நூறாண்டுகளுக்கு முன் வந்த பெருந்தொற்று...
போர் மற்றும் போராட்டங்கள்
எஸ்.குமாரசாமி
கொரோனா வைரஸ் நோயை கோவிட்-19 என அழைக்கிறோம். 2019ல் தோன்றிய நோய், 2020ல் நீடிக்கிறது.
எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு அறிவியலாளர்களால், மருத்துவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
கோவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாத முதலாளித்துவத்தின், முதலாளித்துவ அரசுகளின் இயலாமை, முன்களப் பணியாளர்களின் ஆதங்கம், கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு, கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியை பதில் சொல்ல வைத்துள்ளது.
24.06.2020 விவரங்களின்படி உலகெங்கும் 92,27,771 கொரோனா தொற்றுக்கு ஆளாகி 4,75,145பேர் நோயில் மடிந்துள்ளனர். இந்தியாவில் தொற்று பாதித்தவர்கள் 4,46,787 பேர். மடிந்தவர்கள் 14,695 பேர். தமிழ்நாட்டில் 64,603 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். மடிந்தவர்கள் 833 பேர்.
ஸ்பேனிஷ் ஃப்ளு என்ற பெருந்தொற்று
நூறாண்டுகளுக்கு முன் ஸ்பேனிஷ் ஃப்ளூ (இன்ஃபுளூன்சா) என்ற பெருந்தொற்றையும் போரையும் உலகம் சந்தித்தது. முதல் உலகப் போர் 1914ல் துவங்கி, 11.11.1918 வரை நீடித்தது. பெருந்தொற்று 1917 இறுதியில் துவங்கி, 1918, 1919ல் பேரலையாய், சூறாவளியாய் உலகைப் புரட்டிப்போட்டு 1920ல் வடிந்தது. நோயின் பெயரே, முதலாளித்துவ பொய்மையை பொய்ச் செய்தி (ச்ஹந்ங் ய்ங்ஜ்ள்) தருவது, நூறாண்டுகளுக்கு முன் பெருந்தொற்று காலத்திலும் இருந்ததைக் காட்டுகிறது.
பிரான்சில், அய்க்கிய அமெரிக்காவில் போர் வீரர் தங்குமிடத்தில், கூடும் இடத்தில் தோன் றிய நோய் போர்க் களங்கள் உள்ளிட்ட போர் வீரர் செல்லும் இடமெல்லாம் பரவியது. போரிடும் நாடுகள் கடுமையான தணிக்கையை திணித்திருந்தன. பெரிதாக ஏதுமில்லை, அமைதியாக இருங்கள், போய்க்கொண்டே இருங்கள் என செய்தி சொன்னார்கள். ஸ்பெயின் போரில் கலந்து கொள்ளாத நாடு. போரில் ஈடுபட்ட பிற நாட்டு வீரர்கள் ஸ்பெயினுக்கு வந்ததால், அந்த நாட்டு மன்னருக்கு பெருந்தொற்று நோய் வந்ததால், அங்கு பத்திரிகை தணிக்கை இல்லாததால் அந்த நாட்டு பத்திரிகைகளில் பெருந்தொற்று பற்றி தயக்கமில்லாமல் எழுதப்பட்டது. வரலாற்றின் விந்தை முரணாய் உலகின் மிக மோசமான அந்தப் பெருந்தொற்று, ஸ்பெயின் நாட்டு விஷ காய்ச்சல் என்ற பெயர் பெற்றது.
முதலாளித்துவ உலகில் போர்க் காய்ச்சல், பெருந்தொற்றை கொண்டு வந்து பரப்பியது. முத லாளித்துவ நோய் உருவாக்கிய பெருநோயான போரால், பெரும் தொற்று பரவியது. 1914ல் இருந்து 1918 வரை போரில் மடிந்தவர்கள் ஒரு கோடியே 70 லட்சம் பேர்.
