COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

கொரட்டூர் பால்பண்ணை அருகில் முகுந்த் கிளோத்திங் ஆலையில் 4 முதல் 5 வருடங்கள் வரை சுமார் 80 பெண் தொழிலாளர்கள் ஆயத்த ஆடை உற்பத்தியில் வேலை செய்கின்றனர். தையல்காரர் ரூ.9,000, செக்கர், ஹெல்பர், கட்டர், டிரிம்மர் ஆகியோர் ரூ.6,000 முதல் ரூ.7,000 என சம் பளம் பெறுகின்றனர். வேலைக்கு நியமனம் செய்தபோது, போக்குவரத்துக்கு நிறுவன வாகனம் உண்டு என்று சொன்ன நிர்வாகம், சம்பளத்தில் வாகன வாடகை என ரூ.1,000 பிடித்தம் செய்கிறது. தற்போது 3 மாதங்களாக ஊரடங்கால் வேலையும் இல்லை. மார்ச் முதல் ஜுன் வரை சம்பளமும் கொடுக்கப்படவில்லை. ஆட்குறைப்பு செய்யப் போவதாகவும் தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து வேலையை ராஜினமா செய்ய வேண்டுமென நெருக்கடி தருவதாகவும் தொழிலாளர்கள் சொல்கின்றனர்.
பணிப் பாதுகாப்பு, மேலான வேலை நிலைமைகள் ஆகியவற்றை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் சுரேஷ், எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் மோகன் ஆகியோருடன்  ஜுன் 3 அன்று ஆலை வாயிலில் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

Search