பெண்ணின் அச்சமற்ற சுதந்திரம் இல்லாமல்
பெண் விடுதலை இல்லாமல்
மானுட விடுதலை இல்லை
எஸ்.குமாரசாமி
பெண் குழந்தைகளைக் காப்போம் என மோடி விளம்பரங்களில் முழங்க முழங்க, நாடெங்கும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கூட்டு பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஜம்முவின் பாலியல் வன்முறை புரிந்தோரைக் காப்போம் இயக்கம் இந்து ஏக்தா மஞ்ச் என்ற பெயரில், மூவர்ண தேசக் கொடியை அசைத்துக் கொண்டு பாதிப்புக்குள்ளான இசுலாமிய பேக்கர்வால் குஜ்ஜார் பழங்குடிகளை ஜம்முவில் இருந்து விரட்டுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்காக யாரும் வழக்கு நடத்தக் கூடாது எனத் தடுக்கும் மதவெறி நஞ்சு ஜம்மு வழக்கறிஞர் சங்கத்தின் தலைக்கேறி உள்ளது. உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், ஊடகங்கள் கேள்வி கேட்டுக் கண்டனம் செய்யத் துவங்கிய பிறகு, பெண் குழந்தைகளுக்கு நியாயம் வழங்குவோம் என மொன்னையாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு நழுவி ஓடப் பார்த்தார் மோடி.
உன்னாவில் பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்ணின் தந்தையைக் கைது செய்து கொன்ற காவல்துறையினரை, ஜம்முவில் பாலியல் வன்முறைக் குற்றங்களைப் பாதுகாப்பவர்களை மோடி கண்டிக்கவில்லை. ஜம்முவில் சங் பரிவாருக்கு இணக்கமாகவே காங்கிரஸ் செயல்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு, பார்ப்பனீய ஆணாதிக்க சமூகத்தில் மரணம்தான் பாதுகாப்பு என நரேந்திர மோடி கருதுகிறார் போலும்.
பாஜகவின் கேரள மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவரின் சகோதரர் நந்தகுமார். ஆர்எஸ்எஸ்காரர். அவரது மகன் விஷ்ணு நந்தகுமார், கதுவாவில் எட்டு வயது பெண் குழந்தை கொல்லப்பட்டது நல்லது, இல்லாவிடில் அந்த குழந்தை வளர்ந்து தேசத்துக்கு எதிராக வெடிகுண்டு வீசும் என்கிறார். சங் பரிவாரின் தேச பக்தியும் மூவர்ணக் கொடி அசைப்பும், இசுலாமியப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறது.
நாடே குமுறுகிறது. நாகரிக சமூகமா இந்தியா என கேள்வி எழுகிறது. உடனே திசை திருப்பும் ஆபத்தான தீர்வுக்குச் செல்கிறார்கள். மரண தண்டனை, மரண தண்டனை, அவசரச் சட்டம், அவசரச் சட்டம் எனக் கூப்பாடு போட்டனர். அவசரச் சட்டம் இல்லாமலே, இப் போதைய சட்டப்படியே கதுவா குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை வழங்க முடியும் என்ற விஷயத்தை விவாதத்தில் இருந்து மறைத்துவிட்டனர்.
பாலியல் வன்முறை குற்றவாளிகள், மரண தண்டனை மட்டுமே நிச்சயம் என்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட வாய்ப்புகள் அதிகம். பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்களில், ஏகப்பெரும்பான்மையினர் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோரே. சமூக, ஆணாதிக்க உறவுகள் மேலோங்கிய நிலை, அவர்களது வக்கிர குற்றங்களுக்கு உதவியாய் உள்ளது. அவர்களுக்கு மரண தண்டனையா என்ற சமூக மற்றும் உளவியல் பதட்டம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்களைத் தயக்கத்துக்கு உள்ளாக்குகிறது.
வலியுறுத்தப்பட வேண்டிய விஷயங்கள்
விரைவு நீதிமன்றங்கள், போதுமான நீதிபதிகள், விரைவு விசாரணைகள், தடயவியல் ஆய்வில் அதிநவீன முன்னேற்றங்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, சிறுவர்களுக்கு விவரமும் கூருணர்வும் கொண்டோர் ஆலோசனை வழங்குதல் என்பவையே தேவையான விஷயங்கள். குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்கள் பற்றிப் புரிதல் உண்டாக்குவதும், தவறு நேர்ந்தால் சொல்லும் துணிச்சலுக்கான சூழல் உருவாக்குவதுமே மிகவும் முக்கியம்.
1976லிருந்து 1986 வரை 50 பாலியல் வன்முறைக் குற்றங்கள், பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் செய்த கலிபோர்னியாவின் (யுஎஸ்) ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ என்ற முன்னாள் காவலரை 24.04.2018 அன்று கைது செய்துள்ளனர். குற்றச் சம்பவ இடங்களில் உள்ள மரணபணுக் கூறை (டிஎன்ஏ) ஜீனியாலஜி (வம்ச வழிக்கொடி) தரவு அடிப்படைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தடயவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் குற்றவாளியைக் கண்டறிந்துள்ளனர். எப்படியும் தடயவியல் கண்டுபிடித்துவிடும் என்ற அச்சம் குற்றத் தடுப்புக்கு உதவும்.
