இப்பிடித்தான் நாங்க கையெழுத்து வாங்குனோம்...
விஏபி ஆலைத் தொழிலாளர்களுடன் ஓர் உரையாடல்
ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தில் 30.11.16 வரை சென்னையில் 50,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. விஏபி ஆலைத் தொழிலாளர்கள் இந்த வேலைகளில், தாங்களாக திட்டமிட்டு ஒரே வாரத்தில் 5,360 கையெழுத்துக்கள் பெற்றுள்ளார்கள். இந்த வேலைகளில் அவர்கள் கடைபிடித்த வழிமுறைகள் தொடர்பாக தீப்பொறி ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் சேகர், விஏபி தோழர்கள் ஞானவேல், நாகராஜன், கிரி ஆகியோருடன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
தீப்பொறி: எந்த கம்பெனில வேலை செய்றீங்க ?
தோழர் ஞானவேல்: விஏபி...
தீப்பொறி: என்ன விஅய்பியா?
தோழர் நாகராஜன்: அந்த அளவுக்கெல்லாம் நாங்க இல்லிங்க... கம்பெனி பேரு வித்யூத் அக்னி புராடக்டஸ் என்பதை சுருக்கமா விஏபின்னு சொல்றோம்.
தீப்பொறி: ஆனா எங்களுக்கு நீங்க விஅய்பிதான். சரி உங்க கம்பெனில என்ன உற்பத்தி நடக்குது?
தோழர் கிரி: அது இன்ஜக்சன் மெல்டிங் பர்னர்ஸ் செய்கிறோம்.
தீப்பொறி: நல்ல ஆடர் இருக்கா? என்ன சம்பளம்?
தோழர் ஞானவேல்: அது ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் நம்ம சங்கத்துக்கு வரப்போறோம்?
தோழர் நாகராஜன்: நிறைய வெளிநாட்டு ஆடருங்க. ஆனா தவறான நிர்வாகம். போன அக்டோபர் மாச சம்பளத்த நவம்பர் 24ஆம் தேதிதான் ஆயிரத்தெட்டு பிரச்சனையோட வாங்கினோம்.
தீப்பொறி: ரூபாய் 500, 1000 செல்லாம போனது பிரச்சனையாச்சா?
தோழர் கிரி: இல்ல. நிர்வாகத்தோட தவறான நடவடிக்கைகள்தான் பிரச்சனை. இந்த மாச சம்பளத்தை அடுத்த மாசம்தான் தராங்க. இஎஸ்அய், பிஎப், போனஸ், ஒப்பந்தம் எதையுமே அமல்படுத்தல, ஸ்டாப் பணியாளருக்கு 10 மாச சம்பள பாக்கி. எல்லா வியாதியும் எங்க கம்பெனில இருக்கு. ஏதோ நம்ம சங்கம் இருக்கிறதால பிழைப்பு ஓடுது.
தீப்பொறி: கையெழுத்தியக்கத்துல எவ்ளோ கையெழுத்து வாங்க சொன்னாங்க? எவ்ளோ முடிச்சிங்க?
தோழர் ஞானவேல்: சங்கத்துல இருக்கிற 32 பேரும் சேர்ந்து 7,500 கையெழுத்து வாங்கனும்னு சொன்னாங்க. சம்பள பிரச்சனயில போராட்டம் இருந்தது. அதுக்கு நடுவுலயே 5,360 கையெழுத்துக்கள் வாங்கிட்டோம். பாக்கி 2 ஆயிரத்து சில்லர கையெழுத்துக்களை ஒரு சில நாள் டைம்ல வாங்கிடுவோம்.
தீப்பொறி: எப்படி உங்களால 5,000 பேருக்கும் மேல் பார்த்து பேசி கையெழுத்து வாங்க முடிஞ்சுது?
தோழர் நாகராஜன்: மொதல்ல நவம்பர் 13ஆம் தேதி மீட்டிங் போட்டப்ப நாங்க 5 பேர் கலந்துகிட்டோம். எஸ்கே தோழர் மற்ற தலைவர்கள் எல்லாம் கலந்துகிட்டாங்க. எங்ககிட்ட 7,500 கையெழுத்துக்கள் வாங்கனும்னு நம்பிக்கையோட பொறுப்பு குடுத்தாங்க. அதுவே எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் நினைச்சோம். நம்மை நம்பி 7,500 பேரை பார்க்கனும்னு சொன்னப்ப, செப்டம்பர் 24ஆம் தேதியும் அந்த வாரத்துல அப்புறமும் மங்களபுரம் பகுதில கலந்துகிட்டது... தேர்தல் பிரச்சாரத்துல கலந்துகிட்டது... இந்த அனுபவம் இருக்கில்ல, அதனால முடியும் நம்பிக்கை வந்துச்சு.
