இந்திய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்தவரும், தீப்பொறி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மாநிலக் குழு உறுப்பினராக இருந்தவருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தோழர் நாராயணன் ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவர் இந்திய மக்கள் முன்னணியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராகவும் இருந்து செயல்பட்டார். பல்வேறு அரசியல் இயக்கங்கள் இணைந்து செப்டம்பர் 14 அன்று தஞ்சையில் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறைந்த தோழருக்கு தீப்பொறி அஞ்சலி செலுத்துகிறது.