பாசிசத்தை முறியடிப்போம்!
மக்கள் இந்தியாவுக்காகப் போராடுவோம்!
இகக மாலெ பத்தாவது காங்கிரஸ். மார்ச் 23 - 28 2018, மான்சா, பஞ்சாப்
இந்திய சுதந்திரப் போரின் புரட்சியாளர் தோழர் பகத்சிங் பிறந்த, செம்புரட்சியை விதைத்த பஞ்சாப் மாநிலத்தில்,
பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக திகழும், நக்சல்பாரி எழுச்சிக்கு ஆதரவாக முதல் குரல் ஒலித்த, மான்சா நகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலையின் 10ஆவது அகில இந்திய மாநாடு 2018 மார்ச் 23 முதல் 28 வரை நடைபெற்றது.
மான்சா இப்போது தனி மாவட்டம்.இதற்கு முன் மான்சா நகரம் பத்தின்டா மாவட்டத்தில் இருந்தது. 1928லேயே முன்னாள் பாட்டியாலா அரச பிரபுக்களின் சுரண்டலையும் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையையும் எதிர்த்து நடந்த போராட்டங்களில் கம்யூனிசக் கருத்துக்கள் வேரூன்றி இருந்தன. தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலும் பின்னர் சிவப்பு கம்யூனிஸ்ட் கட்சி என்ற பதாகை யிலும் குத்தகை விவசாயிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கொரில்லாப் போர் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களால் 1952ல் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை எவ்வித இழப்பீடும் இன்றி குத்தகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிலை உருவானது. முதல் கட்ட நக்சல்பாரி எழுச்சியின் போது (1968 - 1971) பஞ்சாபில் மட்டும் 80 புரட்சியாளர்கள் தியாகியானர்கள் என்றால், அதில் 17 பேர் மான்சா - பத்தின்டா பகுதியைச் சேர்ந்தவர்கள். 1980களில் இகக (மாலெ) விடுதலையின் வேலைகள் இந்திய மக்கள் முன்னணி காலத்தில் நடைபெற்றது. 1992 சட்டமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் முன்னணி சார்பில் ஓர் இடத்தில் கட்சி வெற்றி பெற்றது. இந்தப் பகுதியில் தொடர்ந்து தலித்துகள், கிராமப்புறத் தொழிலாளர்கள், பெண்கள் உரிமை, சமூக நீதி, சுயமரியாதை ஆகியவற்றுக்காக கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக கட்சியின் வேலைப் பகுதியாக இருக்கும் மான்சாவில், பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவே செங்கொடிகள் படபடக்க கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாடு சிறப்புற நடைபெற்றது.
தோழர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுருவின் நினைவு நாளான மார்ச் 23, 2018 அன்று காலை 10 மணிக்கு மான்சாவின் கோசாலா என்கிற இடத்தில் இருந்து மாபெரும் மக்கள் பேரணி துவங்கியது. அந்தப் பேரணி 2 கி.மீ. தூரம் சென்று பாலாபாக் என்ற இடத்தை அடைந்தது.அங்கு தோழர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலை திறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேரணி மீண்டும் 3 கி.மீ. தூரம் சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை வந்தடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். மாலை வரை நடைபெற்ற பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து புரட்சிகரப் பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் இரவு வரை நடைபெற்றன.
மார்ச் 24 அன்று காலை 10 மணிக்கு தோழர்கள் கீதா தாஸ் - ஸ்ரீலதா நகரில் தோழர்கள் ஸ்வப்பன் - கணேசன் அரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு ஆரம்பமானது. பாசிசத்தை முறியடிப்போம், மக்கள் இந்தியா அமைக்க போராடுவோம் காப்போம் என தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர். தோழர் ஸ்வதேஷ் தலைமையில் தோழர்கள் பாலசுப்பிரமணியன், வித்யாசாகர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியது.
இந்த ஆண்டு மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த 200ம் ஆண்டு. நவம்பர் புரட்சி நூறாம் ஆண்டு. நக்சல்பாரி எழுச்சியின் 50ஆம் ஆண்டு. இகக (மாலெ) துவங்கி 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்த வரலாற்றில் உயிர் நீத்த தியாகத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் மாநாடு முதலில் செவ்வணக்கம் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து, கியூபப் புரட்சியின் நாயகர் தோழர் பிடல் காஸ்ட்ரோ, தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மன்டேலா, கட்சியின் ஒன்பதாவது மாநாட்டிற்குப் பிறகு கட்சிக்காகவும் நாட்டிற்காகவும் ஒப்பற்ற செயல்கள் புரிந்து மறைந்த தோழர்களுக்கும் மக்கள் விரோதிகளாலும் பாசிச மதவெறிக் கும்பல்களாலும் கொல்லப்பட்டு தியாகியான தோழர்களுக்கும் மாநாடு அஞ்சலி செலுத்தியது.