தோழர் ஞானவேல்: நவம்பர் முதல் இரண்டு வாரம் நடுவுல நம்ம சங்கம் ரூபா நோட்டு பிரச்சனையில போராட்டங்கள் நடத்துச்சி. அதுக்கலாம் வந்துட்டோம். அக்டோபர் கடைசில தீபாவளி வந்தப்ப எங்களுக்கு போனசும் இல்ல. சம்பளமும் இல்ல.. இந்த நிலைமைல எங்க போராட்டமே பெரிய பிரச்சனையா முன்ன வந்துடுதுங்க. அடுத்த வாரம் நமக்கு இன்னா தீபாவளி, அக்கம்பக்கம் வீட்டுல ஆளுக்கு 3 படிவத்துல கையெழுத்து வாங்குங்கன்னு தொழிலாளி எல்லார்கிட்டயும் சொல்லி குடுத்து அனுப்பினோம். அது வேலைக்காகலிங்க. தோழருங்க மன அளவுல முடியாதுன்னு முடிவு பன்னிட்டாங்க. படிவம் வாங்கிட்டுபோனோம். ஆனா ஒன்னும் ரிசல்டு வரலங்க. வேற மாதிரி செய்யனும்னு முடிவெடுத்தோம்.
தீப்பொறி: என்ன முடிவு?
தோழர் கிரி: முதல்ல நம்ப கோரிக்கைகள படிச்சோம். நல்லா பேசற லீட் பன்ற மாதிரி 5 பேரை தயார் பன்னோம். ஒவ்வொருத்தறோடயும் 5 பேரை டெக்னிக்கல், ஸ்கில், ஸ்பீடு என்ற தரத்துடன் பிரித்து டீம் அமைச்சோம். இதுக்கே நவம்பர் 16 தேதி ஆயிடுச்சி. அடுத்த நாள்ளருந்து கையெழுத்து வாங்க ஆரம்பிச்சோம்.
தீப்பொறி: அப்புறம் எத்தனை நாள் நடந்தது?
தோழர் நாகராஜன்: 5 டீம் தலைவர்களுக்கும் ஏரியா பிரிச்சோம். ஒவ்வொருத்தரும் 1,500 கையெழுத்து வாங்கனும்னு முடிவு செஞ்சோம். பெரம்பூர் பகுதி 1 டீம், அம்பத்தூர் ஓடி பகுதி 2 டீம், பாடி எஸ்டேட் 1 டீம், அரக்கோணம் மார்க்கம் 1 டீம் போனோம். எல்லா டீம்லயும் நல்லா பேசறவர் ஒருத்தர் இருப்பார். 2 பேர் பேட் பேனாவோட இருப்பாங்க. ஒருத்தர் நோட்டீஸ் குடுப்பார். கொடியை வெச்சுகிட்டு நோட்டீஸ் ஒருத்தர் குடுப்பார். அரக்கோணம் டீம் ரயில்ல போகும்போதும் வரும்போதும் அவங்க ஊர் மய்யத்திலும் கையெழுத்து வாங்கினாங்க. மத்தவங்க அம்பத்தூர் புழல் ரூட் பஸ்லயும் பஸ் ஸ்டாப்லயும் வாங்கினாங்க. பாடி எஸ்டேட் டீம் பஸ் ஸ்டான்டு, பஸ் ஸ்டாப்பிங்ல வாங்கினாங்க. பெரம்பூர் டீம் ரயில்வே ஸ்டேசன்ல வாங்கினாங்க.
தீப்பொறி: ஒவ்வொரு டீமும் எத்தனை நாள், எவ்வளவு நேரம் கையெழுத்து வாங்னாங்க?
