COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக 
கார் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் நிதியளிப்புக் கூட்டம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் இருவரின் விடுதலை கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து,
ஹ÷ண்டாய், பிஎம்டபுள்யூ, ஃபோர்ட், சிஅன்டுஎஃப் ஆட்டோமோடிவ் மற்றும் சான்மினா தொழிலாளர் முன்னணிகள் நிதியளிப்பு கூட்டம் ஏப்ரல் 22 அன்று பூந்தமல்லியில் நடைபெற்றது.
வழக்கு செலவிற்கான போராட்ட நிதியாக ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் ரூ.79,050, ஃபோர்ட் தொழிலாளர்கள் ரூ.50,000, பிஎம்டபுள்யூ தொழிலாளர்கள் ரூ.10,000, சிஅன்டுஎஃப் ஆட்டோமோடிவ் தொழிலாளர்கள் ரூ.8,000, சான்மினா தொழிலாளர்கள் ரூ.1,000, ஹ÷ண்டாய் தொழிலாளியும், அய்எஸ்ஒ சேவா தலைவருமான தோழர் சத்தியமூர்த்தி ரூ.10,000, சங்கம் அமைத்துப் போராடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஹ÷ண்டாய் தொழிலாளி தோழர் பழனிச்சாமி ரூ.3,000, பிரிக்கால் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர். மேலும் தோழர் பழனிச்சாமி சிறையிலிருக்கும் இரண்டு தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விச் செலவுக்காக ஜ÷ன் மாதம் ரூ.20,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பிரிக்கால் தொழிலாளர்கள் விடுதலைக்கும் போராட்டத்திற்கும் தங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும், கடந்த கூட்டத்தில் ஃப்ரீ பிரிக்கால் எய்ட் என இருந்தது, இந்த கூட்டத்தில் ஃப்ரீ பிரிக்கால் டூ என இருக்கிறது, அடுத்த கூட்டத்தில் இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் ஒருவர் பேசினார். தொழிற்சங்கம், தொழிலாளர் நிலை மற்றும் நிர்வாகம், அரசு, நீதிமன்றத்தின் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவது, ஃபெடரேஷன் அமைப்பது பற்றி ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. சிறையிலிருக்கும் பிரிக்கால், மாருதி, கிராசியானோ தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களும் ஒரே நாளில் போராட்டம் நடத்துவது, ஆட்டோமொபைல் தொழிலை பொதுப்பயன்பாட்டு சேவை என அரசு அறிவித்ததை திரும்பப் பெறுவதற்கும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலக நிலையாணைகள் திருத்த சட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டும், நிர்ணயிக்கப்பட்ட கால வேலை  நியமனத்தை (ஃபிக்சட் டேர்ம் எம்ப்ளாய்மென்ட்) ரத்து செய்வதற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் போராட்டம் கட்டமைக்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

Search