COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய 
மாநில அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சுமார் ரூ.3500 கோடி இருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,
ஊரடங்கு காலத்தில் வேலையின்றி வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மாநில அரசு ரூ.1000 நிவாரணமாக அறிவித்ததை நல வாரியத்தில் புதுப்பித்தல் நிபந்தனை இல்லாமல், வாரியப் பதிவு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 3 உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் கே.பாரதி, ஜனநாயக வழக்கறிஞர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எம்.சங்கர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் ஆர்.மோகன் தலைமையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய ஆணையரை சந்திக்க கட்டுமானத் தொழிலாளர்கள் சென்றனர். ஆணையர் இல்லாததால் அவர் கீழுள்ள அதிகாரியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தொழிலாளர் துறை அதிகாரி, அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜிம்கானா கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிளப் மற்றும் முன்னணி தோழர்கள் என 30 பேர் வரை கலந்துகொண்டனர்.      - என்.ஜேம்ஸ்

Search