போகவிடும்படி
சுங்கச்சாவடியில்
ஒருவன் ஒரு போலீஸ்காரன்
காலில் விழுகிறான்
செக்போஸ்டுகள் முன்
முள்வேலியிட்ட முகாம்களில் நிற்பதுபோல
பரிதவித்து நிற்கிறார்கள்
காத்திருக்கும்
தடுக்கப்பட்ட வரிசையில்
'அம்மா எப்போது ஊருக்குப்போவோம்?'என
அழும் குழந்தையை
அறைகிறாள் அம்மா
எதை எடுத்துக்கொள்வது
எதை விட்டுவிட்டு வருவது
என குழப்பத்தினூடே
எடுத்துக்கொண்டவற்றின் சுமை
அனைவரையும் அழுத்துகிறது
இப்போது நிறைய நாடுகள்
திடீரென உருவாகிவிட்டன
நிறைய புதிய எல்லைக்கோடுகள்
நிறைய இனங்கள்
நோய்மையுள்ள இனங்கள்
நோய்மையற்ற இனங்கள்
நிறைய அகதிகள்
சோதிக்கப்படும் அனுமதிச்சீட்டுகள்
போலி அனுமதிச்சீட்டுகள்
போலி பாஸ்போர்டுகள்
திருப்பி அனுப்படுகிறவர்கள் வரிசை
நீண்டுகொண்டே செல்கிறது
என் ஊருக்குத்தானே போகிறேன் என்ற
எளிய மனிதனினின்
எளிய நியாயம்
எந்தக் கதவையும் திறக்கவில்லை
அனுமதிக்கப்படாமல்
நிராசையுடன் திரும்புகிறவர்களின் முகங்கள்
சவக்குழிக்கு
திரும்புகிறவர்களின் முகங்கள்போல
கறுத்துவிட்டிருக்கின்றன
அனுமதிக்கப்பட்டு
எல்லைதாண்டிபோகிறவர்கள்
எப்போது திரும்புவோம் என
தங்கள் நகரத்தை கண்ணீருடன்
திரும்பிப்பார்க்கிறார்கள்
பூட்டப்பட்ட வீடுகள்
பாழடைகின்றன
பிசாசுகள் மெல்ல
குடியேறுகின்றன
19.6.2020, இரவு 11.08
மனுஷ்ய புத்திரன்
சுங்கச்சாவடியில்
ஒருவன் ஒரு போலீஸ்காரன்
காலில் விழுகிறான்
செக்போஸ்டுகள் முன்
முள்வேலியிட்ட முகாம்களில் நிற்பதுபோல
பரிதவித்து நிற்கிறார்கள்
காத்திருக்கும்
தடுக்கப்பட்ட வரிசையில்
'அம்மா எப்போது ஊருக்குப்போவோம்?'என
அழும் குழந்தையை
அறைகிறாள் அம்மா
எதை எடுத்துக்கொள்வது
எதை விட்டுவிட்டு வருவது
என குழப்பத்தினூடே
எடுத்துக்கொண்டவற்றின் சுமை
அனைவரையும் அழுத்துகிறது
இப்போது நிறைய நாடுகள்
திடீரென உருவாகிவிட்டன
நிறைய புதிய எல்லைக்கோடுகள்
நிறைய இனங்கள்
நோய்மையுள்ள இனங்கள்
நோய்மையற்ற இனங்கள்
நிறைய அகதிகள்
சோதிக்கப்படும் அனுமதிச்சீட்டுகள்
போலி அனுமதிச்சீட்டுகள்
போலி பாஸ்போர்டுகள்
திருப்பி அனுப்படுகிறவர்கள் வரிசை
நீண்டுகொண்டே செல்கிறது
என் ஊருக்குத்தானே போகிறேன் என்ற
எளிய மனிதனினின்
எளிய நியாயம்
எந்தக் கதவையும் திறக்கவில்லை
அனுமதிக்கப்படாமல்
நிராசையுடன் திரும்புகிறவர்களின் முகங்கள்
சவக்குழிக்கு
திரும்புகிறவர்களின் முகங்கள்போல
கறுத்துவிட்டிருக்கின்றன
அனுமதிக்கப்பட்டு
எல்லைதாண்டிபோகிறவர்கள்
எப்போது திரும்புவோம் என
தங்கள் நகரத்தை கண்ணீருடன்
திரும்பிப்பார்க்கிறார்கள்
பூட்டப்பட்ட வீடுகள்
பாழடைகின்றன
பிசாசுகள் மெல்ல
குடியேறுகின்றன
19.6.2020, இரவு 11.08
மனுஷ்ய புத்திரன்