COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

மே நாளில் விண்ணதிர முழங்குவோம்!

நமது மகிழ்ச்சியை, நிம்மதியை, கனவுகளை, எதிர்காலத்தை கொடூரமாகப் பறித்துவிட்டார்கள்.
எதிர்காலம் அச்சுறுத்துவதால் நாம் காதலிக்கக் கூட முடியாது. கவலை தோய்ந்த காதல் கசந்து போகாதா?
விவசாயம், பண்பாடு, கிராமம் எல்லாம் இனி வெறும் நிழலாடும் நினைவுகளே. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசி, கெயில், அனல்மின்நிலையம், ரியல் எஸ்டேட் என கார்ப்பரேட் மூலதனம் முன்னேறித் தாக்க, விளைநிலங்களும் உணவுப் பாதுகாப்பும் சிதைந்தா போக வேண்டும்?
சுரண்டுகிறார்கள். சூறையாடுகிறார்கள். ஒடுக்குகிறார்கள். ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மீது கொலைவாள்களை வீசுகிறார்கள்.
எவ்வளவு காலம் ஆனாலும் நாம் நிரந்தரமாக முடியாது என்பது மட்டுமே நிரந்தரமான உண்மையா? ஆறுதல் தர பழைய உலகம் இல்லை. நம்பிக்கை தர புது உலகம் இல்லை. உழைக்கும் மக்களை உபரியாக்கி, அவர்களை வீசி எறியும் குப்பை கூடங்களாக நகரங்களை மாற்றியுள்ளனர்.
எல்லாம் மாறும். இந்த நிலைமைகளும் மாறும்.
நமது போராட்டங்களால் மாறும்.
அய்பிஎல்லை விரட்டியவர்கள், மோடியை அஞ்ச வைத்தவர்கள் விண்ணதிர முழங்குவோம்.
உழுது பிழைக்க, விவசாயம் தழைக்க, கிராமம் நிலைக்க நீர்பாசன வசதி உள்ளிட்ட வசதிகளுடன் நிலம் வேண்டும்.
பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்றத் தொழிலாளர்க்கு நிரந்தர வேலை வேண்டும். அதற்கு நிலையாணைகள் சட்ட விதிகள் உடனே உருவாக்க வேண்டும். பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட் பிரிவு நீக்கப்பட வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளிக்கு சம வேலைக்குச் சம ஊதியம் தந்தாக வேண்டும்.
மாதம் ரூ.26,000 குறைந்தபட்சச் சம்பளம் வந்தாக வேண்டும்
எட்டு மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம் வந்தாக வேண்டும்.
பெரும்பான்மை சங்கம் அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும்.
பாசிஸ்டுகளை, பாசிஸ்டுகளின் எடுபிடிகளை முறியடிக்க
மக்கள் இந்தியா படைக்க மே நாளில் உறுதியேற்போம்
முதலாளித்துவம் வீழட்டும்! சோசலிசம் வெல்லட்டும்!

Search