பன்றி, கோழி வளர்ப்பு இடங்களுக்கு பக்கத்தில் இருந்த ராணுவ ஆள் சேர்க்கும் முகாம்களில், போர்வீரர் தங்குமிடங்களில் பெருந்தொற்று உருவானது. வீரர்களுக்கு இருந்த மன அழுத்தம், சத்துணவின்மை, போர்க்களங்களில், மனித உடலின் சிதைந்த உறுப்புகள், அழுகிய உணவு, குவிந்த மலம் என்ற சுகாதார மற்ற நிலைமைகளும், நோய் எதிர்ப்பு சக்தி வடிந்ததும், தொற்று கூடுதலாய் பாதிக்க வழி செய்தன. போர், போர், போர்தான் எல்லாம் என்பதால், ஓஐககஐசஎ கொலை செய்வது, இஅதஐசஎ நோயுற்றவரை கவனிப்பது நோயை தடுப்பதை விட மேலானதாக மாறியது.
களம் காணாமல் கப்பலில் போகிற வழியில் நோயுற்று கடலில் வீசப்பட்டவர்கள், அந்நிய நாடுகளில் ஆதரவின்றி நோயால் மடிந்தவர்கள், எண்ணற்றவர்கள். காலையில் ரோல் கால் நடக்கும்போது, பெயர் அழைக்கப்பட்டபோது உயிரோடு இருந்தவர்கள், மாலையில் மடிந்து போனார்கள். நேற்று இருந்தவர்கள் இன்றில்லை என உலகின் நிலையாமை பற்றி வள்ளுவன் பேசியபோது, ஸ்பானிஷ் ஃப்ளு காலையில் இருந்தவரை மாலையில் இறந்தவராக்கியது. தொற்று பாதிக்கப்பட்டவர்களை சளி மூழ்கடித்தது, இருமல் உலுக்கி எடுத்தது. உடல் நீல/கருப்பு நிறமானது. காதுகளிலும் கண்களிலும் இரத்தம் வடிந்தது. பின்னர் அவர்கள் இறந்து போனார்கள்.
அய்ம்பது கோடி பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஸ்பானிஷ் ஃப்ளுவால் மடிந்தவர்கள் எண்ணிக்கை 5 கோடி முதல் 10 கோடி வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடி என்பதற்கு நிறையவே வாய்ப்புண்டு. நூறாண்டுக ளுக்கு முன் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவில் பிரிட்டனில் 50% பேரும் பிரான்சில் 75% பேரும் தொற்றுக்கு ஆளாயினர் என்றும் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் இறந்தவர்களை காட்டிலும், ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றுக்கு கூடுதலாய் பலியானார்கள் என்றும் அறிகிறோம்.
காந்தியும் ஸ்பேனிஷ் ஃப்ளுவுக்கு ஆளானார் என்றும், நீண்ட பாதிப்பால் அயற்சி அடைந்து, வாழ வேண்டும் என்ற ஆர்வம் போய் விட்டதாக அவர் சொன்னதாகவும் சில நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். பின்னாளில் அய்க்கிய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட், கேளிக்கை உலகப் பிரபலமான வால்ட் டிஸ்னி ஆகியோரும் தொற்றுக்காளாகி மீண்டவர்கள் பட்டியலில் சேர்ந்தனர்.
பெருந்தொற்று பரவல், பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், தடுப்பு நடவடிக்கைகள் முதலான விவரங்களை, முதலாளித்துவ உலகம் மறைத்ததன் உச்சம், அந்த நேர அய்க்கிய அமெரிக்க குடியரசு தலைவரான உட்ரோ வில்சன் ஸ்பேனிஷ் ஃப்ளு பெருந்தொற்று பற்றி எந்த அறிக்கையும் வெளியிடாததில் பளிச் என்று புலப்பட்டது.
போரும் புரட்சியும்
முதல் உலகப்போர் 1914ல் துவங்கியது என்றால் ஸ்பானிஷ் ஃப்ளு 1917 இறுதியில் துவங்கியது. தாய்நாடு தந்தை நாடு காக்கும் போர் என, போரிடும் முதலாளித்துவ நாடுகள் பெருமிதம் பேசியபோது, தோழர் லெனினும் போல்ஸ்விக் கம்யூனிஸ்ட் கட்சியும், உலக வளங்களை மறுபங்கீடு செய்ய ஏகாதிபத்தியங்கள் ஈடுபடும் போரை உள்நாட்டுப் போர் ஆக்குவோம், ரொட்டி, நிலம், சமாதானம் வேண்டும், அனைத்து அதிகாரமும் மக்களுக்கே என முழங்கி, ஒரு புரட்சியில் வென்றனர்.
