COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 22, 2016

தலையங்கம்
தமிழ்நாட்டின் எதிர்காலம் பட்டினி கிடக்கிறது
திருபெரும்புதூரில் அய்க்கிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்து இப்போது வெளியேற்றப்பட்டிருக்கும் பயிற்சி தொழிலாளி ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.
காஷ்மீரிடம் இந்தியா என்ன சொல்ல வேண்டும்?
காஷ்மீர் விஷயத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
எஸ்.குமாரசாமி
காஷ்மீரிடம் இந்தியா என்ன சொல்லக் கூடாது என்பதற்கான மூன்று விஷயங்களை முதலில் பார்ப்பது நல்லது.
தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் மறுப்பு
சாதியாதிக்க சக்திகளுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக அரசு
பழ.ஆசைத்தம்பி, எஸ்.இளங்கோவன்
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திரம் ஒரு கேடா என்று வெள்ளையன் அன்று கேட்டதாக பாரதி சொன்னான். தொண்டு செய்யும் அடிமை உனக்கு வழிபாடு ஒரு கேடா என்று இன்று ஆதிக்க சாதிகள் தலித் மக்களிடம் கேட்கின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 
மக்கள் மீது மோடி அரசின் மற்றுமொரு தாக்குதல்
கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று மோடி அரசு கடுமையாக, விடாப்பிடியாக முயற்சி எடுக்கிறது என்றால், காங்கிரசும் அந்த முயற்சிக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறது என்றால், பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டாடுகின்றன என்றால், அப்படி கொண்டு வரப்படும் ஒரு சட்டம் நிச்சயம் நாட்டின் வறிய மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டமாகத்தான் இருக்க முடியும்.
கல்வியை காவிமயமாக்கும், வணிகமயமாக்கும் 
கார்ப்பரேட் நலன்களுக்கான புதிய பாசிச கல்விக் கொள்கை
ஆர்.வித்யாசாகர்
எல்மிலியோ பவுலேலோ என்பவர் 1946ல் இத்தாலிய முசோலினியின் பாசிச கல்விக் கொள்கை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
ஆற்றலை யதார்த்தமாக்குவது நோக்கி ஏஅய்சிசிடியு பயிலரங்கு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க முன்னணிகள் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் திருபெரும்புதூரில் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் நடைபெற்றது.

