மோடி கொண்டு வந்துள்ள அவசர நிலையை நிராகரிப்போம்!
பணமதிப்பகற்றும் பேரழிவை எதிர்ப்போம்!
பணமதிப்பகற்றும் பேரழிவை எதிர்ப்போம்!
(தோழர் வினோத் மிஸ்ராவின் 18ஆவது நினைவு தினத்தை ஒட்டி
இகக மாலெயின் மத்திய கமிட்டி விடுத்துள்ள உறுதியேற்பு அழைப்பு)

மத்தியில் உள்ள மோடி ஆட்சி தனது அய்ந்தாண்டு கால பதவி காலத்தில் பாதியை முடித்துவிட்டது. முதல் இரண்டு ஆண்டுகளில் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஜன்தன் திட்டம் போன்றவற்றில் அது மும்முரமாக இருந்தபோது, இந்த ஆட்சியின் நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட பகுதியான, அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படையாகவே தலையிடுகிற சங் பரிவார், ‘காதல் ஜிகாத்’, பசுப்பாதுகாப்பு என அனைத்துவிதமான தார்மீக மற்றும் சிந்தனைக் காவல் போன்ற, அதன் விஷமமான நிகழ்ச்சிநிரலை ஒவ்வொன்றாக கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு பிரதமரின் மறைமுகமான, சில சமயங்களில், வெளிப்படையான ஆதரவும் இருந்தது. உத்தரபிரதேசத் தேர்தல்களில் பெறும் வெற்றி மாநிலங்களவையில் பாஜகவின் இருத்தலை மேலும் வலுவூட்டக் கூடிய, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப பல்வேறு அரசியல்சாசன மாற்றங்கள் கொண்டு வரும் பாஜகவின் யோசனைக்கு உதவக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசாங்கம் ஒரு நிச்சயமான அவசரத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
எல்லையில் பயங்கரவாதிகள் மீதும், நாட்டுக்குள் கருப்புப் பணத்தின் மீதும் ‘துல்லியத் தாக்குதல்’ என்று சொல்லப்படுகிற சமீபத்திய இரண்டு தாக்குதல்கள், இப்போது மோடி அரசாங்கம் பற்றிய ஆகப்பெரிய பேசுபொருளாக இருக்கின்றன. இவை இரண்டுமே அவை எதற்காக நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டனவோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் சற்றும் திறனற்றவை என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய ராணுவ தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன; உரிக்குப் பிறகு நக்ரோட்டாவில் நடந்துள்ள தாக்குதல் இதற்கு உதாரணம்; ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தொடர்கிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்லி, தேசவெறி வாதத்தை தூண்டிவிடவும், இந்திய மக்களின் எதிர்ப்பின், குறைகளின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அடக்கவும் சங் பரிவார் இந்தத் தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்கிறது.
உயர்மதிப்பு நோட்டுக்களான ரூ.500, ரூ.1,000 தாள்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பின் வடிவத்தில் இரண்டாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சாமான்ய மக்கள் மீது மிகப்பெரும் துன்பத்தை சுமத்தியுள்ளது. செல்லாத தாள்களுக்கு பதிலாக புதிய தாள்கள் இல்லாததால் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ரொக்கப் பரிவர்த்தனையை மட்டுமே நம்பியிருக்கிற மக்கள் பிரிவினர், கிட்டத்தட்ட 10ல் 9 பேர், மோசமடைந்து வருகிற ரொக்க நெருக்கடியால் தவித்து வருகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல, உற்பத்தி, வேலை வாய்ப்பு, அவற்றைத் தொடர்ந்து வருமானம், நுகர்வு ஆகியவற்றின் மீது தாக்குதல் தொடுக்கிற, இன்னும் பெரிய, நாசகரமான பொருளாதார நெருக்கடியின் நுழைவாயில்தான் இந்த ரொக்க நெருக்கடி என்று தெளிவாகத் தெரிகிறது. சில நாட்கள் அசவுகரியங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் துவக்கத்தில் சொன்னது; ஆனால் இந்த வேதனை நீடித்த ஒன்றாகி, இதனால் ஏற்படுகிற சேதம் நிரந்தரமானதாகி, சரிசெய்ய முடியாததாகிவிடும் என்ற ஆபத்து உள்ளது.