1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவின் தொழிலாளர்கள் - விவசாயிகள் அரசாங்கம் தோழர் லெனின் மூலம் அறிவித்தது: 'ஒரு நியாயமான ஜனநாயக சமாதானத்திற்காக, உடனடியாக பேச்சுவார்த்தைகளை துவங்குமாறு, போரிடும் நாடுகளையும் மக்களையும், தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கம் அழைக்கிறது'.
'களைத்து துயருற்று உடல் வதைபட்டுள்ள ஏகப்பெரும்பான்மை உழைக்கும் மக்கள், நியாயமான ஜனநாயக சமாதானத்தை விரும்புகிறார்கள். ஆக்கிரமிப்புகள் கைப்பற்றுதல்கள் இல்லாததாக, அந்த சமாதானம் இருக்க வேண்டும்'.
நவம்பர் 7 1917, லெனின் அழைப்புபடி போரிடும் நாடுகள் சமாதானம் செய்து கொள்ளவில்லை. 11.11.1918 வரை போரை தொடர்ந்த னர். அதனால்தான் போர் பலி வாங்கியதை விடக் கூடுதலாக, போர்க்கால விஷக்காய்ச்சல் 1918 - 1919ல் கூடுதலாக உயிர் பலி வாங்கியது.
போர் - பெருந்தொற்று கால போராட்டங்கள்
ரஷ்யா, ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றி, புரட்சியில் வென்று. தொழி லாளர் - விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவியது என்றால், 1918 - 1919 - 1920ல் புரட்சி ஜெர்மனியின் கதவை தட்டியது. ஜெர்மனியின் கடற்படையினரும் போர்வீரர்களும் தொழிலாளர்களும் ஒரு புரட்சி வேண்டும் என விரும்பினார்கள். அதற்காக போராடினார்கள். ஆனால் ஜெர்மனிய ஆளும் வர்க்கம், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மேட்டுக்குடியினரின் தன் பக்கம் வென்றெடுத்தது. 'ஒழுங்கு நிலவ வேண்டும்' என ஊளையிட்டது. முன்னாள் இடதுசாரிகள் கைகளாலேயே, அவர்கள் நடத்திய அரசாங்கத்தாலேயே புரட்சி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த சிந்தனையாளரும் போராளியுமான ரோசா லக்சம்பர்க், நாடாளுமன்றத்தில் புரட்சி முழக்கமிட்ட கார்ல் லீபக்னெட் ஆகியோரை கொடூரமாக கொன்றது. இங்கிலாந்திலும் போராட்டங்கள் வெடித்தன. அயர்லாந்தில், லிமரிக் சோவியத் உருவானது.
போர் - பெருந்தொற்று காலத்தில் பெண்கள்
போர் வீரர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களே உற்பத்தியில், பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் வயதில் இருந்தவர்கள். போர்க் காலங்களும் பேரிடர் காலங்களும் சமூக இழையையே மாற்றிப்போட்டு பின்னி விடுகின்றன. 1347 - 1351 காலத்தில் மட்டும் அய்ரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிளேக் நோய்க்குப் பலியாயினர். கிராமப்புறங்களில் விவசாய வேலை பார்க்க ஆட்கள் வெகுவாகக் குறைந்தனர். பண்ணை கொத்தடிமை முறை அடி வாங்கவும் கிராமப்புற ஏழைகள் நிலை உயரவும் இந்த நிலைமைகள் உதவின. அய்ரோப்பா, அய்க்கிய அமெரிக்கா நெடுக, பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு 1917 - 1920 காலத்தில் வெகுவாக அதிகரித்தது. அய்க்கிய அமெரிக்காவில் பெண்களை விட கூடுதலாக 1,75,000 ஆண்கள் பெருந்தொற்றுக்கு பலியாயினர். ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததை விட 25% கூடுதலாக போர்க்காலத்தில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபட்டனர். 1920ல் பெண்களில் வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் 21% ஆயினர். வாக்குரிமை என்ற கோரிக்கையோடு, ஊதிய உயர்வு, சம ஊதியம், மேலான வேலை நிலைமைகள் என்ற கோரிக்கைகளையும் பெண்கள் முன்வைத்தனர். குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சன், போர் முயற்சிகளில், பொருளாதார நடவடிக்கைகளில் தங்களின் பங்களிப் பால் பெண்கள் வாக்குரிமை பெற தகுதியுடையவர்களாக ஆயினர் என்றார். அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 19ன் மூலம் 26.08.1920 முதல் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 1920ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 2.6 கோடி பெண்கள் வாக்களித்தனர்.