கல்வியாளரும் டென்மார்க்கில் பேராசிரியருமான தபிஷ் கயிர் ஆங்கில இந்து நாளேட்டில் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சைக்குரிய இந்தியன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறார். அவரது மகள், அவரது மகளின் நண்பர்கள் அல்லது தமது மாணவர்கள் இந்தியா செல்வது பற்றி கேட்டால் என்ன சொல்வது எனப் புரியாமல் தடுமாறுவதாகச் சொல்கிறார். அவர், பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் பற்றி மட்டுமின்றி ஒழுக்கக் காவலர்கள் பற்றியும் கவலைப்படுகிறார். எங்கே, எந்த நேரம், எந்த ஆடை அணிந்து செல்லலாம் என்று சொல்லப்படும் நிலைமை பற்றிக் கவலைப்படுகிறார்.
தமிழ்நாடு ஆளுநர், பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டுவதும் எஸ்.வி.சேகர், பெண் நிருபர்களை அவர்கள் தகுதிகளால் அல்லாமல் உடல்களைப் பயன்படுத்தி முன்னேறுவதாக வந்த ஒரு பதிவைப் பகிர்வதும் எப்படி நடக்கின்றன? பதிலுக்கு எஸ்.வி.சேகர் பாணியிலேயே அவரது உறவுப் பெண்களின், அவரது சாதிப் பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பதும் எப்படி நடக்கிறது?
பெண்ணின் கல்வி, தகுதி, அறிவு, அனுபவம் பற்றிப் பேசாமல், அவள் பெண் உறுப்பு கொண்ட உடலாகவே அணுகப்படுகிறாள். சமூகத்தின் வசைச் சொற்கள், ஆண் ஆணை ஏசும் போதும், தாய், சகோதரி, மனைவி என பெண்ணின் ஒழுக்கம் தொடர்பானவையாக இருக்கின்றன. உரத்த குரலில் இல்லாமல் மெல்லிய குரலில் வேண்டாம் என்றால் அது சம்மதமே என, ஒரே அறையில் இருந்துள்ளனர், பெண் மது எடுத்துத் தந்துள்ளார், அப்படி இருக்க சம்மதத்தின் பேரில் உறவு என்றுதான் ஆகும், பாலியல் வன்முறை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகளே வியாக்கியானம் செய்யும் போது, சட்டம் இன்னமும் மண உறவில் பாலியல் வன்முறைக் குற்றம் எழாது எனும்போது, ஆணாதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது தெரிகிறதுதானே!
கட்சி நடப்புகளில், மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுவது தேவையானதாக உள்ளது. 1) கட்சியின் பத்தாவது மாநாட்டில், மத்திய கட்டுப்பாட்டு ஆணையம் இனி, பாலியல் கூருணர்வு ஏற்படுத்தும் வேலையும் பார்க்கும், அதற்கு ஒரு சிறப்பு செல் செயல்படும் என அறிவிக்கும்போது, சேர்மன் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு சேர்பர்சன் என்று சொல்வது நடக்காமலே இருந்தது. ஆண் பெயர் இல்லாமல் பால் தன்மை இல்லாத விளிப்புக்கள் உலகெங்கும் வந்துவிட்டன. பாலியல் கூருணர்வு உருவாக்கும் அமைப்பு பற்றிய அறிவிப்பில் தாமதமாகத்தான் சேர்பர்சன் என்ற அறிவிப்பு வந்தது. வராமலே இருந்ததை விட தாமதமாக வந்தது நல்லது. 2) காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொற்றொடரில் ‘மேலாண்மை’ அகற்றி மேலாளுமை என்று சொல்லலாமே என்ற ஆலோசனை வரும்போது, அவ்வளவு சுலபமாக ‘மேலாண்மை’ போக மாட்டேன் என்கிறது. 3) கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் கமிட்டிகளில் உள்ள தோழர்களே, பல முறை சுட்டிக்காட்டப்பட்ட பிறகும், பல்வேறு மட்டங்களில், அரங்குகளில், தளங்களில் செயலாற்றுகிற பெண்களைப் பற்றிப் பேசும்போது, அஃறிணையில் ஜடப் பொருளாக ‘அது’ என்றும், ஆணாதிக்க ‘அவ’ என்று பேசுவதும் தொடர்கிறதுதானே!
