அகற்றுமா? இந்தக் கற்பனாவாதமும் சாத்தியமாகக் கூடியதாக தெரியவில்லை. ஏராளமான எரிசக்தியை(எனர்ஜி)யும், மூல வளங்களையும் கொண்டுதான் மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் எனும்போது, (ஒரு கம்ப்யூட்டர் தயாரிக்க 2800 கேலன் தண்ணீரும், 700 வகையான ஆபத்தான, வேதியியல் பொருட்களும் தேவைப்படுகிறது) மின்னணு கழிவுதான் உலகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் கழிவு வகையினமாக உள்ளது.
அய்நா வின் ஸ்டெப் முன்முயற்சி, ஈயம், காட்மியம், நிக்கல், பாதரசம் மற்றும் ஆர்செனிக் ஆகிய வற்றை உள்ளடக்கிய மின்னணுக் கழிவுகள் 2017ல் எகிப்தின் 8 மிகப்பெரிய பிரமிடுகளின் எடைக்கு ஈடானதாக இருக்கும் என்கிறது.
புது வகையான கணினிகளையும், கைப்பேசிகளையும் ‘வித்தியாசமாக யோசித்து’ வாங்குங்கள் என்று நமக்கு சொல்லப்படும்போது இது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. ஒரு வருடத்திற்கு 300 மில்லியன் கணினிகளும், 1 மில்லியன் கைப்பேசிகளும் உற்பத்தி செய்யப் படுகின்றன. 2009ன் அய்நா சுற்றுச்சூழல் நிகழ்ச்சி பற்றிய திட்டம் ஒன்று, 2020 வாக்கில் இந்தியாவில் கணினி மூலம் உருவாகும் மின் னணு கழிவு 5 மடங்கும், கைப்பேசி மூலம் உருவாகும் கழிவு 18 மடங்கும் உயர்ந்திருக்கும் என்கிறது. இந்தக் கழிவுகளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? வளர்ந்த நாடுகள் அவர்கள் நாட்டு குப்பைக் கிடங்கில் கொட்டுவார்கள் அல்லது பெரும் அளவிலான கழிவுகளை ஏழை நாடுகளில் கொட்டி அந்த நாட்டு குப்பைகளோடு சேர்த்து இதையும் சமாளிக்கட்டும் என்று விட்டுவிடு வார்கள். நாம் எங்கே போய் கொட்ட முடியும்?
நம் நாட்டில் சட்ட வரையறை ஏதும் இல்லாதிருப்பதால், 90% மின்னணு கழிவுகள் மறுஉற்பத்தி செய்யப்படும்போது, எது மாதிரியான ‘டிஜிட்டல் இந்தியாவை’ பிரதமர் மனதில் வைத்திருக்கிறார்? இங்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் சுற்றுப்புறங்களையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நமது டிஜிட்டல் வருங்காலத்திற்காக தம் வாழ்வை இழந்து கொண்டிருக்கும், மின்னணுக் கழிவில் வேலை செய்யும் 4 - 5 லட்சம் குழந்தைகளை நாம் எவ்விதமான கனவுகாணச் சொல்ல முடியும்?
இறுதியாக மோடி, சுற்றுலா ‘பரம ஏழைகளுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும்’ என்று சொல்லி மாயாஜால வித்தை காட்டப் பார்க்கிறார். உலக சுற்றுலாவும் அதன் விளைவான அதிகரித்த விமானப் பயணமும் தட்பவெப்ப நிலை மாறுதலுக்கு மிகப் பெரிய பங்களிக்கின்றன என்பதை காணத் தவறுகிறார். இதோடு கூடவே சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சுற்றுலா பற்றிய அழுத்தம் தராமல் இருப்பதும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மந்தைக் கூட்டம் போல் வருவதும் ஏற்கனவே விமானப் போக்குவரத்தால் பாதிக் கப்பட்டுக் கிடக்கும் ஓசோன் மண்டலத்தை இன்னும் பாதிப்படையச் செய்வதில் பங்காளி களாகவே ஆக்கும்.
எனவே குப்பை என்பது சுற்றியிருக்கிற இடத்தில் சிறிய அழுக்குகளை விட்டுச் செல்வது என்பது மட்டுமல்ல. மாறாக மனிதகுல வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உற்பத்தி மற்றும் நுகர்வு கட்டமைப்பு முறையினால் மலை போல் குவியும் ஆபத்தான கழிவுகள் மற்றும் மாசுக்களை உருவாக்குவதும், அதை அப்புறப்படுத்த ஒப்பீட்டுரீதியான முன்னேற் றங்கள் இல்லாமல் இருப்பதுமாகும். இதே கட்டமைப்பு நெருக்கடிக்கு வினையாற்றாவிட்டால், உலகத்தின் மோசமான காற்று மாசுபாடு அடைந்துள்ள 20 நகரங்களில் இந்தியாவில் 13 நகரங்கள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் பட்டியலிடும்போது, குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவதை உத்தர வாதம் செய்துவிட்டால் போதும் என்ற, சுத்த மாக இருப்பது பற்றிய மாயைகளில் நாம் இருப்பவர்களாகி விடுவோம்.
உலகம் முழுவதும் கழிவுகளையும், மாசு படுதலையும் குறைக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், தங்குதடையற்ற தொழிற்சாலை உற்பத்தியினாலும், நகர்மயமாக்கலினாலும் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உலகத்தின் பொருளுற்பத்தி மற்றும் டிஜிட்டல் மய்யமாக உருவாக வேண்டும் என்று விரும்புவதாலும் வீரியம் இழக்கச் செய்யப்படுகிறது. 2025ல் தெற்கு ஆசியா அதிலும் குறிப்பாக இந்தியா கழிவுகளை உருவாக்குவதற்கான பிராந்தியமாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று ஹோர்ன் வெக் கணிக்கிறார். சுத்தமாக இருப்பது மற்றும் சுகாதாரத்திற்கு மோடி மகாத்மா காந்தியை அழைக்கிறார். ஆனால் காந்தி சூறாவளி விளைவுகள் முழுமையாக தெரிவதற்கு முன்பே, அப்போதே தொழிற்சாலை நவீனத்தில் ஆன்மா அற்ற தன்மை பற்றி விமர்சனம் செய்திருப் பதை மோடி ஏனோ மறந்துவிட்டார்.
(டாக்டர் நிஸ்ஸிம் மன்னுத்துக்கரன் கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்)