கல்வி மருத்துவம் சுகாதாரம் குடியிருப்பு கோரிக்கைகளுக்காக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திய நாங்கள், உழைப்பவர் எவரானாலும் ரூ.15,000 மாத சம்பளம், சாராயக் கடைகளை மூட வேண்டும், வீட்டுமனை தருவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு சிறைக்குப் போகிறோம், எங்களுடன் சிறை நிரப்ப வாருங்கள், நிதி தாருங்கள் எனச் சொல்லி ஏஅய்சிசிடியு தலைமையில் தொழிலாளர் தோழர்கள் மக்கள் மத்தியில் செல்கின்றனர்.
ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாட்டை நோக்கி, மக்கள் சந்திப்பு இயக்கத்தினை நடத்தி வரும் ஏஅய்சிசிடியு தோழர்கள் ஒரு சமூக ஜனநாயகவாத கட்சியின் கிளைச் செயலாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஏஅய்சிசிடியு தோழர்களை வெறுப்புடன் பார்த்தார். அவர்கள் உரையாடல் பின்வருமாறு:
சமூக ஜனநாயகவாத கட்சியின் கிளைச் செயலாளர் (சஜககிசெ): எங்களைப் பார்த்து மக்கள் சந்திப்பு இயக்கம் காப்பி அடிக்கிறீர்களா?
ஏஅய்சிசிடியு தோழர் (ஏதோ): இல்லை தோழரே, நாங்கள் ஜூன் மாதமே முடிவு செய்துவிட்டோம். சிறை நிரப்பும் போராட்டம் அக்டோபரில் நடத்த உள்ளோம்.
சஜககிசெ: ஏன் ஜவ்வுமாதிரி இழுத்துக் கொண்டே போகிறீர்கள்? எங்களைப் போல் காப்பியடித்து, போராட்டமும் சீக்கிரம் முடித்திருக்கலாமே.
ஏதோ: நீங்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் பற்றி தாமதமாகப் புரிந்து கொண்டு, அவசரமாகத் தொடங்கி அவசரத்தில் முடித்ததாகத் தெரிகிறது. எப்படி ஆயினும் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் யார் நடத்தினாலும், வரவேற்கிறேன். இந்த இயக்கத்தை அதன் உண்மையான பொருளில் நடத்துவதிலும், நடைமுறையில் விளைவுகளை கைப்பற்றுவதிலும்தான் நம் எதிர்காலம் இருக்கிறது.
ஏதோ: மக்கள் சந்திப்பு இயக்கம் எத்தனை நாட்கள் நடத்தினீர்கள்? எப்படி நடத்தினீர்கள்?
சஜககிசெ: 500 பிரசுரங்கள் தந்தார்கள்.
ஏதோ: யார்?
சஜககிசெ: தலைமையில் இருந்து தந்தனர்.
ஏதோ: ஓ.கே. அப்புறம் என்ன செய்தீர்கள்?
சஜககிசெ: கிளை தோழர்களை அழைத்துக் கொண்டு போய் வீடுவீடாக தந்தோம். பிரசுரத் திற்கான நன்கொடை கிடைத்துவிட்டது.
ஏதோ: அப்படியா? எத்தனை நாட்கள் போனீர்கள்?
சஜககிசெ: அதுவா? அது ஒரே நாள். அப்புறம், ஒரு போராட்டம் நடந்தது.
ஏதோ: என்ன போராட்டம்?
சஜககிசெ: பட்டினிப் போராட்டம்.
ஏதோ: எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?
சஜககிசெ: ஒரு வேன் பேசி அழைத்துப் போய் கூட்டி வந்தார்கள். 12 பேர்.
ஏதோ: கிளையில் எவ்வளவு பேர்?
சஜககிசெ: 30 பேர்.
ஏதோ: எப்படி பிரச்சாரம் செய்தீர்கள்?
சஜககிசெ: பிரசுரத்தை கொண்டு போய் கொடுத்தோம்.
ஏதோ: அவ்வளவுதானா?
சஜககிசெ: மக்கள் நிதி கொடுத்தார்கள்.
ஏதோ: எவ்வளவு?
