உடுமலை சங்கர் சாதியாதிக்கப் படுகொலையில் நீதி வேண்டும்
கொரோனா காலத்தில் நடந்துள்ள
சாதியாதிக்க, ஆணாதிக்க, காவல்துறை வன்முறைகள் பற்றி
தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்
உடுமலை சங்கர் சாதியாதிக்கப் படுகொலையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
சாதியாதிக்கப் படுகொலைகளுக்கு எதிராக நாடெங்கும் ஜனநாயக சக்திகளின் குரல் தொடர்ந்து எழுப்பப்படும்போது, இந்தத் தீர்ப்பு அந்தக் குரல்களை கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.
கொரோனா பாதிப்பு நாட்டு மக்களை ஆட்கொண்டிருக்கும்போது, அதனால் மக்கள் வாழ்க்கை தடம் புரண்டிருக்கும்போது, ஆட்சியாளர்களின் குற்றமய அலட்சியப் போக்கின் விளைவுகளையும் அனுபவித்துக் கொண்டு, முடிந்த அளவில் தாங்களாகவே வாழ்க்கையை சரிசெய்யும் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, ஒப்பீட்டுரீதியில் மேலான மருத்துவ கட்டமைப்பும் பிற கட்டமைப்பு வசதிகளும் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவித்து வரும்போது, தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்போது, அதனால் நீதிமன்றங்களும் வழக்கம்போல் செயல்படாத நிலை இருக்கும்போது, இந்த வழக்குக்கு அப்படி என்ன அவசரம் வந்தது என்ற கேள்வி எழுகிறது. பழனிச்சாமி ஆட்சியில் சாதியாதிக்க சக்திகள் மேலும் வலுப்பெறுவதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது.
உடுமலை சங்கர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்தத் தீர்ப்பு பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையை, எழுப்பியுள்ள கோரிக்கைகளை, வலியுறுத்தியுள்ள நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது. அவரது அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், கொரோனாவை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி சொன்னதை அவரவர் வசதிக்கேற்ப பற்றிக் கொண்டுவிட்டார்கள் என்று இந்தத் தீர்ப்பு நமக்குச் சொல்கிறது. கொரோனா காலத்தில் சாதியாதிக்கப் படுகொலைகள், வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறை, பெண்கள் மீதான குடும்ப வன்முறை ஆகியவை அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்பதை தவறாகப் புரிந்துகொண்டு ஊடரங்கு விதிகளை மீறுபவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கிக் கொண்டிருந்த காவல் துறையினரை, அந்தக் கட்டத்திலேயே கட்டுப்படுத்தி முறைப்படுத்தாததன் விளைவாக இன்று சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் காவல்நிலைய படுகொலைக்கு ஆளாகியுள்ளார்கள். காவல்துறையினருடன் சாதாரணமாக வாக்குவாதம் செய்தது, அவர்கள் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்படும் வரை இட்டுச் சென்றுள்ளது.
இந்தப் பின்னணியில் டாக்டர்.திருமாவளவன் எழுப்பியுள்ள கோரிக்கைகளுடன், பின்வரும் கோரிக்கையையும் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்புகிறது.
கொரோனா காலத்தில் காவல்துறை அத்துமீறல்கள், சாதியாதிக்க வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் ஆகியவை பற்றிய புகார்கள், அரசும் காவல்துறையும் எடுத்துள்ள நடவடிக்கைகள், நீதிமன்றத் தலையீடுகள் ஆகியவை பற்றி பழனிச்சாமி அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது!
ஆணவக்கொலைகளைத் தடுக்க உடனே அவசர சட்டம் இயற்ற வேண்டும்!
உச்சநீதிமன்றத்தின் (2018 தீர்ப்பு) வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மய்ய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்!
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியா முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இப்படி தீர்ப்பு வருவதற்கு அரசுத் தரப்பு இந்த வழக்கை சரியாக நடத்தாததே காரணம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றபோதிலும் உச்சநீதிமன்றத்திலாவது குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர அரசுத் தரப்பு அக்கறை காட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் ஆறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியது. அதில் சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னசாமியும் ஒருவர். தற்போது அவரை உயர்நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. கூலிக்குக் கொலைசெய்யும் கும்பலை ஏற்பாடு செய்த - கௌசல்யாவின் தாய், தந்தை மற்றும் தாய்மாமன் ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பது சிசிடிவி பதிவுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்தக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தலித்மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. தலித் மக்களுக்குரிய பாதுகாப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காததே அதற்கு முதன்மையான காரணம்.
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
'ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும்' என அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
ஆணவக் குற்றங்கள் அதிகமக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறியவேண்டும்: அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்; செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி அளவிலான தகுதியுள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்; அதையும் மீறி சாதிப்பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்க்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம்; பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள்:
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141,143,503 மற்றும் 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரை பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தமபதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் துவக்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்கவேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்த திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கௌரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்பி'க்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.
தண்டனை நடவடிக்கைகள்:
இந்த வழிகாட்டு நெறிமுரைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; கலப்புமணத் தமபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணிநேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி; ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய சட்ட ஆணையத்தால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ஆணவக் கொலைகள் தொடர்பான சட்ட மசோதாவை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்படவேண்டும்; ஆணவக் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; ஆணவக் கொலை தொடர்பான மசோதாவை மத்திய அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர், விசிக