கனடா
கனடாவில் 8 லட்சம் மக்களில் 55,000 பேரை பெருந்தொற்று கொன்றது. வின்னிபெக்கில் 1,20,000 பேரில் 1,200 பேர் பெருந்தொற்றுக்கு பலியாயினர். போர் - பெருந்தொற்றுப் பேரலைக்கு முன்பாகவே தொழிலாளர் மத்தியில் அதிருப்தி வளர்ந்து வந்தது. கட்டுமான தொழிலாளர்கள் மணிக்கு வெறும் 30 சென்ட் கூலியுடன் வாரத்தில் 60 மணி நேரம் வேலை செய்ய நேர்ந்தது. 1918ல் ஒரு வேலை நிறுத்த அலை அடித்தது. பின் விஷக் காய்ச்சல் வந்தது. வின்னிபெக்கின் ஆங்கிலோ புரொடெஸ்டென்ட் மேட்டுக்குடியினர் தமது உயர்குடி பகுதிகளில் சுகாதாரமாய் தம்மை அடைத்துக் கொண்டு தம்மை காத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் ஸ்லாவ் இனத்தினரும் யூதருமாக இருந்த உழைக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவக் கட்டணம் அதிகம் என்பதால், உரிய மருத்துவம் பெற முடியவில்லை. கூடுதல் இறுதி சடங்கு கட்டணம், சாவிலும் கவுரவத்தை பறித்தது. செப்டம்பர் 18 முதல் ஜனவரி 19 வரை நோய் ஆட்டம் காட்டியது. சம்பள உயர்வு மற்றும் பணி நிலைமைகளில், முன்னேற்றம் கோரி மே மாதம் நடந்த வேலை நிறுத்தங்களில் 35,000 பேர் பங்கேற்றனர். போராட்டத்தை தடுக்க, பணக்காரர்கள் ஆயிரம் குடிமக்கள் கமிட்டிகள் அமைத்தனர். ஜ÷ன் 2 அன்று குதிரை ஏறிய படை, துப்பாக்கிச் சூடு நடத்தியது. வேலைநிறுத்தம் ஜ÷ன் 26 அன்று முடிவுக்கு வந்தது.
போர் - பெருந்தொற்றுக்கால அய்க்கிய அமெரிக்க போராட்டங்கள்
தொலைக்காட்சி, கைபேசி, அறிதிறன் பேசி இல்லாத அந்தக் காலங்களில், மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்க முடிந்தது. ஆனால், நாமில்லாமல் நாடில்லை, நாடோ நமக்கில்லை, போரிலும் பெருந்தொற்றிலும் நாமே பலியாகிறோம் என்ற கூட்டுணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கியது. இந்த கூட்டுணர்வால் வெடித்த போராட்டங்களை, 'போராட்ட காய்ச்சல்', 'வேலைநிறுத்தப் பெருந்தொற்று' என முதலாளிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் கருத்துலகும் அழைத்தன.
அய்க்கிய அமெரிக்காவில் 50 லட்சம் பேர் போரில் பங்கேற்றனர். போரில் நேரடியாக இறந்தவர்கள் 53,000 பேர். ஸ்பானிஷ் ஃப்ளுவில் இறந்தவர்கள் 67,000 பேர். இந்தப் பின்னணியில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
பெருந்தொற்று காலத்தில் 40 லட்சம் பேர், அதாவது உழைப்பாளர்கள் அய்ந்து பேரில் ஒரு வர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். பாஸ்டன் காவல்துறை வேலை நிறுத்தம் செய்தது. நியூயார்க்கின் பிராட்வே நாடக நடிகர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆண் தையல் தொழிலாளர்கள் 13 வார வேலை நிறுத்தம் செய்தனர். செப்டம்பரில் நடந்த முதல் தேசம் தழுவிய எஃகு தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். நவம்பரில் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் விடுத்த மிரட்டலை, நீதிமன்ற தடையாணையை தாண்டி நிலக்கரி தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். ரஷ்ய புரட்சி, அய்க்கிய அமெரிக்கத் தொழிலாளர் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள தொழிலாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்கியது. ரஷ்யப் புரட்சியை, தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்தை ஒடுக்க, ஆயுதங்களை கப்பல்களில் ஏற்ற சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் தொழிலாளர்கள் மறுத்தனர். ரயில் நிலக்கரி தொழிலாளர்கள், தமது தொழில்களை தேசியமயமாக்கக் கோரினர்.