சஜககிசெ: சில ஆயிரங்களில் கொடுத்தார் கள். பிரசுரத்திற்கான கட்டணம், போராட்டப் பயண செலவு போக மீதி இருப்பு கிளையி லேயே உள்ளது.
ஏதோ: உங்கள் அமைப்பில் இருப்பது போல் கீழ்மட்ட அமைப்புக்கள் மிகவும் திறமை யாக இயங்க வேண்டும் என்பது எங்களுக்கும் ஆசைதான். ஆனால், எங்கோ இடைவெளி உள்ளது. நாங்கள் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். (உரையாடல் இங்கே முடிகிறது)
அந்தக் கட்சியின் அமைப்பு பலத்தால் சில நாட்களில் சில லட்சம் மக்களை பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். நமது அமைப்பில் 100 பேர் 10,000 பேரை பார்க்கச் சொல்கிறோம். அவர்கள் 100 பேர் 100 பேரை பார்ப்பதே இலக்காக சொல்கிறார்கள்.
ஏஅய்சிசிடியு பிரச்சார இயக்கம் சரியான சூழலில் நடத்தப்படுவதை, பிரச்சாரத்தில் சந்திக்கும் மக்களின் பதில்வினைகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.
பிரச்சாரம் கூடுதல் நேரம் எடுக்கிறது. பத்து பேர் ஒரு தெருவுக்குள் போனால் எவ்வ ளவு குறைவாக பேசினாலும் 300 வீடுகளைத் தான் பார்க்க முடிகிறது. நம் தோழர்கள், பேசு வதை மக்கள் ஏற்கிறார்கள், அவர்கள் நெருங்கி பேசுவதால் அவர்களை தட்டிக் கழிக்க தோழர் களால் முடியவில்லை. கவலைகள், எதிர்பார்ப்பு கள், விருப்பங்கள் என மக்கள் தோழர்களுடன் பரிமாறிக் கொள்கிறார்கள். போராட்டப் பங்களிப்பாக நிதி தருகிறார்கள். தோழர்களும் பத்திரிகை தருகிறார்கள், சந்தா, உறுப்பினர் சேர்ப்பு என பிரச்சாரம் தொடர்கிறது. இது போன்ற ஊடாடலை, சந்திக்கிற 300 வீடுகளில், 15 வீடுகளில் காண முடிகிறது.
100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள், போராட்டம் பற்றி தோழர்கள் பேசுவதைக் கேட்டு நிதியும் தருகிறார்கள். இன்னும் ஒரு 100 வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள், வரவேற்கிறார்கள். தோழர்கள், அரசுப் பள்ளி, முதியோர் பென்சன் கேட்டு போராட்டம், எனச் சொல்லிவிட்டு வருகிறார்கள்.
சில வீடுகளில் விவாதமே இருக்காது. கேட் திறக்காது. துண்டுப் பிரசுரம் பறக்காமல் இருக்குமா என்ற கவலையுடன் தோழர்கள் கேட்டின் மீது சொருகிவிட்டு வருகிறார்கள். இது பார்த்தவர் கணக்கிலும் வராது.
சில வீடுகளில் தோழர்கள் விந்தையான விஷயங்களைச் சொல்வதாக, விற்பனை பிரதி நிதியை பார்ப்பது போல் பார்ப்பார்கள். நிதி கேட்டால் இல்லை என்பார்கள். சரி, நன்றி படியுங்கள் என்று சொல்லி துண்டு பிரசுரத்தைத் தந்து விட்டு தோழர்கள் புறப்படுவார்கள்.
சில வீடுகளில் கிண்டல் கேலி உள்ளிட்ட அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்டு தம் வர்க்க இயல்பை வெளிப்படுத்துவார்கள். உங்களால் என்ன முடியும் என கேட்பார்கள். யாராலும் எந்த நிலையும் மாறாது என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். தோழர்களை பிய்த்துக் கொண்டு வரவேண்டியிருக்கும்.
மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தோழர்களின் அனுபவங்களை எழுதிக்கொண்டே போகலாம். வகைமாதிரி ஊடாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
இப்படித்தான் சென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடக்கிறது. அம்பத்தூரில் அய்ந்து டிவிசன்களிலும், ஒன்றரை லட்சம் மக்களை சந்திக்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டதில், மாவட்ட ஏஅய்சிசிடியு தலைவர் தோழர் பழனிவேல் உதவியுடன், மோகன், கண்ணன், தலைமையில் 10,000 குடும்பங்களை (வீடுகளை), 25,000 பேரை சந்திக்க 120 பேர் 16 நாட்கள் பங்கெடுத்துள்ளனர். ரூ.20,000 நிதி திரட்டி உள்ளனர்.