Monday, August 1, 2016

திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை 2016 - 2017

தலையங்கம்
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை
கடன் எங்கே போகிறது...? கன்டெய்னரைத் தேடி....
மறுபடியும் மொதல்ல இருந்தா...? பொதுவாக நம்மை சிரிக்க வைக்கும் இந்த வசனம், 2016 - 2017 ஆண்டுக்கு தமிழக நிதியமைச்சர் முன்வைத்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களோடு சேர்த்துப் பார்க்கும்போது வேதனை தட்டுகிறது.
ஒரு சட்டத் திருத்தம் உயிர் பெற்றது
எஸ்.குமாரசாமி
எட்டு ஆண்டுகளுக்கு முன்,  தமிழ்நாட்டின் சட்டமன்றம், 14.05.2008 அன்று சட்டத் திருத்த மசோதா எண்.47/2008அய், ஏகமனதாக நிறைவேற்றியது.
இககமாவின் வங்க வழி என்ற தற்கொலை பாதை பற்றிய பிரதிபலிப்புகள்
அரசியல் பார்வையாளர்
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1962 இந்திய - சீனப் போர், நேருவின் மறைவு, 60களின் நடுப்பகுதியில் இருந்த கடுமையான பொருளாதார நெருக்கடி என்ற பின்னணியில் இந்தியா முழுவதும், காங்கிரஸ் அதன் முதல் பெரிய சரிவை சந்தித்தபோது, மேற்குவங்கத்தில் காங்கிரசில் இருந்து பிரிந்த வங்க காங் கிரஸ், மேற்குவங்கத்தில் இககமாவின் தற்காலிக செயல்தந்திர கூட்டாளியானது.
குஜராத் நாறுகிறது மோடி ஆட்சியில் நாடே நாறுகிறது
குஜராத் நாறுகிறது. குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 2,500 மாடுகள் இறந்துபோவதாகச் சொல்லப்படுகிறது.
குஜராத் நாறுகிறது மோடி ஆட்சியில் நாடே நாறுகிறது
குஜராத் நாறுகிறது. குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 2,500 மாடுகள் இறந்துபோவதாகச் சொல்லப்படுகிறது. குஜராத் தலித்துகள் செத்த மாடுகளை அகற்ற மறுக்கின்றனர். குஜராத்தின் வீதிகளில் செத்துக் கிடக்கும் மாடுகள் நாற்றம் எடுக்கத் துவங்கிவிட்டன. உங்கள் தாய்க்கு நீங்களே இறுதிச் சடங்கு செய்யுங்கள் என்று அங்குள்ள தலித் மக்கள் ஆர்எஸ்எஸ்ஸின் பசுப் பாதுகாப்பு அமைப்பினரிடம், அவர்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளிடம், ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் செயல்படும் அரசியல்வாதிகளிடம் சொல்கிறார்கள்.
மனதோடு பேசுவதில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி இந்தப் பிரச்சனையில் தொலைவில் இருந்து கூட பேச மறுக்கிறார். குஜராத்தோடு கூடவே அவரது தூய்மை இந்தியாத் திட்டமும் நாற்றம் அடிக்கிறது.
மாட்டுக்கறி வைத்திருந்தார் என்பதற்காக தாத்ரியில் அடித்தே கொல்லப்பட்ட அக்லக் குடும்பத்தார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆர்எஸ்எஸ்ஸின் பசுப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு துணிச்சல் தந்திருக்க வேண்டும். இசுலாமியரைக் கொன்று குவிக்க திட்டம் தீட்டித் தந்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் நாட்டின் பிரதமராகிவிட முடியும் என்ற வாய்ப்பு இருந்த மண்ணில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினால், நாளை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் இடம் கிடைக்கும் என அவர்கள் கருதியிருக்கக் கூடும்.
குஜராத்தின் சவுராஷ்ட்ரா பிராந்தியத்தில் உனா என்ற இடத்தில் நான்கு தலித்துகளை பொது இடத்தில் காரில் கட்டி இரும்புத் தடிகளால் பசுப் பாதுகாப்பு அமைப்பினர் கடுமையாக தாக்கினார்கள். அந்தக் மிருகத்தனமான தாக்குதலை பொது மக்களுடன் காவல்துறையினரும் சேர்ந்து வேடிக்கைப் பார்த்தார்கள். ஜுலை 11 அன்று நடந்த அந்தத் தாக்குதலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டார்கள். அதன் மூலம் பசு வதை செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதாகச் சொன்னார்கள்.
அந்த தலித் இளைஞர்கள் இறந்துபோன பசுவின் தோலை அகற்றிக் கொண்டிருந்தார்கள். சிங்கங்களால் கொல்லப்பட்ட பசுவை அகற்ற அதிகாரிகள்தான் அவர்களை அழைத்திருந்தார்கள். அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அவர்கள் அந்த வேலையையும் செய்து கொண்டிருந்தார்கள்.