பணமதிப்பகற்றும் நடவடிக்கை கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காகவே என்று சொல்லப்பட்டது வெறும் சாக்கு என்று இப்போது தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு கணக்கில் வராத வருமானத்தை தாமாக அறிவிக்கும் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை விட 5% கூடுதலாக வரிவிதிப்பு அறிவித்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசாங்கமே வழிவிட்டது. ரூ.13,800 கோடி அளவுக்கு வருமானம் இருப்பதாக அறிவித்த மகேஷ் ஷா போன்றோர், அந்தப் பணம் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள்; அவர்கள் அறிவித்த கருப்புப் பணம் பற்றி எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிடுகிறார்கள். நவம்பர் 8 அறிவிப்புக்கு முன்பு, பாஜக நாடு முழுவதும் மிகப்பெரிய தொகையை நிலமாக மாற்றியதும் பாஜக தலைவர்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் தாள்களுடன் பிடிபடுவதும் நமக்குத் தெரியும். சாமான்ய மக்கள் திருமண நிகழ்ச்சிகளை தள்ளிப் போடுகிறார்கள்; ரொக்கம் இல்லாததால் அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது; ஆனால், ஜனார்த்தன் ரெட்டி, நிதின் கட்கரி போன்றோர், மிகப்பெரிய செலவில் ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
மோடி அரசாங்கம் தேவையான தயாரிப்பு கள் மேற்கொள்ளவில்லை என்று ஒட்டுமொத்த நாடும் புகார் எழுப்பியபோது, இதை விட மேலான தயாரிப்புகள் செய்திருக்க முடியாது என்று நிதியமைச்சரும், தங்கள் கருப்புப் பணத்தை பாதுகாத்துக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்துகொள்ள முடியாத ஊழல் கருப்புப் பணக்காரர்கள்தான் புகார் எழுப்புகிறார்கள் என்று மோடியும் சொன்னார்கள். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணம் அத்தனையும் வங்கிக்கு திரும்பும் என்பது தெளிவாகி வரும்போது, பதுக்கப்பட்ட பணம் பெருமளவில் அழிக்கப்படுகிறது என்ற ஊகங்களும் வதந்திகளும் முடிவுக்கு வரும்போது, ஜன்தன் கணக்குகளில் கருப்புப் பணம் செலுத்தப்படுகிறது என்று மோடி சொல்கிறார். இதன் மூலம் வறிய மக்களை கடுமையாக வேதனையடையச் செய்து அவர்களை அவமதிப்புக்கு உள்ளாக்கும் மோடி, அதே நேரத்தில், ஊழல், சமூகத்தில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான வறிய மக்களின் உள்ளார்ந்த சீற்றத்தைப் பயன்படுத்தி, தன்னை வறிய மக்களின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ள மிகப்பெரிய உணர்ச் சிகரமான பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளார்.