1918 நவம்பரில் போர் முடிந்தது. வீரர்கள் நாடு திரும்பினர். நோயின் அடுத்த அலை, வேலையின்மை, தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் எல்லாம் சேர்ந்து, நோயின் முக்கிய கட்டத்தில், பிப்ரவரி 6 முதல் சியாட்டிலில் 65,000 பேர் கலந்துகொண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு இட்டுச் சென்றன.
கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும், நாடு திரும்பிய படையினரும் கலந்துகொண்ட அந்த வேலை நிறுத்தம் சியாட்டில் மக்களின் போராட்டமானது. வேலை நிறுத்த அறிவிப்பு கூட்டத்தில், பிரட் நெல்சன் என்ற தொழிலாளி, சீருடையணிந்த தொழிலாளி, போர்வீரர், கப்பல் படை வீரர் நாம் இணைந்து வெல்வோம் என்று சொல்லும் பதாகையை மகிழ்ச்சி ஆரவாரத்தின் மத்தியில் விரித்து காட்டினார்.
சியாட்டில் நகரம், தொழிலாளர்களின் தலைமையில் மக்கள் கைகளுக்குச் சென்றது. சுகாதாரம், மக்கள் நலன், பாதுகாப்பு அனைத்தையும் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். குப்பை அள்ளுதல், மருத்துவ வேலைகளை, தேவைகளை நிறைவு செய்தல், குழந்தைகளுக்கு பால் வழங்குதல், பசி போக்க உணவு வழங்குதல், ஆயுதம் ஏந்தாத தொழிலாளர்கள் கொண்டு வீதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது என எல்லாவற்றையும் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட உணவகங்கள் ஒரு நாளில் 30 ஆயிரம் பேருக்கு உணவளித்தன.
அந்தப் போராட்டத்தை, அந்த மாபெரும் அய்ந்து நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை, அரசு - முதலாளிகள் - துரோகத்துக்கு தயாரான தொழிற்சங்க தலைமைகள் சேர்ந்து முறியடித்தன.
ஆனால் அந்த அய்ந்து நாட்களும், காற்றும் கடலலையும் தவிர வேறு எதுவும் அசையவில்லை என சியாட்டில் தொழிலாளர்களும் மக்களும் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தனர் போர், பெருந்தொற்று, மரணம், துயரம் நிறைந்த அன்றைய உலகில் அந்த அய்ந்து நாட்கள் போராட்டம் வாழ்வின் கொண்டாட்டமானது.
போர் - பெருந்தொற்று - இந்தியா
அன்றைய இந்திய துணைக் கண்டத்தில் இருந்து, தன் அடிமை காலனி நாட்டிலிருந்து, தன்னுடைய போரில், பிரிட்டன் 15 லட்சம் இந்தியர்களை ஈடுபடுத்தியது. அவர்களில் 74,000 பேர் போரில் மடிந்தனர். (இதேபோல், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் 25 லட்சம் இந்தியர்களை ஈடுபடுத்தியது. அதில் 87,000 பேர் போரில் மடிந்தனர்.)
பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் போர் வீரர் நடமாட்டம் மூலம் இந்தியாவில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ, பிரிட்டிஷார் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மாநிலங்களில் மட்டும் ஒரு கோடியே 38 லட்சத்து 80 ஆயிரம் பேரை, அதாவது, சுமார் 5% மக்களை பலி வாங்கியது
பிணங்கள் எரிந்து கொண்டே இருந்தன. இந்தி கவிஞரான நிராலா என்ற சூரியகாந்த் மிஸ்ரா, கங்கை இறந்தவர் உடல்களால் நிரம்பி நின்றது என எழுதினார். கங்கையில் மட்டுமல்லாமல் எல்லா ஆறுகளிலும் ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் மிதந்தன.