தோழர் ஞானவேல்: சாயங்காலம் ஷிப்ட் முடிந்ததும் அஞ்சரை மணில இருந்து 7 மணி வரைக்கும் 2 இல்லன்னா 3 டீம் போய் அவங்கவங்களுக்கு திட்டமிட்ட பகுதில பன்னாங்க. ஒரு நாளைக்கு 150, 160 கையெழுத்து வரும். ஒரு டீம் 2 பேட்ல 2 பேப்பருக்கு மேல வாங்க முடியல. நிறைய பேர்கிட்ட பேசுவோம். 10 பேர்கிட்ட பேசுனா ஒருத்தர் ரெண்டு பேர்தான் கையெழுத்து போடுவாங்க. லேடீஸ் சுத்தம். ஆனா நின்னு கேட்டாங்கனா போடமா போக மாட்டாங்க.
தோழர் நாகராஜன்: அய்டி கம்பெனில வேலைக்குப் போற ட்ரெய்னீஸ், அப்பரன்டீஸ் டீம் டீமா கூட்டமா வரும்போது மடக்கி பேசுவோம். உங்களுக்காகத்தான் நிக்கிறோம்னு பேசினா எல்லாம் கையெழுத்து போட்டுடுவாங்க. நல்ல விசயம் எங்களால முடிஞ்சதுன்னு நிதி கூட தருவாங்க.
தோழர் கிரி: ஆனா நிதி வசூல் பன்னா 10 நாள்ல கையெழுத்து இலக்கு வாங்க முடியாது. அதுக்கு டீம் மெம்பர் அதிகம் வேணும் அதனால அத அடுத்த சுத்துல பாத்துக்கலாம்னு இருக்கோம். மோடி பிரச்சன ஒழியட்டும்.
தீப்பொறி: மொத்தம் எவ்வளவு கையெழுத்துக்கள் வாங்கினீர்கள்? ரூபா நோட்டு செல்லாம போனது, அம்மா ஆஸ்பிடல்ல இருந்தது இதுனால உங்க வேலைகள் முடங்கலயா?
தோழர் நாகராஜன்: அதெல்லாம் பிரச்சனையாதான் இருந்தது. நாங்கதான் சில வருசமா பாதிக்கப்பட்டு இருக்கோமே. செய்த வேலைக்கு மாசக் கணக்குல காத்திருந்து சம்பளம் வாங்குறோம். அல்லல் படுறோம். வருத்தம் இருந்தாலும் குறுக்குவழி எதுவும் எங்களுக்கு இல்லை. நாங்க மக்களோட பிரச்சனைகள பேசனதுல எங்கள் வலிய வேதனைய கொஞ்சம் மறந்து போனோம். 5 டீமும் 8 நாள், 9 நாள் கையெழுத்து வாங்கி, ஒரு ஒரு டீமும் 1000ல இருந்து 1050 கையெழுத்துக்கள் வாங்கினோம்.
தோழர் ஞானவேல்: டைம் ஒரு பெரிய பிரச்சனை. இன்னாதான் நாங்க இடம், கால அவகாசம் சொல்லிட்டாலும் இந்த 30, 32 பேருதான் எங்க சுத்தியும் வாங்கனும். நாம போனாலும் மக்கள் கவனிச்சு மனம் மாறி போடனும்.
தோழர் நாகராஜன்: மக்கள் ஓட்டு போடறது ஈசியா போட்டுடுறாங்க. ஆனா ஓட்டு வாங்கினவங்க ஏதாவது செய்யனும்னா இது போல கையெழுத்து இயக்கம் போராட்டம் நடத்த வேண்டியிருக்குது. நம்ள மாதிரி நம்ம பிழைப்பையும் பார்த்துட்டு மக்களுக்காக முன்ன நிக்கறவங்க செய்றதுதான் சங்கம் வளர பலப்பட உதவும். அப்பதான் மக்கள் பிரச்சனைக்கு எதாவது பதில் கெடைக்கும்னு நாங்க புரிஞ்சுகிட்டோம். அதை நாங்க சந்திச்ச மக்கள் கிட்டயும் எடுத்து சொன்னோம்.
தோழர் கிரி: எங்க டார்கெட்ட இன்னும் ரெண்டு மூணு நாள்ல முடிச்சுடுவோம். ஒவ்வொரு டீமும் ஆளுக்கு 400, 500 கையெழுத்து வாங்குனா முடிஞ்சுடும்.

(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 16 - 31)