பணமதிப்பகற்றும் நடவடிக்கைக்குப் பின்னால், நாட்டின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் பாஜகவால் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு, மோடி அரசாங்கத்தால் நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட விஜய் மல்லையா போன்ற ஏமாற்று பேர்வழிகளும் கொள்ளையடித்த வங்கிகளை மீட்கும் நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சில வருடங்களாக தரப்பட்ட ரூ.11 லட்சம் கோடி அளவுக்கான கடன் வாராக் கடன்கள் ஆகியுள்ளன; அவை திட்டமிட்ட விதத்தில் கட்டம்கட்டமாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. ரூபாய் நோட்டுத் தடை சாமான்ய மக்களின் சேமிப்பையெல்லாம் உறிஞ்சிக் கொண்டுவிட்டது; இதனால் வங்கியில் அதிகரித்துள்ள பணப்புழக்கம், பணக்காரர்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் குறைந்த வட்டிக் கடன்களாக மீண்டும் மாற்றப்படும். வங்கிகளுக்குள் புதிய மூலதனத்தை செலுத்துவது மட்டுமின்றி, டிஜிட்டல் இந்தியா திட் டத்தை, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதும் கூடுதல் கார்ப்பரேட் கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை முன்தள்ளும் நோக்கமும் பணமதிப்பகற்றும் நடவடிக்கையில் உள்ளது. சிறு அளவிலான அனைத்தும், சிறுகுறு விவசாயம், வர்த்தகம் முதல் சிறுதொழில் வரை, முறைசாரா துறையில் உள்ள பல்வேறு தொழில்முனைவுகள், பிற வேலைகள் அனைத்தும் தீவிரமான கார்ப்பரேட் மூர்க்கத்தனத்தின் முன்னால், வெறுமனே பிழைத்திருக்கக் கூட கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
எல்லா விதங்களிலும் இந்தியா இப்போது மோடியின் உண்மையான நெருக்கடி நிலையின் பிடியில் உள்ளது. எல்லா இடங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. போபால் மத்திய சிறையில் இருந்து தப்ப முயன்றதாகச் சொல்லப்பட்டு எட்டு விசாரணைக் கைதிகள் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்கள்; பர்க்காகானில், வாழும் இடத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது நடுஇரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; சுயாட்சி கோரும் காஷ்மீர மக்கள் மீது போர் நடத்தப்படுகிறது; இவை அனைத்தும் ஒரு போலீஸ் ராஜ்ஜியம் உருவாகிவிட்டதை அறிவிக்கின்றன. ஊடக சுதந்திரமும் குடிமக்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் முடக்கப்படுவது, பிரதமரும் அவரது அமைச்சரவையும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லும் பொறுப்பை திட்டமிட்டு தரம் குறைப்பது, தட்டிக் கழிப்பது ஆகியவையும் எதேச்சதிகாரத்தின் அறிகுறிகளாகும். ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களும் இந்திரா நெருக்கடி நிலையின் பலவந்த நாட்களை நினைவூட்டுகின்றன.
தற்போதைய நெருக்கடி நிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததுதான். 1975ன் இந்திரா - சஞ்சய் காலத்து நெருக்கடி நிலைக்கும் இதற்கும் வேறு சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுத் துறை, நிலச்சீர்த்திருத்தம், சோசலிச நல்வாழ்வு நடவடிக்கைககள் ஆகியவற்றைச் சுற்றி அப்போதைய பொருளாதார விவாதப்போக்கு இருந்தது. இப்போது அது நிலப்பறி, சுதந்திரச் சந்தை, கார்ப்பரேட் வழி நடத்தும் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியதாக உள்ளது. இந்தியாவின் அப்போதைய வெளியுறவுக் கொள்கையில், சோவியத் யூனியனுடனான நெருக்கம் குறிப்பானதாக இருந்தது. இப்போது அது அய்க்கிய அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் போர்த்தந்திர கூட்டு என்பதைச் சுற்றியதாக இருக்கிறது. அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, இனவெறியின், இசுலாமியர் வெறுப்பின் கட்டுக்கடங்காத ஆட்சியை நாம் காணப் போகிறோம்; பயங்கரவாதத்துக்கு எதிராக பொதுவான போர் என்ற பொருளில், ட்ரம்ப் ஆட்சிக்கும் மோடி அரசாங்கத்துக்கும் இடையில் வெறிபிடித்த இசுலாமியர் வெறுப்பு கூட்டிணைப்பு உருவாக எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஆட்சியில் இளைஞர் காங்கிரஸ் மட்டும்தான் அரசியல்சாசனத்துக்கு அப்பாற்பட்ட பிரிவாக இருந்தது; மோடி ஆட்சிக்கு ஒட்டுமொத்த சங் பரிவார் கும்பல்களின் பின்புலமும் இருக்கிறது; பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் வெளிப்படையாகவே அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் தொடர்பாக கட்டளையிடுகின்றன; அவற்றை அமல்படுத்துகின்றன; அவை, நாட்டில் ‘சட்டம் ஒழுங்கு’ என்றும் ஆகிவிடுகின்றன. உண்மையில், கார்ப்பரேட் நலன்களுக்கும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கும் அமலாக்க முகமையாக அரசாங்கம் மாறிவிட்டது. இவையிரண்டும் ஒன்றிணைந்த ஒரே வரையறைக்குள் கலந்துவிடுகின்றன.