தலித்துகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக, குஜராத்தில் 16 தலித்துகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள். அவர்களில் ஒருவர் இறந்துபோனார். தாக்குதலுக்கு உள்ளான ஒருவரும் ரத்த வாந்தி எடுப்பதாக செய்திகள் வந்துள்ளன. திடீரென்று ஒரு பசுப் பாதுகாப்பு அமைப்பு வந்து தாக்குதல் நடத்தியதால் மட்டும் இந்த எதிர்ப்பு குஜராத்தில் நிகழவில்லை. குஜராத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு களும் கொடுமைகளுமே இன்று நடக்கும் வெடிப்புக்குக் காரணமாகியுள்ளது. உனாவில் இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள 26 நீதிமன்றங்களில் 4,578 தலித் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஒரு தகவல் சொல்கிறது.
பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் குஜராத் தலித் மக்கள் இறந்த பசுக்களை அரசு அலுவலகங்களில் கொண்டு போய் போட்டிருக்கிறார்கள். பசுப் பாதுகாப்பு அமைப்பினர் பசுக்கள் எதுவும் சாகக் கூடாது என்று தங்கள் தெய்வங்களிடம் இப்போது வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று கூட பசுப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார்.
குஜராத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெருஞ்சீற்றத்தை உருவாக்கியிருக்கும் இந்தத் தாக்குதலும் இந்தத் தாக்குதல் பற்றிய மோடியின் மவுனமும் அம்பேத்கரைக் கடத்த முயற்சி செய்யும் மோடி அரசாங்கத்தை முழுவதுமாக அம்பலப்படுத்தியுள்ளது. மோடியின் மவுனம், மத்தியபிரதேசத்தில் இசுலாமிய பெண்கள் இரண்டு பேர் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று தாக்கப்பட்டதற்கும் அடுத்து இட்டுச் சென்றுள்ளது. உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பீகார், மகாராஷ்டரா, மத்தியபிரதே சம் என நாடு முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இசுலாமியர்களும் தலித்துகளும் தாக்கப்படுவதற்கு, தொடர்ந்து காரணமாக உள்ளது.
மாட்டிறைச்சியின் பெயரால் சங்பரிவார் கும்பல்கள் நடத்திய நரவேட்டைக்கு பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பீகார் மக்கள் சரியான பதில் தந்தார்கள். இப்போது, மீண்டும் மாட்டிறைச்சியின் பெயரால் தாக்குதல்களை, தலித் ஒடுக்குமுறையை சங்பரிவார் கும்பல் தீவிரப்படுத்தியுள்ளது. மாயாவதியை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசிய தயாசங்கர் ஓடி ஒளிய நேர்ந்துள்ளது. அம்பேத்கர் எங்களவர் என்று சொல்லிக் கொண்டே அம்பேத்கர் பவனை இடித்துத் தள்ளுவதற்கு எதிராக மும்பை மிகப்பெரிய போராட்டக் களமானது. சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது இப்போது நடக்கும் சங் கும்பல்களின் தாக்குதல்களுக்கு உத்தரபிரதேசத் தேர்தல் களம் பதிலடி தரக்கூடும்.
காஷ்மீர்
ஒரு ‘தேசபக்தர்’ மற்றும் சில ‘தேச விரோதிகள்’ குரல்கள்
‘தேசபக்தரின்’ குரல் என்றால், அது, சங் பரிவார் குரல்தான் என்று தீப்பொறி வாசககர்களுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீர் பிரச்சனை பற்றி, மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் கட்டுரையை 26.07.2016 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு பிரசுரம் செய்துள்ளது.
நெல்லையில் சாதிவெறி மதவெறி சக்திகளின் தாக்குதல். இகக மாலெயின் தோழர் மாரியப்பன் படுகொலை
“எனக்கு கட்சியும் சங்கமும் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. இப்போ அவர் செத்த பிறகு, இந்த மக்களுக்காக கட்சி இருக்குங்கிறதை அவர்கள் தெரிஞ்சுக்க வாய்ப்பா இருக்கட்டுமே... அவரை இன்னும் இரண்டு நாள் கழிச்சுகூட வாங்கிக்கலாம்...”
காஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும் தமிழக வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம்
ஜுலை 17 அன்று திருநெல்வேலியில் காஷ்மீர் மக்களுக்கு நீதி வேண்டும். அங்கே குண்டுகளும் தெறி குண்டுகளும் வேண்டாம். காஷ்மீருக்கு அரசியல் தீர்வு வேண்டும்.

Search