முனுசாமி, லில்லி, வேணுகோபால், பால கிருஷ்ணன் ஆகிய தோழர்கள் தலைமையில் நடந்து வரும் இயக்கத்தில் தொழிற்சாலை நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கட்சிக் கிளை செயலாளர்கள், முன்னோடிகள் என 90 தோழர் கள் பங்கேற்புடன் மங்களபுரம், மண்ணூர்பேட் டையில் 5,000 குடும்பங்கள், 15,000 பேரை சந்தித்துள்ளனர். ரூ.7,500 நிதி திரட்டியுள்ளனர்.
தோழர்கள் பசுபதி, வீரராகவன், மணி, சேகர், வீரப்பன், ராஜேந்திரன், இவர்களுடன் 70 தொழிற்சாலை சங்க கிளைகளின் தோழர் கள், 14 நாட்கள், சராசரியாய் 2 மணி நேரம் என 2,500 குடும்பங்களைச் சந்தித்துள்ளனர். ரூ.8,000 நிதி திரட்டியுள்ளனர். வரதராஜபுரம், முகப்பேர், ஒரகடம் பகுதிகளிலும், 2,500 குடும்பங்களையும் சந்தித்துத்துள்ளனர்.
மக்களை சந்தித்த குழுக்களின் வேலைப் பகுதிகளில் 2014 தேர்தலில் நமக்குக் கிடைத்த வாக்குகளை செல்வாக்காக மாற்றுவதை மனதில் கொண்டு தலைமை தாங்கும் தோழர்கள் செயல்பட்டுள்ளனர். தோழர்கள் இந்த இயக்கத்தில் சந்தித்த மக்கள் மத்தியில் இருந்து அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அணிதிரட்டுவது, அவர்கள் மத்தியில் இருந்து கட்சி உறுப்பினர் சேர்ப்பது ஆகிய அடுத்த கட்ட கடமைகளை நிறைவேற்றும், பல்முனைப் பட்ட, பல பரிமாண வேலைகளை எடுத்துச் செல் லும் வாய்ப்புகளையும் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் இன்னும் நிதானமாக இன்னும் நிறைய நேரம் செலவு செய்து மக்களைச் சந்திக்கவே நாம் விரும்புகிறோம். மீண்டும் இதேபோன்ற முயற்சிகள் அக்டோபர் 5க்கு பிறகு மேற்கொள்ளப்படும்.
இந்தப் பகுதிகளை தாண்டியுள்ள மக்கள் மத்தியிலும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் 1,00,000 பேர் சந்திப்பு நிறைவுறும்.
மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஊடேயே காஷ்மீர் மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கையில் செப்டம்பர் 10 - 14 தேதிகளில் 200 பேரை ஈடுபடுத்தி நிதி திரட்டும் இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள ஜிம்கானா கிளப், காஞ்சி மருத்துவமனை, அகர்வால் பவன், அரசு அச்சகம் கிளைகளின் தோழர்கள், வடசென்னை, அயனாவரம், பெரம்பூர் ஆகிய மய்யங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தோழர்கள் பொன் ராஜ், பி.டி.ராஜசேகர், குப்பாபாய், ஜேம்ஸ், பழனி, கதிரேசன், எம்.ஆர்.பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். 15,000 பேரை சந்தித்துள்ளனர் ரூ.7000 நிதி திரட்டியுள்ளனர்.
செப்டம்பர் 15 முதல் பாதயாத்திரைகள், தெருமுனைக்கூட்டங்கள், ஊர்க் கூட்டங்கள் மூலம் பரவலாக மக்களை சந்திப்பது, திருபெரும்புதூரின் இளம்தொழிலாளர்கள், திருவெற்றியூரின் பாரம்பரிய தொழிற்சாலைகளின் தொழிலாளர் மத்தியில் என மக்கள் சந்திப்பு இயக்கம் விரிவடையும்.