என்டிபிசி நிறுவனம் 2012 - 2013க்கு ஈவுத் தொகையாக அரசுக்கு ரூ.4,700 கோடி கொடுத் துள்ளது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். தனியார் மின் உற்பத்தி நிலையங்களும் பிற தனியார் நிறுவனங்களும், வரிசலுகைகள் எல்லாம் போக, வரி கட்டிவிட்டு மீதியை பைக்குள் போட்டுக்கொள்ளும். அதனால், பொதுத்துறை நிறுவனங்களை போற்றி வளர்த்தால், அரசுக்கு வருவாய் இருக்கும். மக்கள் நலத்திட்டங்களுக்கு, வேறு வேறு திட்டங்களுக்கு, நிதி இல்லை என்ற பாட்டு பாடாமல் இருக்கலாம். கையில் உள்ள வெண்ணெய்யை விற்றுவிட்டு விஷத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசு பங்குகளை விற்க ரூ.58,000 கோடி இலக்கு வைத்திருக்கிறார்கள். அய்டிசி, எல்அண்டுடி ஆகிய தனியார் நிறுவனங்களில் அரசு பங்குகள் முறையே ரூ.31,500 கோடி, ரூ.12,100 கோடி மதிப்பில் உள்ளன. இவற்றை விற்றால் ரூ.43,000 கோடி கிடைத்துவிடும். இவற்றை விற்க அரசு தயக்கம் காட்டுகிறது. பிரமாதமான காரணம் சொல்கிறார்கள். அய்டிசி நிறுவனத்தில் உள்ள அரசு பங்குகளை அந்நிய நிறுவனங்கள் வாங்கி விட்டால் புகையிலை தொழில் அந்நிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் போய்விடுமாம். எல் அண்டுடி நிறுவனம் ராணுவம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அந்த நிறுவனத்தில் அரசு பங்கு வேண்டுமாம்.
இதைத்தானே நாடு முழுவதும் இருக்கிற மக்களும் சொல்கிறார்கள். அந்நிய நிறுவனங்கள் நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க வழி விடாதீர்கள், ராணுவம் போன்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் தனியாரையும் அந்நியரையும் அனுமதிக்காதீர்கள் என்று சொல்லித்தான் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும்போது அரசுக்கு இல்லாத இந்த அக்கறை தனியார் நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்கும்போது பீறிட்டு எழுகிறது.
புகையிலை தொழில் நாட்டுக்கு என்ன அவசியம்? பசித்திருக்கும் மக்கள் புகையிலையைத்தான் பசி தீர உண்கிறார்களா? அய்டிசி நிறுவனம் எப்படி போனால்தான் உங்களுக்கு என்ன? எல் அண்டு டி நிறுவனத்திடம் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஏன் ஒப்படைக்க வேண்டும்? நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் நலன்களுக்காக கொள்கைகள், நடவடிக்கைகள் வகுத்துவிட்டு, அனைத்தும் சாமான்ய மக்களுக்காகவே செய்கிறோம் என்கிறார்கள்.
இதைத்தான், முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக் காகவே என்று முதலாளித்துவத்தைப் பாதுகாப் பவர்கள் வாதாடுகிறார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது.
அய்டிசி, எல் அண்டு டி நிறுவனங்களில் அரசு எப்போது பங்கு வாங்கியது என்பது பற்றி சுவாரசியமான காரணக் கதை சொல்கிறார்கள். நாட்டு மக்களின் சிறுசேமிப்பை முறையாக நிர்வகிக்காமல் யுடிஅய் நெருக்கடியில் சிக்கிய போது, அதைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு எஞ்சிய சொத்துக்கள், யுடிஅய் சிறப்பு நிறுவனத்திடம் நின்றன. இந்த சொத்துக்கள், அய்டிசி, எல்அண்டுடி நிறு வனங்களின் பங்குகள். ஆக்சிஸ் வங்கியிலும் யுடிஅய் சிறப்பு நிறுவனத்தின் ரூ.11,500 கோடி மதிப்பிலான பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை எல்லாம் விற்றால் அரசுக்கு ரூ.55,000 கோடி வந்துவிடும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டியிருக்காது.
மோடி அரசின் திட்டத்தில் ரூ.4,700 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ள என்டிபிசி, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களில் உள்ள அரசு முதலீடு அகற்றப்படவுள்ளது. கோல் இந்தியா தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விசயங்களில் அய்முகூ ஆட்சி முன்னெடுத்து பாதியில் விட்டதைத் தொடர் வதுதான் இப்போது செய்யப்படவுள்ளது.
