தமிழ்நாட்டை பாலைவனமாக்க மற்றுமொரு திட்டம்: பசுமை விரைவுச் சாலைத் திட்டம்
ஜி.ரமேஷ்
2018 பிப்ரவரி மாதம் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல், நீர் வளங்கள், ஆறுகள் வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி,
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எல்லாரும் கூட்டாக சென்னையில் அறிக்கை வெளியிட்டனர். மும்பை - புனேவிற்கு இடையில் முதல் பசுமை விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து இரண்டாது பசுமை விரைவுச் சாலை சென்னை - சேலம் இடையே தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட உள்ளது, இதனால் சென்னை சேலம் இடையேயான பயண நேரம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படும், எரிபொருள் மிச்சப்படும், புதிய சாலை சென்னையில் இருந்து திருவண்ணாமலை, அரூர் வழியாக சேலத்தை இணைக்கும், பயண தூரம் 60 கி.மீ குறையும், இத்திட்டத்திற்காக ரூ.10,000 கோடி செலவாகும் என்றார்கள்.
அமர்ந்திருந்த அமைச்சர்களையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வசம் உள்ள துறைகளையும் கொஞ்சம் இணைத்துப் பார்த்தால் இவர்களின் திட்டம் நன்றாக புரியும். சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், நீர் வளங்கள், ஆறுகள் வளர்ச்சி இவை அனைத்தும் ஒரே அமைச்சர் கையில். வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் இருந்தபோது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றும் ‘நாடெங்கும் தங்க நாற்கரச் சாலை’ என்றும் அறிவித்தார்கள். இப்போது மோடியின் தலைமையிலான பாஜக அரசு சாகர்மாலா என்றும் பாரத் மாலா என்றும் 8 வழிச் சாலை என்றும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சாகர் மாலா என்றால் கடல் மாலை அதாவது கடல் வழிகளை பெரிய துறைமுகங்களோடு சிறிய, நடுத்தர துறைமுகங் களை உருவாக்கி இணைப்பது. பாரத் மாலா என்றால் சாலை வழிகளை இணைப்பது. சாலைக்கும் கடலுக்கும் கட்கரிதான் அமைச்சர். சாகர் மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கன்னியாகுமரி கோவளத்தில் புதிய சரக்கு மாற்று முனைய துறைமுகத்தை உருவாக்கப் போகிறார்கள். அப்படி உருவாக்கும் துறைமுகங்களையும் சாலைப் போக்குவரத்துகளையும் இணைப்பதற்கு பாரத் மாலா பரியோஜனா. முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்திற்கும் எஃகு நகரமான சேலத்திற்குமிடையே பசுமை விரைவுச் சாலை என்ற பெயரில் இணைப்பு ஏற்படுத்தப் போகிறார்கள்.
பத்தாயிரம் கோடி ரூபாய் செலவிலான சென்னை - சேலம் பசுமை விரைவுச் சாலைக்காக, பதினாறு பாதுகாக்கப்பட்ட வனங்களை, அடர்ந்த காடுகளை அழிக்கப் போகிறார்கள். அடர்ந்த வனப்பகுதியில் 100 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள். ஆரணி, போளூர், செங்கம், சாத்தனூர், திருவண் ணாமலை, தீர்த்தமலை, அரூர் மற்றும் வடக்கு சேர்வராயன் மலைப் பகுதிகளின் ஊடேதான் இந்த பசுமைச்சாலை வரப்போகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் வனப்பகுதி, சாத்தனூரில் அ.பிஞ்சூர் வனப்பகுதி, திருவண்ணாமலையில் சோராகுலத்தூர் வனப் பகுதி, ஆரணி நம்பேடு, போளூர் அலியலமங்கலம், செங்கம் வனப்பகுதியில் முன்னார்மங்கலம், அனந்தவாடி மற்றும் ரவந்தவாடி, தீர்த்த மலையில் பூவம்பட்டியும் அதன் நீட்சிப் பகுதியும், தர்மபுரி மாவட்டம் அரூரில் நொனாங்கனூர், பள்ளிப்பட்டி சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைத் தொடரில் மஞ்சவாடி, சருகு மலை ஆகிய வனப்பகுதிகளை ஆக்கிரமிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
இந்த பசுமை விரைவுச் சாலைத் திட்டத்திற்காக அடர்ந்த வனப்பகுதியில் 100 ஹெக்டேர் நிலப் பகுதிகள் அழிக்கப்பட வேண்டியதிருக்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. மொத்த சாலை தூரமான 274.3 கி.மீ தூரத்தில் 23 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் சாலை போடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. திட்டத்திற்காக, வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேலையை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை தமிழ்நாடு அரசை நெருக்குகிறது. கையகப்படுத்தப்படும் வனத்துறைக்கான நிலப்பகுதிக்கு மாற்று நிலம் அருகில், பக்கத்துப் பகுதிகளில் வனத்துறைக்கு ஏற்படுத்தி தர நெடுஞ்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளதாம்.