இந்து மதவெறிக் கும்பல்களால் கொல்லப்பட்ட பேராசிரியர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந் பன்சாரே, கவுரி லங்கேஷ், அம்பேத்கரிய மாணவர் ரோகித் வெமுலா, கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, தோழர் கணேசன், கட்சியின் முன்னாளர் மத்தியக்குழு உறுப்பினரும் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் தலைவருமான தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதன், கட்சியின் முன்னாள் மத்தியக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர் கீதா தாஸ் உள்ளிட்ட மறைந்த கட்சித் தோழர்களுக்கும் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இந்து முன்னணிக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் மாரியப்பன், திருநெல்வேலியில் மாலெ கட்சியைக் கட்டமைத்தவர்களில் ஒருவரான மறைந்த தோழர் சங்கரநாராயணன், திருவள்ளூர் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் ராஜா, தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் இன்குலாப், மாலெ இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர் கோவை ஈஸ்வரன், எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் மகேஸ்வதாதேவி, எழுத்தாளரும் மார்க்சிய அறிஞருமான பிரபுல் பித்வாய், தொழிற்சங்கவாதி தோழர் தாமஸ் கொச்சேரி, ஈராக்கில் அய்எஸ்அய்எஸ்சால் கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு மாநாடு அஞ்சலி செலுத்தியது.
முதல் அமர்வில், கட்சியின் பொதுச்செய லாளர் தோழர் திபங்கர் துவக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பினாய் விஸ்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முகமது சலீம், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தோழர் ஜி.தேவராஜன், லால் நிசான் கட்சி (லெனினிஸ்ட்) தோழர் உதய் பட், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மங்கத்ராம் பஸ்லா, எஸ்யுசிஅய் (கம்யூனிஸ்ட்) தோழர் சத்யவான், டார்ஜிலிங்கின் புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.பி.ராய், எம்சிபிஅய்(யு) தோழர் கிரன்ஜித் சிங் சேகோன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள்.
பல்வேறு வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பங்களாதேஷ் புரட்சிகர தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சைபுல் ஹக், பங்களாதேஷ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் ஹாலியுக் ஸôமா, ஆஸ்திரேலியாவின் சோசலிஸ்ட் அலையன்ஸின் தோழர்கள் சூசன் பிரைஸ், டோனி இல்டைஸ், பிரிட்டனின் தெற்காசிய ஒருமைப்பாட்டுக்குழுவின் சார்பாக தோழர் கல்பனா வில்சன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பங்களாதேஷ் அவாமி தொழிலாளர் கட்சியின் தோழர் பரூக் தாரிக் மற்றும் பாகிஸ்தானின் மஸ்தூர் கிஸôன் கட்சியின் தோழர் தய்மூர் ரஹ்மான் ஆகியோருக்கு விசா மறுக்கப்பட்டதால் அவர்களால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் காணொளி மூலம் ஒருமைப் பாடு தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். மலேசிய சோசலிச கட்சி, கியூபா தூதரகம், ஸ்விட்சர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி, துருக்கி தேச பக்த கட்சியின் இளை ஞர் அமைப்பான வான்கார்ட் யூத் ஆகியோரும் ஒருமைப்பாடு தெரிவித்து வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். இடதுசாரிக் கட்சித் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
மார்ச் 24 மதியத்தில் இருந்து கட்சியின் கலைந்து செல்லும் மத்தியக் குழுவின் சார்பாக, நகல் அறிக்கைகள் கட்டம் கட்டமாக முன் வைக்கப்பட்டன. முதலில் சர்வதேசச் சூழல் நகல் அறிக்கை முன்வைக்கப்பட்டு அதில் பிரதிநிதித் தோழர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கினர். அது மறுநாள் காலை வரை நீடித்தது. மார்ச் 25 அன்று காலை அமர்வில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பதிலுரையைத் தொடர்ந்து சர்வதேச சூழல் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய சூழல் அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் தோழர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கினர். மார்ச் 26 காலை வரை விவாதம் தொடர்ந்தது. பொதுச்செயலாளர் விளக்கவுரைக்குப் பின்னர் தேசியச் சூழல் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் அமைப்பு அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் தோழர்கள் மார்ச் 27 மதிய உணவு இடைவேளை வரை தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். மாலையில் விவாதங்களின் தொகுப்புரை மற்றும் பொதுச் செயலாளரின் விளக்கவுரையைத் தொடர்ந்து அமைப்பு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 28 காலையில் கலாச்சாரம் மற்றும் ஊடகங்கள் தாள் முதலில் முன்வைக்கப்பட் டது. அதில் தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து சுற்றுப்புறச் சூழல் மாற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கருத்துகளில் வந்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரண்டு அறிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அமைப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அவை, அவற்றை நிறைவேற்றியது.