‘மானுட வரலாற்றின் ஒரு நாள்காட்டி, நாட்களின் குழந்தைகள்’ என்ற தலைப்பில் எடுவர்டோ கலியானோ, ஆண்டின் ஒவ்வொரு நாள் பற்றியும் எழுதினார். மார்ச் 8 பற்றி ‘அஞ்சலிகள்’ என எழுதினார்:
‘இன்று சர்வதேச பெண்கள் தினம்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, மானுட மற்றும் தெய்வீக சிந்தனையாளர்களான, ஆண்களான அனைவரும், பெண்கள் பிரச்சனை பற்றிப் பேசி உள்ளனர். பெண்களின் உடல் கூறு பற்றி அரிஸ்டாட்டில் பெண் முழுமை அடையாத ஆண் என்கிறார். செயின்ட் தாமஸ் அக்வினாஸ் ஆண் விதையில் ஏதோ பழுதாய் தவறி உருவானவளே பெண் என்கிறார். மார்ட்டின் லூதர் ஆண்களுக்கு பரந்த தோள்களும் குறுகிய இடுப்புகளும் உள்ளன, அதற்கேற்ப அவர்களுக்கு அறிவாற்றல் உள்ளது, பெண்களுக்கு குறுகிய தோள்களும் விரிந்த இடுப்புகளும் உள்ளன, அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொண்டு பிள்ளை பெற்று வளர்க்கலாம் என்கிறார்.
பெண்களது இயல்பு பற்றி, பிரான்ஸ் சிஸ்கோ டி குவெடோ கோழி முட்டை போடும் பெண் பிள்ளை பெறுவாள் என்கிறார். டமாஸ்கசின் செயின்ட் ஜான் பெண், நோயுற்ற பெண் கழுதை என்கிறார். ஆர்தர் ஷ÷ப்பனேர் பெண்கள், நீண்ட கூந்தலும் குறுகிய பார்வையும் கொண்ட விலங்குகள் என்கிறார்
பெண்களது விதி பற்றி, பைபிள்படி யஹோவா பெண்களுக்குச் சொன்னது உன் மேல் உன் கணவர் ஆட்சி செய்வார். குரான்படி அல்லா முகம்மதுக்கு சொன்னது, அறம் காக்கும் பெண்கள் கீழ்படிந்து நடப்பார்கள்’.
இந்து மதத்தின் தூய்மைக் கோட்பாடு, அகமண முறை, பெண்களுக்கு தலித்துகளுக்கு சிறுபான்மையினர்க்கு எதிரானது.
பாலிவுட்டில் ஸ்ரீதேவி, மாதுரி போன்ற பெண் நாயக நடிகர்களுக்கு நடனம் சொல்லித் தந்தவர் சரோஜ் கான். அவர், திரை உலகில், வாய்ப்பு கேட்பவர் படுக்கை இருக்கிறது (ஸ்ரீஹள்ற்ண்ய்ஞ் ஸ்ரீர்ன்ஸ்ரீட்) என்றார். ஒருவரிடம் தர இருக்கிறது தருகிறார், ஒருவரிடம் பெறும் தேவை இருக்கிறது, பரிவர்த்தனையில் பெறுகிறார், தந்தவர் பயன் பெறுகிறார் என்கிறார். அவரது கருத்தில் ஒரு சிக்கல் உள்ளது. தொழிலாளி எவ்வளவு நேரம், எவ்வளவு வேலை செய்வது என்பதும் முதலாளி அதற்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்பதும் ஒப்பந்தமாகி உள்ளது எனும்போது சுரண்டல் எங்கே வந்தது எனக் கேட்கப்படுகிறது. உழைப்பு உருவாக்கும் மதிப்பில், ஒரு பகுதி மட்டுமே தொழிலாளிக்கு கூலியாகத் தரப்பட்டு, மறுபகுதி முதலாளியால் சுரண்டப்படுகிறது என்ற உண்மை ஒப்பந்தத்தால் மூடி மறைக்கப்படுகிறது. அதே போல்தான் ஆண் பெண் உறவுகளில், அதிகார உறவுகள் உள்ளன.
பெரியார் சொன்ன விஷயங்கள் பற்றி இயக்கத் தோழர்களிடம் மட்டும் அல்லாமல் மொத்த சமூகத்திடமும், நாம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. பெரியார் துணிந்து அடித்துச் சொன்னார்: ‘ஆண்மைத் தத்துவம் ஒழிய வேண்டும்’. பெண்ணடிமைத்தனம் ஒழிய, ஆண்மைத் தத்துவம் ஒழிய வேண்டும். கருத்து, பண்பாடு, நடைமுறை, அமைப்பு தளங்களில் ஆணாதிக்கத்தின், ஆண்மைத் தத்துவத்தின் வேர் களைந்தெறியப்பட வேண்டும்.
இந்து ராஷ்டிரா நோக்கி, நாடு உந்திச் செலுத்தப்படும் பின்புலத்தில்தான் ஆணாதிக்க, பெண் வெறுப்பு கொடூரக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்துள்ளன.
பெண்ணின் அச்சமற்ற சுதந்திரம் இல்லாமல், பெண் விடுதலை இல்லாமல் மானுட விடுதலை இல்லை.