சாதிய படிவரிசையில் கடைநிலையில் வைக்கப்பட்டிருந்த சாதிகளில் 1000த்தில் 61 பேரும், சாதி இந்துக்கள் 1000த்தில் 18.9 பேரும், அய்ரோப்பியர்கள் 1000த்தில் 8.3 பேர் தொற்றுக்குப் பலியாயினர். தொற்றுக்கு சாதி இனம் தெரியாது. ஆனால் சாதியால், இனத்தால் தாம் மேலானவர்கள் எனத் தன்னைக் கருதிக் கொண்டவர்களின் சமூகரீதியான, பொருளாதாரரீதியான வலுவான நிலை, அவர்கள் மத்தியில் குறைவான பாதிப்பை உருவாக்கியது.
பிரிட்டிஷ் அரசுக்கு, மக்களைக் காக்கும் வல்லமையோ, ஆற்றலோ, அதற்கான எண் ணமோ இல்லை என பெருந்தொற்று நினைக்க வைத்தது. பெருந்தொற்றும் உயிர்ப் பலியும் ஏற்படுத்திய காயம், அடுத்த வருடம் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் ஆகியவற்றால் நாடெங்கும் தேசபக்தி பெரும் தீயாய் மூண்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சவப்பெட்டியில் அறையப்பட்ட ஆணிகளில், ஸ்பானிஷ் ஃப்ளு விஷக் காய்ச்சலில் மக்களை கூட்டம் கூட்டமாய் சாக விட்டதும் ஒன்று ஆகும்.
பெருந்தொற்றும் பொது சுகாதாரமும்
1920ல் தோழர் லெனின் எழுதினார்: 'ஏகாதிபத்திய போர்கள் மனித குலத்திற்கு, உடல் உறுப்பு இழந்த, காயமுற்ற பல லட்சம் பேரையும் பெரும் தொற்றுகளையுமே தந்துள்ளன. ஒடுக்கும் வறுமை, நோய், அழிவு ஆகியவற்றுக்கு திறன் வாய்ந்த விதத்தில் முடிவு கட்டி, மக்கள் கைகளில் மருந்துகளைத் தர, விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் வலுவாக ஒருங்கிணைந்து உருவாக்கும், ஒரு மத்தியத்துவப்பட்ட அமைப்பாலேயே முடியும்'.
மக்களுக்கான அரசியல், மக்களுக்கான அரசு இருந்தால், மக்களுக்கான பொது சுகாதார கட்டமைப்பு வலுவாக இருக்கும். அது மக்களுக்கு நம்பிக்கை தரும். அது மக்களை காக்கும்.
அய்ரோப்பா, அய்க்கியஅமெரிக்கா, இந்தியா என எங்கும் கொடிகட்டிப் பறக்கும் நவதாராளவாத முதலாளித்துவம், பொது சுகாதாரம் தரம் குறைவானது, திறன் குறைவானது, கூடுதல் செலவு வைக்கும், குறைந்த தேர்வு வாய்ப்பே தரும் என சொல்லிச் சொல்லியே, அதனை சிதைத்து சீரழித்துள்ளது.
பெருந்தொற்று பேரிடர் வந்தால், அங்கே அரசு கட்டுப்பாடு மற்றும் பொதுத் துறையின் தேவையும், முதலாளித்துவத்தின், தனியார் துறையின் இயலாமையும் லாப வெறியும் வெளிச்சத்திற்கு வருகின்றன.
எல்லை பிரச்சினையிலிருந்து கொரோனா தடுப்பு வரை மாற்றி மாற்றிப் பேசி, உண்மை பேசுவதில் மிகுந்த சிக்கனம் கடைபிடித்து, மத்திய மாநில ஆட்சியாளர்கள், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும், மக்களைக் காக்க வேண்டும் என வலியுறுத்துவோம். உலகளாவிய பெருந்தொற்று கால போராட்டங்களில் இருந்து நம்பிக்கை பெற்று, மக்களுக்காக போராடுவோம். தனியாரின் லாபத்துக்கான கட்டற்ற சந்தை பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளி, மக்கள் தேவைகள் அடிப்படையிலான பொருளாதாரத்தை, அரசியலை, சமூகத்தில் முதன்மைப்படுத்த வேண்டும்.