மோடி அரசு இன்னும் ஒரு கூடுதல் சாய்வு நடவடிக்கையை வழக்கமான விளம்பரமின்றி எடுத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விசாரணையில் 1992 முதல் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து, பல தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது தெரிந் தும், நாங்கள் வேற மாதிரி என்று காட்ட, தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் புதிதாக நிலக்கரிச் சுரங்க ஏலத்துக்கு தயார் என்றும் சொன்னது மோடி அரசு.
ஆனால் மறுபக்கம் மோடிக்கு நெருக்கமானவரான, மின்உற்பத்தியில் டாடாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள அதானியின் மின்உற்பத்தி நிறுவனம் உட்பட்ட தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் கோடி கோடியாக பணம் பண்ணும் விதம் நிலக்கரியின் விலையை டன்னுக்கு ரூ.1,500 என்று நிர்ணயித்துள்ளது. அரசு இந்த குறைந்த விலை நிர்ணயிக்கவில்லை என்றால், தனியார் நிறுவனங்களின் ஒன்பது மின்உற்பத்தித் திட்டங்கள், தங்கள் மின்உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்க, அல்லது, இறக்குமதி செய்ய டன்னுக்கு ரூ.4,000 செலவிட வேண்டும். (வெங்காயம், தக்காளி, பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படியாகும் விதம் நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் இந்திய மக்கள். அவர்கள் குரல் ஆட்சியாளர்கள் காதுகளில் விழுவதே இல்லை).
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் நிலக்கரி வாங்குவதால், ஒன்பது தனியார் மின் உற்பத்தி திட்டங்கள் ஆண்டுக்கு ரூ.6,085 கோடி மிச்சப்படுத்தும். வேறு வகையில் சொல்வதானால், அரசுக்கு ரூ.6,085 கோடி இழப்பு ஏற்படும். அய்முகூ அரசாங்கம் போல் நாங்கள் திரைமறைவில் செய்யவில்லை, நேரடியாகவே செய்கிறோம் என்கிறார் மோடி. இதற்கும் காரணம் சொல்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால், மின்உற்பத்தி தொழிலில் செய்யப்பட்டுள்ள முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டால், அது வங்கிகளை பாதிக்குமாம். அதாவது, தனியார் நிறுவனங்கள் மின்உற்பத்தியில் முதலீடு செய்ய கடன் தந்த வங்கிகள் நலன் காக்கத் தான், அரசு முதலாளிகளுக்கு சலுகை விலை யில் நிலக்கரி தருகிறது என்கிறார்கள்! முதலாளி வங்கியில் கடன் வாங்கிக்கொள்வார். அரசிடம் சலுகைப் பெற்றுக்கொள்வார். லாபம் மட்டும் தன்னுடையது என்பார்.
நிலக்கரி பற்றாக்குறையால் என்டிபிசியின் சில அலகுகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளை எடுப் பதற்குப் பதிலாக, சில தனியார் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிப் பதற்கு உதவ, நடவடிக்கைகள் மேற்கொள்கிறது இன்றைய அரசு. நிலக்கரி வழங்கும் அரசின் உறுதிக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு, கோல் இந்தியா நிறுவனத்துடன் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் போட பல மின்உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கும் போது, உறுதிக் கடிதமோ, ஒப்பந்தமோ இல்லாமல் ஒன்பது தனியார் மின்உற்பத்தி திட்டங்கள் குறைந்த விலையில் நிலக்கரி பெறும். அரசு நிர்ணயித்துள்ள சலுகை விலையில் நிலக்கரி வாங்கினால், அதானியின் இரண்டு மின்உற்பத்தி நிறுவனங் கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,518 கோடி முதலீட்டிலேயே மிச்சப்படுத்தும். ஒவ்வோர் ஆண்டும் இது தொடரும். அய்முகூவின் நிலக்கரி ஊழலில் நாட்டுக்கு ரூ1.86 லட்சம் கோடி இழப்பு எனச் சொல்லிச் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் வெறும் மூன்று மாதங்களிலேயே, ரூ.6,085 கோடி இழப்புக்கு வழிசெய்துவிட்டார்கள்.
ஆனந்த சுதந்திரம் அடைந்ததற்குப் பள்ளுப் பாடச் சொன்னான் பாரதி. சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆனந்தம்தான், அதானிகளுக்கு, அம்பானிகளுக்கு மட்டும் என்று சுருங்கிவிட்டது. இன்று பாசிச சக்திகள் ஆட்டம் போட இடமும் உருவாகிவிட்டது. இந்த நிலைமைகளில் தலைகீழ் மாற்றம் வந்தால்தான், அய்யா, நீ சொன்ன ஆனந்தப் பள்ளு.