குஜாராத் சட்டமன்ற உறுப்பினரும் உனா போராட்ட இயக்கத்தின் தலைவருமான தோழர் ஜிக்னேஷ் மேவானி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘நான் மாணவப் பருவத்தில் அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால், தற்போது ஜாதவ்பூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், போன்ற பல்கலைக் கழககங்களில் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற குறிப்பான கோரிக்கைகள் மீதும் ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்தும் போராடி வருகின்றனர். சிபிஅய் (எம்எல்) லிபரேஷன் நிலப்பிரச்சினை மீதும் தலித் மக்களுக்காகவும் காலங்காலமாக போராடிக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தோழர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர். நாங்கள் பல இயக்கங்களோடு சேர்ந்து போராடுகிறோம். ஆனால், சிபிஅய் (எம்எல்) லிபரேஷனுக்கும் எங்கள் இயக்கத்திற்கும் ஒரு உயிரார்ந்த உறவு இருக்கின்றது. குஜராத்தில் ஹர்திக், ஜிக்னேஷ், அல்பேஷ் கூட்டு என்று கூறப்படுகிறது. எங்களுக்குள் பல முரண்பாடுகள் இருந்தாலும் பிரதான முரண்பாடு ஆர்எஸ்எஸ் - பிஜேபி வகுப்புவாதம். அதை எதிர்ப்பதற்கு தற்காலிகமாக சில உறவுகளை ஏற்படுத்தியதன் விளைவாக, பாஜக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அதைக் கொண்டாடக் கூடிய நிலையில் இல்லாத நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளோம். 2019 தேர்தலில் காந்தியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்தால் பாஜகவை நிச்சயம் தோற்கடிக்க முடியும்’ என்றார்.
நக்சல்பாரி எழுச்சிப் போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் நேமு சிங் மற்றும் பல தோழர்கள், மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டனர்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு பொதுச் செயலாளரின் தொகுப்புரையைத் தொடர்ந்து அனைத்து அறிக்கைகளும் மாநாட்டுப் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டன. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, தோழர் பிரிஜ் பிகாரி பாண்டேயை தலைவராகக் கொண்டு தோழர்கள் லஷ்மி கிருஷ்ணன், அரவிந்த் குமார் சிங், திரஜ் தாஸ், உமா குப்தா, சுசிலா திகா, மது உள்ளிட்ட 7 பேர் கொண்ட மத்திய கட்டுப்பாட்டுக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதற்குள்ளேயே பாலினம் பற்றிய கூருணர்வு மற்றும் நீதிக்கான கருக்குழு தோழர் லஷ்மி கிருஷ்ணனைத் தலைவராகவும் தோழர்கள் உமா குப்தா, சுசிலா திகா, மது ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 77 பேர் கொண்ட மத்தியக் குழுவை மாநாடு தேர்வு செய்தது. மத்தியக்குழு தோழர் திபங்கரை மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது. மத்தியக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் எஸ்.குமாரசாமி, எஸ்.பாலசுந்தரம், புவனா, ஆர்.வித்யாசாகர் இடம் பெற்றுள்ளனர். பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் புகழ் பெற்ற மரபுகள் தொடர்பாக தனி தீர்மானம் முன்வைக்கப்பட்டது. மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து மாநாட்டிற்காக கடும் பணியாற்றிய நூற்றும் மேற்பட்ட தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் நினைவுப் பரிசு வழங்கினார். அதன் பின்னர் சர்வதேச கீதத்துடன் மாநாடு நள்ளிரவு 12.30 மணியளவில் பாசிசத்தை வேரறுக்க உறுதியேற்கும் முழக்கத்துடன் நிறைவு பெற்றது.
மாநாட்டு வளாகத்தில், நக்சல்பாரி வரலாறு, இகக (மாலெ) வரலாறு உள்ளிட்ட படக் காட்சிகளும், தியாகிகள் மற்றும் தலைவர்கள் படங்களும் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி படங்களும் நெல்லையில் படுகொலையான தோழர் மாரியப்பன் படமும் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. ரஷ்யப் புரட்சியின் வரலாறு பற்றிய முழுமையான படக் கண்காட்சியும் பெரியார் பற்றிய படக் கண்காட்சியும் தமிழ்நாட்டுத் தோழர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அது வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வட இந்தியத் தோழர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாநாட்டின் மூன்றாம் நாள் இரவு மாநாட்டில் பிரதிநிதியாக வந்திருந்த ஒடிஷா தோழர் துரியோதனன் (73) மாரடைப்பால் காலமானார். இது மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் மனவேத னையை ஏற்படுத்தினாலும் அவர் தனது வயோதிகத்திலும் கட்சிக்காக செயல்பட் டதைப் பின்பற்ற தோழர்கள் உறுதியேற்றனர்.

மாநாட்டு செய்திகள் தொகுப்பு:
ரமேஷ், தேசிகன்
படங்கள்: சுகுமார்