வனம் என்றால் இவர்களுக்கு வனத்துறை அலுவலகங்களும் அதன் அதிகாரிகளும்தானா? அந்த வனத்தில் காலங்காலமாய் வாழும் நீண்டு நெடிந்து வளர்ந்திருக்கும் மரங்களும் செடிகளும் கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் மலைவாழ் மக்களும் இவர்களுக்குத் தெரிவதில்லை.
வெறும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்காக 16 வன கிராமங்களில் 100 ஹெக்டேர் வனப் பகுதியை அழிக்கப் போகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கைபடியே 100 ஹெக்டேர் வனப் பகுதி அழிக்கப்படும் என்றால், உண்மையில் இவர்கள் அழிக்கப் போவது பல நூறு ஹெக்டேர் வனப் பகுதிகளை மட்டுமல்ல. அந்த வனத்தில் உள்ள பல்வேறு வகையான மரங்களை, விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்களையும்தான். மலைவாழ் மக்களின் வாழ்வையே அழிக்கப் போகிறார்கள். வடக்கு, மேற்கு மாவட்ட வனப்பகுதிகளின் மலைவாழ் மக்கள் பிழைக்க வழியின்றி மரம் வெட்டச் செல்கிறார்கள். அவர்களை ஏமாற்றி செம்மரம் வெட்ட அழைத்துச் செல்வது, திட்டமிட்டே செம்மரக் கடத்தல் வழக்குகளில் சிக்கவைத்து சிறையில டைப்பது, கொலை செய்வது நடந்து கொண்டிருக்கிறது. காடுகளை அழிக்கும் திட்டங்களை அமலாக்கும்போது எதிர்ப்புகள் மலைவாழ் மக்கள் மத்தியில் இருந்து வரலாம் என்பதால், திட்டமிட்டே மலைவாழ் மக்களை வனப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்குமோ இது என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே, சுற்றுப்புற சூழலியலாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். திட்டத்திற்காக, எவ்வளவு மரங்கள் அழிக்கப்படும் என்கிற விவரங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். இந்தப் பின்னணியில், சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த 60க்கும் அதிகமான மரங்கள் திடீரென ஒரே நாளில் பட்டுபோயின. சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டக் கூடாது என பொது மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் போராடி வந்தபோது, மரங்கள் பட்டுப் போவதற்காக திட்டமிட்டே ஆசிட்டை ஊற்றியிருக்கிறார்கள் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியரோ, நாங்கள் என்ன காரணம் என்று அறிய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம் என்றும் பூச்சிக்கடியால்தான் மரங்கள் பட்டுப் போய்விட்டன என்றும் சொல்கிறார். இதுவும் வரவிருக்கும் (பசுமைச் சாலைத் திட்டத்திற்காக) பெரும் காடு அழிப்புக்கு முன்னோட்டமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
வனப்பகுதியில் 10 ஹெக்டேர் நிலப்பகுதி அழிக்கப்பட்டாலே ஒட்டுமொத்த பல்லுயிரி சுழற்சிமுறையே பாதிக்கப்படும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். அப்படியிருக்க, 100 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்பட்டால் திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பெரும் பகுதிகள் பாலைவனமாக மாறும். சென்னை - சேலம் இடையே ஏற்கனவே இருக்கும் இரண்டு சாலை வழிகளுக்கு (சென்னை - விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை - ஆத்தூர் - சேலம் 345 கி.மீ மற்றும் சென்னை - வாலாஜா - கிருஷ்ணகிரி - சேலம் 319 கி.மீ) மாற்றாக வெறும் 57 கி.மீ தூரத்தைக் குறைக்க 5 மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள்.