இந்திய மக்கள் இந்த ஆபத்து பற்றி அறிந்தே இருக்கிறார்கள். பல்வேறு முனைகளிலும் சக்திவாய்ந்த எதிர்ப்புகள் உருவாவதை நாம் பார்த்து வருகிறோம். விவசாய சமூகத்தின் உறுதியான எதிர்ப்பின் விளைவால் நிலப்பறி அவசரச் சட்டம் வெறும் காகிதமாக குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டது. தேசத்துரோக குற்றச்சாட்டு என்ற ஒடுக்குமுறை தந்திரத்துக்கு மாணவர்களும் ஜனநாயக அறிவாளிப் பிரிவினரும் வீரமிக்க விதத்தில் பதிலடி கொடுத்தார்கள். ரோஹித் வேமுலா நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்டதும் உனா தலித் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதும் நாட்டின் தலித் எழுச்சியின் சக்திவாய்ந்த புதியதொரு கட்டத்துக்கு வழிவகுத்துள்ளது. மோடி தயாரிப்பிலான பணமதிப்பகற்றும் நடவடிக்கை என்ற பொருளாதார பேரழிவுக்கு நாடு உள்ளாக்கப்பட்டிருக்கும்போது, சங் பரிவார் தனது சொந்த வலைப்பின்னல் மூலமும் பிற ஊடகங்கள் மூலமும் திட்டமிட்ட விதத்தில் நடத்தும் பொய்ப் பிரச்சாரத்தையும் தாண்டி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டத்தின் இந்த பல்வேறு இழைகளை வெகுமக்கள் எதிர்ப்பின் சக்தி வாய்ந்த நீரோட்டமாக ஒன்றிணைக்க புரட்சிகர கம்யூனிஸ்டுகள் கடுமையாக பணியாற்ற வேண்டும்.
தோழர் வினோத் மிஸ்ரா நம்மை விட்டுப் பிரிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நேரத்தில் மோடியின் நெருக்கடி நிலையில் இருந்து, கார்ப்பரேட் மதவெறி பாசிச அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் கடமையில் நமது முழுமையான சக்தியையும் செலுத்த, ஆகச்சிறப்பான முயற்சிகளும் மேற்கொள்ள உறுதியேற்போம். இந்த ஆண்டு மகத்தான நக்சல்பாரி எழுச்சியின் 50ஆவது ஆண்டு. மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டு. இந்த மகத்தான புரட்சிகர மரபை முன்னெடுத்துச் செல்ல தருணத்துக்கேற்றவாறு எழ வேண்டியது நமது கடமை. 2015ல் டில்லியிலும் பீகாரிலும் சட்டமன்றத் தேர்தல்களில் மோடி அரசாங்கம் தீர்மானகரமான தோல்வியைச் சந்தித்தது. உத்தரபிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுடன் 2017 துவங்குகிறது. மோடி அரசாங்கத்தின் பணமதிப்பகற்றும் பேரழிவுக்கு மிகப்பெரிய விலை கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள், அவருக்கு திருப்பிக் கொடுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. பாஜக அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு எழுச்சிமிகு பதிலடியாக, மக்கள் படுகிற துன்பம் மாறுவதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.

(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 16 - 31)