ஏப்ரல் 22, 2018, மத்திய கமிட்டியின் அறைகூவல்
மோடி ஆட்சியின் சங் படையினரின் பாசிச தாக்குதலை முறியடிக்க ஒன்றுபட்ட மக்கள் எதிர்ப்பை கட்டவிழ்த்துவிடுவோம்!
இகக மாலெ உருவாக்கப்பட்டதன் அய்ம்பதாவது ஆண்டில்
கட்சியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம்!
2018, ஏப்ரல் 22 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உருவாக்கப்பட்ட அய்ம்பதாவது ஆண்டு துவங்குகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தருணத்தில், இந்திய மக்களின் புரட்சிகர லட்சியத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான தியாகிகள் அனைவருக்கும் மத்திய கமிட்டி வணக்கம் செலுத்துகிறது. கட்சியை உருவாக்கி இந்த சவால்மிக்க புரட்சிகர பயணத்தினூடே வழிநடத்திய, நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர்கள் அனைவருக்கும் மத்திய கமிட்டி அஞ்சலி செலுத்துகிறது. எல்லாவிதமான பாதகமான நிலைமைகள், ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்கொண்டு, செங்கொடியை உயர்த்திப் பிடித்த கட்சியின் எல்லா உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மத்திய கமிட்டி புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. கட்சியின் பத்தாவது காங்கிரசை மான்சாவில் வெற்றிகரமாக நடத்தியதற்காக குறிப்பாக பஞ்சாப் தோழர்களுக்கு மத்திய கமிட்டி வாழ்த்துகள் தெரிவிக்கிறது.
பாசிச மோடி ஆட்சியை வெளியேற்ற அனைத்தும் தழுவிய மக்கள் எதிர்ப்பைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கட்சியின் பத்தாவது காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய மக்களைப் பொறுத்தவரை, மோடி படையின் எழுச்சி, இது வரையிலும் இல்லாத சமூக, பொருளாதார, அரசியல் பேரழிவாக உள்ளது. தலித்துகள், இசுலாமியர் மீது வன்முறை தாக்குதல்கள், பெண்கள் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது, மாணவர்கள் ஒடுக்கப்படுவது, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களும் தொழிலாளர்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது போன்றவை பற்றிய செய்திகள் இல்லாமல் ஒரு நாள் கூட நகர்வதில்லை. நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் பல பத்தாண்டு கால வர்க்கப் போராட்டத்திலும் சமூக, கலாச்சார விழிப்புணர்வின் ஊடாகவும் நாம் அடைந்த முன்னேற்றங்கள், பெற்ற ஆதாயங்கள் அனைத்தையும் அழித்துவிட முனைகிறார்கள்; நேர்மையானவர்கள் தண்டிக்கப்படுவது, எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படுவது, கார்ப்பரேட் சூறையாடல் தீவிரப்படுத்தப்படுவது, நிதி ஊழல்கள் பல்கி பெருகுவது, அரசின் ஆசியோடு சங்பரிவாரின் சாதிய மதவெறி காலிகள் வெறியாட்டம் போடுவது என்ற ஒடுக்குமுறை நிறைந்த, இருண்மைவாத ஒழுங்குக்கு, சமூகத்தை கீழ்ப்படுத்த முனைகிறார்கள்.
இந்த பாசிச தாக்குதலை முறியடிப்பதுதான் இன்று கட்சியின் முன் உள்ள மய்யமான சவால். இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நாம் நமது அனைத்து ஆற்றலையும் வலிமையையும் செலுத்த வேண்டியுள்ளது. பத்தாவது காங்கிரஸ் இந்தக் கடமையை நம்முன் வைத்துள்ள அதே நேரம், அந்தக் கடமையை நிறைவேற்ற கட்சியின் வளர்ந்து வரும் உள்ளாற்றலையும் வலிமையையும் காட்டியுள்ளது. இககமாலெயின் பத்தாவது காங்கிரஸ், பரந்த இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான மேடையாக, பாசிச தீங்குக்கு எதிரான அனைத்து முற்போக்கு நீரோட்டங்கள், போராடும் சக்திகள் ஒன்றுகூடும் தளமாக எழுந்துள்ளது. அமைப்புரீதியாகப் பார்த்தால், ஒட்டுமொத்த கட்சி அணிகளின் முன்முயற்சியை கட்டவிழ்த்துவிட்டு, நமது அனைத்து ஆதரவாளர்களின் நண்பர்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் அத்துடன் இணைப்பதன் மூலம், சவாலை எதிர்கொள்ளும் கட்சியின் ஆற்றலை மீண்டும் ஒரு முறை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
நமது கட்சியின் அய்ம்பதாவது ஸ்தாபக தினத்தில், பத்தாவது காங்கிரசின் செய்தியுடன், பரந்துபட்ட உழைக்கும் மக்களை, ஜனநாயக அறிவாளிப் பிரிவினரை நாம் சென்றடைய வேண்டும். வீரமிக்க மக்கள் எதிர்ப்பின் மத்தியில், அந்த வீரமிக்க மக்கள் எதிர்ப்பை புரட்சியின் இறுதி வெற்றி வரை முன்னோக்கி எடுத்துச் செல்லும் உறுதியுடன் நமது கட்சி உருவானது. இன்று மோடி ஆட்சியின், சங் படையினரின் பாசிச தாக்குதலை எதிர்கொள்ளும்போது, இந்திய மக்கள் உறுதியான எதிர்ப்புகளுடன் போராட்டங்களுடன் எழுவதை நாம் மீண்டும் ஒரு முறை பார்க்கிறோம். மக்கள் போராட்டத்தின் இந்த அலைகளுடன் நாம் ஒன்றுகலந்து அவற்றை வெற்றி நோக்கி வழிநடத்திச் செல்வது நமது கடமை. பாசிசத்தின் தீர்மானகரமான வீழ்ச்சியை உறுதி செய்ய, பரந்த, அன்புக்குரிய நமது நாட்டின் பன்மைத்துவம் ஒரு துடிப்பான ஜனநாயக வெளிப்பாட்டை கொண்டிருக்கும், மக்களின் விருப்பங்கள் நிஜ வாழ்வில் மீறப்பட முடியாத உரிமைகளாக மாறியிருக்கும், மக்கள் இந்தியா நோக்கி உறுதியாக முன்னேற நாம் நம்மால் ஆன அனைத்தையும் செய்வோம்.

மத்திய கமிட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)