COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

தமிழக வழக்கறிஞர்கள் நலன் காக்க
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் போராட்டம்


வழக்கறிஞர்கள், நீதித் துறையின் முக்கிய அங்கம். மக்கள் நீதி பெற பணி செய்பவர்கள் வழக்கறிஞர்களே. எனவே வழக்கறிஞர்களை காப்பதும் அரசின் கடமை.
தமிழகத்தில் சீனியர், ஜுனியர்  பாகுபாடின்றி அனைவரும் வருமானமின்றி தவித்து வரும் சூழலில் தமிழக அரசும் பார் கவுன்சிலும் வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 17.06.2020 அன்று வீடு, அலுவலகம் மற்றும் நீதிமன்ற வாயில்களில் தனிமனித இடை வெளியுடன் முகக் கவசம் அணிந்து தகுந்த பாதுகாப்போடு கோரிக்கை பதாகை ஏந்தி போராட்டம் நடத்த ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. பின்வரும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

  • ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வழக்கறிஞர்களின் நலன் காக்க, நிவாரணம் கோரும் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.10,000, எழுத்தர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்பட வேண்டும்.
  • வழக்கறிஞர்களுக்கு தமிழக வங்கிகளில் நிபந்தனையின்றி ரூபாய் 1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்பட வேண்டும்.
  • சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்தி லுள்ள கீழமை நீதிமன்றங்களை தகுந்த பாதுகாப்புடன் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • AIBE தேர்வு கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
  • தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன் சில், இரண்டு மாநில அரசுகளிடமும் வழக்கறிஞர்க ளுக்கான கோரிக்கைகளை கேட்டுப் பெற துரித நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
  • ஊரடங்கு தொடர்வதால் நிவாரணம் கோரும் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும்.
  • AIBE தேர்வு எழுதாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • இந்த போராட்ட அழைப்புக்கிணங்க, தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் பதாகை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சென்னை, மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், தேனி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், விருதுநகர், தஞ்சாவூர், ஈரோடு, நாகை, வேலூர், மற்றும் பல மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கமும் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுக்க பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியது.
சமூக ஊடகத்தில் இந்த போராட்டத்திற்கான பிரச்சாரம் நடந்துபோது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலான ஆதரவு காணப்பட்டது. விளைவாக, தமிழகத்திலுள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்றங்களும் புதுச்சேரி நீதிமன்ற மும் 22.06.2020 அன்று திறக்கப்படும் என 17.06.2020 அன்றே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கு செல்வதை தடுக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் திரு செல்லையா அவர்கள் வழக்கறிஞர்கள் நலன் சார்ந்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, பார் கவுன்சில் நிதியிலிருந்து வழக்கறிஞர்களுக்கு வழங்க விதிகளை திருத்தம் செய்ய ஜுன் 16 அன்று பரிந்துரை செய்துள்ளது.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து JAAC என்ற வழக்கறிஞர் அமைப்பு சார்பாக வழக்கறிஞர்கள் நலன் பற்றி விவாதிக்க ஜுன் 19 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
போராட்டத்தின் விளைவாக, 18.06.2020 அன்று புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர், வழக்கறிஞர் ஒருவருக்கு ரூ.500 என ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த தொகை மிகவும் குறைவானது.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் எழுப்பியுள்ள கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறவில்லை. போராட்டம் தொடர வேண்டிய அவசியம் உள்ளது.
- ஜெ.மோகன்ராஜ்

Search