யாருக்காக இந்தத் திட்டம்? அந்த அதி விரைவுச் சாலையில் அதிகமாகப் போகப் போவது யார்? துறைமுகங்களும் பெரும் தொழிற்சாலைகளும் அம்பானிகளிடமும் அதானிகளிடமும் கை மாற்றிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சேலத்தில் உள்ள சேலம் உருக்காலையைத் தனியாரிடம் தரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஏற்கனவே இறங்கிவிட்டது. ஏற்கனவே சென்னை முதல் வாணியம்பாடி வரை 6 வழிச் சாலை இருக்கும் போது, இந்த 8 வழிச் சாலை எதற்கு? சென்னை - சேலம் பசுமை விரைவுச் சாலை பின்னர் கோவை வரை இணைக்கப்படுமாம். ராணுவத் தளவாட உற்பத்தியில் அம்பானிகள் ஈடுபடுவதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளதும் தமிழகத்தில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதும் அதன் முன்னோட்டமா கவே ஏப்ரல் 12ம் தேதி ராணுத்தளவாடக் கண்காட்சியை திறந்து வைக்க இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கும் மோடி வான் வெளியாகவே சென்னைக்கு வந்து விட்டு போனதும், தொழில் நகரங்களான சென்னை, சேலம், கோவை போன்றவற்றை 8 வழி விரைவுச் சாலைகளால் இணைப்பதும்... எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
மோடியின் எடுபிடி அரசுதான் எடப்பாடி அரசு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 25.02.2018 அன்று முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்குக் தந்துள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி காவிரி மேலாளுமை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஒப்புக்காக கூறிவிட்டு, சென்னை -சேலம் பசுமை விரைவுச் சாலைக்குதான் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் ‘23.11.2017 அன்று நாம் பேசிக் கொண்டதை நினைவூட்டுகிறேன். அப்போது நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறைக்கு ஆதரவு தரக் கேட்டு ஒரு நினைவுக் குறிப்பு மனு (மெமோரண்டா) கொடுக்கப்பட்டது. தாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒரு லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில தேசிய நெடுஞ்சாலைக்காக ரூ.735.22 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும் தேசிய நெடுஞ்சாலை 45ல் இரும்புலியூர் வண்டலூர் இடையே 2.30 கி.மீ. தூரத்திற்கு 8 வழிச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் மாநகரமும் அதன் பெரும் போக்குவரத்தும் முக்கியத்துவம் வாய்ந்துள்ள நிலையில் சென்னை சேலம் இடையே பசுமை விரைவுச் சாலை அமைப்பது தூரத்தைக் குறைக்கும். எரிபொருளை மிச்சப்படுத்தும். இது மாநிலத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த புதிய வழித்தடத்தில் பெரும்பாலும் வறண்ட நிலங்களே உள்ளன. அதனால், அடையப் போகும் பலனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அப்பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த அதிக செலவு ஆகாது’ என்று உண்மையை மறைத்து மோடி அரசின் விருப்பத்திற்கேற்ப கடிதம் தந்துள்ள எடப்பாடி, நான் கட்கரியிடம் காவிரிக்காக விரிவாகக் கடிதம் கொடுத்துள்ளேன் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்கிறார்.
16 அடந்த காடுகளில் 100 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறையே சொல்லியுள்ளபோது, எடுபிடி எடப்பாடி, சேலம் சென்னை பசுமை விரைவுச் சாலை பகுதியில் வறண்ட நிலங்கள்தான் அதிகம் உள்ளது என்கிறார் என்றால், இவர்கள் யாருக்கான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கண்ணை விற்று சித்திரம் வாங்குவார் எவருமுண்டோ என்பார்கள். ஆனால், மோடி - எடப்பாடி அரசுகள் தமிழ்நாட்டு பசுமை மாறாக்காடுகளையெல்லாம் அழித்து பசுமை விரைவுச் சாலை அமைக்கப் போகிறார்களாம். என்ன செய்தாலும் மக்கள் பார்வையாளர்களாகவே இருப்பார்கள் என நினைப்பவர்க ளுக்கு விரைவில் பதிலடி தரப் போகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.